Tuesday, June 11, 2013

புஷ்பயாகம்







ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜத் தஸ்ரஜாம் 
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவ: 

புஷ்பயாகம் என்பது, ஒரு யாகவிசேடம்.

பிரம்மோத்சவத்தின் முடிவில் (பத்தாவது உத்சவம்) பெருமாளுக்கு எதிரில் மண்டலங்கள் போட்டு, அதில், மற்றைப்பொருள்களையும் நெருப்பையும் கலவாமல், புஷ்பங்களையே கொண்டு அர்ச்சனை செய்வது போன்று யாகம் செய்வது புஷ்பயாகம்...

திருவரங்கத்தில் பிரம்மோத்சவத்தில் இன்றும் செய்யப்பட்டு வருகின்றது.



திருப்பதி கோவிலில் ஆண்டு தோறும் தெலுங்கு கார்த்திகை மாதம் திருவோண நட்சத்திரத்தன்று  ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு மலர்களை கொண்டு  புஷ்பயாகம் நடப்பது வழக்கம்.

இந்த யாகத்திற்கு மல்லிகை, ரோஜா, தாமரை, துளசி, வில்வம், மந்தாரம், உள்ளிட்ட 25 மலர்கள் பக்தர்கள் நன்கொடையாக வழங்குகிறார்கள்...

பௌர்ணமி நிலவொளியில் ஸ்ரீ ரங்கநாதர் கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார்.

அற்புதமாக திருக்கர  விரல்களில் நவரத்ன மோதிரங்கள்,  திருக்கரம் மற்றும் திருப்பாத  நகங்களில் கண்ணாடி,  திருக்கர கங்கணங்கள், கிரீடம் ஆகியவற்றில் பல வர்ண கண்ணாடிகள்,  பிரபை முழுவதும் அற்புதமாக கண்ணாடி வேலைப்பாட்டுடன்,சர்வ அலங்கார பூஷிதராக பெருமாள் கண்ணாடி கருட சேவை சாதிக்கின்றார்.
இதைத் தொடர்ந்து தேவஸ்தானத்துக்கு சொந்தமான தோட்டத்தில் பூத்த சாமந்தி, லில்லி, ரோஜா, நத்திவர்தானம், துளசி உள்ளிட்ட 18 வகை மலர்கள் யாகத்துக்காக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயிலின் பிரதான அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓத உற்சவ மூர்த்திகளுக்கு சுமார் 7 டன் மலர்கள் கொண்டு மலர் யாகம் நடத்தப்படுவது கண்கொள்ளாக்காட்சி..!




Love Flows Animated Flowers

17 comments:

  1. புஷ்ப யாகம் படங்களும் செய்திகளும் அருமை

    ReplyDelete
  2. ஆயிரம் மலரெடுத்து ஆராதனைச் செய்தாலும்
    காணக்கிடைக்காதக் கடவுளை காட்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. புஷ்ப யாகம்..... இதுவரை கேட்டதில்லை...... பார்த்ததும் இல்லை....

    பார்க்கத் தூண்டும் பகிர்வு.

    ReplyDelete
  4. படங்கள், தகவல்கள், விளக்கங்கள் அனைத்தும் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. புஷ்பயாகம் பற்றிய தொகுப்பு, அழகியபடங்கள் மிக அருமை.நன்றி.

    ReplyDelete
  6. முதல் இரண்டு படங்களும் பளிச்சென்று பிரமாதமாக உள்ளன.

    கீழிருந்து நாலாவது வரிசையில் உள்ள புஷ்பப்பல்லாக்கும், மேலேயுள்ள கருடனும் ஜோர் ஜோர்.

    >>>>

    ReplyDelete
  7. புஷ்பங்களாலும், புஷ்ப ஜோடனைகளாலும் நிறைந்துள்ள இந்தப்பதிவு முழுவதுமே மணம் வீசி, மனதை மயக்கி, மகிழ்விப்பதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  8. கீழிருந்து ஆறாவது வரிசைப் படத்தில் உள்ள ஜோடனைகளும், ஏழாவது வரிசைப்படத்தில் உள்ள மலர் மஞ்சம் [பட்டு மெத்தை] போன்ற வட்டவடிவக்கோலமும் சூப்பரோ சூப்பர். ;)

    >>>>>

    ReplyDelete

  9. அம்மாடி...! ஏழு டன் பூக்களா. ? புஷ்பயாகம் கேட்டதில்லை. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  10. "புஷ்ப யாகம்” என்ற இன்றைய தலைப்பும், அனைத்துப்படங்களும், அழகான விளக்கங்களும் மனதுக்கு மிகவும் ஹிதமாகவும், ஆறுதல் அளிப்பதாகவும் அமைந்துள்ளன.

    எதைப்பாராட்டுவ்து? எப்படிப்பாராட்டுவது? மொத்தத்தில் மயங்கச் செய்யும் பதிவல்லவோ!!!!! எல்லாமே அருமையாக அட்டகாசமாக உள்ளதே!!!!!!

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ooooo 937 ooooo

    ReplyDelete
  11. புஷ்பயாகம் புதிய தகவல்கள் படங்களும் சிறப்பு.

    ReplyDelete
  12. அறிந்திராத அற்புதம்!
    அழகு, அருமை!

    பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. woooooooooooooooow!!!!!!!!!!!
    Fentastic flowers. I just love this post.
    viji

    ReplyDelete
  14. புஷ்ப யாகம் என்று ஒன்று இருப்பதை உங்கள் பதிவின் மூலம் இன்றுதான் அறிந்தேன். நறுமணமுள்ள மலர்கள் பார்க்கவே மிக அழகாக இருக்கின்றன. இவற்றின் நடுவில் பெருமாளும், தாயாரும் எத்தனை அழகாக வீற்றிருக்கிறார்கள்.
    நன்றி இத்தனை அருமையான புகைப்படங்களை போட்டதற்கு!

    ReplyDelete
  15. புஷ்பத்தில் யாகமோ? என்ன ஒரு அழகு... சூப்பர்.

    ReplyDelete
  16. கண்ணாடிக் கருட சேவை காணக் கண்கோடி வேண்டும் . அழகிய பக்திப் பதிவுகளை வெளியிடும் உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் அது கம்மி தான். இருந்தாலும் நன்றி.

    ReplyDelete
  17. wow great pictures great post

    ReplyDelete