Saturday, October 12, 2013

புரட்டாசி சனிக்கிழமை





சங்க சக்ர கதாபாணே துவாரகா நிலையார்ச்சுத: 
கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம்

சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றைத் தரித்தவரும், த்வாரகாபுரியின் அதிபரும், தாமரை போன்ற கண்களை உடையவரும், பசுக்களைப் பரிபாலிக்கிறவருமான பிரபுவே, தங்களைச் சரணடைந்த என்னைக் காப்பாற்றுங்கள்.


நம: பங்கஜநாபாய நம: பஞ்சத மாலிநே
நம: பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜாஸ்ரியே

நாபியில் தாமரையை உடையவரும், தாமரை மாலையைத் தரித்தவரும், தாமரை போன்ற கண்களை உடையவரும், அழகான பத்ம ரேகையைக் கால்களில் உடையவருமான தங்களைப் பலதடவை வணங்குகிறேன்

மூகம் கரோதி வாசாலம் பங்கும் வங்கதே கிருஹம்
யத்கிருபா பரமம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்

பேசவே இயலாதவரையும் கூட பேச்சாற்றல் மிக்கவராக மாற்றக் கூடியவரும், குடிசையையே மாளிகையாக்கக் கூடியவருமான அந்தப் பரமானந்த மாதவனின் கருணையை வணங்குகிறேன்.

ஸ்ரீவிஷ்ணுவுக்கு மிகவும் உகந்த புரட்டாசி மாதத்தின்  சனிக்கிழமை விளக்கேற்றி வைத்து ஸ்ரீமந் நாராயணனை பூஜை செய்வது புண்ணியம் அளிக்கும் செயல்.

பிரம்மா படைக்கிறார். விஷ்ணு அருள் பாலிக்கிறார்
 ருத்ரன் அனைவருக்கும் சாந்தியளிக்கிறார்.

இவ்வகையில் விஷ்ணுவின் அருள்தான் உலகத்தை பரிபாலித்துக் கொண்டிருக்கிறது.

விஷ்ணுவின்  எண்ணற்ற அவதாரங்களில் 10 அவதாரங்களை நாம் போற்றிக் கொண்டாடுகிறோம்.

இவற்றில், மச்ச, கூர்ம, வராக அவதாரங்கள் வேதத்தைக் காப்பதற்கும், அசுரனை அழிப்பதற்கும் ஏற்பட்ட அவதாரம்.

 நரஸிம்ம அவதாரமும், வாமன அவதாரமும் மிகவும் சிறப்பானவை.

நரஸிம்ம அவதாரமானது எங்கும் நிறைந்துள்ளவன் பரம்பொருள் என்பதைத் தெரியப்படுத்துவதற்கும், இறைவன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்தப் பொருளிலும் தோன்றுவான் என்பதற்காகவும் எடுக்கப்பட்ட அவதாரம்.

பகவானின் அவதாரங்களை நாம் தெரிந்து கொண்டு, பூஜை செய்து வழிபடுவதன் மூலம் பெரும் புண்ணியத்தை அடைகிறோம்.

சாதாரண நாட்களில் செய்யும் போது குறைவான பலன். விசேஷ நாட்களில் செய்யும் போது அதிக பலன் நிச்சயம் உண்டு.

புரட்டாசி சனிக்கிழமை போன்ற விசேஷ நாட்களில் பஜனை முதலியவற்றைச் செய்து, திருப்பதி ஏழுமலையானையும் சகல விஷ்ணு ஆலயங்களிலும் வழிபட்டு, பிரகலாதனைப் போன்று பக்தியிற் சிறந்து பேறு அடைய பிரார்த்தனை செய்வோம்.

அகண்ட தீபம்:  
பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். 
குறையொன்றுமில்லாத கோவிந்தன் திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும் பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்
மாவிளக்குடன் கூட புத்துருக்கு நெய்யை பெரிய உருளியில் இட்டு,
பருத்திக் கொட்டையுடன் கூடிய பஞ்சிலிருந்து கொட்டையைப் பிரித்து, அதை ஒரு புதிய துணியில் வைத்து திரி போல் செய்து உருளியில் உள்ள நெய்க்கு நடுவே வைத்து அதை தீபமாக ஏற்றி மலையப்பனாக ஆவாஹனம் செய்து தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வது வழக்கம் ..!
துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும். பின் மாவிளக்கும் ஏற்றி, மலையேறும் நேரம், சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்வது வழக்கம். 
பூஜைக்கு வந்துதவிய அந்தணர்களுக்கும் விருந்தளிப்பது (சமாராதனை) சிறப்பானதாகக் கருதப்படுகிறது. 
ன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்பார் கீதையில் கண்ணன் 

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி 
ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந: 

இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.

 நல்ல மனமுடையாரது பக்திவலையொன்றில் மட்டும் படுகிறான்.

பக்திக்கு அறிகுறியாக இயற்கையில் எளிதில் அகப்படுகின்ற கனி, மலர், இலை, நீர் ஆகிய எதைப் படைத்தாலும் பக்தியையே பகவான் பெரிதும் பாராட்டுகிறபடியால் :மகிழ்வோடு வாங்கிக்கொள்கிறான்.

விதுரர் வார்த்த கஞ்சியை அமிழ்தெனப் பாராட்டி  அருந்தினார்.

சுதாமா என்று அழைக்கப்பட்ட குசேலர் கொண்டு வந்த அவலை அவர் வலியப் பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டார்.

சபரி கொடுத்த உலர்ந்த காய்கனிகள் இராமனுக்கு ஏற்புடையனவாயின.

கண்ணப்பன் குடுமியில் வைத்துக்கொணர்ந்த பூக்களும் , வாயில் கொண்டு
வந்த அபிஷேக தீர்த்தமும்  சிவனாருக்கு ஒப்பற்ற நைவேத்தியமாயின.

பக்தியானது பகவானுக்கு அவ்வளவு பெரியது.

கிருஷ்ணாய வாஸுதேவாய தேவகி நந்தநாய
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோநம:

 தேவகிக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவனும், வாசுதேவனும், நந்தகோபனின் குமாரனும், கிருஷ்ணனுமாகிய கோவிந்தனை வணங்குகிறேன்.
யத்ர யோகேஸ்வர: கிருஷ்ணோ யத்ர பாத்ரோ தனுர்த்தர:
பத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருத்வா நீதிர் மதிர் நம:

எங்கு யோகேஸ்வரனான ஸ்ரீ கிருஷ்ண பகவான் இருக்கிறாரோ, எங்கு வில்லேந்திய வீரன் அர்ஜுனன் இருக்கிறானோ அங்கெல்லாம் மகாலட்சுமியின் கடாட்சத்தோடு மிகுந்த ஜெயமும், அழியாத ஐஸ்வர்யமும், நீதியும் நிச்சயம் இருக்கும்.
நாகம் வஸாமி வைகுண்டே நயோகி ஹ்ருதயே
தத்ர நிதஸ்யாமி யத்ர காயந்தி மத் பக்தா ! நிருத்யே !!

நான் எனது இருப்பிடமான வைகுண்டத்தில் வெகுகாலம் வசிப்பதில்லை. யோகிகளின் இதயத்திலும், வசிப்பதில்லை. எந்த இடத்தில் என் பக்தர்கள் பாடியும் ஆடியும் களிப்படைகிறார்களோ அந்த இடத்தில் நான் வசிப்பேன். அவர்கள் மனதில் நிறைந்திருந்து அவர்கள் வேண்டுவதை அருள்வேன். இது நிச்சயம்

http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_19.html

தங்கிய தங்கப்பூக்கள்இந்தப்பதிவில் பீமன் என்னும் மண்பாண்டத்தொழிலாளி திருவேங்கடமுடையானின் 
தரிசனம் பெற்று செல்வந்தனானதும் ஒரு புரட்டாசி சனிக்கிழமை..
எனவே புரட்டாசி சனிக்கிழமைகள் மிகுந்த விஷேசம் பெறுகின்றன.. 



36 comments:

  1. சிறப்பான படங்களுடன் தகவல்கள் anaiththum அருமை அம்மா... நன்றி.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஜகத்துக்கே மணி அடித்து உறங்கும் யாவரையும் எழுப்பி,
    ஆன்மீகச் சிந்தனைகளை மனதில் உசுப்பி,
    நல் வழிப்படுத்தும்
    வலைத் தளத்திற்கு வருவதே
    பாக்கியம்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  3. இந்த வருடப் புரட்டாசியின் கடைசி சனிக்கிழமைக்கு நல்ல பதிவு. படங்கள் அழகு.

    ReplyDelete
  4. எல்லாரும் பெருமாளின் திருவருளில் பெருவாழ்வு வாழட்டும்!..

    ReplyDelete
  5. அனைத்து படங்களும் விளக்கமும் சிறப்புங்க. மாவிளக்கு படம் மனதைக் கவர்ந்ததுங்க.

    ReplyDelete
  6. ஸரஸ்வதி பூஜையன்று வேண்டிக் கொள்ளப் போகிறேன். ராஜராஜேஸ்வரியின் பதிவுகளுக்குப் பின்னூட்டமிடக் கற்றுக் கொடு என்று:)
    படங்களும் பெருமாளும் மாவிளக்கும் ஜிதந்தே ஸ்தோத்ரங்களும் பதிவை உயிரோடு கண்முன் கொண்டுவந்தன. வணக்கங்கள் மா.

    ReplyDelete
  7. பதிவைப் படித்து முடித்ததும் ”திருப்பதி மலை வாழும் வெங்கடேசா” என்ற பாடலை வாய் முணுமுணுத்தது. மற்ற சனிக்கிழமைகளை விட புரட்டாசி சனிக்கிழமைக்கு மட்டும் என்ன முக்கியத்துவம் என்று எனக்கு தெரியவில்லை. அதைப்பற்றி எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். இன்னொரு பதிவாக எழுதினாலும் சரி! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. புரட்டாசி மாதத்தில் புதன் உச்சம் புதனின் அதி தேவதை பெருமாள் . ஆகவே புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு மிகவும் நன்மை பயக்கும். நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் . இவர் சூரியன் - சாயா தேவியின் புதல்வர் - பிறந்ததும் புரட்டாசி சனி அன்றுதான். சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவரும்- சனிக்கு அதிபதியும் பெருமாள். எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உயர்ந்த உகந்த நாள் ஆயிற்று.

      Delete
    2. http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_19.html

      தங்கிய தங்கப்பூக்கள்

      இந்தப்பதிவில் பீமன் என்னும் மண்பாண்டத்தொழிலாளி திருவேங்கடமுடையானின் தரிசனம் பெற்று செல்வந்தனானதும் ஒரு புரட்டாசி சனிக்கிழமை..எனவே புரட்டாசி சனிக்கிழமைகள் மிகுந்த விஷேசம் பெறுகின்றன..

      Delete
  8. பெருமாளின் அழகான தரிசனம். நல்ல தகவல்களுடன் நல்ல பதிவு. நல்வாழ்வு உண்டாகட்டும் அனைவருக்கும். நல்வாழ்த்துகள். நன்றி அம்மா

    ReplyDelete
  9. தரிசித்து மகிழ்ந்தோம்
    புரட்டாசி சனி சிறப்புப் பதிவு
    படங்களுடன் வெகு வெகு சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. புரட்டாசி சனிக்கிழமையைப்பற்றி புரட்டிப்புரட்டி எழுதி அசத்தியுள்ளீர்கள். மிகவும் சந்தோஷமாக உள்ளது. ;)

    >>>>>

    ReplyDelete
  11. ஆங்காங்கே ஸ்லோகங்கள், அதற்கான விளக்கங்கள் மிகவும் அருமையாகச் சொல்லி மகிழ்வித்துள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  12. தஸாவதாரச் சிறப்புகள் பற்றி தெள்ளத்தெளிவாக உணர்ந்து கொண்டோம்.

    >>>>>

    ReplyDelete
  13. அகண்ட தீபம், மாவிளக்கு, உருளியில் ஏற்றும் மலை தீபம் - நெய் தீபம் - அடடா - ஒவ்வொன்றையும் எவ்வளவு சிரத்தையாகச் சொல்லிப் புரிய வைத்துள்ளீர்கள்.

    படிக்கப்படிக்கப் புல்லரித்துப்போனேன்.

    எங்கள் இல்லத்தில் அடிக்கடி இந்த தீப ஸமாராதனையை மிகவும் சிரத்தையுடன் செய்வது வழக்கமே.

    முக்கியமாக குழந்தைகளின் திருமணங்கள் + பிற சுப நிகழ்ச்சிகளையொட்டி இந்த மலை தீப ஸமாராதனையும், சுமங்கலிப் பிரார்த்தனையும் இல்லத்தில் கட்டாயமாகச் செய்வது உண்டு.

    இரண்டு நாட்களும் வீடே, ஒரே சந்தோஷமாகவும், அமர்க்களமாகவும் தான் இருக்கும்.

    >>>>>

    ReplyDelete
  14. பத்ரம், புஷ்பம், பலம், தோயம் ......

    ஆஹா, அற்புதமான ஆச்சர்யமான விளக்கம்.

    அன்போடு கொடுப்பது எதுவானாலும் பகவான் ஏற்கிறார் என்ற பொருள் விளக்கம் அருமை.

    ஏழையான சுதாமா [குசேலர்] பகவானுக்குத்தந்த தந்த அவல் + சபரி ஸ்ரீராமனுக்குக் கொடுத்த கனிகள் நல்ல உதாரணங்கள்.

    >>>>>

    ReplyDelete
  15. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம ஸ்தோத்ரங்களில் ஒன்றான “யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ .... நீதிர் மதிர் நம:” கொடுத்து அதற்கான அர்த்தமும் சொல்லியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. ;)))))

    >>>>>

    ReplyDelete
  16. இன்றைய தங்களின் பதிவும், படங்களும், விளக்கங்களும் அழகோ அழகு.

    மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள். நன்றியோ நன்றிகள்.

    ஸ்ரீபெருமாள் அருளால் அனைவரும் க்ஷேமமாக, சந்தோஷமாக, மன நிம்மதியுடன், சுபிக்‌ஷமாக வாழ இன்று ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்து பிரார்த்திப்போமாக!

    -oOo-

    ReplyDelete
  17. அழகிய சிறப்பான பதிவு சகோதரி!

    கண்களைவிட்டு நீங்கவில்லை படங்கள்! அற்புதம்!

    மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  18. அம்மாடியோவ்! படங்கள் அனைத்தும் கண்களை கவர்கின்றன. அழகான தரிசனத்தைக் கொடுத்துள்ளீர்கள். படங்களுடன் நல்ல தகவல்களையும் தெரிவித்து பெருமாளின் அருளையும் அன்பர்களுக்கு வாங்கி கொடுத்தூட்டங்க அம்மா. பகிர்வுக்கு நன்றீங்க.

    ReplyDelete
  19. அருமையான பகிர்வு. பெருமாளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
  20. வணக்கம்
    அம்மா

    இந்துக்களின் நினைவு நாட்களை நினைவுபடுத்தும் மிகச் சிறந்த தளம் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன் பதிவு அருமை வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  21. மாவிளக்குப் படங்கள் கண்ணையும் கருத்தையும்
    கவர்ந்தன.

    ReplyDelete
  22. புரட்டாசி மாதத்தின் நான்காம் வாரம். பெருமாளை கோயிலில் சென்று தரிசித்த பலன் உங்க படங்களை பார்க்கும்போது ஏற்படுகிறதுப்பா.

    மாவிளக்கின் மகத்துவம் அறிய முடிகிறது..

    விதுரர் கொடுத்த கஞ்சி, சபரி கொடுத்த பழம், குசேலர் கொடுத்த அவல் எல்லாமே அன்பின் பகிர்வு. இறைவன் வேண்டுவதும் அதுவே.

    அற்புதமான பகிர்வு. அன்பு நன்றிகள்பா..

    ReplyDelete
  23. படங்கள் அனைத்தும் அருமை...
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  24. எத்தனை எத்தனை தீபங்கள், தகவல்கள், விளக்கங்கள்! அந்த மலையப்பனை உங்கள் பதிவில் சேவித்து மகிழ்ந்தேன்!

    ReplyDelete
  25. சனிக்கிழமையன்ரு ஏழுமலையான் தரிசனம் உங்கள் பதிவின் மூலம் கண்டேன் . மனதிற்கு திருப்தியானது.
    நன்றி.

    ReplyDelete
  26. புரட்டாசி சனிக்கிழமை மாதவனுக்கு மாவிளக்கு பூஜை படங்கள் மிக அழகு.
    பாடல்கள் படங்கள் செய்திகள் எல்லாமே அருமை.
    மாதவனை, கேசவனை, வணங்கி வாழ்வில் அனைவரும் நலம் பெறுவோம்.
    நன்றி.

    ReplyDelete
  27. வழக்கம்போலவே பல படங்களுடன் பல அரிய தகவல்களுடன் இப் பதிவையும் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. அரிய தகவல்களுடன் ஓர் அற்புதப் பதிவு! நன்றி!

    ReplyDelete
  29. thanks for sharing important information about saturday in puratasi month

    ReplyDelete
  30. புரட்டாதிச் சனிக்கான நல்லதொரு பதிவு. மா... விளக்கு சூப்பர்.

    ReplyDelete
  31. வருட இறுதி புரட்டாதிச் சனிக்கு ஏற்ற
    அருமையான பதிவு
    அருமை. வாழத்துக்கள்

    ReplyDelete
  32. புரட்டாதிச்சனி,விஷ்ணுவின் மகிமை தெரியாத தகவல்கள் பல அறிந்துகொண்டேன்.நன்றி.

    ReplyDelete
  33. புரட்டாசி சனிக்கிழமை தகவல்களும் படங்களும் சிறப்பு! மாவிளக்கு, அகண்ட தீபம் குறித்த தகவல்கள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  34. புரட்டாசி சனிக்கிழமை நாளில் அருமையான தகவல்கள்.....

    நன்றி.

    ReplyDelete