பிரிஸ்பேன் நகரிலுள்ள செல்வ வினாயகர் கோவிலுக்கு வினாயகர் சதுர்த்தி அன்று சென்றிருந்தோம். கணபதி ஹோமம் சிறப்புற செய்தார்கள். நடைப் பயணமாக புனிதநீர் எடுத்து வந்தவர்களை நாதஸ்வரம் இசைக்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார்கள்.
நாதஸ்வரம் வாசித்தவர் புதுக்கோட்டையில் கற்றுக்கொண்ட இலங்கைத் தமிழராம்.
புரட்டாசி மாத சனிக்கிழமை பிரகாரத்திலிருந்த பெருமாள் சன்னதியில் திருப்பாவை, மற்றும் தமிழ் பாசுரங்கள் பாடி நாம் இருப்பது திருவரங்கமா, திருப்பதியா என்று வியக்கவைத்தார்கள்.
சென்னையில் இருந்து அங்கு குடியேறிய தமிழ் குடும்பம், மற்றும் பல நாடுகளில் இருந்தும், இலங்கையில் இருந்தும் வந்தவர்கள் நிறைந்திருந்தனர்.புடவை அணிந்திருந்தவர்களே மிகுதி.
ஆஸ்திரேலிய வெள்ளைக்காரர் தோள்களில் சங்கு சக்கர முத்திரை பொறித்து, நெற்றியில் திருமன் ஜொலிக்க ஆஜானுபாகுவாய், பஞ்சகச்சம் உடுத்தி சாட்சாத் மஹாவிஷ்ணுவாய் தமிழ்ப் பாசுரங்களை கணீர்குரலில் இசைத்துக் கொண்டிருந்தார்.
நாம் போய் அவரிடம் பேசிப் பார்க்கலாமா ஆங்கிலத்தில் என்றேன். மகர் ஏன் ஆங்கிலத்தில் பேச வேண்டும்? அவர் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தைக் கவனியுங்கள். தமிழ் தானே! நம்மை விட அருமையாகத் தமிழ் பேசுவார் என்றார். அவர் பழம் நிறைந்த நைவேத்திய தட்டுடன் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்.
எல்லா புரட்டாசி சனிக்கிழமைகளிலும் விஷேமாக ஆராதனையும், அன்னதானமும் சிறப்பாக நடைபெறுகிறது. கோவில் நல நிதிக்காக இட்லி, தோசை போன்ற உணவுகள் விற்பனை உண்டாம். அரசமரமும் வேப்பமரமும் அருகருகே மரத்தடியில் விநாயரும்,நாகப்பிரதிஷ்டையும், துளசி, மற்றும் செடி வகைகள் வாங்கலாம். விஜதசமிக்கு அம்பாள் அம்புவிட்டு அசுரர்களை அழிக்கும் விழா விமரிசையாக கொண்டாடுவார்களாம்.
சிறுசிறு ரோஜாப்பூக்களால் மூலவர் ஆனைமுகருக்கும், உற்சவ அம்பாளுக்கும் அருமையாக அலங்காரம் செய்திருந்தது கருத்தைக் கவர்ந்தது.
அழகாக கொலு அமைத்திருந்தார்கள்.
அமைதித்தியானத்தில் அமர்ந்திருக்கிறார் ராமகிருஷ்ண பரம ஹம்சர்.
அபிராமியும், அமிர்தகடேஸ்வரரும் கணபதிக்கு இருபுறமும் அருள்பாலிக்கிறார்கள்.
அன்னதானக் கூடத்திற்கு அருகில் அர்ச்சகர் குடும்பத்திற்கான இருப்பிடம், மடப்பள்ளி. அதற்கு அருகில் வண்ணக்கலாப மயில்கள் வசிப்பதற்கான அழகிய குடில். மயில்கள் அங்கும் இங்கும் ஒயிலாக நடந்து கோவில் வளாகத்தை சிறப்பிக்கின்றன.
உங்கள் பதிவு கோயிலை கண் முன்னே நிறித்துகிறது..நன்றி..
ReplyDeleteவிவரிப்பு அருமை.. போட்டாலாம் எடுக்க மாட்டீங்களா..
ReplyDeleteமிக திருப்தியாக திவ்ய தரிசனம் செய்து விட்டு, எங்களுக்கும் இனிமையாக பகிர்ந்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஉங்கள் வலைப்பூ எளிமையாக, ஆனால் அருமையாக இருக்கிறது. நல்ல உறுத்தாத வடிவமைப்பு..
ReplyDeleteதிவ்யமான தரிசனம், உங்கள் மூலம் எங்களுக்கும். மிக்க நன்றி.
ReplyDeleteஅருமையான வர்ணிப்பு!
ReplyDelete@ தம்பி கூர்மதியன் said...
ReplyDeleteவிவரிப்பு அருமை.. போட்டாலாம் எடுக்க மாட்டீங்களா..//
பதிவு வரும் முன்னே! போட்டோ வரும் பின்னே!!
போட்டோ போட்டாச்சு!!! பார்த்துவிட்டு கருத்தைத் தெரிவியுங்கள்!
கோவில் பயங்கர காமெடியா இருக்குங்க.. அந்த மின்மினி பூச்சு செம.!!
ReplyDeleteகோயில் முன்னாடி அந்த குழந்தை சூப்பர்..
நேரில் காண்பதை போன்ற ஒரு உணர்வு, சிறப்பான பதிவு!
ReplyDeleteநல்ல விரிவான மனதைக்கவர்ந்த பதிவு.
ReplyDeleteஒரு விளக்கம் கொடுக்க முடியுமா? "மகர்" என்ற வார்த்தையை வீட்டுக்காரரைக் குறிக்க உபயோகிக்கிறீர்கள். அது இஸ்லாமிய சமூகத்தில் உபயோகிக்கும் வா்த்தை என்று என் அனுபவம். சரியா?
//அருமையான வர்ணிப்பு//
ReplyDeleteditto! :-)
மகன்/ மகள் என்ற வேறுபாட்டுக்கு அப்பால் தோளுக்கு மேல் வளர்ந்து நம்மைவிட் அனுபவத்திலும் சிறந்து உயர்ந்த உத்தியோகத்திலும் அமர்ந்து ந்ம்மைச் சிறப்பிக்கும் அவர்களை மரியாதையாக அழைப்பதாக அப்படிக் குறிப்பிட்டேன். வேறு எப்படி அழைப்பது என்று தெரிவியுங்கள். தங்கள் அனுபவத்திற்கு தலை சாய்ந்த வணக்கங்கள்.-
ReplyDeleteஅருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDelete[மகன் மகளாகவே இருப்பினும், நம் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால் அவர்கள் நம் தோழனோ அல்லது தோழியோ தான்.]
என் வலைப்பூவுக்கு தாங்கள் முதன் முதலாக வருகை தந்து, ஒரே நாளில் என் பல்வேறு ப்டைப்புக்களை படித்துக் கொண்டும், கருத்துக்கள் கூறிக்கொண்டும் இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவசியம் வாங்க. வருக! வருக!! வருக!!! என வரவேற்கிறேன். WELCOME !
ReplyDeleteபடங்களுடன் நல்ல கோர்வையான வர்ணனை! நன்று ;-)
ReplyDeleteசிறப்பாக விழாக்கள் நடைபெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது.
ReplyDeleteதோழி,
ReplyDeleteசெல்வ விநாயகர் குறித்து வெளி இட்ட பதிவு மிக அருமை
நேரில் காண்பதை போன்ற ஒரு உணர்வு, சிறப்பான பதிவு!
ReplyDelete;)
ReplyDeleteசிவாய நம ஓம்!
ஓம் நமச்சிவாயா !!
146+3+1=150
ReplyDelete