Friday, April 19, 2013

ஸ்ரீராம நவமி






ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!

ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே
ஸதாராம மானந்த நிஷ்யந்த கந்தம்
பிபந்தம் நமந்தம் ஸுதந்தம் ஹஸந்தம்
ஹனூமந்த மந்தர்பஜே தம் நிதாந்தம்

எப்பொழுதும் ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகி, 
வணங்கி, வாய்விட்டு சிரித்து சாதுககளின் களிப்பிடமாயும், ஆனந்தப்பெருக்கின் வேராகவும் இருக்கின்ற ஹனுமனை 
எப்பொழுதும் மனதில் தியானிக்கிறேன்.


ராம' என்ற மந்திரம், "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து
மந்திரத்திலுள்ள (ஓம் என்பது ஒரே எழுத்து) "ரா'
மற்றும் "நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்திலுள்ள, "ம' என்ற
பீஜாக்ஷரங்களை இணைத்து உருவாக்கப்பட்டது.

பீஜாக்ஷரம் என்றால், உயிர்ப்புள்ள எழுத்து என்று பொருள்.

 ""ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெயராம'' என்னும் ராமதாரக மந்திர ஜெபம்
 செய்வதால் தொடர்ந்து வெற்றிகள் ஏற்படும்

ஸ்ரீராம நவமிக்கு பத்து தினங்களுக்கு முன்பே, ராமாயணம் படிக்கத் துவங்கி, ஸ்ரீராம நவமி அன்று, ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகத்துடன் நிறைவு செய்ய வேண்டும்.

ஸ்ரீ ராமரின் காவியம் படிப்பது, ராமரின் பெருமை களை பிறர் சொல்லக் கேட்பது போன்றவை நமக்கு சிறந்த புண்ணியத்தைக் கொடுக்கும்.

பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணை யானது ராம நாமம்.
ஸ்ரீராம நவமியன்று ராமநாமம் சொல்வதும், ராமநாமம் 
எழுதுவதும் நற்பலனைத் தரும்.
பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப் படுத்தி உலக 
ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது.

இறை ஞானத்தைத் தூண்டு கிறது. அறியாமை, காமம், 
தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது.

உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் 
அருள் கிட்டும் என்பது  நம்பிக்கை.

""ஸ்ரீராமம் ரகுகுல திலகம் 
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம் 
சூடாமணி தர்ஸன கரம் 
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம் 
வைதேஹி மனோகரம் 
வானர ஸைன்ய ஸேவிதம் 
சர்வ மங்கல கார்யானுகூலம் 
சததம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்.""

ஸ்ரீராம நவமி. அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே
விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)

ராமா என்னும் பாயசத்தை தயாரிக்க, கிருஷ்ணா என்னும் 
சர்க்கரையை பயன்படுத்தவும்;
விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி, 
சுவைத்துப் பாருங்கள், சப்புக் கொட்டுங்கள்

ஸ்ரீ தியாக பிரம்ஹமும் தாம் இயற்றிய “தேவாம்ருதவர்ஷணி” ராகத்திலமைந்த “எவரனி” என்ற பிரசித்தி பெற்ற கிருதியில் இக்கருத்தையே — “சிவமந்த்ரமுனகு ம ஜீவமு” என்றும் “மாதவமந்த்ரமுனகு ரா ஜீவமு” என்றும் பாடியருளியிருக்கிறார்.



முப்பத்து முக்கோடி தேவரு முனிவரும் மொழிகின்ற ராமஜெயமே
கரி ஆதி மூலமென்று ஓலமிட முதலையைக் கண்டித்த ராமஜெயமே!

மேலான தசரதன் மைந்தனாய்ப் புவிதனில் விரைந்திடும் ராமஜெயமே! செஞ்சொன் மொழி ஜனகராஜன் வில்லொடித்து ஜெயம் பெற்ற ராமஜெயமே!

சீதைக் கிரண்டு வரங்கொடுத்துமே அயோத்தியில் சீர் பெற்ற ராமஜெயமே, தஞ்சமென்ற அனுமன்றனக்கு சிரஞ்சீவி தந்திட்ட ராமஜெயமே!

தந்தைக் குரைத்த சொல் வழுவாது தாரணியில் தரித்தருளும் ராமஜெயமே!
அஞ்சலென்று அடியேனை ஆதரித்து உன்பாதம் அருள் செயும் ராமஜெயமே! ஐயனே யெனை யாளுமெய்யனே ஸ்ரீ மதே ராமாநுஜாய நமவே.





40 comments:

  1. அருமையான ராம தரிசனம் கண்டேன்.

    ReplyDelete
  2. மனநிறைவோடு நீங்கள் செய்யும் இப்பணி மேலும் தொடரட்டும் மேலோர் உணரட்டும்

    ReplyDelete
  3. தாங்கள் குறிப்பிட்டுள்ள மந்திரத்தை
    பாராயணன் செய்து திரு உருவப் படங்களை
    தரிசித்து மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  4. thanks for the rama mantras and superb pictures

    ReplyDelete
  5. ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்!

    ReplyDelete
  6. ஒண்ணு சொல்லணும். விதவித டாபிக்குகளை ஒரு மாதிரியா எழுதுறவங்க நிறைய பேர் இருக்காங்க. ஒரே டாபிக்கை வித விதமா எழுதுறவங்க, எழுதக்கூடியவங்க ரொம்ப சிலர் தான். நீங்க நிச்சயம் rarity.
    சும்மாவானும் போன வருச ராமநவமிக்கு என்ன எழுதியிருக்கீங்கனு தேடிப் படிச்சேன். (தப்பா நினைக்கதீங்க). ராமநவமி டாபிக்குல போன வருசத்துக்கும் இந்த வருசத்துக்கும் வித்தியாசமா எழுதியிருக்கீங்க.. படம் கூட ரிபீட் பண்ணலியே! உங்களைப் பாராட்டியே ஆகணும். பாராட்டுக்கள். (ஓகே.. ராம்நவமி போன வருசம் மார்ச்லயே வந்துருச்சே?)

    ReplyDelete
  7. தரிசனம் கிடைத்தது... நன்றி... வாழ்த்துக்கள் அம்மா...

    அப்பாதுரை அவர்களின் கருத்துக்கு ஒரு சல்யூட்...!

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_5204.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete


  8. இராம பிரானே அவனோட ஜன்ம தினத்திலே ஆத்துக்கே வந்து தரிசனம் தந்தாப்போல இருக்கு.

    ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    ராமா ராமா...

    என்னை இனியும்

    காக்க விடலாமா ?

    Ms.Rajeswari அவர்களுக்கு
    ஸ்ரீ ராமரின் எல்லா அருளும் கிட்டட்டும்.

    இங்கேயுமெல்லாரும் வந்து அந்த வடுவூர் கோதண்ட ராமரை தரிசனம் செய்யணும்.

    எல்லோருக்கும் பானகமா கானம்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  9. நல்ல படங்கள். அருமையான பதிவு.

    ReplyDelete
  10. ஸ்ரீ ராம ஜெயம்...

    ராம நாம தாரகம் ஸதா ஸ்மராமி.

    அருமை!. அத்தனையும் அழகு!

    பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி...

    ReplyDelete
  11. ஸ்ரீ ராம ஜெயம்... ராமர் தரிசனம் அற்புதம்!

    ReplyDelete
  12. அன்பு ராஜராஜேஸ்வரி,உங்கள் அருள் வழியும் பொங்கும் ராமரசத்தைப் பருகிப் பருகி மனம் நிறைந்தேன். அத்தனை படங்களும் அருமை.
    எட்டடி உயர் ராமரின் படத்தைத் தேடி அலுத்துவிட்டேன்.
    திருநின்றவூரில் இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நமஸ்காரம் ..

      அருமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

      http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_22.html
      திருவருள் பொழியும் திருநின்றவூர்

      என்கிற பதிவின் படங்கள் பாருங்கள்...

      Delete
  13. ஸ்ரீராமநவமி பற்றி மிகவும் அழகான படங்களுடன் அறியதந்தமைக்கு மிக்க நன்றிகள். உங்களின் இந்த சேவைக்கு பாராட்டவார்த்தைகளில்லை. ராமபிரானின் அருள் கிடைக்கவேண்டுமெனப் பிராத்திக்கிறேன். நன்றி

    ReplyDelete
  14. அருமையான பதிவு அம்மா ... தரிசனம் பெற்றேன் ...ரமாநவமி வாழ்த்துக்கள் அம்மா....

    ReplyDelete
  15. ஸ்ரீராம நவமி நல்வாழ்த்துகள்.

    இன்றைய வலைச்சரத்தில் தாங்கள் ஜொலிப்பதற்கு வாழ்த்துகள்.

    திரு. அப்பாதுரை அவர்கள், உண்மையை உண்மையாக எடுத்துச் சொல்லி எல்லோருக்கும் இந்த விஷயத்தைப் புரிய வைத்துள்ளதற்கு, தங்கள் சார்பில் என் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சம்சார ஸாகரத்திலிருந்து மீண்டபின், மீண்டும் சற்று தாமதமாக வருகை தந்து, இந்தப்பதிவுக்கு கருத்துக்கள் கூறுவேன்.

    >>>>>

    ReplyDelete
  16. ராம ராம ராம ராம ராம ராம
    ராம நவமி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. தங்கள் பகிர்வையும் அப்பா துரை விளக்கத்தையும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு என் வணக்கங்கள்.

    ReplyDelete
  18. ராம நாம பாயசக்கே கிருஷ்ண நாம சக்கரே..
    அருமையான பாடலை நினைவுபடுத்தியுள்ளீர்கள்.
    இந்தப் புண்ணிய தினத்தில் ஸ்ரீராமனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்!

    ReplyDelete
  19. வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "சுந்தர வாழ்வருளும் சுந்தரகாண்டம் ..":

    2

    ஸ்ரீராமஜயம்
    ============

    ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
    சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!

    -oOo-

    ”ஸ்ரீராம நவமி” என்ற தலைப்பில் இன்றைய தினத்திற்குப் பொருத்தமான மிகவும் அழகான இனிய பதிவு.

    வழக்கம் போல அற்புதமான படங்கள்.

    சுவையான சுகமான விளக்கங்கள்.

    வணக்கம் ஐயா ..
    ராமராஜ்ஜியத்தில் பதிவுமாறி கருத்துரைகள் பதிவாகி
    அதுவும் ஒரு அழகை மலர்வித்துள்ளன ..
    மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  20. வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "சுந்தர வாழ்வருளும் சுந்தரகாண்டம் ..":

    //’ராம' என்ற மந்திரம், "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து
    மந்திரத்திலுள்ள (ஓம் என்பது ஒரே எழுத்து) "ரா'
    மற்றும் "நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்திலுள்ள, "ம' என்ற
    பீஜாக்ஷரங்களை இணைத்து உருவாக்கப்பட்டது.

    பீஜாக்ஷரம் என்றால், உயிர்ப்புள்ள எழுத்து என்று பொருள்.

    ""ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம'' என்னும் ராமதாரக மந்திர ஜபம் செய்வதால் தொடர்ந்து வெற்றிகள் ஏற்படும்//

    மிகவும் அற்புதமான அழகான பயனுள்ள விளக்கங்கள். ;)))))//

    அற்புதமான அழகான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  21. வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "சுந்தர வாழ்வருளும் சுந்தரகாண்டம் ..":


    ஸ்ரீராமம் ரகுகுல திலகம்

    சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்

    அங்குல் யாபரண சோபிதம்

    சூடாமணி தர்ஸன கரம்

    ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்

    வைதேஹி மனோகரம்

    வானர ஸைன்ய ஸேவிதம்

    சர்வ மங்கல கார்யானுகூலம்

    சததம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்.

    //ஸ்ரீராம நவமி அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.//

    மிகவும் மகிழ்ச்சியளிக்கும், காரிய ஸித்தியளிக்கும் அழகான சுருக்கமான ஸ்லோகமாகக் கொடுத்துள்ளது, மிகச்சிறப்பாக உள்ளது.

    இன்று எதற்குமே நேரம் ஒதுக்க முடியாதவர்கள், இதையாவது தங்கள் கண்களில் அடிக்கடி படும் இடத்தில் எழுதி ஒட்டி வைத்துக்கொண்டு, தினமும் ஒரு முறையாவது சொல்ல செளகர்யமாக இருக்கும்படி, சுருக்கமாகக் கொடுத்துள்ளீர்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.//

    அருமையான பயனுள்ள வழிகளைப் பகிர்ந்தமைக்கு இனிய மகிழ்ச்சிகள் ஐயா..

    ReplyDelete
  22. வழக்கம் போல் அருமையான பதிவு... படங்கள் வண்ணமயமானவை.... ஸ்ரீ ராம நவமி கொண்டாடிய உணர்வையும், அருளை பெற்ற பாக்கியத்தையும் அடைந்தேன். நன்றி...

    ReplyDelete
  23. 2

    ஸ்ரீராமஜயம்
    ============

    ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
    சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!

    ”ஸ்ரீராம நவமி” என்ற தலைப்பில் இன்றைய தினத்திற்குப் பொருத்தமான மிகவும் அழகான இனிய பதிவு.

    வழக்கம் போல அற்புதமான படங்கள்.

    சுவையான சுகமான விளக்கங்கள்.

    >>>>>>>

    ReplyDelete
  24. /ராம' என்ற மந்திரம், "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து
    மந்திரத்திலுள்ள (ஓம் என்பது ஒரே எழுத்து) "ரா'
    மற்றும் "நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்திலுள்ள, "ம' என்ற
    பீஜாக்ஷரங்களை இணைத்து உருவாக்கப்பட்டது.
    பீஜாக்ஷரம் என்றால், உயிர்ப்புள்ள எழுத்து என்று பொருள்.

    ""ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம'' என்னும் ராமதாரக மந்திர ஜபம்
    செய்வதால் தொடர்ந்து வெற்றிகள் ஏற்படும்//

    மிகவும் அற்புதமான அழகான பயனுள்ள விளக்கங்கள்.

    >>>>>>.

    ReplyDelete

  25. ஸ்ரீராமம் ரகுகுல திலகம்

    சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்

    அங்குல் யாபரண சோபிதம்

    சூடாமணி தர்ஸன கரம்

    ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்

    வைதேஹி மனோகரம்

    வானர ஸைன்ய ஸேவிதம்

    சர்வ மங்கல கார்யானுகூலம்

    சததம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்.

    //ஸ்ரீராம நவமி அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.//

    மிகவும் மகிழ்ச்சியளிக்கும், காரிய ஸித்தியளிக்கும் அழகான சுருக்கமான ஸ்லோகமாகக் கொடுத்துள்ளது, மிகச்சிறப்பாக உள்ளது.

    இன்று எதற்குமே நேரம் ஒதுக்க முடியாதவர்கள், இதையாவது தங்கள் கண்களில் அடிக்கடி படும் இடத்தில் எழுதி ஒட்டி வைத்துக்கொண்டு, தினமும் ஒரு முறையாவது சொல்ல செளகர்யமாக இருக்கும்படி சுருக்கமாகக் கொடுத்துள்ளீர்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

    >>>>>>

    ReplyDelete

  26. ராம நாம பாயஸக்கே
    கிருஷ்ண நாம சக்கரே
    விட்டல நாம துப்பவ கலசி
    பாயி சப்பரிசிரோ (ராம)

    ராமா என்னும் பாயசத்தை தயாரிக்க,

    கிருஷ்ணா என்னும் சர்க்கரையை பயன்படுத்தவும்;

    விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி,

    இந்த தெய்வீகப்பதிவராம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அவர்களின்
    பதிவு என்ற வறுத்த முந்திரியையும் கலந்து

    சுவைத்துப் பாருங்கள், சப்புக் கொட்டுங்கள்//

    நன்றாகவே சப்புக்கொட்ட வைத்து விட்டீர்கள். ;)))))

    ஆனால் ’பா ய ஸ ம்’ எங்கே ??????? ;(((((

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. சுவாரசியமான வரிகள் vgk சார்.. இதை உங்கள் அனுமதியோடு நான் பயன்படுத்திக்கொள்கிறேனே?

      Delete
    2. To Mr. அப்பாதுரை Sir,

      வாங்கோ, வணக்கம்.

      //சுவாரசியமான வரிகள் vgk சார்.. இதை உங்கள் அனுமதியோடு நான் பயன்படுத்திக்கொள்கிறேனே?//

      தாராளமாக சார்.

      சாதம் என்பது தான், நாம் சமைத்து நாமே உண்பது.

      எப்போது அது இறைவனுக்குப்படைக்கப்படுகிறதோ, அதே சாதம் ‘பிரஸாதம்’ என்ற பெயரைப்பெற்று விடுகிறது.

      அந்தப்பிரஸாதம் கிடைக்க யாருடைய அனுமதியும் யாருக்கும் தேவையில்லை.

      உரிமையுடன் யாரும் யாரிடமும் அதனைக்கேட்டு வாங்கி சாப்பிடலாம்.

      கோயிலில் சர்க்கரைப்பொங்கல், சுண்டல் முதலியன விநியோகிக்கும் போது நமக்கு நேரிடையாக கிடைக்காது போனாலும், பிறருக்குக் கிடைத்ததில் கொஞ்சூண்டு வாங்கி சாப்பிட நமக்கும் உரிமை உள்ளது.

      அவர்களும் சந்தோஷமாகத் தருவார்கள்.

      அதுபோலத்தான் இதுவும்.

      யார் யாரோ வருகை தந்து பயன்படுத்திக்கொண்டு தானே உள்ளார்கள்!

      அதனால், நீங்களும் தாராளமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

      என் அனுமதி ஏதும் தேவையே இல்லை.

      அன்புடன் VGK

      Delete
    3. To Mr. அப்பாதுரை Sir,

      எவ்வளவோ பேர்கள் அரிவாள், ஈட்டி, சூலாயுதம் போன்ற ஆயுதங்களைக் கையில் ஏந்தியும், ஜுவாலையுடன் கூடிய தீச்சட்டியைக் கையில் ஏந்தியும், உடம்பு பூராவும் [அலகு] வேல் குத்திக்கொண்டும் கோயிலுக்குள் நுழைவார்கள்.

      அட்ரா அட்ரா என்று வாத்யங்க்ளும் சக்கைபோடு போடும்.

      அங்குள்ள என்னைப்போன்ற சாதாரண பக்தர்களுக்கு இது மிகவும் பயமாகவும் எரிச்சல் ஊட்டுவதாகவும் கூட இருக்கும்.

      அதுவும் ஸாத்வீகமான பக்தி கொண்ட எனக்கு இதெல்லாம் பார்க்கவே சகிக்காது.

      இருப்பினும் கோயில் நிர்வாகம், பக்தி முத்திப்போன, பித்துக்களான இவர்களையெல்லாம் அனுமதித்துத்தான் வருகிறது.

      பக்தி செலுத்த கோயிலுக்கு வருவோரும் உண்டு. வேறு பல காரணங்களுக்காக கோயிலுக்கு வருவோரும் உண்டு.

      எதையும் யாரையும் நாம் தட்டிக்கேட்க முடியாது.

      இதனால் அனாவஸ்யமான பிரச்சனைகள் தான் வரக்கூடும்.

      பிடித்தால் இந்தக்கும்பலுடன் நாமும் கோயிலுக்குச் செல்வோம்.

      பிடிக்காவிட்டால், மெதுவாக ஒதுங்கிக்கொண்டு கோயிலை விட்டு வெளியேறி விடுவோம் என்பதே என் கொள்கை.

      ஏதேதோ சொல்லிக்கொண்டு போகிறேன்.

      முக்கியமாக ’வறுத்த முந்திரி’ போட்ட பாயஸம் கிடைத்தால் சொல்லுங்கோ.

      எனக்கும் கொஞ்சம் அந்தப்பிரஸாதம் வேண்டும். ;)

      அன்புடன் VGK

      Delete
    4. To Mr. அப்பாதுரை Sir [3]

      வீட்டு பூஜை என்றால் நாம் அழைப்பவர்கள் மட்டுமே வருவார்கள்.

      பொதுவான கோயில் என்றால் பலரும் பலவிதமாகத்தான் வரக்கூடும்.

      சரி .... அதை இப்போது விட்டு விடுவோம்.

      பாய்ண்ட்டுக்கு வருவோம்.

      நானும் இவர்கள் அவ்வபோது காட்டிவரும், வடை, அப்பம், பொரி உருண்டைகள், பாயஸம், சர்க்கரைப்பொங்கல், அக்கார அடிசால், நவராத்திரி சுண்டல், திருவாதரைக் களி + கூட்டு என எவ்வளவோ விஷயங்களை நாக்கில் நீர் ஊற, கேட்டுக்கேட்டு அலுத்து சலித்துப்போய் விட்டேன்.

      ஒருமுறையாவது ஒரு வாய்வார்த்தைக்காவது [JUST FOR A COURTESY] “இதென்ன பிரமாதம், வாங்கோ, நிச்சயமாகத் தருகிறேன்” என்று வாய் தவறியும் சொன்னது இல்லை. ;(((((

      ஒரே ஒருமுறை மட்டும் “எனக்கு சமைப்பதைவிட பரிமாறுவதில் தான் ஆர்வம் அதிகம்” எனச்சொல்லி மழுப்பியுள்ளார்கள்.

      அதனால் மட்டுமே, இந்த வறுத்த முந்திரி போட்ட பாயஸமாவது கிடைக்க, நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு, தங்களிடம் புலம்பும்படி ஆகியுள்ளது.

      மொத்தத்தில் சமத்தோ சமத்து. அழுந்தச்சமத்து.

      முன்னெச்சரிக்கையாவே இருப்பவர்கள்.

      வாழ்க! வாழ்க!!

      Delete

  27. ருசிமிக்கதோர் பதிவினைக்கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    ராமநாமத்தை விட எனக்கு மிகவும் ருசியாக உள்ளது தங்களின் இன்றைய பதிவு.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    இதுபோன்ற ஆன்மீகப் பதிவுகளைத் தொடர்ந்து கொடுத்து உதவுங்கள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ooooo 884 ooooo

    ReplyDelete
  28. பத்ராசலத்தில் ஸ்ரீ ராமபிரானுக்கு மிக அழகான கோயில் எழுப்பிய, ’கோபண்ணா’ என்று அழைக்கப்பட்ட, தூய ராம பக்தரான ராமதாஸரின் சரித்திரத்தினை, தாங்கள் சிறப்பான படங்களுடன், அழகாகக் கதையாகவும் சொல்லி 4-5 பதிவுகளாவது தரலாம் என அன்புடன் அனைவர் சார்பிலும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

    ஸ்ரீராமர் அதற்கு தங்களுக்கு எல்லா விதத்திலும் அருள் புரிவாராக !

    oooOooo

    ReplyDelete
  29. ராமா ராமா ராமா ............ஜெய் ஸ்ரீ ராமா .....
    வாழ்த்துகள்

    ReplyDelete
  30. அற்புதமானதொரு பகிர்வு!
    ஓம் ராம்! ஓம் ராம்! ஓம்ராம்!

    சிவகீதை படிக்க வாருங்கள் கிருஷ்ணாலயாவிற்கு!

    ReplyDelete
  31. அப்பாதுரை has left a new comment on your post "ஸ்ரீராம நவமி":

    சுவாரசியமான வரிகள் vgk சார்.. இதை உங்கள் அனுமதியோடு நான் பயன்படுத்திக்கொள்கிறேனே? //

    வணக்கம் ...
    சுவாரசியமான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. To Mr. அப்பாதுரை Sir,

      //வணக்கம்.... சுவாரசியமான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்//

      இது நியாயமாச் சொல்லுங்கோ. ஒரிஜினல் கருத்தளித்தது நான். அதை சுவாரசியம் என்று சொல்லியுள்ள தங்களுக்கு மட்டும் ’இனிய நன்றிகள்’ என சொல்லியிருக்கிறார்கள்.

      எப்படியோ உங்களுக்கும், திருமதி வல்லிசிம்ஹன் அவர்களுக்குமாவது FEEDBACK பதில் கிடைத்துள்ளதே! அதுவரை சந்தோஷம்.

      அம்பாளின் கடைக்கண் பார்வை கிடைத்துள்ள நீங்கள் இருவர் மட்டுமே மிகவும் புண்ணியசாலிகள்/அதிர்ஷ்டசாலிகள். வாழ்த்துகள்.

      இங்குள்ள 38 இல் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் மாங்கு மாங்குன்னு 13 பின்னூட்டங்கள் கொடுத்துள்ள நான் ???????

      எதற்கும் ஓர் கொடுப்பிணை வேண்டும், சார். அது எனக்கு சுத்தமாக இல்லை. ;)

      அன்புடன் VGK

      Delete
    2. வணக்கம் ஐயா..


      ஆராதனைப்பிரசாதமாகக் கிடைத்த அத்தனைக் கருத்துரைகளும் பாயசமாக மணம் பரப்பி சுவைத்தன...

      பதிவைப் பரிமளித்து ஜொலிக்கச் செய்த நிறைவான சிறப்பான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

      Delete
    3. ;))))) மிக்க நன்றீங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷம். ;)))))

      -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

      Mr. அப்பாதுரை Sir,

      எப்படியோ அடிச்சுப்பிடிச்சு, அடம் பிடிச்சு நானும் கொஞ்சம் பிரஸாதம் வாங்கிட்டேன். ;)

      அதற்கு காரணகர்தாவான தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete