Wednesday, February 23, 2011

நெடுங்களநாதர் திருக்கோயில்


அருள்மிகு திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.


கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது.

கோயில் முதல் வாயிலில் கோபுரம் கிடையாது.

இரண்டாவது நுழைவு வாயிலில் அழகிய சிற்பங்கள் கொண்ட சிறப்பான கோபுரம் உள்ளது. உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளது.

தென்பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது.

மேற்கு பிரகாரத்தில் தெய்வானையுடன் முருகன் தனி சன்னதி உள்ளது. தெற்கு பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் வரதராஜப்பெருமாள் சன்னதியும், வடக்கில் அகஸ்தியர் சன்னதியும் உள்ளது.

இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்தம் உள்ளது. இதில் எக்காலத்திலும் தீர்த்தம் வற்றவே வற்றாது.

வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னதியும் உள்ளது.

கோயில் மூலஸ்தானத்தில் பார்வதி அரூபமாக உள்ளார். இதனால் மூலஸ்தானத்தின் மேல் இரண்டு கோபுரங்கள் உள்ளது.



காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. உற்சவர் சோமாஸ்கந்தரின் வலதுகை கட்டை விரல் இல்லை.

காரணம் ஒரு அடியவருக்காக மாறு வேடம் கொண்டு வழக்கில் சாட்சி கூறி காப்பாற்றினார்.

இதையறிந்த அரசன் பெருமானது விரலை துண்டித்து விட்டான் என்கிறது புராணம். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளனர். அகஸ்தியர் இங்கு வந்து பூஜைசெய்துள்ளார்.

ஆடி மாதம் 7 முதல் 12ம் தேதி வரை காலை 6.05 முதல் 6.15 வரை சூரிய ஒளி பூஜை சிறப்பாக நடக்கும்.

சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருச்சி அருகே திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம்.

திருநெடுங்களம் என்றால் “சமவெளியில் அமைந்த பெரிய ஊர்” என்று பெயர். அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

“தேவாரப்பதிகம் மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப்பே சினல்லால் குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.”
-திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 8வது தலம்.

15 comments:

  1. அருமையான கோவில் தரிசனம்! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. எனக்கு தெரியாத கோயில்களை அறிமுகப் படுத்துவதற்கு நன்றி..

    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_23.html

    ReplyDelete
  3. நல்ல பகிர்வுக்கு நன்றிங்க ..
    விசயம் தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  4. நல்ல விவரிப்பு...படங்களும் அருமை.

    ReplyDelete
  5. எங்க திருச்சியில் உள்ள திருநெடுங்குளம், நெடுங்களநாதரைப் பற்றி இந்தப் பதிவின் மூலம் அனைவரும் அறிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த விசேஷ நன்றிகள்.

    ReplyDelete
  6. இப்படி ஓரே... இடத்தில் சாமி தரிசனம் என்பது அருமை. கூடவே... கொஞ்ச வரலாறு சேர்த்து எழுதினால் நல்லாயிருக்கும்.

    ReplyDelete
  7. எனக்குத் தெரியாத கோவில் பற்றிய தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  8. புதிய கோயில்களை தர்சிக்கமுடிகிறது.

    ReplyDelete
  9. அருமையான கோவில் தரிசனம். படங்களும் அருமை.

    ReplyDelete
  10. தோழி,
    ஆன்மிகம் குறித்து தாங்கள் இட்ட பதிவு மிகவும் போற்ற தக்கது.மிக்க நன்றி,தோழி

    ReplyDelete
  11. அருமையான கோவில் தரிசனம்! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. நல்ல விவரிப்பு...படங்களும் அருமை.

    ReplyDelete
  13. அருமையான கோவில் தரிசனம். படங்களும் அருமை.

    ReplyDelete
  14. ;)
    ஜய கணேச ஜய கணேச
    ஜய கணேச பாஹிமாம்
    ஜய கணேச ஜய கணேச
    ஜய கணேச ரக்ஷமாம் !!

    ReplyDelete