Friday, October 10, 2014

சௌக்கியம் அருளும் திருப்புனவாசல்




2
சித்தம் நீநினை என்னொடு சூளறு வைகலும்
மத்தயானையின் ஈருரிபோர்த்த மணாளன் ஊர்
பத்தர் தாம்பலர் பாடி நின்றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்டுஅறாப் புனவாயிலே. 

என தேவாரப்பதிகம் போற்றும் சிறப்புபெற்றது திருப்புனவாயில் திருத்தலத்தைத் தரிசித்தால் தேவாரப்பாடல் பெற்ற பாண்டிநாட்டு தலங்கள் பதினான்கையும் தரிசித்த பலன் கிடைக்கும். 

கடல் மற்றும் ஆற்றுப்புனலில் (வாசலில்) ஊர் 
அமைந்ததால் திருப்புனவாசல் எனப் பெயர் பெற்றது
20131117_183051_resized
ஸ்ரீமத்-வாராணசீ புண்யா   தேஹாந்தே முக்தி-தாயிநீ !
தத:-அதிகம் வ்ருத்தபுரம்  ஜீவன்முக்தி ப்ரதாயகம் !!

வருபவர்களுக்கு சகல சௌக்யத்தையும், முக்தியையும் அளிக்கவல்லது வ்ருத்தபுரம் எனப்படும் திருப்புனவாசல். 
காசியில் பிரியும் ஆன்மாக்கள் முக்தி மட்டுமே அடைகின்றன

முக்தி அடைய முடியாதவர்கள் திருப்புனவாசல் கோயிலுக்குள் நுழையமுடியாது என தலவரலாறு கூறுகிறது. எனவே வாழ்நாளில் ஒருமுறையேனும் பழம்பதியை வணங்கி பழவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற முயற்சிக்க அவனருளாலேயே அவன் தாள் வணங்கி பிரார்த்திப்போம்..

–வ்ருத்தபுரீ  மாஹாத்மியம்..

சித்தம் நீநினை என்னொடு சூளறு வைகலும் 
மத்தயானையின் ஈருரிபோர்த்த மணாளன் ஊர் 
பத்தர் தாம்பலர் பாடி நின்றாடும் பழம்பதி 
பொத்தில் ஆந்தைகள் பாட்டுஅறாப் புனவாயிலே.

வேதங்கள் வழிபட்ட பெருமை உடைய ஆலயத்தில்  பதினான்கு சிவலிங்கங்கள் உள்ளன
[Gal1]
வைகாசி விசாகத்தன்று மூலவரின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் பட்டு சூரியபூஜை நடக்கிறது. தஞ்சை மற்றும் கங்கைகொண்டசோழபுரத்தை விட பெரிய ஆவுடை உள்ள கோயில் ஆகும்..!

"மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற வட்டாரமொழிப்படி  90 அடிக்கு நெய்த  வஸ்திரத்தை  ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து நெய்து காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.
20140127_130627_resized
 சிவனுக்கு இடப்புறம் அம்மன் கிழக்கு நோக்கி 
தனி சன்னதியில் அருளுகிறாள். 
[Gal1]
அம்மனுக்கு எதிரில் குடவரை காளி சன்னதி உள்ளது.
[Gal1]

பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமல் சிறை பட்ட பிரம்மா சிவனால் விடுவிக்கப்பட்டார்

.தவறு செய்த பிரம்மா மீண்டும் படைக்கும் தொழிலைப் பெற முடிவு செய்து இத்தலத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவி,சிவலிங்கத்தின் நான்கு பக்கமும் சிவமுகத்தை உருவாக்கி,சிவலிங்க அபிசேகத்திற்கு தீர்த்தம் ஒன்றை உருவாக்கி வழிபட்டார் என்பது நம்பிக்கை.
செவ்வாய்க்கே தோஷம் போக்கிய இத்தலத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும்..

சீமந்தம் செய்யும் போது முதல் வளையலை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தும் வழக்கமும் இருக்கிறது


திருப்புனவாசலில் நடராஜர் வீற்றிருக்கும் சபை "சிவஞானசபை' எனப்படுகிறது. 

இந்த சபையில், அகத்தியருக்காக சிவபெருமான் நடனக்காட்சி தந்தருளினார். 

கோயில் மேற்கு பிரகாரத்தில் குருந்த மரத்தின் அடியில் அகத்தியர் பூஜித்த லிங்கம் உள்ளது. 

திங்கள் கிழமைகளில் மட்டுமே இந்த லிங்கத்திற்கு பூஜை செய்யப்படும். மற்ற கிழமைகளில் இவர் மோன நிலையில் இருப்பதால்
 "மோன நிலை முனீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.

சிவன் சன்னதிக்கு பின்புறம் லிங்கோத்பவருக்கு பதிலாக பெருமாளும், அனுமனும் உள்ளனர். 

சிவன் சன்னதியின் வடக்கு பகுதியில் துர்க்கைக்கு பதில் பிரம்மா உள்ளார். ஒரே சன்னதியில் இரண்டு சண்டிகேஸ்வரரும், தனித்தனி சன்னதிகளில்  இரண்டு பைரவரும் அருளுகின்றனர்.  . 

சிவனுக்கு எதிரே சூரியனும் சந்திரனும் இடம் மாறியுள்ளனர். 

பெருமாள், பார்வதி, இந்திரன், சூரியன், சந்திரன், எமன், வாயு, ஐராவதம், அகத்தியர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபாடு செய்துள்ளனர்.

மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார்..
20140620_131400_resized
தல விநாயகர் ஆகண்டல விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
பஞ்ச விநாயகர்,


கபிலரின் 9 குமாரர்கள், ஆதி சிவனடியார்கள்,

வள்ளி தெய்வானையுடன் முருகன்,
[Gal1]
பிரம்மா, சண்டிகேஸ்வரர், கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன.

 சதுரகள்ளி வனமாக இருந்த இப்பகுதியில் கார்கவ முனிவர் தவம் செய்து வந்தார். அசுரன் ஒருவன் புலிரூபம் எடுத்து இவரைக் கொல்ல முயன்றான். 

கோபமடைந்த முனிவர் அவனை எப்போதும் புலியாகவே இருக்கும்படி சபித்தார்.  

ஒருமுறை பார்வதி மானிட வடிவில் இப்பகுதிக்கு வரும்போது, புலிவடிவில் இருந்த அரக்கன் பார்வதி மீது பாய்ந்தான். 

கோபமடைந்த அம்பாள், காளியாக மாறி புலியை எட்டி உதைத்தாள். தாயின் திருவடி பட்டதோ இல்லையோ அவன் சுயரூபம் பெற்றான். அவனது அசுரகுணங்களும் ஒழிந்து விட்டன.

அன்னையே! நான் எப்போதும் உங்கள் அருகில் இருக்கும் வரம் தர வேண்டும்,''என்றான். அதன்படி அசுரன் இத்தலத்தில் பெரியநாயகி அம்மனின் எதிரே நந்தி வடிவில் அமர்ந்து விட்டான். எனவே இத்தலத்து நந்தி "வியாக்ர நந்தி' எனப்படுகிறது
20140610_105647_resized

[05_07_2008_104_006.jpg][05_07_2008_104_003_1.jpg]
20140620_131651_resizedDSC_0606DSC_060020140620_131708_resized
,ஒவ்வொரு யுகத்திற்கும் ஒன்று என்ற அடிப்படையில்,

கிருத யுகத்தில் வஜ்ரவனம் என்ற பெயரில் சதுர கள்ளியும்,

திரேதாயுகத்தில் பிரமம்புரம் என்ற பெயரில் குருந்தமரமும், 

துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயரில் மகிழமரமும்,

கலியுகத்தில் பழம்பதி என்ற பெயரில் புன்னை மரமும் தல விருட்சமாக 

இருந்ததால், இந்த நான்கும் நான்கு வேதங்களாக பாவித்து வணங்கப்படுகிறது
20130731_113628

8 comments:

  1. வணக்கம்
    அம்மா.

    விளக்கமும் படங்களும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அரிய தகவல்களுடன் பழம்பெருமை மிக்க ஆலயம் குறித்த பதிவு!
    சிறப்புடைய பதிவு!

    ReplyDelete
  3. இப்படி ஒரு பக்தி சுற்றுலா இணையத்தில் வருவது அருமை...
    வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  4. திருப்புனவாசல் அறிந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  5. அறியாத இடம் , தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  6. நான் இக்கோவிலுக்கு சிறு வயதில் 3 முறை சென்று இருக்கிறேன். அருமையாக இருக்கும். விளங்கங்கள் மூலம் அறிந்து கொண்டேன் நன்றி அம்மா. தங்களின் இப்பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சில ஆண்டுகளுக்கு முன் தரிசனம் செய்த திருத்தலம் - திருப்புனவாசல். மீண்டும் தரிசனம் செய்ததைப் போல் இருக்கின்றது. மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. திருப்புன வாசல் சென்று முக்தி கிடைக்க திருப்புன வாசல் இறைவன் அருள் வேண்டுகிறேன்.

    ReplyDelete