Friday, August 24, 2012

ஆழியில் அவதரித்த அலைமகள்

http://fc05.deviantart.net/fs50/f/2009/312/3/e/LAXMI_TEMPLE_by_VISHNU108.gif
பாற்கடலிடைப் பிறந்தாள்-அது பயந்தநல்லமுதத்தின்பான்மைகொண்டாள்;
ஏற்குமோர் தாமரைப்பூ - அதில் இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்;
நாற்கரந் தானுடையாள்- அந்த நான்கினும் பலவகைத் திருவுடையாள்;
வேற்கரு விழியுடையாள்- செய்ய மேனியள் பசுமையை விரும்புவாள்” 

என்று பாற்கடலில் தோன்றிய திருமகளைப்பற்றிப் பாடுகிறார் மகாகவி பாரதி.

ஹரிக்குப் பிரியமானவள் மஹாலக்ஷ்மி ஹரி ப்ரியா!

அகலகில்லேன்” என்று எப்போதும் எம்பெருமானின் வல மார்பினில் குடியிருக்கும் மஹாலக்ஷ்மி..

உன்னை விட்டுப் பிரியாத இலக்குமி தேவிக்கு உன் மார்பை வாழுமிடமாக்கினாய். 

இலக்குமிதேவியை அளித்த திருப்பாற்கடலை, நீ துயில் கொள்ளும் இடமாக்கிக் கொண்டாய். 

தேகத்தோடு கூடிய உயிர்களுக்கெல்லாம் தாயாகிய இலக்குமியின் கடைக்கண் பார்வையால் சிறப்புடைய கடலுக்கு அணைகட்டியதும், கடல் கடந்ததும் அந்தத் திருத் தாயாரான மஹாலக்ஷ்மிக்காக அன்றோ!
 என்று அழகுறப் பாடுகின்றார்.ஆளவந்தார் தம்முடைய “ஸ்தோத்ர ரத்னத்தில்.........

உரஸா தரஸா மமாநிதைநாம் புவநாநாம் ஜநநீம நந்யபாவாம் |
த்வதுரோ விலஸத் ததீக்ஷண ஸ்ரீ பரிவ்ருஷ்ட்யா பரிபுஷ்டமாஸ விச்வம ||

 லக்ஷ்மி உலகங்களுக்கெல்லாம் தாய், வேறொருவரிடமும் பற்றில்லாதவள். அவளை பகவானே! நீ மார்பினில் தாங்கிப் பெருமைப் படுத்தினாய்.

உன் மார்பில் விளங்குகின்ற அந்தத் திருமகளின் அருள் பார்வை என்ற மழையால்தான் உலகங்களெல்லாம் பெரிதும் வளர்ச்சி யடைந்தன.”  ---
ஸ்ரீநாராயண பட்டத்ரி  தம் நாராயணீயத்தில்மெய்சிலிர்க்க வணங்குவார்..
http://1.bp.blogspot.com/_-l3O7o5jJVE/Srhw6z9TmDI/AAAAAAAAEtw/sHQQ78MHWoI/s400/mahalaxmi%2Banimated.jpg
 மஹாலக்ஷ்மியை, பெரியாழ்வார் தம்முடைய திருமொழியில், எம்பெருமானுடன் சேர்த்து, “வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” என்று அன்னைக்கும் பல்லாண்டு பாடுகிறார்.........
சிரசில் கிரீடமும், எல்லா ஆபரணங்களை அணிந்தவளும்,
ஆசனத்தில் வீற்றிருப்பவளும்,
தன் கரங்களில் பரிபூர்ண கும்பம், சக்ரம், அம்பு, தாம்பூலம் சங்கு, தாமரைமலர், வில், கண்டிகை, தாங்கியவளாக எட்டு கரங்களுடன், மனத்திற்கு இனியவளாக விளங்கும் தனலக்ஷ்மியை நாம் தியானம் செய்வோம்.
jai-maa-lakshmi.JPG
தாமரைமலர் மீது அமர்ந்த வண்ணம் தோன்றித் தம் கரங்களில் இருந்த மாலையுடன் வெளியே வந்து அங்கு கூடியிருந்த ஒவ்வொரு தேவர்களையும் பார்த்துக் கொண்டு வந்தபோது, அவர்கள் அனைவரும் தங்களுக்குத்தான் மாலையிட வருகிறாள் என்று ஆவலுடன் எதிர் பார்த்திருந்த போது, இது எதையும் கவனியாதவர் போன்று எங்கேயோ பார்த்த வண்ணம் இருந்த மஹாவிஷ்ணுவின் கழுத்தில் அந்த மாலையை அணிவித்து அவரையே தன் கணவனாக ஏற்றுக்கொண்டாள். அவனும் அவளைத் தன் மார்பினில் தாங்கிக் கொள்ள அவளே “ஹரி ப்ரியா ஆனாள்”.
 http://files.laxmisharma.webnode.com/200000008-2868528e06/mahalaxmi.gif
http://mahalaxmibanners.com/images/mahalaxmi.gifhttp://mahalaxmibanners.com/images/mahalaxmi.gif

17 comments:

  1. ஆழியில் அவதரித்த அலைமகளுக்கு அநேக நமஸ்காரங்கள்.

    ReplyDelete
  2. //ஏற்குமோர் தாமரைப்பூ//

    ;)))))

    மகாகவி பாரதியே போற்றிய இந்தப்பதிவரின் சின்னம் !

    அதனாலேயே அனைவராலும் போற்றப்படுகிறதோ!!

    ReplyDelete
  3. ஏற்றமிகு ஏழு விளக்குகளுடன் இந்தப் பதிவு மிகவும் பிரகாஸிக்கிறது.

    ReplyDelete
  4. ஹரி ப்ரியா

    அகலகில்லேன்

    விளக்கங்கள் அருமை.

    மூன்றாவது படத்தினில் ஸ்ரீ மஹா விஷ்ணு சும்மா ஜொலிக்கிறார்.

    ReplyDelete
  5. //”உன் மார்பில் விளங்குகின்ற அந்தத் திருமகளின் அருள் பார்வை என்ற மழையால்தான் உலகங்களெல்லாம் பெரிதும் வளர்ச்சி யடைந்தன.”
    ---
    ஸ்ரீநாராயண பட்டத்ரி தம் நாராயணீயத்தில் மெய்சிலிர்க்க வணங்குகிறார் ....

    மெய்சிலிர்க்க வைக்கும் அழகானதோர் தகவல்!

    ReplyDelete
  6. குழலூதும் கண்ணன் படமும் ஜொலிக்குது, வஸீகரிக்குது.

    கடைசியில் காட்டப்பட்டுள்ள இரண்டு லக்ஷ்மிகளும், அதற்கு முன்பு காட்டப்பட்டுள்ள “ஹரி ப்ரியா” வும் ரொம்ப நல்லா இருக்குது.

    இன்று சிறியதோர் பதிவு. இருப்பினும் மிகவும் சிறப்பானதோர் பதிவு.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. மகாலஷ்மிக்கு "ஸ்ரீஹரிப்பிரியா" என்ற பெயர் போல, பார்வதிதேவிக்கும் "பாகம் பிரியாள்" என்று பெயரும் உண்டு.

    கண்ணில் ஒத்திக்கொள்ள தூண்டும் ப்டங்கள்.

    ReplyDelete
  8. மிக்க நன்றி அம்மா...

    மகாகவி பாரதியின் பாடலையும் சேர்த்துக் கொண்டது சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. கொள்ளை அழகு கிருஷ்ணா

    ReplyDelete
  10. மிக அருமையான பகிர்வு

    ReplyDelete
  11. படங்களும் பகிர்வும் அருமை !...இந்த அன்பு உள்ளத்திற்கும் தங்கள் ஆதரவையும் வழங்க வாருங்கள் சகோதரி .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  12. புகைப்படங்கள் அனைத்தும் அருமை சகோ! பதிவு வழக்கம் போல்!

    ReplyDelete
  13. அருமையான படங்களும் பகிர்வும்... தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. ஸ்ரீ ராமா ரகுராமா கோசலராமா சீதாராமா....

    உண்மையே ராஜேஸ்வரி....

    மனதில் மகிழ்ச்சி இருப்போரை புறச்சூழல்கள் எதுவும் பாதிப்பதில்லை...

    ஆனந்தம் தருபவன் ராமன் என்ற அழகிய அர்த்தம் பொதிந்த விளக்கங்கள் நிறைந்த ராமனின் சரிதத்தை சீதா பிராட்டியாரோடு இலக்குமி தேவியையும் சேர்த்து மிக அழகிய கட்டுரையாக நேர்த்தியாக வடிவமைத்து....

    ராமனையும் சீதையையும் பார்க்கும்போது கருணை பொங்கும் கண்கள் நம்மை வசீகரிப்பதை உணரமுடிகிறதுப்பா...

    படங்கள் அத்புதம்... கட்டுரையும் மிக அருமை... அந்த காலத்தில் அப்பா வழிச்செலவுக்கு பணத்தையும் அம்மா கட்டுச்சோற்றையும் அனுப்புவது வழக்கமென்றால் தசரதன் சத்தியம் எனும் பணத்தையும் தாய் கோசலையோ தர்மம் எனும் கட்டுச்சோற்றை அனுப்பி ராமனை உலகமே போற்றும் அளவுக்கு பண்படுத்திய பக்குவப்படுத்திய அந்த வனவாச நிகழ்ச்சி கண்முன் காட்சியாக விரிகிறதுப்பா தங்களின் எழுத்துகள் வாயிலாக....

    இந்த வயதிலும் விடாது கோடிராமா எழுதும் என் தாயாரை அன்புடன் நினைத்துக்கொள்கிறேன் இராஜேஸ்வரி....

    பஜனை செய்தும் தான தர்மங்கள் செய்தும் புண்ணியங்கள் சேர்க்கும் எத்தனையோ உள்ளங்களின் நடுவே எவ்வித பிரதிபலனும் எதிர்ப்பாராது இப்படி ஒரு சேவை செய்ய யாரால் இயலும்பா உங்களைத்தவிர?

    உங்கள் ஆரோக்கியம் பெருக தினம் ஒரு ஆன்மீக பதிவுகள் எழுத தங்களுக்கு மனதிலும் உடலிலும் சக்தி பெருக இறைவனிடம் அன்புடன் பிரார்த்திக்கிறேன் உங்களுக்காக....

    தொடரட்டும் தங்களின் இந்த ஆத்மபணி என்றும் சிறக்கட்டும் இறைவன் அருளால்....

    படங்களும் எழுத்துகளும் தங்களின் அயராது உழைக்கும் பாங்கும் என்றும் என்னை கவர்ந்தவைப்பா...

    பகிர்வுக்கு அன்பு நன்றிகளும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளும்....

    ReplyDelete
  15. ஸ்ரீ ராமா ரகுராமா கோசலராமா சீதாராமா....