Thursday, February 10, 2011

எச்சரிக்கை



மடிக்கணிணி கற்பது சுலபமா?  

மேஜைக்கணிணி கற்பது சுலபமா?

நானும் கணிணி கற்றுக்கொள்ளப் போகிறேன் என்றேன்.




ஒரு நிமிடம் அம்மா என்று சொல்லி வெளியில் சென்று மேஜைக் கணிணியை வாங்கி வந்து மின் இணைப்பு கொடுத்தார். வீட்டில் இருந்த மடிக்கணிணிக்கு மவுஸ் இணைப்புக் கொடுத்தவாறே 'நாங்கள் மவுஸ் பயன்படுத்தாமலே இயக்குவோம். உனக்குச் சுலபமாக இருக்கவே மவுஸ் இணைப்பு கொடுத்திருக்கிறேன்

இயக்கிப் பார்த்து எதில் சுலபமோ அதில் கற்றுக்கொள் என்றார்கள்.

மேஜைக் கணிணியை இயக்கியவுடன் சிறிது நேரத்தில் உங்கள் .பி.க்கு அதிர்ஷ்டக் குலுக்கலில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தங்களது கணக்கு எண் மற்றும் கடவுச்சொல் கொடுக்கவும் என்ற அறிவிப்பு மின்னியது. கொடுக்கலாமா என்று கேட்டேன்.

கொடுக்கக்கூடாது!!

எங்கேயும் எப்போதும் இந்த மாதிரி பரிசு விழுந்திருக்கிறது என்கிற அறிவிப்புடன் வரும் விளம்பரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

என் நண்பர்கள் பலர் இந்த மாதிரி விளம்பரங்களில் மயங்கி, பரிசுக்கு ஆசைப்பட்டு பாஸ்வேர்டு கொடுத்த அடுத்த நிமிடம் பாங்க் அக்கவுண்டில் இருந்த பணம் மயமாக மறைவதைக் கண்கூடாகக் கண்டு பதறி புகார் அளித்தும் இதுவரை பயன் ஏதும் இல்லை. போன பணம் போனதுதான்.

நாம் வீட்டில் கணிணியில் அம்ர்ந்து நம் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, நமக்கு பரிசு கொடுக்க யாருக்கு என்ன தேவை வந்தது? யோசித்துப் பார்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

சிவப்பா இருக்கிறவர் பொய் சொல்ல மாட்டார், வெள்ளையா இருக்கிறவர் பொய்யே சொல்ல மாட்டாருன்னு சொல்றதெல்லாம் பொய்யா?

யாரயிருந்தாலென்ன நாம் எச்சரிக்கையாய் நடந்து கொள்ளவேண்டுமில்லையா அம்மா என்றார் மகர்

http://www.ceac.in என்னும் வலை தளத்தில் விரிவாக எல்லாம் கொடுத்துள்ளனர்.

4 comments:

  1. எப்போதும் எசரிக்கையாக இருக்க வேண்டியதின் அவசியத்தை எடுத்துக் கூறியதற்கு நன்றி.

    ReplyDelete
  2. நல்ல எச்சரிக்கை தான்.

    எனக்கு அடிக்கடி 10 லட்சம், 10 கோடி என டாலர் டாலராக பரிசு விழுந்திருப்பதாக SMS வரும். உடனே முதல் வேலையாக Delete செய்து விடுவேன்.

    என் BHEL நண்பர் ஒருவருக்கு ஒரு
    e-mail இது போல வந்து, யாரிடமும் சொல்லாமல் ஏதேதோ அவராகவே செய்து, நிறைய நஷ்டம் அடைந்த பிறகு, எங்களில் சிலரிட்ம் மட்டும் சொல்லி மிகவும் வேதனைப்பட்டார்.



    [இதற்கு மட்டும் ஏதாவது Just ஒரு feedback reply கொடுக்கவும். ஒரு Trial பார்க்கத் தேவைப்படுகிறது]

    ReplyDelete
  3. அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete