Friday, April 18, 2014

புனித - பெரிய வெள்ளி



கிறிஸ்துவர்கள் கொண்டாடும் திருவிழாக்களில் ஈஸ்டர் பண்டிகை முக்கியமானதொன்றாகும். 

ஈஸ்டர் அல்லது உயிர்ப்புப் பெருவிழாவுக்கு முந்தைய நாற்பது நாட்களை தவக்காலம் என்று கிறிஸ்துவர்கள் அழைக்கிறார்கள். 

இந்நாட்கள் செபத்திலும் தவத்திலும், 
தானதர்மத்திலும் செலவழிக்கப்படுகிறது.
ஈஸ்டருக்கு முந்தைய வாரம்தான் புனித வாரம் என்று அழைக்கப்படுகிறது. 

புனித வாரத்தின் வியாழன், பெரிய வியாழன் எனவும், 
வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. 

அந்த வாரத்தின் இறுதி நாளான ஞாயிறு ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
பெரிய வெள்ளி இயேசு சிலுவையில் உயிர் துறந்த நாளாகும். 

மனிதரின் மீட்புக்காக இறை மகனே மனித உருவெடுத்து சிலுவைச் சாவுக்கு தம்மை உட்படுத்திக் கொண்ட நாளாகும். 

அன்றைய ஆளும் வர்க்கத்தினரால் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், இயேசு சிலுவையைச் சுமந்து கொண்டு கல்வாரி என்று அழைக்கப்பட்ட மலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு சிலுவையில் அறையப்பட்டு மரணத்துக்கு உட்படுத்தப்பட்டார்.
இயேசுநாதரின் பாடுகளின் பதினான்கு நிலைகள் ஒவ்வொரு தவக்கால வெள்ளிக்கிழமைகளிலும் ஆலயங்களில் நடைபெறும் சிலுவைப்பாதை என்னும் வழிபாட்டின்போது தியானிக்கப்படுகின்றன.

புனித வெள்ளியன்று நடைபெறும் சிலுவைப்பாதைக்குப் பின்னர் 
மூன்று நாட்களுக்கு கோயிலில் எந்த வழிபாடும் நடைபெறாது.
கிறிஸ்து மூன்று நாட்கள் கல்லறையில் புதையுண்டிருந்ததை நினைவுகூறும் விதமாகத்தான் இவ்வாறு நடைபெறுகிறது.
கல்லறையில் புதைக்கப்பட்ட இயேசு மூன்றாம் நாள் மாட்சிமையுடன் உயிர் பெற்று எழுந்தார். இந்த நிகழ்ச்சியைத்தான் சனிக்கிழமையன்று இரவு பன்னிரண்டு மணியளவில் கிறிஸ்துவ ஆலயங்களில் மிகுந்த விமரிசையோடு வழிபாடுகளாக நடத்துகிறார்கள். 

தீயசக்திகளை எதிர்த்து வெற்றி கண்டு, ஒளியான இறைவன் உயிர்த்தெழுந்தார் என்பதை நினைவூட்டும் விதமாக நெருப்பு, தண்ணீர் ஆகியவை மந்திரிக்கப்படுகின்றன.
ஆம்.. சூதும், வாதும் வெற்றி பெறுவதுபோல் தோன்றினாலும் இறுதியில் ஒளிப்பிழம்பான இறைவனுக்குத்தான் வெற்றி. நல்லோர்களின் துன்பமும் வேதனையும் ஒருபோதும் வீண்போவதில்லை. இதுவே ஈஸ்டர் பெருநாள் நமக்கு உணர்த்தும் உண்மை.

12 comments:

  1. அருமையான படங்களுடன் இன்றைக்கேற்ற சிறப்பான பகிர்வு அம்மா...

    ReplyDelete
  2. புனித வெள்ளி மகத்துவம் அறிந்தேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  3. புனிதமான பதிவும்
    புத்துணர்வு ஊட்டிடும்
    புதுமையான செய்திகளும்
    புளகாங்கிதம் அடையச்செய்தன.

    ReplyDelete
  4. அழகிய படங்களுடன் புனிதவெள்ளி செய்தி! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. எம்மதமும் சம்மதமே என்று பதிவுகளெழுதுவது பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  6. புனித வியாழன் புனித வெள்ளி ஈஸ்டர் குறித்து மிக அற்புதமான படைப்புக்கள் ஆச்சர்ய தக்க செய்திகள்..... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. இந்த வாரம் புனிதப் பதிவு வாரம்

    ReplyDelete
  8. அறியாதன அறிந்தேன்
    படங்களுடன் சிறப்புப் பதிவு வெகு வெகு சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. மிக பொருத்தமான பதிவு பெரிய வெள்ளியன்று. புனித் வெள்ளியின் சிறப்புக்களை அறிந்துகொண்டேன். வழமைபோல் படங்கள் எல்லாம் அழகு.நன்றி.

    ReplyDelete
  10. புனித வெள்ளி - தகவல்கள் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  11. புனித வியாழன் மற்றும் புனித வெள்ளி பற்றிய தகவல்கள் அருமை. நன்றி அம்மா

    ReplyDelete