Sunday, February 6, 2011

ஒளிரும் புழுக்கள் !!


ஆஸ்திரேலிய மழைக் காடுகளில் சமீபத்திய எரிமலை வெடிப்பினால் உருவாகிய குகையையும் அந்தக்குகைகளின் உள்ளே ஒளிர்ந்து கொண்டிருந்த புழுக்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

போடோ பறவை தன் கூட்டில் குஞ்சுப் பறவைகளுக்கு வெளிச்சம் வழங்குவதற்காக மின்மினிப் பூச்சிகளை கூட்டின் சுவற்றில் களிமண்ணை ஈரமாக்கி பசை போலாக்கி அதில் ஒட்டிவைத்து தன் கூட்டை வெளிசமாக்கி தலைசிறந்த எலக்ட்ரீசியனாகப் பறைசாற்றிக் கொள்ளும்.

பறவைகளின் கூட்டைப்போல்வோ, தேனிக்களின் கூட்டைப்போலவோ சகல வசதிகளுடனய பல அறைகளோடும் திறமைவாய்ந்த பொறியியல்/நேநோ வல்லுநர்களாலும் வடிவமைத்து விடமுடியாது.
 
கறையான் புற்றில் இருக்கும் மண்ணும், குளவி கட்டும் கூட்டில் இருக்கும் மண்ணும் மிகச்சிறப்பான மண்வகைகளாகும்.

எலியின் வங்கில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அரிசி முதல் தரமானது.


அணில் கொறித்த பழம் அந்த மரத்தின் மிகச்சுவை உடைய பழமாகும்.

ஒருவகையான கோலா கரடி விழுங்கும் காபிக்கொட்டை உயர்தரமானதாம். அந்த கரடியின் கழிவில் கிடைக்கும்காபிக் கொட்டையை பல முறை சுத்தம் செய்து பவுடராக்கி மிக அதிக விலைக்கு விற்கிறார்களாம்.

தேனியின் கழிவுப்பொருள்தானே மருத்துவ குணமும், நீண்டநாள் கெட்டுப்
போகாத்ததும், இறைவனின் அபிஷேகத்திற்கு உகந்ததுமான தேன்?

கடல் உயிரியின் வாந்திதான் வாசனைத்திரவியமான அம்பர், புனுகுப் பூனையினுடைய கழிவு இறைவனுக்குச் சார்த்தப்படும் புனுகு.

இப்படி இயற்கையின் அற்புதங்கள் ஏராளம்.


ஒளிரும் புழுக்கள், மின்மினிப் பூச்சியின் ஒளியைவிட வேறுபட்டதாகும். மின்மினிப்பூச்சி இயக்கத்தில் இருக்கும் போதும், பறக்கும் போதும் மட்டுமே ஒளிவீசும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. எனவே தான் பேடோ பறவை பூச்சி பறந்துவிடாமல் களிமண் பசையில் ஒட்டிவைத்தாலும், அவை உயிருடன் இயங்கிக் கொண்டிருக்கத் தேவையான உணவும் அளித்துப் பாதுகாக்கும் விந்தைமிகு உயிரினம்.

ஒளிரும் புழுக்கள் அமைதியாக குகைச்சுவறில் ஒட்டிக்கொண்டு ரேடியம் உருளைத்துண்டுகள் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

பக்கத்தில் பக்கவாத்தியங்களோடு சங்கீதக்கச்சேரி நிகழ்த்திக்கொண்டிருந்ததுஅருவி ஒன்று. ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே!

குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே என்று பாடிய கவிஞர் ஆயிரம் குற்றால அருவியின் அழகையும் ஒன்றாகச் சேர்த்துப் பொழிந்து கொண்டிருந்த இந்த அருவியைப் பார்த்திருந்தால் எப்படி மகிழ்ந்து பாடியிருப்பாரோ!!




பவுர்ணமிநிலவு வானில் பாலாய்ப் பொழிந்துகொண்டிருக்க, பக்கத்தில் வெள்ளியை உருக்கி மின்னலில் தோய்த்து பாலில் கலந்து நுரைபொங்கப் பொங்க இனிமையாய் பெருகி ஓடியது.

கச்சேரிக்குப்போகலாம் என்றுதான் என்னை சஸ்பென்சாக, அருவி என்று சொல்லிவிடாமல் அழைத்து வந்திருந்தார்கள் எனது ஆஸ்திரேலிய வாழ் குடும்பம்.

மெல்லிசை என்கிற பெயரில் மேடையில் கர்ணகடூரமான சப்தத்தோடு கற்றுக்குட்டிகள் பல வகையான வாத்தியங்களை இனிமையின்றி கதறலாக வாசித்துக் கொண்டு, அபத்தமான அர்த்தங்களோடும், ஆபாசமான அங்கசேட்டைகளோடும் கட்டைகுரலோடு பாடி எரிச்சலூட்டுவ்தோடு, கைதட்டச்சொல்லி வேறு உயிரைஎடுப்பதற்குப் பெயர் தானே நம் ஊரில் மெல்லிசைக் கச்சேரி!

ஆகாயத்தில் முழுநிலவு அமுதகிரணங்களைப் பொழிய, அருவிக்குப் பக்கத்தில் வெள்ளைநிற , நறுமணமுள்ள பூக்கள் நட்சத்திரங்களாகப் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தன. பூக்கள் கோடி, கோடியாப் பூத்ததுபோல் நட்சத்திரங்கள் வானில் பூத்துச்சிரித்தன.

பூக்கள் நட்சத்திரங்களாகவும், நட்சத்திரங்கள் பூக்களாகவும் இடம் மாறி மாறி சிரித்தன. சிந்தை மயக்கி வசீகரித்துக் களிப்பூட்டின.

நிலவு அருவியாய் அமுதகிரணங்களைப் பொழிய, அருவி பால் நிலவு உருகி நீராய்ப் பெருகியதாகத் தோற்றம் காட்டி மயக்கியது.
இடம் மாறியது அவை மட்டுமல்ல! என் இதயமும் கூடத்தான்.

தோற்ற மயக்கங்களும், காட்சிப்பிழைகளும் அரங்கேறின. கனவும், கற்பனையும் அல்ல உண்மை உண்மை என்று முத்துப்போல் தெரித்த நீர்த்திவலைகள் குளிர்ச்சியால் உணர்த்தியது.

சித்தர்களும், முனிவர்களும், கடவுளும், இத்தனைத் தூய்மையான, அமைதியான மலையில் தானே தவம் செய்வதாக நாம் படித்திருக்கிறோம்!

நம் ஊரில் இப்படித் தூய்மையாகத்தான் ஒரு காலத்தில் மலைகளும் அருவிகளும் இருந்திருக்கும். பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து நிறைய முட்டைகளுக்கு ஆசைப்பட்டு இழந்ததைப் போல நாமும் நம் மலைகளையும் தண்ணீரையும் பிளாஸ்டிக் குப்பைக் காடாக்கி இழந்துகொண்டிருக்கிறோம்!

9 comments:

  1. நிறைய அபூர்வத் தகவல்களும்
    நிரம்பித் ததும்பும் உண்ர்வுகளும்
    கலந்து படைத்துள்ள உங்கள் படைப்பு அருமை
    இறுதியில் இழந்தவைகளுக்கான
    ஆதங்த்துடன் முடித்திருப்பது
    மிகஅருமை.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நம் ஊரில் இப்ப்டித்தூய்மையாகத்தான் ஒரு காலத்தில் மலைகளும் அருவிகளும் இருந்திருக்கும். பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து நிறைய
    முட்டைகளுக்கு ஆசைப்பட்டு இழந்ததைப் போல நாமும் நம் மலைகளையும்
    தண்ணீரையும் பிளாஸ்டிக் குப்பைக் காடாக்கி. இழந்துகொண்ரடிருக்கிறோம்!


    ......absolutely true.... rightly said!

    ReplyDelete
  3. மிகச் சரி..
    தனி மனித ஒழுக்கம் மட்டுமே சீர்திருத்தும்.

    ReplyDelete
  4. அருமையான தகவல்கள். இயற்கைதான் தன்னுள் எத்தனை ரகசியங்களை ஒளித்து வைத்துள்ளது.

    ReplyDelete
  5. ஒளிரும் பதிவுன்னு பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  6. அணில் கொறித்த பழம் போல் மிகச்சுவையான தகவல்கள் தந்துள்ள இந்தப்பதிவும் அருமையே.

    பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்பட்டுவரும்
    ஆபத்துக்களைச்சொல்லி, சுற்றுபுழ சூழலைப்பற்றி விழிப்புணர்வும் கொடுத்துள்ளீர்கள். நன்றி.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. ;)
    ஆரோக்யம் ஐஸ்வர்யம்
    அனந்த கீர்த்தி
    அந்தே ச விஷ்ணோ:
    பதமஸ்தி ஸத்யம் !!

    ReplyDelete