




காகம் போல் ஆங்காங்கே வெள்ளை நிறத் திட்டுக்களுடன் பறவை நான் வைத்த உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
![]() |
மேக்பை |
ஆஸ்திரேலியாவில் இதன் பெயர் 'மேக்பை'ஆம் (MAGPIE).

நம் ஊர் காகம் தண்ணீரில் அமர்ந்து சிறிது கரைந் திருக்குமோ கருப்பு நிறம் சிறிது?
அல்லது காகத்திற்கும், அன்னப் பறவைக்கும் பிறந்த காகபுஜண்ட மகரிஷியோ?
ஆஸ்திரேலியாவின் சுத்தமான சுற்றுப் புறத்தையும், தூய காற்றையும் பார்க்க வந்திருப்பாரோ? சித்தர்களுக்குத்தான் காலதேச வர்த்தமானத்தைக் கடந்தவர்கள் ஆயிற்றே!

காகத்தின் கூட்டில் குயில் முட்டையிட்டுவிடும். குயிலின் குரலை வைத்துத் தானே காகம் அடையாளம் கண்டுபிடித்துத் துரத்தும்? இந்தபறவை கத்தினால் குரலை வைத்து கண்டுபிடிக்கலாமே என்ற என் எண்ணத்தைப் படித்ததுபோல், குரல் கொடுத்துத் தான் காகமல்ல என அறிவித்து, தன் குஞ்சுகளுக்கான உணவை வாயில் எடுத்துக் கொண்டு பறந்து சென்றது.

தபால் பெட்டி அமைந்திருக்கும் இடத்தில் அடர்ந்திருந்த மரத்தில் குஞ்சுகளுடன் அந்த பறவையைப் பார்த்திருக்கிறேன்.

அருகில் பச்சை, மஞ்சள் மூடிகளுடன் குப்பைத் தொட்டிகள் இருக்கும். கார்பேஜ் குப்பைகளை சேகரித்துச் செல்லும் சரக்குந்து “We stop only Yellow Tops” என்று தனித்தனியாக சுத்திகரிக்கும். குறிப்பிட்ட இடைவெளிகளில் அந்தந்த வீட்டு எண் எழுதிய பெட்டியை அவரவர் சுத்திகரித்து, தொற்று நீக்கி (Disinfectent) திரவம் கொண்டு கிருமி நீக்கி பராமரிக்கவேண்டுமாம்.
வெள்ளிக்கிழமை சந்தி வேளையில் குப்பை கொட்டமுயன்ற மகனைத் தடுத்தேன்.
இந்த சம்பிரதாயங்களிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்றார். குப்பையை அதற்கான பையில் போட்டு கட்டி நமக்கான எண்ணுள்ள பெட்டியில் மட்டுமே போட வேண்டும்.
மாற்றிப் போட்டால் சிட்டி கவுன்சிலில் அபராதம் போட்டு விடுவார்களாம்.
வீட்டின் முன் குப்பைப் பையை வைக்கக் கூடாதாம்.
எதிர் வீட்டில் வைத்திருக்கிறாகளே! என்றேன். மற்ற வீடுகளில் வைக்கவில்லையே! அதனை உதாரணமாக வைத்துக் கொள். என்றார் மகன்.......!
எங்காவது வெளியில் சென்றுவிட்டு அந்தத் திருப்பத்தில் திரும்பினால் போதும் கிரீச்சிட்டுக் கத்தும் அந்த பறவைகளைப்பற்றி மகனிடம் குறிப்பிட்டேன்.
இது முட்டாள் பறவை அம்மா ...! தபால் காரர்களைக் குறி வைத்துத்தாக்கும். நம் ஊர்த் தபால்காரர்களை நாய்கள் தாக்குமே! அவர்கள் தலை மறையும் வரை குரைக்கும் நாய்களைக் கண்டிருக்கிறோமே!
அநேகமாக தபால்பெட்டிகள் மரத்தின் அடியிலேயே அமைக்கப்பட்டிருக்கும்.
அவர்கள் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது தன் குஞ்சுகளுக்கு ஆபத்து விளைந்துவிடுமோ என்று இந்த பறவைகள் நினைத்து, தலையில் வலுவாகக் கொத்தி ஓட்டை போட்டு விடுமாம்.
இதுவரை பல தபால் அலுவலர்கள், இந்தப் பறவையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
அரசாங்கம் இவர்களைத் தலைக்கவசம் உபயோகித்து தலையைப் பாதுகாத்துக் கொள்ளும் படியும், இந்தப் பறவையிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியிருக்கிறது.





ஏற்கனவே கடிதம் எழுதுவது குறைந்திருக்கும் நிலையில், இந்த பறவை தபால்காரரைக் குறிவைத்துத் தாக்குகிறது என்றால் கஷ்டம்தான். புதிய பலவிஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு மிக்க நன்றி.
ReplyDelete@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteகருத்துரைக்கு நன்றி.
புதிய தகவல்கள்.
ReplyDelete"கொத்தும் பறவை" தலையில் குட்டுவதால் குட்டும் பறவை :) எனப் பெயர் வைக்கலாமோ
வைத்துக் கொள்ளலாமே! அந்த பறவை இந்தியாவந்து கொத்திக் கேட்கவா போகிறது??
ReplyDeleteஇதுபோன்று நமக்குத்தெரியாத நிகழ்வுகளை
ReplyDeleteவிளக்கத்தோடு படத்தோடு பதிவுகளில்
பார்க்கையில் உண்மையில்
உள்ளங்கையில் உலகம் என்பது இதுதானோ என
வியக்க வைக்கிறது
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Kuttuvathil expert pola.
ReplyDeleteEnakku pazhaya pagai ondru irukirathu.
Neengal meendum Brisbane sendraal oru Magpie'yai kondu vanthu engal Maths vaathiyar veetil vidavum.
Nandri
Lakshmi
@ lakshmi dhev
ReplyDeleteவிட்டு விடலாமே.ஒன்று பிடித்து பழக்கி வைக்கவும்.
புதிய தகவல்கள்.படம் அருமை.
ReplyDeleteஅங்கு போயும் உணவிட்டு காகபுஜண்ட மகரிஷியைக்‘காக்காய் பிடித்துள்ளீர்களே’! ;))))
ReplyDeleteமகனுக்கு மரியாதை கொடுத்து மகர் என்று தாங்கள் ஆங்காங்கே குறிப்பிடுவது அழகாகவே உள்ளது.
நான் கூட யானையார், எலியார், குரங்கார், காளையார், நாயார் என்று தான் நகைச்சுவையாக எழுதுவதுண்டு, குழந்தைகளுக்கு கதைகளில் சொல்வதும் உண்டு.
ஒரு சமயம் நாயார் என்று தெருவில் சொல்லிச்சென்ற போது, தமிழும் தெரிந்த ஒரு நாயர் [மலையாளி] என்னை முறைத்துப்பார்த்ததும் உண்டு.
89+2+1=92
ReplyDelete