Sunday, October 5, 2014

‘அம்மன்குடி தபசு மரகத விநாயகர் க்ஷேத்திரம்







‘‘அட்ட புயகரத்தொடு அன்னை தங்கோலங் கண்டு 
இன்புற்று - நாராயணபுய நாயகி தமை துர்காஷ்டமி
தொழுவார் வினையாவுந் தொலையுந்திண்ணமே

அன்னை துர்க்காபரமேச்சுவரி செல்வமொடு ஐஸ்வர்யமும் ஆரோக்கியமும் அருளும் அன்னையாகத்திகழ்கிறாள்..!..
துர்க்கை மாதாவுக்கு நூறு கண்கள் உண்டு என்பது ஐதீகம்..! 

துர்கா பரமேஸ்வரி எட்டு கரங்களுடன், சிம்மவாகனத்தில் மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் அருள்பாலிக்கிறாள். 

எதிரியை அழிப்பதே உன்னுடைய அமைதியான வாழ்க்கைக்காகத்தான் என்று பக்தர்களுக்கு அறிவிப்பது போல முகத்தில் சாந்தம் நிறைந்த புன்னகை தவழ்கிறது. அம்பாளின் கைகளில் சூலாயுதம், சங்கு, சக்கரம், கேடயம், வில், கத்தி, அம்பு, மகிஷாசுரன் தலை ஆகியவை உள்ளன


 துர்காஷ்டமி அன்று துர்கா தேவி வீதி உலா சென்று மகிஷாசுரனை 
வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.


நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கை 
விளங்குவதால் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. 
செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜை உண்டு.

தனம், தான்யமோடு, மழை தரும் தெய்வம்  நீரின்றி யமையாது உலகு’ என்ற மொழிக்கு வித்தாக மழை தரும் துர்க்கை இவரே 

அமாவாசை, அஷ்டமி திதி, பவுர்ணமியில்  பூஜிப்பவருக்கு சிறப்புடன் வாழ்வு அமையும். 

நாராயணபுரம் என்ற பெயர்  அம்மன் குடிகொண்ட கோயில் என்பதால் அம்மன்குடி ஆயிற்று. சிவனை தன்னுள் அடக்கிய துர்க்கை ஸ்தலம்


அம்மன்குடி உறையும் சிவலிங்கம், தேவி துர்க்கா பரமேஸ்வரியால் பூஜிக்கப்பட்ட புராதன  லிங்கம் ஆகும். இவரே கைலாசநாதர். 

[Gal1]
[Image1]
மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ததால், அன்னை துர்க்கைக்கு  ஏற்பட்டதோஷம்  போக்க,  சிவனை எண்ணி தவமிருந்தாள். 

பூலோகத்திலுள்ள  தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, விநாயகர் மற்றும் சிவலிங்கம் ஸ்தாபித்து தியானம் செய்தாள். 12 ஆண்டுகள் தவத்தினால் மகிழ்ச்சியடைந்த சிவன் அம்பாள் முன்தோன்றி, உன்தோஷம் நீங்கி விட்டது. இத்தலத்திலேயே தங்கி, உன்னை தரிசிப்பவர்களின் சகல தோஷங்களையும் நீக்கி, அவர்கள் வேண்டும் செயல்களுக்கு வெற்றியை அருள்வாயாக, என்று வரமளித்தார். 

தேவி தவம் செய்த இடம் தேவி தபோவனம் எனப்பட்டது. இங்குள்ள தீர்த்தம் அம்மனின் பாவத்தைப் போக்கியதால் பாவ விமோசன தீர்த்தம் எனப் பெயர் ஏற்பட்டது. 
[Gal1]
எழுந்தருளியிருக்கும் அன்னை துர்க்கா  பரமேஸ்வரியே மகிஷாசுரமர்த்தினி எட்டுக் கரங்களில் வில், அம்பு, கத்தி, கேடயம், மகிஷாசுரன் தலை, சங்கு, சக்கரம், அக்னி என  ஆயுதங்களை தாங்கி, முகத்தில் சாந்தம் நிறைந்த புன்னகையுடன், சிம்ம வாகனத்தில் சம்ஹார மூர்த்தியாய் அருள்பரிபாலிக்கின்றாள். . 

சிவன் கோயிலில் துர்க்கைக்கு கிழக்கு நோக்கிய சந்நதி அமைவது மிகவும் சிறப்புடையது ஆகும். 

அந்த வகையில் அம்மன்குடி துர்க்கை  கிழக்கு நோக்கி அருள்பரிபாலிப்பது மிகவும் சிறப்புடையது. 

துர்க்காஷ்டமி அன்று அனைத்து வானுறை தேவர்களும்  வந்து தொழுவர். அன்று  அன்னை துர்க்கையை ஆராதிப்பார்க்கு எல்லா வினையும் அகலும், செல்வம் பெருகும், நோய் அகலும்  ஆனந்தம் பெருகும் ..!

 தெய்வீக சிறப்புடைய. விநாயகர் சிற்பம் ‘தபசு மரகத விநாயகர்’ எனப் போற்றப்படுகின்றார். , கையில் தபசு மாலை ஏந்தி, நாகாபரணத்தை வயிற்றில் தாங்கி வழவழப்பான சாளக்கிராம சிற்பத்தால்  ஆனவர். 

 சூரிய ஒளி விநாயகரின் சிற்பத்தில் காலையில் விழுகையில் பச்சை வர்ணமாகவும், மதியம் நீல வர்ணமாகவும், மீண்டும் மாலை வேளையில் பச்சை வர்ணமாகவும் நிற மாற்றம் ஏற்படும். 

நாக தோஷம் கொண்ட, தேவர்களுக்கும் நாகதோஷம் நீங்க வேண்டு மாயின் அவர்கள் தொழநிற்கும் க்ஷேத்திரம் இந்த சாளக்கிராம விநாயக க்ஷேத்திரம். 

விநாயகரின் துதிக்கை அவரது உடலோடு ஒட்டாமல் துளையிட்டு சிற்பத்திறமையுடன் செய்யப்பட்டுள்ளது.சகல க்ஷேமங்களையும் தரவல்லது, ஞானத்தை தோய வைப்பதும் ஆகும். 

அருணன் என்னும் சூரியபகவான் குழந்தை வடிவாய்,  தண்டை ஆபரணத்தை அணிந்து அம்மன்குடியில் அருள்பரிபாலிக்கின்றார். சூரியதசை நடக்கும் ஜாதகக்காரர் விரத கிரமங்களை பின்பற்றி இவரைத் தொழுதால் பெரிய மேன்மைகளை, பதவிகளை அடையலாம். 

அம்மன்குடி கோயில் சனி பகவானையும் பைரவப் பெருமானையும் ஸ்தோத்திரம் செய்வோருக்கு  பெரும் வியாதிகள் அண்டாது, வழக்குகளிலிருந்து நிவாரணம் கிட்டும் என்கின்றார் பதஞ்சலி முனிவர்.

பாவநாசனம் என்ற பொய்கையில் நீராடி, மந்தர்  என்ற சனி பகவானையும், பைரவப் பெருமானையும் பூஜிப்போருக்கு வாட்டமிலாப் பெருவாழ்வு சித்திக்கும்..

 கம்பர், ஒட்டக்கூத்தர் போன்ற பெருங்கவிகள் போற்றிய  சரஸ்வதி தேவிக்கு யோக சரஸ்வதியாக திகழ்ந்து  . கல்வி மேன்மை, ஒருமுகமான மனது, நல்ல நினைவாற்றல் போன்றவற்றை தரும் தெய்வம். வாக்குவன்மை தர வல்லவள்.
[Gal1]
நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாக்களைப் பாடுகையில், பேயால் தொல்லை, பில்லி சூன்யத்தால் தொல்லை, உடல்நலிவு என பலவித உபாதைகள். அம்மன்குடியில் அருளும்  யோக மாதா சரஸ்வதியை தொழுதபின், இடைஞ்சல் நீங்கிற்று. 

திருமுருகப் பெருமானே வந்திருந்து இந்த முருகாற்றுப்படையை கேட்டு இன்புற்றனன் என்கின்றார் நக்கீரர். 

 சிவபக்தியை ஒருமைப்படுத்திய அன்னை என  
வீணையில்லா வாணியைப் போற்றுகின்றார். 


8 comments:

  1. அம்மன்குடி தபசு மரகத விநாயகர் அறிந்தேன் உணர்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. அம்மன் குடி கோவில் தல வரலாறு அறிந்தேனின்று!
    மிக்க மகிழ்ச்சி! அருமை!

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  3. அருமையான படங்கள் ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இந்த அம்மன் குடி/ நாராயணபுரம் எங்கிருக்கிறது? நான் தான் சரியாகப் படிக்கவில்லையா.?

    ReplyDelete
    Replies
    1. வனக்கம்.. வாழ்க வளமுடன்.

      அம்மன் குடி என்னும் நாராயணபுரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் இருக்கிறது

      Delete
  5. அம்மன்குடி ஆலயத் தகவல்கள் அறிந்தேன்! மகிழ்ந்தேன்! படங்கள் தெளிவாக சிறப்பாக அமைந்திருந்தது சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  6. அம்மன்குடி ஆலயதகவல்கள் அறிந்தேன்.விநாயகர் மீது விழும்வெயில்ஒளியினால் வர்ணமாற்றம் புதிய செய்தி.படங்களுடன் பகிர்வு சிறப்பு. நன்றி.

    ReplyDelete
  7. @ G.M Balasubramaniam //

    வணக்கம் வாழ்க வளமுடன்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் இருக்கிறது

    ReplyDelete