Friday, April 15, 2011

சிற்பங்கள் அற்புதங்கள் தாரமங்கலம்





[Image1]

  • 11b4y0y.jpg (320×240)
  • அற்புத சிற்பங்களைக் கொண்டிருக்கும் தாரமங்கலம் கோவிலுக்குச் சென்றிருந்தோம்.
  • சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் மாசிமாதம் 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது..
  • ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியும் வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது.
  •  கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் பட்டியக்கல் நிலை கோயிலின் நுழைவாயிலில் உள்ளது.
  • பாதாள லிங்கம் : இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இந்து பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடுகின்றன.

  • ஜூரகேஸ்வரர் : இத்தலத்தில் உள்ள ஜூரகேஸ்வரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து வடைமாலை சாத்தி அபிஷேகம் செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள் குணமடைகின்றன.
  • தாருகா வனத்தில் அமர குந்தி என்ற ஊரில் கெட்டி முதலியார் என்பவர் அரசாண்டு வந்தார்.
  • பசுக்கள் தினந்தோறும் மேய்ச்சலுக்கு செல்கையில் ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட இடம் ஒன்றில் பால் சொரிகிறது என்ற தகவல் வந்தது.அந்த தகவல் கேட்டு அந்த இடத்திற்கு சென்று பார்த்தார்.
  • தான் கேள்விப்பட்ட தகவல்படி அந்த பசு குறிப்பிட்ட இடத்தில் பால் சுரந்தது.அதை கண்டு பரவசப்பட்ட கெட்டி முதலியார், சுவாமி அங்கு எழுந்தருள்வதாக உணர்ந்த அவர் அங்கு வழிபாடு செய்தார்.
  •  பல ஆண்டுகள் கழித்து மகுடேறி மகுடசூடாவடி மன்னன் மணிமன்னன் வணங்கினும் வணங்காமுடி இந்த கோயிலைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது
  • ஆயிரம் லிங்கங்களை உள்ளடக்கிய சகஸ்ரலிங்கத்தை வழிபட்டால் ஆயிரம் சிவலிங்கங்களை தரிசித்த பலன் கிடைக்கும்.
[Gal1]
படிமம்:Taramangalam1.jpgபடிமம்:Taramangalam.jpg

சிங்கத்தின் வாயில் இருக்கும் உருண்டக்கல் முன்னூற்று அறுபது டிகிரி சுழலும். வெளியில் எடுக்க முடியாது. சிற்பியின் கலைத்திறனை பறைசாற்றுகிறது.
yalli.jpg (800×600)
மூன்று கோபுரங்களின் தரிசனம்,
[Gal1]
மூன்று விநாயக அற்புத அருளாட்சியும்.




 
கொடி மரத்தின் அரசாட்சியும் 


எழில் கோல முருகன்..
[Gal1]

தொங்கும் கற்கிளிகள் தாமரைப் பூவைச் சுற்றி வரும் அமைப்பில் சிந்தை கொள்ளை கொள்கின்றன.எட்டு கிளிகள் அஷ்டதிக்குகளிலும் அமர்ந்திருக்கும் காட்சி மிகவும் தத்ரூபமாக செதுக்கியிருக்கும் சிற்பியின் உயிரோட்டமான கற்பனை..

  கோயிலைச் சுற்றி 306 x164 அடி அளவுக்கு  13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டமிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

ஆலயத்தின் ராஜகோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. 

ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது. 

 கோயிலில் ஆகஸ்டு-செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் நுழைவு வாயில் கோபுரத்தின் வழியாக மாலை நேர வெயில் நுழைந்து கருவறையில் இருக்கும் சிவகாமி சமேதராக வீற்றிருக்கும் கைலாசநாதர் சிலை மீது விழும்.

  • கோவில் தெப்பக்குளங்கள் சதுர வடிவிலோ, செவ்வக வடிவிலோ தான் அமைந்திருப்பது வழக்கம். ஆனால்,   தாரமங்கலம், பத்ரகாளியம்மன் கோவில் தெப்பக்குளம் எண் வடிவில் அமைந்துள்ளது. இக்குளத்தில் ஆண்டு முழுவதும் வற்றாமல் நீர் இருக்கிறது. குளத்தின் தரை தளத்தில் இருந்து, ஒரு சுவரில் கல் வீசினால், அந்த கல் எண் கோண சுவர்களில் ஒவ்வொன்றின் மீதும் பட்டு, எறிந்தவரிடமே மீண்டும் திரும்பும். எறிந்த கல் திரும்பி வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை. இதனால், இக்கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள், உருண்டையான கூழாங்கற்களை தெப்பக்குள சுவர்களில் எறிந்து, தங்களின் வேண்டுதல் நிறைவேறுமா என்று அறிந்து கொள்கின்றனர். 
  • தாரமங்கலத்தின் ஊர்த்துவ நடராஜர் சிலை மிகவும் தீவிரமானது. தழல் தலைக்குமேல் தூக்கப்பட்டுள்ளது. சூழ்ந்து கைகள். முகத்தில் உக்கிரம்
  • ஊர்த்துவ நடராஜருக்கு அருகே ஊடி நிற்கும் சிவகாமியை பெருமான் தாடையை பிடித்துக் கொஞ்சி சமாதானம் செய்துறார். அதனருகே ஊடல் தணிந்த தேவி புன்னகையுடன் தலை குனிந்து நிற்கிறாள். அதனருகே உள்ள அஹோர வீரபத்ரன் அக்னி வீரபத்ரர் சிலைகளும் உக்கிரமும் நுட்பமும் கொண்டவை. 
  • வாலி சுக்ரீவ போரில் ராமன் மறைந்து நின்று வாலியை வதம் சிலையும் அழகானது. தனி சன்னிதியாக பின்பக்கம் நாய் நிற்கும் காலபைரவன் சிலை உள்ளது.
11w5wg5.jpg (480×640)
ஹொய்சள ஆட்சியின் கீழ் இருந்தபோது  ஆலயம் முதலில் கட்டப்பட்டிருக்கிறது. 

ஹொய்சளக் கட்டிடக்கலைக்குரிய தனித்தன்மைகள் கொண்டகோயில் இது.  ஆலயத்தின் முக்கியமான சிறப்பியல்பு என்பது கிட்டத்தட்ட பன்னிரண்டு படிகள் இறங்கிச் சென்றுதான் கோயிலை அடையமுடியும் என்பதுதான்.

 கோபுரவாசலை தாண்டி இறங்குமிடம் இரு பெரும் கருங்கல் யானைகள் துதிக்கை தூக்கி நிற்பதுபோலச் செதுக்கப்பட்டுள்ளது.
2djpf83.jpg (480×640)
Image and video hosting by TinyPic


22 comments:

  1. புகைப் படங்கள் உங்கள் பக்கத்தின் சிறப்புஅம்சம்.

    ReplyDelete
  2. அற்புதமான பதிவு. நல்ல படத்தொகுப்பு. படங்கள் பேசுகின்றன.
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  3. படஙள் அருமை என்றால் விளக்கங்களும் சூப்பரா இருக்கு.

    ReplyDelete
  4. அருமையான புகைப்படங்களுடன் நிறையத் தகவல்களையும் தந்துள்ளீர்கள். சிறப்பான பதிவு.

    ReplyDelete
  5. நானும் சென்றிருக்கிறேன். அற்புதமான சிற்பங்கள். அந்தக்காலத்தில் கல் சிற்பிகள் புதிதாக வேலை ஒப்புக்கொண்டால் தங்கள் ஒப்பந்தத்தில் "தாடிக்கொம்பு,தாரமங்கலம் நீங்கலாக" என்றுதான் ஒப்பந்தம் போடுவார்களாம்.

    அந்த இரண்டு ஊர்களில் உள்ள சிற்பங்கள் அவ்வளவு சிறப்பானவை. அது மாதிரி யாரும் செய்ய முடியாதாம்.

    ReplyDelete
  6. இப்படி எத்தனையோ மகத்துவங்கள் நம் தமிழ் நாட்டில் இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கின்றன.வட்ட வடிவ தெப்பக்குளம் அதில் எண்கோண படிகள் அமைப்பு ....கட்டிடக்கலையின் அழகு மிளிர்கிறது.....

    ReplyDelete
  7. ஆஹா, இன்று என்னை தாரமங்கலத்திற்கு அழைத்துச்சென்றதற்கு என் நன்றிகள்.

    வழக்கம்போல் அனைத்தும் அருமை.

    அஞ்சலைக்குத்தாங்கள் கொடுத்த இரு பின்னூட்டங்களுக்கும் நன்றி. இன்று அவற்றிற்கு நான் பதில் கொடுத்துள்ளேன். முடிந்தால் பார்க்கவும்.

    வாழ்த்துக்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  8. Nice write up. It does made me to visit over here.
    Sure i will.
    After my return to Chennai.
    viji

    ReplyDelete
  9. ஆஹா அற்புதம்..தாரமங்கலம் கோவில் செல்ல வேண்டும் என நீண்ட நாட்களாக எண்ணம் உண்டு.அதை அதிகப்படுத்திவிட்டீர்கள் அக்காலத்தில் சிற்பிகள் இக்கோவில் சிற்பக்கலை தவிர்த்து என சொல்லித்தான் கோவில் பணிகள் ஒப்புக்கொள்வார்களாம்

    ReplyDelete
  10. ஆஹா அற்புதம்..தாரமங்கலம் கோவில் செல்ல வேண்டும் என நீண்ட நாட்களாக எண்ணம் உண்டு.அதை அதிகப்படுத்திவிட்டீர்கள் அக்காலத்தில் சிற்பிகள் இக்கோவில் சிற்பக்கலை தவிர்த்து என சொல்லித்தான் கோவில் பணிகள் ஒப்புக்கொள்வார்களாம்

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு.முதல் நான்கு பாய்ண்ட்ஸ் தெளிவாக எழுத்துக்கள் தெரியவில்லையே.அல்லது என் கணிணியில் பிரச்சனையா?

    ReplyDelete
  12. அருமையான படங்கள். உங்களை பெண் எழுத்து - தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன். http://mahizhampoosaram.blogspot.com/2011/04/blog-post_15.html
    அழகான பதிவிற்காக காத்திருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  13. சிற்பங்கள் ஒன்று சேர்ந்து கோவிலை கட்டி இருக்குமோ?

    ReplyDelete
  14. சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழும் தாரமங்கலம் தர்சித்தோம்.

    ReplyDelete
  15. 'கர' ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்கள் வலைப்பூவை இன்று தான் பார்வையிட்டேன். அருமையாக இருக்கிறது. எனது வலைப்பூவான வேதாந்த வைபவத்தை பார்வையிட்டு பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி.

    அஷ்வின்ஜி
    www.vedantavaibhavam.blogspot.com
    www.frutarians.blogspot.com

    ReplyDelete
  16. ரொம்ப அருமை மேடம். தரிசிக்க மணம் தவிக்கிறது.நான் என் மனைவியிடம் அடிக்கடி சொல்வதுன்ன்டு சீக்கிரம் காலம் ஓடவேண்டும். கடமைகள் முடித்து கோயில் குளம் என்று சுற்ற வேண்டும் என்று. என் லிஸ்டில் தார மங்கலம் இல்லாமல் இருந்தது சேர்த்துவிட்டேன். நன்றிகள் பல.

    ReplyDelete
  17. thanks a lot for displaying very good photographs

    ReplyDelete
  18. அருமையான பதிவு!

    நன்றி!

    சிறு திருத்தம்! ////”இந்த ஆலயத்தின் முக்கியமான சிறப்பியல்பு என்பது கிட்டத்தட்ட பன்னிரண்டு படிகள் இறங்கிச் சென்றுதான் கோயிலை அடையமுடியும் என்பதுதான்.இந்த அமைப்பை நாம் அதிகம் கண்டதில்லை. இக்கோயில் மிகப்புராதனமானதாக இருந்திருக்கலாம். புதைந்து போன அதை அகழ்ந்து மீட்டு சுற்றிலும் பிராகாரமும் கோபுரமும் அமைக்கப்பட்டிருக்கலாம். ”///

    தவறு! 6-7 அடிகள் இருக்கும்! மேலும் கோவிலின் பிரதான வாயிலான மேற்கு வாயில் சற்று மேடான பகுதியிலும் கிழக்கு வாயில் சமதளத்திலும் அமைந்துள்ளது. கோவில் தளம் மொத்தமும் அல்ல.

    எனவே கோவில் புதைந்ததற்கான முகாந்திரம் இல்லை.

    (நான் தாரமங்கலத்தின் அருகில் உள்ள ஜலகண்டபுரத்தை சேர்ந்தவன்.)

    ReplyDelete
  19. ///தொங்கும் கற்கிளிகள் தாமரைப் பூவைச் சுற்றி வரும் அமைப்பில் சிந்தை கொள்ளை கொள்கின்றன.எட்டு கிளிகள் அஷ்டதிக்குகளிலும் அமர்ந்திருக்கும் காட்சி....”///

    இந்த சிற்பம் சுழலக்கூடியது!!!

    ReplyDelete
  20. நானும் தாரமங்கலத்துக்காரன்-தாங்க. தாரமங்கலம் சேலம் மாவட்டத்திற்கே பெருமை சேர்ப்பதாகும்.இது போன்று மேலும் பல இடுகைகள் நீங்கள் இட வேண்டும் எனத் தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  21. அடடே! எங்கள் தாரமங்கலத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறீர்களே! எனது இளமைக்காலத்தில் என் தாத்தா அங்கிருந்தார். அப்போது கோவிலுக்குப் போயிருக்கிறேன் ஆனால் நினைவு இல்லை. மீண்டும் கோவிலை நான் 2008இல் தான் பார்த்தேன். இப்போது மறுபடியும் (நீங்கள் எழுதி இரண்டரை வருடங்கள் கழித்து) பார்க்கிறேன். காலம் கடந்த படைப்பு உங்களுடையது. வாழ்த்துக்கள்! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete