Monday, February 7, 2011

நீல நிறப் பூ

பிரிஸ்பேனில் எதிர் வீட்டில் வசித்த தாய்லாந்து குடும்பம் என்னை மிகவும் வசீகரித்தது. எப்போதும் சிரித்தமுகத்துடன் அசராமல் ஏதாவது சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பார்.

என் மகன் “அம்மா! அவர்கள் சாப்பிடும் உணவைக் கவனி. பீப் (பன்றி இறைச்சி), லேம்ப் (ஆட்டிறைச்சி) மற்றும் ஹேம் (மாட்டிறைச்சி) தான். அது தவி நிறைய காய் கறி பழங்கள் என்று வெளுத்துக் கட்டுவார்கள். ஆகவே தான் மிகவும் சுறுசுறுப்பாகவும், களைப்படையாமலும் வேலை செய்யமுடிகிறது. மற்றும் அளவாக எடுத்துக் கொள்ளும் சிவப்பு திராட்சை ரசம் (Red Wine) இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. நீ முட்டை கூட சாப்பிடாத சுத்த சைவம். ஆகவே மாடிப்படி ஏறினால் கூட மூச்சு வாங்குகிறது” என்றார்.


நான் ஏன் அதை எல்லாம் கேட்டுக் கொள்ளப் போகிறேன்?
நான் தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து பத்து நிமிடம் ஆயிற்றே??


அந்த வீட்டில் பெரிய ரோஜாப்பூவைப் போல் கியூட்டான குட்டிப் பெண் குழந்தை ஒன்று எங்கள் தோட்டத்தை தினமும் கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும். நான் அந்த குழந்தையை ரசிப்பேன்.

Which flower do you want?” என்று கேட்டால் தினமும் நீல நிறப்பூ ஒன்றையே கைகாட்டும். அதையே பறித்துக் கொள்ளச்சொன்னால் மட்டேன் என்று அழகாகத் தலை அசைக்கும்.

பறித்து நீட்டினால் “Thank you” சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடிவிடும். மறுநாள் வரை அந்தப் பூவை அத்தனைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும். காரில் ஏறி சீட் பெல்ட் போடும் வரை தன் தாயிடம் கொடுத்து, அமர்ந்ததும் வாங்கிக் கையில் வைத்துக் கொள்ளும்.

வேறு வண்ணப் பூகொடுத்தால் மறுத்து விடும்.

அந்தப்பெண்ணின் தாய் சிக் என்று சின்ன உடையில் வலம் வரும் திறமைசாலியான தாய்லாந்து அழகி!

எப்போது என்னைப் பார்க்க நேர்ந்தாலும், “Hi!! How are you?” என்று அன்பாக விசரிப்பார்கள்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை சேமியா உப்புமா செய்ய சேமியாவைக் கொதி நீரில் போட்டு எடுத்து வைத்துவிட்டு, வாணலியில் இஞ்சி பூண்டு விழுதுபோட்டு வதக்கி, காய்களைப் போட்டு சிறிது நேரம் வேகுவதற்காக மூடிவைத்தபோது, எதிர் வீட்டுப் தாய்லாந்து தாய் "Oh! What a pleasant smell? What you cooking aunty?" என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

கொஞ்சம் உப்புமாவையும், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஒரு துண்டும் ஒரு சிறிய தட்டில் வைத்து ஸ்பூன் போட்டுக் கொடுத்தேன். இன்னும் கொஞ்சம் தரட்டுமா? என்றபோது தான் புல்லாக காலை உணவு சாப்பிட்டு விட்டதகவும், எனவே போதுமென்றும் கூறினார். மக்காச்சோளம் வேகவைத்தது ஆளுக்கொன்று கொடுத்தேன். சந்தோஷமாகச் சாப்பிட்டுக்கொண்டு, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, தாங்கள் அனைவரும் வெளியில் கிளம்பிக் கொண்டிருப்பதாகவும் சென்றுவிட்டாள்.

வீட்டிற்குச்சென்று தன் கணவரிடம் என் “Wonderful” சமையல் மகாத்மியத்தைக் கூற அவரும் ஆமாம் எனக்கும் இனிய வாசனை அடித்ததே என்று வந்தார். அவருக்கும் சர்கரைவள்ளிக்கிழங்கும் உப்மாவும் கொடுத்தேன். பாராட்டிவிட்டுச் சென்றார்.

மாடியிலிருந்து வந்த மகன்,

அம்மா, நானே தாளிக்கும் சத்தத்தையும், வாசனையையும் வைத்துத்தான் வந்தேன்.
இங்கெல்லாம் அவர்கள் விருப்பமில்லாமல், சாப்பிடச் சொல்வதும், மிகச் சிறிய அளவிலான உணவைக் கொடுப்பதுவும் நாகரிகமாகாது.
சமைக்கும் போது இயந்திரப் புகைப் போக்கிப் போட்டுக் கொள்ளவேண்டும். அடுப்புக்குப் பக்கத்தில் இருக்கும் கண்ணாடிக் கதவைத்திறந்து வைக்க வேண்டும்.
நம் சமையல் மணம் இவர்களுக்குப் பழக்கமில்லாத ஒன்று.
சமைக்கும் போது அணிந்த ஆடையை மாற்றாமல் வெளியிடங்களுக்குச் செல்லக்கூடாது.
நமக்குப் பழகிவிட்டதால் நம்மால் உணரமுடியாது.
ஆனால் இங்கிருப்பவர்களால் பொறுத்துக் கொண்டு சகிக்கமுடிவதில்லை.
குறைந்தபட்சம் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போதாவது இந்த குறைந்த பட்ச அடிப்படை நாகரிகத்தைக் கடைப்பிடிக்கத் தெரியாததாலேயே திறமைகள் இருந்தும் சரியான வேலை கிடைக்காமல் குறைந்த சம்பள வேலையே செய்து கஷ்டப்படுகிறார்கள்” என்ற ரகசியத்தைப் போதித்தார்.

எப்படியோ நம்மூர் உப்புமவும் சர்கரைவள்ளிக்கிழங்கும் ஆஸ்திரேலிய நாட்டில், பக்கத்து வீட்டு தாய்லாந்து குடும்பத்தாரை கவர்ந்தது மிக்க மகிழ்ச்சியே.

20 comments:

  1. அஸ்திரேலியா நாடு தாய்லாந்து குடும்பம்
    நம்ம ஊரு உப்புமா
    படிக்கவே சந்தோசமாய் உள்ளது
    நீங்கள் எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பீர்கள் 1
    நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஐயோடா எனக்குப் பிடித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு ...[.கஷ்டமில்லாமல் ]வேகவைத்து அப்படியே சாப்பிடலாம் ....
    சேமியா உப்புமா சூப்பரா இருக்கு படிப்படியாக வழிமுறையைச் சொல்லுங்களேன்.
    நான் கொதிக்கும் தண்ணீரில் வேகப்போட்டதில்லை...

    ReplyDelete
  3. ஹ்ம்ம் சுவை மிகுந்த பதிவு... நாம் இப்படி நினைக்கிறோம். அனால் அங்கு உள்ளோர் அப்படி தவறாய் நினைத்தாய் படவில்லையே (உங்கள் பதிவில் சொல்லியதில் இருந்து )

    ReplyDelete
  4. அங்கிருந்த சூழ்நிலையை படம் போல் எழுதிக்காட்டி விட்டீர்கள்..

    வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  5. ம்… தமிழக உணவு தாய்லாந்து/ஆஸ்திரேலியா வரை!

    ReplyDelete
  6. பீப் (பன்றி இறைச்சி), லேம்ப் (ஆட்டிறைச்சி) மற்றும் ஹேம் (மாட்டிறைச்சி) தான்.

    ...Beef - மாட்டிறைச்சி
    .....Ham - பன்றி இறைச்சி

    ReplyDelete
  7. உங்கள் மகர் சொன்ன சமையல் வாசனை குறித்த கருத்து, கவனிக்கப்பட வேண்டியது. இங்கேயும், அது போல கருத்துக்களை சொல்வதுண்டு. ஆனால், உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு, நம்மூரு சமையல் வாசனை பிடித்து இருந்த மாதிரி தான் தெரியுது. :-)

    ReplyDelete
  8. நம்ம ஊரு சமையல் வாசனையே மத்தவங்களை இழுக்குதுன்னா டேஸ்டும் பண்ணினாங்கன்னா,முழுக்க வெஜிடேரியனுக்கு மாறினாலும் மாறிடுவாங்க.

    ReplyDelete
  9. உங்கள் எழுத்துநடை அழகோ அழகு.ரொம்ப சுவாரஸ்யமாக உள்ளது.இன்றுதான் முதன் முதலாக உங்கள் வலைப்பூ பார்க்கிறேன்.உங்கள் எழுத்து தந்த சுவாரஸ்யத்தில் உங்கள் அனைத்துப்பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன்.தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  10. அடடா அருமையான காம்பிநேசன்.
    நல்லாருக்கே .

    ReplyDelete
  11. நன்றி அன்பர்களே!!

    சித்ரா தாங்கள் சொல்வது சரியோ..
    சரிதான் போலும்..
    நான் பிறந்தது முதல் சைவம்
    ஆதலால் அசைவ பரிச்சயம் குறைவு.

    ரமணி சரியாக கணித்தார்.
    ஊர்: ஆஸ்திரேலியா
    உன்பவர்: தாய்லாந்து குடும்பம்
    உணவு: இந்திய உணவு
    பரிமாரியவர்: இந்தியர்
    கணக்கிலடங்கா இந்தியர் நம்மவர்களுக்கு பெருமை சேர்க்கும் இந்நேரத்தில், என் பங்கு மிகச் சிறியது

    எல்.கே. அவர்களே என் பதிவை சற்று விளக்கமாக அமைத்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  12. நம்மூர் ”சேமியா உப்புமா” ஆஸ்திரேலியா வரை சென்று அங்கு உள்ள தாய்லாந்து குடும்பத்தை ஈர்த்தது என்று சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் மகள் தலைகீழாக நின்றாலும் சாப்பிட மாட்டேன் என்று கூறும் உப்புமா!

    ReplyDelete
  13. @கோவை2தில்லி
    அவர்களுக்கு அது Favorited food-வாரம் ஒருமுறை செய்து சாப்பிடுவார்களாம்.

    ReplyDelete
  14. அட்டகாசமா இருக்கு.

    ReplyDelete
  15. தோழி,

    படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது.
    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    தமிழ் பிரியன்.
    ஆஸ்திரேலியா

    ReplyDelete
  16. தமிழ் பிரியரின் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  17. படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது.
    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. இரண்டாம் பத்தி ஒரே குமட்டல்.

    சேமியா உப்புமாவும், வேக வைத்த சர்க்கரைக்கிழங்குகளும் சுவையோ சுவைதான். தாங்களே கஷ்டப்பட்டு செய்தது அல்லவா! அதனால் மட்டுமே!!

    படத்தைப் ‘பார்த்தால் பசிதீரும்’!

    ReplyDelete
  19. ;)
    ஆரோக்யம் ஐஸ்வர்யம்
    அனந்த கீர்த்தி
    அந்தே ச விஷ்ணோ:
    பதமஸ்தி ஸத்யம் !!

    ReplyDelete