Wednesday, August 10, 2011

ஸ்ரீ கிருஷ்ணாவும் நிலாவும்

கிருஷ்ணாவும் நிலாவும்


10 incarnation of Hindu God Vishnu Wallpaper

Vishnu Mantra | Lord Vishnu Wallpapers Pictures

Vishnu Mantra | Lord Vishnu Wallpapers Pictures
"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராநனே!"
என்று பரமேஸ்வரனால் கொண்டாடப்பட்ட பெருமையுடையது ராமநாமம்.


இராமனுடைய அழகு, சங்கரனை மிகவும் ஈர்த்துவிட்டது. 
‘இவ்வழகைக் கண்குளிரக் காண என்னிடம் பதினைந்து கண்கள் உள்ளனவே’ என்று அவர் பெருமைப்பட்டுக் கொண்டாராம்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்றிரண்டே ழுத்தினால்.

கோசலையின் மகனுக்கு வசிட்டர் "இராமன்' என்றுதான் பெயரிட்டார்.
"இராமன் எனப் பெயர் ஈந்தனன்' என்பது கம்பன் வாக்கு.
Sri Rama Navami thumbnail
"இன்பத்தின் இருப்பிடம், அகில உலகுக்கும் அமைதி தருபவன் ஆதலால் இராமன் என்ற பெயரே சிறந்தது' என்று வசிட்டர் பெயரிட்ட தாக துளசி மகா முனிவரும் இதனை உறுதிப் படுத்துகிறார்.

உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் இராம காதை இருந்தாலும், அனைத்துக் கதைகளிலும் இராமன் என்ற பெயரையே சூட்டி மகிழ்ந்தனர்.

ஆனால் நடைமுறையில் இராமச்சந்திரன் என்றே பண்டிதர்
முதல் பாமரர் வரை வழங்குகின்றனர்.

நாட்டுப்புறக் கதையாக உருவான இராம கதைக்கு ஏட்டுப்புற வடிவம் கொடுத்தவரும் வேடர் குலத்தவரான வால்மீகிதானே!

நாட்டுப்புறவாசியின் கற்பனை இன்பம் கண்ட
நாட்டுப்புறக் கலைஞன் சும்மா இருப்பானா...?
[valmiki_ramayan.jpg]
தன்னுடைய கற்பனையும் அதனுடன் இணைந்து-
இயைந்து இருக்க வேண்டும் என்று எண்ண மாட்டானா?

இதன் அடிப்படையிலேயே இராமச்சந்திரன் பெயர் காரணத்தை
கற்பனைக் கதையாக வடித்து விட்டான்.

 கௌசல்யா சுப்ரஜா ராமா .....

துளசி இராமாயணம் இயற்றிய துளசிதாசரே இராமரின் 
குழந்தைப் பருவ லீலைகளை பலப்பட பாடியுள்ளார்.

அதில் ஒரு கதை...

கைகேயி இராமனைத் தன் இடுப்பில் வைத்துப் பாலமுது ஊட்டிக் 
கொண்டிருக்கிறாள்.
கைக்கண்ணாடியில் வானத்துச் சந்திரனை 
ராமச்சந்திரனுக்குப் பிடித்துத்தரும் அன்னை.  
Mother Kausalya with Lord Rama
இராமன் நிலவினைக் காட்டி, "சந்திரன் என்னுடன் விளையாட வரவேண்டும்' என்று அடம் பிடிக்கிறான்.

நிலா நிலா ஓடிவா...
நில்லாமல் ஓடிவா...

என்று பாடத்தான் முடியும். நிலவை இப்பூவுலகுக்குக்
கொண்டு வருவது எப்படி?

இராமனின் பிடிவாதம் ஓயவில்லை. நிலவைக் கொண்டு வரமுடியாது. நிலா இல்லாமல் இராமன் சோறு உண்ண மாட்டான்.

தாய் கைகேயி எத்தனையோ போக்குக் காட்டி முயன்றும் இராமனை சாப்பிட வைக்க முடிய வில்லை. இராமன் பட்டினி கிடப்பதை எப்படிப் பொறுப்பது... கைகேயி கண்களில் கண்ணீர்.

இப்பிரச்சினையைத் தீர்க்க தாதி ஒருத்தி முன்வந்தாள்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வந்து இராமன் அருகில் வைத்தாள். அந்தத் தண்ணீரில் சந்திரனின் பிம்பம் தெரிந்தது. "இராமா இதோ பார்! சந்திரன் வந்துவிட்டான். அவனைப் பார்த்துக் கொண்டு சாப்பிடு' என்றவாறு கைகேயி பாலமுதை ஊட்டலானாள்.

இராமனும் பிடிவாதத்தைவிட்டு சந்திரனைக் கண்ட மகிழ்வுடன் 
சாப்பிடத் தொடங்கினான்....
Vishnu
இந்த நிகழ்ச்சி நடந்தது முதல் இராமன் பெயருடன் சந்திரன் பெயரும் இணைந்து உலகம் முழுவதும் இராமச்சந்திரன் என அழைக்கப்பட்டான்.
நாம மாயிரம் படைத்த ராமராமராமனே!



Krishna Pictures Lord Krishna Graphics Digital Images Myspace Orkut
இந்த ஏமாற்று வேலை எல்லாம் ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் 
வேறொருத்தி மகனாய் ஒளித்து வளரும்,கண்ணனிடம் 
பலிக்குமா என்ன??
அவன் கையில் நிஜ சந்திரனே வந்து கைப்பிடியில் பெருமையாய் அமர்ந்து கிருஷ்ண சந்திரனாய் பெயர் பெயர் பெற்றானே!




beautiful wallpapers of lord krishna. wallpapers, lord krishna

Best Krishna Yashoda Images Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogs


மாணிக்கம் கட்டி, மணி வைரம் இடைக் கட்டி,
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்கு நாங்கள் விடு தந்தோம்
மாணிக் குறளனே தாலேலோ! வையம் அளந்தானே தாலேலோ!

குறும்புகள் செய்யும் குட்டிக் கண்ணன்
எழில் புன்னகையில் முத்துப் பற்கள்;
குழல் கற்றைகள் ஆடும் நெற்றியில்;
சிணுங்கும் பாதசரங்கள், தண்டைகள்;
குலுங்கும் கை நிறைய வளையல்கள்.
நீட்டினை கையெனில் நின்றுநான் பணிசெயக் கடவேன்!

இன்றுவா என்பதே இட்ட கட்டளையெனில்
இப்பொழுதே வரத் துணிவேன்1
கானக மடுவில் காளியன் தலையில்
களிநடம் புரியும் பாதன் !
வானவர் வாழ மாநிலம் மீது
ஆனிரை மேய்த்த என் நாதன் - கண்ணன்

ஆயர் மனையில் வெண்ணைய் திருடுவான் அகமும் கவர்ந்திடுவானே !
மாய புன்னகை செய்து மயக்கும் மீராவின் ப்ரபு தானே ! - கண்ணன்

ஆலிலை மேலே துயில் கொள்ளும் அமுதை
சங்கரன் வந்தான் இந்திரன் வந்தான்
சந்திர சூரியர் வந்தார் ! அங்குமிங்குமாய் ஐயனைத் தேடி
ஆயர் மனைதனில் கண்டார்

நிலாவைப் பார்த்துக் கைகாட்டியும் அழைக்க 
ஆரம்பித்துவிட்டான் குழந்தை கண்ணன்...!

நிலவு மேகங்களால் மறைக்கப்பட்டால் ஆஹா, கண்ணனின் முகமும் அழுகையில் பிதுங்கி, ஏமாற்றத்தில் ஆழ்கின்றதே. இதோ நிலவு வந்துவிட்டது, கண்ணனின் முகத்தில் மகிழ்ச்சி. நிலவைப் பார்த்து இருகைகளையும் கொட்டிச் சிரிக்கின்றான் கண்ணன்.

நிலவைப் பழம் என்று நினைத்துக் கொண்டு,
நிலாப் பழத்தை வேண்டிக் கையை உயர்த்த,
வான் நிலவும் கீழே இறங்கி வந்து அவன்
வான் நோக்கிய கையில் அமர்ந்ததாமே!

யசோதை கண்ணனைத் தன் இடுப்பில் வைத்துப் பாலமுது 
ஊட்டிக் கொண்டிருக் கிறாள்.

கண்ணன் நிலவினைக் காட்டி, "சந்திரன் என்னுடன் விளையாட வரவேண்டும்' என்று அடம் பிடிக்கிறான்.
அரக்கி பூதனை மாய்த்தவன்
பொன்றச் சகடம் உதைத்துப் பொடியாக்கியவன்
பொல்லா அரக்கரைக்கிள்ளிக் களைந்தவன்
மண்ணையள்ளித்தின்று வாயில் உலகம் காட்டியவன்
ஆலிலையில் உலகமேழும் உண்டு சயனித்திப்பவன்

பிறந்த நொடியில் விஸ்வரூபக்காட்சியை பெற்றோருக்கு காட்டியவன்
அழைத்தால் போக்கு காட்ட முடியுமா? முடியுமா? 
விளையாட்டுக்குத்தான் அழைத்தான் என்றாலும்??

கையில் வந்து விளையாட்டுப் பொருளாய் அமர்ந்து 
பெருமை கொண்டான் சந்திரன்.

யசோதையிடம் வானத்துச் சந்திரனை கையில் பிடிக்கும் அவதாரம் என்று காட்டிக்கொண்டால் அவள் அரண்டு விடுவாளே.. 

அவளை மாயையால் மறந்து போக வைக்கிறான் மாயக் கண்ணன் - வாயில் உலகத்தைக் காட்டியபோது செய்தது போலவே.


"


59 comments:

  1. அருமையான பதிவு. நல்ல விவரங்கள்.
    ரசித்தேன்.

    ReplyDelete
  2. @ DrPKandaswamyPhD said...
    அருமையான பதிவு. நல்ல விவரங்கள்.
    ரசித்தேன்.//

    ரசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  3. Beautiful photos. Awesome! very good collection. Thank you for sharing them.

    ReplyDelete
  4. நல்ல படங்களுடன் பதிவு நல்லாயிருக்கு//
    வாழ்த்துக்கள்..

    http://sempakam.blogspot.com/

    ReplyDelete
  5. அழகு கிருஷ்ணர். இன்றைக்கு பக்தியைவிட கலை உணர்வு தூண்டிவிடப் பட்டுவிட்டது. தலைப்பாகையுடன் கிருஷ்ண்ர கிளாஸ் வொர்க்கில் செய்யலாம். ஆயில் பெயிண்டிங்கில் அன்னையிடம் அமுதுண்ணும் கண்ணன். அருமையான கலென்சங்கள் - சிந்தனைக்கு வேலை சுமையில்லாத் தெளிவான அற்புதமான நாளில் முயற்சிப்பேன். . நன்றி.

    ReplyDelete
  6. கோகுலாஷ்டமி வருவதற்கு 10 நாட்கள் முன்பாகவே ஸ்ரீ கிருஷ்ணரை வரவழைத்துக் கொடுத்து அசத்திவிட்டீர்கள்.

    கேட்கக்கேட்க தெவிட்டாத கதைகள்.
    பார்க்கப்பார்க்க தெவிட்டாத படங்கள்.

    குறிப்பாக கண்ணடிக்கும் கண்ணனும், குனிந்த நிலையில் உள்ள வெண்ணெய் திருடும் குட்டிக்கிருஷ்ணனும் மிக அருமை.

    ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப்பருவ லீலைகளை ஆங்காங்கே படங்களாகக் காட்டியிருப்பது சிறப்பு.

    காளிங்க நர்த்தனமும், கோவர்த்தன கிரியைக் குடையாகப்பிடித்து, இடையர் குல மக்களைக் காப்பாற்றியதும், தனிப்பகுதியாகத் தரலாம் என்ற எண்ணமோ என்னவோ!


    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி.

    vgk

    ReplyDelete
  7. பரவசத்துடன்...

    அத்தனைப்படங்களையும் காபி செய்துக் கொண்டேன்...

    நன்றி...

    ReplyDelete
  8. தொடரட்டும் தங்கள் ஆன்மீகப்பதிவுகள்...

    ReplyDelete
  9. சுவராஸ்யமான தகவல்களுடன் தெளிவாக இருக்கிறது..

    ReplyDelete
  10. மனத்தைக் கொள்ளைகொள்ளும் பரமாத்மாவின் படங்கள்
    அருமை.

    ReplyDelete
  11. மிக அருமை சகோதரி ஆக்கமும், படங்களும். நானும் சில படங்கள் கொப்பி எடுத்தேன் மிக பிரமாதம். என்ன!....ஆக்கம் மிக நீண்டு விட்டது. எனக்கு இது ஒரு குறை தான். சிறு ஆக்கங்களை மிக விரும்பி வாசிப்பேன் நீண்டு விட்டால் ஓட்டி ஓட்டி வாசிப்பேன். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  12. அம்மா நான் காட்டான் வந்திருக்கேன்..

    போட்டோக்கள் எல்லாம் சூப்பரம்மா நான் நினைச்சேன் எல்லாற்ர படலையிலும் குழ போடவே உங்களுக்கு நேரம் போதாதென்னு..

    காட்டான் குழ போட்டான்...

    ReplyDelete
  13. கலக்கலான படங்கள்..
    நன்றி தோழி..

    ReplyDelete
  14. அருமையான படங்கள்.
    நான் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்த ராம மந்திரங்கள் கிடைத்தன.
    மிக்க நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. நல்ல பகிர்வு. படங்கள் எல்லாமே ரொம்ப அழகாக இருந்ததுங்க.

    ReplyDelete
  16. மனதை மயக்கும் படங்கள். வியந்து போயிருக்கும் எனக்கு வார்த்தைகளே வரவில்லை. பாராட்டுக்கள்.

    புத்தியுள்ள தாதி.

    ReplyDelete
  17. முகப்பின் புது வடிவம் எளிமையாகவும் நனறாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  18. ஹய்யோ சான்ஸே இல்ல ..யப்பா கலைக்கட்டும் கிருஷ்ணாவின் படங்களும் பதிவுகளும் பட்டைய கிளப்புதுங்க... அருமை ஆன்மீகம் அசத்தல்

    ReplyDelete
  19. அருமையான படங்கள்

    கண்கள் அகலாமல் பார்க்க தூண்டின
    பகிர்வுக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  20. @
    Chitra said...
    Beautiful photos. Awesome! very good collection. Thank you for sharing them./

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  21. @ vidivelli said...
    நல்ல படங்களுடன் பதிவு நல்லாயிருக்கு//
    வாழ்த்துக்கள்.//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  22. @ சாகம்பரி said...
    அழகு கிருஷ்ணர். இன்றைக்கு பக்தியைவிட கலை உணர்வு தூண்டிவிடப் பட்டுவிட்டது. தலைப்பாகையுடன் கிருஷ்ண்ர கிளாஸ் வொர்க்கில் செய்யலாம். ஆயில் பெயிண்டிங்கில் அன்னையிடம் அமுதுண்ணும் கண்ணன். அருமையான கலென்சங்கள் - சிந்தனைக்கு வேலை சுமையில்லாத் தெளிவான அற்புதமான நாளில் முயற்சிப்பேன். . நன்றி.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    என் இல்லத்திலும் வேலைப்பாடு செய்த கிருஷ்ணன் உண்டு.

    ReplyDelete
  23. @ வை.கோபாலகிருஷ்ணன் said..//

    காளிங்க நர்த்தனமும், கோவர்த்தன கிரியைக் குடையாகப்பிடித்து, இடையர் குல மக்களைக் காப்பாற்றியதும், தனிப்பகுதியாகத் தரலாம் என்ற எண்ணமோ என்னவோ!


    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி.//

    பாராட்டுரைகளுக்கும் கருட்துரைகளுக்கும் நன்றி ஐயா.
    இது நிலவை அழைக்கும் குழ்ந்தைப்பருவம் ....
    மற்றை தனிப்பகுதி.

    ReplyDelete
  24. @ # கவிதை வீதி # சௌந்தர் said...
    பரவசத்துடன்...

    அத்தனைப்படங்களையும் காபி செய்துக் கொண்டேன்...

    நன்றி...//

    அத்தனை கருத்துரைகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  25. @ மகேந்திரன் said...
    மனத்தைக் கொள்ளைகொள்ளும் பரமாத்மாவின் படங்கள்
    அருமை.//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  26. @ kavithai said...//

    வாங்க ச்கோதரி. கருத்துரைக்கு நன்றி.

    என் ஆக்கங்கள் அத்தனையும் பெரியவைதான்.

    இனி சிறிதாக்கித்தர முனைவேன்.

    ReplyDelete
  27. @!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    கலக்கலான படங்கள்..
    நன்றி தோழி.//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  28. @ Rathnavel said...
    அருமையான படங்கள்.
    நான் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்த ராம மந்திரங்கள் கிடைத்தன.
    மிக்க நன்றி.
    வாழ்த்துக்கள்.//

    ராமராம!

    கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  29. @ கோவை2தில்லி said...
    நல்ல பகிர்வு. படங்கள் எல்லாமே ரொம்ப அழகாக இருந்ததுங்க.//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  30. @ அப்பாதுரை said...
    மனதை மயக்கும் படங்கள். வியந்து போயிருக்கும் எனக்கு வார்த்தைகளே வரவில்லை. பாராட்டுக்கள்.

    புத்தியுள்ள தாதி.//
    பாராட்டுக்கும் முகப்பு கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  31. @ மாய உலகம் said...
    ஹய்யோ சான்ஸே இல்ல ..யப்பா கலைக்கட்டும் கிருஷ்ணாவின் படங்களும் பதிவுகளும் பட்டைய கிளப்புதுங்க... அருமை ஆன்மீகம் அசத்தல்//

    அசத்தலான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  32. @ M.R said...
    அருமையான படங்கள்

    கண்கள் அகலாமல் பார்க்க தூண்டின
    பகிர்வுக்கு நன்றி மேடம்//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  33. மனத்தைக் கவர்கிறது.படங்களும் தகவல்களும் அருமை.

    ReplyDelete
  34. விளக்கமான பதிவு. இம்புட்டு டீடெயில் எப்படிங்கோ கலெக்ட் பண்றீங்க?

    ReplyDelete
  35. கிருஷ்ணா'ங்கற தலைப்பு என்னை இங்கு இழுத்து வந்து விட்டது... ;) காண காண தெவிட்டாத படங்கள்... எங்க இருந்து தான் கிடைக்குதோ உங்களுக்கு மட்டும்... துணை கதைகளை சொல்லிய விதமும் அருமைங்க..

    ReplyDelete
  36. அழகு..அருமை...தொடரட்டும் தங்கள் ஆன்மீகப்பதிவுகள்..வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  37. அத்தனையும் அழகான படங்கள்.... காணக்காண இன்னும் அதிலேயே லயித்திருக்கத் தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  38. எல்லாரும் சொன்னததான் சொல்ல வேண்டி இருக்கு அருமையான படங்கள் அருமையான விளக்கங்கள்.

    ReplyDelete
  39. ஹே.. ராம். ஜெய் ராம், சீதா ராம்....

    ReplyDelete
  40. கண் சிமிட்டும் கண்ணன் மட்டுமல்ல எல்லா கண்ணன் படங்களுமே அழகு. அடேங்கப்பா எத்தனை படங்கள்...(தலைப்பு என்னை ரொம்பக் கவர்ந்தது!)

    (பின்னூட்டப் பக்கம் திறக்காமல் சண்டி செய்தது. எப்போது திறக்குமோ. எல்லா ப்ளாக்கிலும் இதே கதி!)

    ReplyDelete
  41. ஸ்ரீராம ராமா, கிருஷ்ண கிருஷ்ணா.....
    படங்கள் மனதை கொள்ளை கொண்டுவிட்டது. குட்டி கிருஷ்ணனை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு.
    அருமையான பகிர்வு.

    ReplyDelete
  42. சில பின்னூட்டங்களை டெம்ப்லேட் கமெண்ட் என்று கூறக் கேட்டிருக்கிறேன். இப்படித் தொடர்ந்து அழகான படங்களுடன் அருமையாய் விவரித்து நீங்கள் பதிவிடுவதைப் பார்க்கும்போது வேறு வழி இல்லை. அருமை அருமை என்று சொல்வது தவிர.

    ReplyDelete
  43. இந்த பகிர்வை நான் எப்பவோ பார்த்தேன்... ஆனால் உடனே பதில் பதியமுடியாதபடி வேலைப்பளு இருந்தது....

    எத்தனை அழகு எத்தனை அழகு.....ராமனைப் பற்றியும் கோகுல கண்ணனைப் பற்றியும் அறிய முடிந்தது..

    தினமும் வாசிக்கும் பாகவதம் கண்முன் நின்றது உங்களின் இந்த பகிர்வு பார்க்கும்போது....

    பிறவி எடுத்ததின் பயனைப்பெற்றது போல ஒரு அமைதி மனதில்....

    இப்படி காண முடியுமா கண்ணனின் அழகை.... அவன் வாய்க்கொள்ளா சிரிப்பை.... இதுவரை நான் காணவே காணாத பூப்போல உறங்கும் கண்ணனின் படம் இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன்...

    அன்பு நன்றிகள்பா அருமையான பகிர்வுக்கு....

    நான் எழுதிய மீராக்கண்ணன் கவிதைகளுக்கு உங்க படங்களை எடுத்துக்கொள்ளவா?

    ReplyDelete
  44. @ மஞ்சுபாஷிணி said...//

    எடுத்துக்கொள்ளுங்கள் சகோதரி அன்புடன்.......
    உறங்குபவன் கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வ....
    என்று சுப்ரபாதம் பாடுவோமே அந்த ராமன்.
    தலையில் மயில் பீலி சூடியிருந்தால கண்ணன்.
    கையில் வில் வைத்துக்கொண்டு உறங்குபவன் விற்பயிற்சி முடித்த களைப்பில் ராமன்.

    ReplyDelete
  45. @G.M Balasubramaniam said...
    சில பின்னூட்டங்களை டெம்ப்லேட் கமெண்ட் என்று கூறக் கேட்டிருக்கிறேன். இப்படித் தொடர்ந்து அழகான படங்களுடன் அருமையாய் விவரித்து நீங்கள் பதிவிடுவதைப் பார்க்கும்போது வேறு வழி இல்லை. அருமை அருமை என்று சொல்வது தவிர.//

    அருமையான கருத்துரைக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  46. @RAMVI said...
    ஸ்ரீராம ராமா, கிருஷ்ண கிருஷ்ணா.....
    படங்கள் மனதை கொள்ளை கொண்டுவிட்டது. குட்டி கிருஷ்ணனை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு.
    அருமையான பகிர்வு//

    ஸ்ரீராம ராமா, கிருஷ்ண கிருஷ்ணா.
    நன்றி...

    ReplyDelete
  47. @ ஸ்ரீராம். said...
    கண் சிமிட்டும் கண்ணன் மட்டுமல்ல எல்லா கண்ணன் படங்களுமே அழகு. அடேங்கப்பா எத்தனை படங்கள்...(தலைப்பு என்னை ரொம்பக் கவர்ந்தது!)

    (பின்னூட்டப் பக்கம் திறக்காமல் சண்டி செய்தது. எப்போது திறக்குமோ. எல்லா ப்ளாக்கிலும் இதே கதி!)//

    ஆம் நிறைய நேரம்.. பின்னூட்டம் போடதிறக்கமுடியவில்லை..

    தலைப்பு பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  48. அமைதிச்சாரல் said...
    ஹே.. ராம். ஜெய் ராம், சீதா ராம்...//

    ராம ராம ஜெய ராம சீதாராம்...

    நன்றி.

    ReplyDelete
  49. @ Lakshmi said...
    எல்லாரும் சொன்னததான் சொல்ல வேண்டி இருக்கு அருமையான படங்கள் அருமையான விளக்கங்கள்.//

    வருகைக்கு நன்றி அம்மா..

    ReplyDelete
  50. @ வெங்கட் நாகராஜ் said...
    அத்தனையும் அழகான படங்கள்.... காணக்காண இன்னும் அதிலேயே லயித்திருக்கத் தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி.//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  51. @ Reverie said...
    அழகு..அருமை...தொடரட்டும் தங்கள் ஆன்மீகப்பதிவுகள்..வாழ்த்துக்கள்...//

    அழகான அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  52. @அப்பாவி தங்கமணி said...
    கிருஷ்ணா'ங்கற தலைப்பு என்னை இங்கு இழுத்து வந்து விட்டது... ;) காண காண தெவிட்டாத படங்கள்... எங்க இருந்து தான் கிடைக்குதோ உங்களுக்கு மட்டும்... துணை கதைகளை சொல்லிய விதமும் அருமைங்க.//

    வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  53. @ தமிழ்வாசி - Prakash said...
    விளக்கமான பதிவு. இம்புட்டு டீடெயில் எப்படிங்கோ கலெக்ட் பண்றீங்க?//


    பாகவதமும் நாராயணீயமும் அடிக்கடி படிப்பதால்...

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  54. shanmugavel said...
    மனத்தைக் கவர்கிறது.படங்களும் தகவல்களும் அருமை.//

    ந்ன்றி..

    ReplyDelete
  55. ;)
    சர்வ மங்கள மாங்கல்யே
    சிவே சர்வார்த்த சாதிகே !
    சரண்யே த்ரயம்பிகே கெளரி
    நாராயணீ நமோஸ்துதே !!

    ReplyDelete