Monday, June 3, 2013

ரிஷபாரூடர்



சிவ சிவ என்கிலர் தீவினையாளர் 
சிவ சிவ  என்றிடத் தீவினை மாளும் 
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார் 
சிவ சிவ என்னச் சிவகதி தானே 

- என்னும் திருமூலரின் திருமந்திரமே சிவ மூல மந்திரம் ஆகும்.

சிவாலயங்களில் விழாக்காலங்களில் அல்லது விசேஷ தினங்களில் சுவாமி, அம்பாள் உற்ஸவ திருமேனிகள் ரிஷப வாகனத்தில் காட்சி தரும்   நிரந்தரமாக ரிஷபாரூடராய் அதுவும் கற் திருமேனியில் காட்சி தரும் ஆச்சரியமான தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருலோக்கி.
  ஒரு சாபத்தினால் பேசும் திறன் இழந்த தேவ குருவான பிரகஸ்பதி நிவர்த்தி வேண்டி திருவிடைமருதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமகாலிங்கேஸ்வரரை வழிபட, இறையருள்படி திருவிடைமருதூருக்கு ஈசான்ய திசையில் அமைந்துள்ள திரைலோக்கி வந்து சுந்தரேஸ்வரரை வேண்டி தல விருட்சமான சரக்கொன்றை மரத்தின் கீழ் தவம் செய்தார். 
ஒரு மார்கழி மாதம் திருவாதிரை நன்னாளில் தேவர்களும்,பூத கணங்களும் புடை சூழ ரிஷப வாகனத்தில் சுந்தரேஸ்வரர் அகிலாண்டேஸ்வரியை  காட்சி தர, குரு பகவான் பாப விமோசனம் பெற்றார்.

 ரிஷபாரூடருக்கு எதிரில் அஞ்சலி செய்தவாறு இருக்கும் குருவின் சிலையை வணங்கி அருள் பெறலாம் ...
சிவபெருமானின்  நெற்றிக்கண் பார்வையில் சாம்பலான மன்மதன், ரதிதேவியின் வேண்டுதல் பேரில் சுந்தரேஸ்வரர் அருளால் மீண்டும் உயிர்பெற்றெழுந்தான்  
ரிஷபாரூடருக்கு எதிர்புறம் ரதியும் மன்மதனும் அணைத்தெழுந்த அற்புதமான தோற்றத்தில் காட்சி தருகின்றனர்.
தேவகுரு பிரகஸ்பதி, ரதி தேவி, பிருகு முனிவர், சுகேது, தருமன், கருவூர்த் தேவர் ஆகியோர் வழிபட்ட தலம் ... 

சுகேது என்பவர், இங்கே நீங்காத தலைவலி நீங்கப் பெற்றாராம்!

 தேவார வைப்புத் தலங்களில் ஒன்று.
அப்பர் திருத்தாண்டகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கருவூர்த் தேவரின் திருவிசைப்பா பெற்ற தலம். 

""கோடைத் திரை லோக்கிய சுந்தரனே! என்று மகுடம் அமைத்து இறைவனைப் பாடுகிறார். 

திருவிசைப்பா பதிகமும், காசிக் கலம்பக பாடலும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.

திரைலோக்கிய மாதேவி என்பவள் தஞ்சை பெரிய கோயில் கட்டிய முதலாம் இராசராசனின் மனைவியருள் ஒருத்தி. இத் தலத்து ஈஸ்வரனின் பெயர் சுந்தரேஸ்வரர். இவையிரண்டும் சேர்ந்து இத் தலத்திற்குத் திரைலோக்கிய சுந்தரம் எனப்பட்டதாம்! தற்போது ""திருலோக்கி'' என்று வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் மார்கழி மாத திருவாதிரையில் நடைபெறும் திருவூடல் திருவிழா சிதம்பரத்தில் நடைபெறுவதுபோல இங்கும் நடத்தப்படுகிறது. 

 குரு பகவானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் நடைபெறுகிறது.  

குரு பெயர்சி நாளில் குரு பகவான் பேச்சுத் திறன் பெற்றதால், உரிய காலத்தில் சரியாக பேச்சு வராத குழந்தைகளுக்கு இறைவனுக்கு நடைபெறும் பிரதோஷ வைபவத்தில் ரிஷாபாரூடருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேனை அருந்த கொடுத்தால் நிவர்த்தி கிடைக்கும் என்பர். 

 ரதி மன்மதனுக்கு அருளிய சுந்தரேஸ்வரரை வணங்கும் தம்பதிகளிடையே ஏற்படும் மனக்கசப்பு, பிரிந்திருப்போர் ஒன்று சேருதல் போன்ற கோரிக்கைகளும் நிறைவேறுவது  சிறப்பு ..!







13 comments:

  1. அருமையான படங்கள்... சிறப்பான விளக்கங்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ரிஷபாரூடரின் தரிசனம் உங்கள் மூலமாக நிறைவேறி சிலிர்ப்பைத் தந்தது!

    ReplyDelete
  3. அருமையான படங்களும் பதிவும். அறிந்திராத விஷயங்களும்... மிகச்சிறப்பு.
    வாழ்த்துக்கள்! பகிர்விற்கு நன்றிகள்!

    ReplyDelete
  4. ரிஷ்பாரூடரின் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    திரைலோக்கி போய்வர ஆவல் வந்து விட்டது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Aha..
    As usual arumaiyana post.
    Very very nice pictures.
    Then, Dear
    Many more happy returns of this day.
    Let God bless you both and do a lot lot lot of posting work like this.
    viji

    ReplyDelete
  6. அருமையான படங்களும் பதிவும் நன்றி

    ReplyDelete
  7. ரிஷபாரூடர் பற்றிய தங்களின் இன்றைய பதிவு மிக அருமையாக உள்ளது.

    படங்கள் அத்தனையும் அழகோ அழகு என்றாலும், கீழிருந்து மூன்றாவது படம் என்னை மிகவும் கவர்ந்தது.

    அந்தப்படத்தேர்வுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    திருவடைமருதூரில் தேவகுருவின் சாப நிவர்த்திக்கதையை மிகவும் பொறுமையாகவும் அருமையாகவும் சொல்லியுள்ளீர்கள்.;)

    ரதிதேவியின் வேண்டுதலால் மீண்டும் உயிர்பெற்ற மன்மதன் கதை கேட்கவே கவர்ச்சியாகவும் மனதுக்கு ஓர் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ;)))))

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    ooooo 929 ooooo

    ReplyDelete
  8. MANY MORE HAPPY RETURNS OF THIS DAY ! ;))))))))))))))))))))

    ReplyDelete
  9. ரிஷபாரூடர் படங்களும் விளக்கங்களும் வெகு சிறப்பு. கோமாதா படம் அருமை.

    ReplyDelete
  10. உங்கள் பதிவு மூலம் நாங்களும் ரிஷாபாரூடரை தரிசித்தோம்.....

    சிறப்பான படங்கள் மற்றும் பகிர்வு. மிக்க நன்றி.

    ReplyDelete
  11. ரிஷபாரூடரின் வெண்கல (பஞ்சலோகம்?) சிலை கண்ணைக் கவருகிறது.
    திருலோக்கி பெயர் விளக்கம் அருமை.

    ReplyDelete
  12. நல்ல தெளிவான படங்கள் . இதுவும் புதுத் தகவலே.
    மிக்க நன்றியும், மகிழ்வும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. We're a group of volunteers and starting a new scheme
    in our community. Your web site offered us with valuable info to work on. You've done an impressive job and
    our entire community will be thankful to you.


    Here is my website :: shih tzu puppies philippines

    ReplyDelete