Friday, February 22, 2013

ஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷம் அருளும் லக்ஷம் மஞ்சள் பிராத்தனை




ஓம்கார பூர்விகேதேவி வீணாபுஸ்தக தாரிணி
வேத மாதர் நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே

பதிவ்ரதே மஹாபாஹே பர்துச்ச ப்ரியவாதினி
அவைதவ்யம்ச ஸெளபாக்யம் தேஹித்வம் மமஸுவ்ருதே

புத்ரான் பௌத்ராம் ஸ்ச ஸெளக்யம்ச ஸெளமாங்கல்யம் ச தேஹிமே
தீர்க்க சௌமாங்கல்யம் பெற

ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதிசதமகாத்யா திவிஷத:
கராளம் யத் க்ஷ?வேளம் கபளித வத; கால கல நா
நசம்போ: தந்மூலம் தவ ஜனநி தாடங்க மஹிமா.

ப்ருக்ருதிம் ஜகதாம்பாது பதிபுத்ரவ கீஷுச
யத்ந்ரே ஷுபூஜயேத் தேவீம் தநஸந்தான ஹேதவே
இஹலோகஸுகம்புங்கத் வாயாத் யந்தேதேஸ்ரீவிபோ: பதம்
சாக்ஷúர் நிவேஷப்ரளய: யஸ்யாய் ஸர்வாந்தராத்மநே;

உந்மீல நேவுநஸ் ஸ்ருஷ்டி; தஸ்யா பூஜாவிதாநத;
க்ருஹீத்வா ஸ்வாமி நம்ஸாசச ஸாவித்ரி நிஜமாலயம்
லக்ஷ வர்ஷம் ஸுகம் புங்கத்தவா தேவீ லோகம் ஜகாமஸா.
மாங்கல்ய பலம் தரும் அபிராமி அந்தாதி

துணையும் தொழுந் தெய்வ மும்பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனிமலர்பூங்
கணையும் கருப்புச்சிலையுமென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி யாவது அறிந்தனமே.
ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா: பதிமதீ: ஸெளந்தர்ய ரத்னாகரா:
பர்த்தாஸங்கமுபேயுஷீ: ஸுவஸனீ: ஸீமந்தனீஸ் ஸுப்ரியா:
ப்ரேம்ணா புத்ரகிருஹாதி பாக்யவிபவை: ஸம்யோஜ்ய ஸம்ரக்ஷதீம்
ஸ்ரீ விஷ்ணுப்ரியகாமினீம் சுபகரீம் ஸெளபாக்ய லக்ஷமீம் பஜே
சௌமங்கல்யத்தை விரும்பும் சுமங்கலிகள் 
சௌபாக்கிய லட்சுமிக்கு பிரியமானவர்கள். 

அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்டம், வாகனம்,
ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும் 
ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி அன்னையை ஜபித்து பிரார்த்தித்தால் இக பர சௌபாக்கியங்களை அடையலாம் ...


சுமங்கலிப் பெண்கள் நவராத்திரி தனங்களில்  ஒன்பது நாட்களும் மௌன விரதத்தை அனுஷ்டித்து ஒரு தனி பூஜை அறையில் அமர்ந்திருப்பார்கள். 

ஆந்திர தேசத்தில் மிகவும் சிரத்தையுடன் ஆசார அனுஷ்டானத்தை மேற்கொண்டு “ஒக்கப்போது ” என்னும் ஒரு நாளைக்கு ஒரே வேளை  மட்டும் உணவு.  அதுவும் உப்பு, காரம், புளி ,அரிசி  என்று  இதை எதுவும் சேர்க்காமல் உண்பதைக் கடைபிடிப்பார்கள்.

 சிறப்பாக …, “ஒக்க லக்ஷ  பசுப்பு..” அதாவது அந்தப் பெண்கள் தங்களின் முன்பு மலை போல புத்தம் புதிய அல்லது காய்ந்த வரளி  மஞ்சள் இவற்றை மலை போலக் குவித்து வைத்துக் கொண்டு அவர்களைப் பார்க்க வரும் சுமங்கலிகளுக்கு அவர்களது புடைவைத் தலைப்பில் தனது  இரு கைகளின்  முழங்கை வரை மஞ்சள் கிழங்குகளை அள்ளி தாராளமாக எடுத்து மூன்று முறை நிரப்புவார்கள். 

அதே போலத் தான் சுத்தமான குங்குமமும்…அள்ளி அள்ளித் தருவார்கள்.

நவராத்திரி  ஒன்பது நாட்களுள் மூன்று லக்ஷம்  மஞ்சள்கிழங்குகள் வரை கூட அள்ளிக் கொடுப்பார்கள் சிலர்.

இது ஒரு சிறப்பான வேண்டுதல் ஆகும்.

இதைக் கொடுக்கும் வீட்டின் முன்பு எப்போதும்
பெண்களின் கூட்டம் நிறைந்திருக்கும்

இந்த முறையைப் பின் பற்றி தருபவருக்கும் பெறுபவருக்கும்
சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்

 விடியற்காலையில்  நான்கு மணியிலிருந்து அடுத்த நாள் இரவு ஒரு மணி வரை கூட நீண்ட வரிசையில்  மஞ்சள் வாங்கிக் கொள்ளப் பெண்கள் வரிசையில் காத்திருந்தபடியே “லலிதா சஹஸ்ரநாமம்” பாராயணம் செய்து கொண்டே இருக்கும் சுகமான அனுபவம் கிடைப்பதை பெரும் பேறு பெற்ற வரமாகவே சுமங்கலிப் பெண்கள் மகிழ்வார்கள்...
 ஆந்திராவில் “லட்சப் பசுப்பு” என்று எழுதி வைத்திருக்கும் வீட்டின் முன்பு பெண்களின் கூட்டம்  திரண்டு அலைமோதும் கண்கொள்ளாக்கட்சியைப் பக்திப்பரவத்துடன் கண்டு களிக்கலாம் ..
மஞ்சள் முகமேவருக மங்கள விளக்கேவருக”
கொஞ்சும் தமிழே வருக .கோடானு கோடி தருக ..
மஞ்சள் எனில் மங்களம். ..
மஞ்சள் பண்டிகைகளில்   சிறப்பிடம் பெறுகிறது ...

மங்கள நிகழ்ச்சிகள்  துவங்கும்போதும் மஞ்சள்  பிள்ளையார் 
பிடித்து அருகம்புல்லை குத்தி பூஜை செய்வது தமிழர் வழக்கம்...
இதற்கு விஞ்ஞான காரணமும் இருக்கிறது ...

இல்லத்தில் பூஜைப்பொருள்களோ , மளிகைப்பொருட்களோ வாங்குவதற்கு பிள்ளயார் சுழியிட்டு மஞ்சள் , குங்குமம , உப்பு என்றே ஆரம்பிக்கும் வழக்கம் உண்டு ..

திருமண்த்திற்கு முதலில் பொருட்கள் எடுத்துவைப்பதில் மஞ்சள் ,
மஞ்சள் குங்குமம் முதலிடம் பெறுகிறது ..

புத்தாடைகளை நுனியில் மஞ்சள் துளி தடவியே அணிவது வழக்கம் ...
 மஞ்சளுக்கு புற்றுநோயை குணமாக்கும் தனமை உண்டு ..

Turmeric : Anti oxidant,arthritis,Alzheimer's,cancer


படிமம்:Turmeric (Curcuma longa).jpgபடிமம்:Curcuma stem-root – ladies talc..jpg

படிமம்:Plant turmeric.JPGபடிமம்:Turmericfields.jpgபடிமம்:Turmeric field.jpg


29 comments:

  1. மஞ்சளின் மகிமையே தனி.மனதுக்கும்உடலுக்கும் ஏற்படும் காயத்துக்கு நல்ல மருந்து

    ReplyDelete
  2. தலைப்பைப் பார்த்ததுமே தனி சந்தோஷம் ஏற்படுகிறது. மிக்க நன்றி.

    மீண்டும் சற்று தாமதமாக வருவேன்.

    >>>>>>

    ReplyDelete
  3. தங்களின் இந்தப்பதிவினை ஆசையுடன் படித்து மகிழ்ந்தேன்.

    என் தம்பி கோபு தான் படிக்கச்சொல்லி என்னிடம் காட்டினான்.

    உங்களைப்பற்றிய நிறைய விஷயங்கள் என்னிடம் சொல்லிச்சொல்லி பூரித்துப்போனான்.

    ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது.

    அநேக ஆசீர்வாதங்கள். க்ஷேமமாக செளக்யமாக சகல செளபாக்யங்களுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்.

    - லக்ஷ்மி கங்காதரன்.

    ReplyDelete
  4. very useful information about turmeric thanks for sharing

    ReplyDelete
  5. //தங்களின் இந்தப்பதிவினை ஆசையுடன் படித்து மகிழ்ந்தேன்.

    என் தம்பி கோபு தான் படிக்கச்சொல்லி என்னிடம் காட்டினான்.

    உங்களைப்பற்றிய நிறைய விஷயங்கள் என்னிடம் சொல்லிச்சொல்லி பூரித்துப்போனான்.

    ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது.

    அநேக ஆசீர்வாதங்கள். க்ஷேமமாக செளக்யமாக சகல செளபாக்யங்களுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்.

    - லக்ஷ்மி கங்காதரன்.//

    வாருங்கள் லக்ஷ்மி கங்காதரன் அவர்களே ..

    அனந்தகோடி ந்மஸ்காரங்கள் சமர்ப்பிக்கிறேன் தங்களின் பாதகமலங்களுக்கு ...

    சமீபத்தில் தான் லக்ஷம் மஞ்சள் பிரார்த்தனை சிறப்பாக நிறைவேற்றி மனநிறைவுடன் வந்து ஆசீர்வதித்தற்கு மனம் மகிழ்ந்த நிறைந்த நன்றிகள் அம்மா...

    ReplyDelete
  6. நல்ல ஆன்மீக தகவல்கள் . நன்றி

    ReplyDelete
  7. நல்ல தகவல்கள்... படங்கள்...

    ReplyDelete
  8. மஞ்சள் மகிமையுடன் லக்‌ஷ்மி கடாஷம் கொடுக்கும் பதிவிற்கு மிக்க நன்றி மேடம். படங்கள் அனைத்தும் அற்புதம்.

    ReplyDelete
  9. எங்கள் மாமியார் வீட்டில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைப்பது வழக்கம். அடுத்தவாரம் அதை மாங்கால்யத்திற்கு பூசி குளிக்க வைத்துக் கொள்வார்கள்.
    மஞ்சள் கிருமி நாசினி, நாள் கிழமைகளில் வாசலில் மஞ்சள் பட்டை தடவி, நடுவில் குங்குமம் வைப்பார்கள்,
    ”லடசப் பசுப்பு” பற்றி இப்போதுதான் கேள்வி படுகிறேன்.
    மஞ்சள் முகமே வருக! பாடல் நன்றாக இருக்கிறது.
    மஞ்சள் மகிமைப் பற்றி விரிவாக தெரிந்து கொண்யோம்.
    வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  10. மஞ்சளின் மகிமை அழகான படங்க‌ளுடன் கூடிய நல்லதொரு பதிவு. நன்றி.

    ReplyDelete
  11. வெள்ளிக்கிழமை இன்று ஒரு சுப மூகூர்த்த நாள்.
    இன்று இந்த சௌபாக்ய மாங்கல்ய ஸ்தோத்ரம் வெளிவருவது எத்துணை பொருத்தம் !

    ஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷம் இந்த பதிவு படிக்கும் எல்லோருக்கும் எல்லா நாளும் கிட்ட
    ப்ரார்த்தனை செய்வோமாக.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  12. மங்களமான பகிர்வு.

    ReplyDelete
  13. நல்லதொரு விரிவான விரதப் பதிவு! படங்களும் தகவல்களும் அருமை! நன்றி!

    ReplyDelete
  14. இன்றைய எல்லாப்படங்களும் ”லக்ஷ்மிகரமாக - மிகச்சிறப்பாக உள்ளன.

    அதிலும் முதல் இரண்டு படங்களில் தேஜஸ் களை சொட்டுகிறது.

    அழகோ அழகு !

    >>>>>>

    ReplyDelete
  15. தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள ஸ்லோகங்கள் யாவும் அருமையோ அருமை.

    ”இந்த்ராக்ஷி” ஜபத்தைப்பற்றியும் தாங்கள் ஓர் பதிவு தந்தால், பலருக்கும் அறிந்துகொள்ள ஓர் வாய்ப்பாக அமையுமே!

    முடிந்தால் தாருங்கோ!! Please.

    >>>>>>>

    ReplyDelete
  16. சுத்தமான மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படுவதே ஒரிஜினல் குங்குமம் ஆகும்.

    அந்த மங்கலமான குங்குமத்தை வைக்கும் குங்குமசிமிழ்களை அன்பின் அடையாளமான ஹாட்டின் வடிவத்தில் இருமுறை காட்டியுள்ளது தங்களின் புத்திசாலித்தனமாகும்.

    ஒருவர் மீது மற்றொருவர் அன்புசெலுத்துதல் என்பதன் அடையாளமாக இரண்டு இதயங்களைக்குறிக்கும் இரண்டு சிமிழ்களோ! ;)))))

    பார்க்கவே சந்தோஷமாக உள்ளது.

    >>>>>>

    ReplyDelete
  17. ஆந்திரப்பெண்மணிகள் அனுசரிக்கும் ”ஒக்க லட்சப்பசுப்பு”, அவர்கள் மேற்கொள்ளும் கடும் விரதங்கள், லலிதா சஹஸ்ர நாம ஒலிகள் என எல்லா விபரங்களும் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    ஒவ்வொன்றையும் படிக்கவே மிகவும் மகிழ்ச்சியாகவும், பக்திப் பரவஸமாகவும் உள்ளன.

    >>>>>>

    ReplyDelete
  18. சுப கார்யங்களுக்கு முதலில் எடுத்துச்செல்லும் மஞ்சளில் தொடங்கி, மஞ்சள் பிள்ளையாரில் ஆரம்பித்து, மளிகை லிஸ்டில் பாய்ந்து, புற்று நோய்க்கு மருந்தாக்கி, தபால் தலையையும் காட்டி, மஞ்சள் காட்டு மைனாவாக எங்களையும் மாற்றி மஞ்சள் தோட்டத்தில் கொண்டு போய் இறக்கி விட்டுள்ளீர்களே! சபாஷ்!! சபாஷ்!!!

    புதிய பசுமஞ்சளைப்புட்டது போன்ற பளிச்சென்ற பதிவு. ;)))))


    >>>>>>

    ReplyDelete
  19. ஆஹா,

    கடைசியில் மஞ்சள் நிறத்தில் உள்ள சிவபூஜைக்குரிய அழகான பூவாகிய சொரைக்கொன்னையும் மறக்காமல் கொண்டு வந்து விட்டீர்களே!

    அறிவோ அறிவு .... அழகோ அழகு.

    இந்த சொரைக்கொன்னை பற்றியே தனிப்பதிவு தந்தவர்கள் தானே, தாங்கள்! எப்படி உங்களாலும் என்னாலும் மறக்க முடியும் அதனை!!

    >>>>>>>

    ReplyDelete
  20. எல்லாவற்றையும் விட மிகச்சிறப்பு, என்னுடைய பேரன்புக்கு பாத்திரமான என் பெரிய அக்காவும், அவள் கணவரும் இன்று என் வீட்டுக்கே வருகை தந்து தங்களின் இந்தப் பதிவினைப் பார்த்து, படித்து மிகவும் சந்தோஷத்துடன் பாராட்டிச் சென்றார்கள்.

    சமீபத்தில் 08.02.2013 அன்று துவங்கி இன்றுவரையிலும் அவர்கள் தங்கள் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தினமும் லக்ஷமஞ்சள் வினியோகம் செய்து வருவதால், அவர்களுக்கு இந்தத் தங்களின் பதிவினைப் படித்ததும், தாங்கள் செய்து வரும் ஸத்கார்யத்திற்கு பூர்ண பலம் கிடைத்தது போல ஓர் மிகப்பெரிய மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்பட்டதை என்னால் நன்கு உணர முடிந்தது.

    தங்களின் இன்றைய பதிவு, என்னால் என்றுமே மறக்க முடியாத மிகச்சிறந்த பதிவு ஆகும்.

    என் ஸ்பெஷல் நன்றிகள்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ooooo

    ReplyDelete
  21. வை.கோபாலகிருஷ்ணன் said...
    தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள ஸ்லோகங்கள் யாவும் அருமையோ அருமை.

    ”இந்த்ராக்ஷி” ஜபத்தைப்பற்றியும் தாங்கள் ஓர் பதிவு தந்தால், பலருக்கும் அறிந்துகொள்ள ஓர் வாய்ப்பாக அமையுமே!

    முடிந்தால் தாருங்கோ!! Please.//

    வணக்கம் ஐயா...

    இந்த்ராக்ஷி” ஜபத்தை ஜபித்துக்கொண்டே பதிவு தயாரித்தாயிற்று ஐயா..

    ஜ்வரங்களையும் பாபங்களையும் ஸ்ம்ஹரிக்கும் இந்த்ராக்ஷி” சகல வியாதிகளையும் அகற்றி நலமளிக்கட்டும்..

    ReplyDelete
  22. ஆடி மாதம் மூன்றாம் வெள்ளியன்று இப்பூசை மேற்கொள்ளுதல் மிகவும் சிறப்பு. இதனைத் தொடர்ந்தாற்போல், மூன்று ஆண்டுகள் செய்திடுதல் அவசியம்! இப்பூசை செய்பவர்கள் லஷ்மி நரசிம்மர் ஆலயம் உடன் சென்று வழிபடுவது இவ்விரத பூசையினை மென்மேலும் சிறப்புடையதாக்கும். குறிப்பாக சொல்வதென்றால் அந்திலி லஷ்மி நரசிம்மரை தரிசனம் செய்வது நல்லது!

    ReplyDelete
  23. ஆடிமாதம் மூன்றாம் வெள்ளியன்று இப்பூசை செய்தல் மிகவும் சிறப்பு! இப்பூசை செய்பவர்கள் உடன் அந்திலி லஷ்மி நரசிம்மரை தரிசனம் செய்ய, கூடுதல் சிறப்பு. நிறைவானதொரு பதிவு! வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  24. ஆடிமாதம் மூன்றாம் வெள்ளியன்று இப்பூசை செய்தல் மிகவும் சிறப்பு! இப்பூசை செய்பவர்கள் உடன் அந்திலி லஷ்மி நரசிம்மரை தரிசனம் செய்ய, கூடுதல் சிறப்பு. நிறைவானதொரு பதிவு! வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  25. நல்லதொரு பதிவு. நன்றி.

    ReplyDelete
  26. மஞ்சள் மஞ்சேர் என்று மஞ்சள மகிமை சிறப்பு இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  27. உங்கள் இந்தப் பதிவில் 'மஞ்சள் முகம்' மிகவும் கவர்ந்தது.

    எல்லா சௌபாக்கியங்களும் எல்லோருக்கும் நிறையட்டும்.

    ReplyDelete