Thursday, June 20, 2013

சுதர்சன நரசிம்ம சுவாமி





சுதர்சன காயத்ரி
ஸுதர்ஸநாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ர: ப்ரசோதயாத்

சலசலத்து ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரையில்,  சுற்றிலும் நெல் வயல்கள் சூழ்ந்த அமைதியான சூழலில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள,கரிசூழ்ந்த மங்கலம் சுதர்சன நரசிம்ம சுவாமி ஆலயத்தில்  உற்சவராக வெங்கடாசலபதி அருள்கிறார்.
ஆலயம் உற்சவர் பெயராலேயே வெங்கடாசலபதி கோயில் என்றே  குறிப்பிடப்படுகிறது ... 

ஊரைச் சுற்றிலும் இருந்த நெல் மற்றும் கரும்பு வயல்களை நோக்கி வந்த கரிகள் (யானைகள்) கிராமத்தைச்  சூழ்ந்து கொண்டதால் கரிசூழ்ந்த மங்கலம் என்ற பெயர் வந்திருக்கலாம் என்கின்றனர். 

திருமாலின் பஞ்சாயுதங்கள் ஐந்தும் ஆயுதங்களாக மட்டுமின்றி, பெருமாளுக்கு ஆபரணங்களாகவும் விளங்குகின்றன. 

திருமால் திருவுருவங்களிலும் பின் வலக்கரத்தில் சக்கரத்தையும், இடக் கரத்தில் சங்கையும் தரிசிக்கலாம்.

ஐந்து ஆயுதங்களில் சுதர்சனத்தை  சுதர்சன ஆழ்வார் என்றே  போற்றி
தனிச் சந்நதி உண்டு.  அறு கோண சக்கரத்திற்குள், ஜ்வாலா (தீச்சுவாலை) மகுடத்துடனும், திருக்கரங்களில் திவ்ய ஆயுதங்கள் ஏந்தியும் அச்சமூட்டும் விழிகளுடன் காட்சியளிக்கிறார் சுதர்சனர்.  இவரது  பின்புறத்தில் நான்கு கரங்களிலும் சுதர்சனத்தை ஏந்தி, யோக பட்டத்துடன் யோக நிலையில் நரசிம்மர் காட்சி தருகிறார். 

சுதர்சனரை முதலில் தரிசித்துவிட்டு, வலமாகச் சென்று பின்புறமுள்ள பலகணி வழியாகச் சென்று யோக நரசிம்மரை தரிசிப்பதுதான் வழக்கம்.

சுதர்சனரையும் யோக நரசிம்மரையும் வழிபட்டால் சகல விஷயங்களிலுமுள்ள அச்சங்கள் தீர்ந்து, மனோ தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும்.

சிறப்பு வாய்ந்த சுதர்சனர் பரிவார தேவதையாக  இல்லாமல் கருவறையிலேயே மூல மூர்த்தியாக எழுந்தருளியிருக்கின்ற தலம்தான் கரிசூழ்ந்த மங்கலம் ஆகும்.

ஆலயத்திற்கு வெளியிலேயே  பலிபீடமும், கொடிமரம் இருந்ததற்கான பீடமும் உள்ளன. கோபுரம் கிடையாது. 

நுழைவாயிலின் மேல் சுதர்சன மூர்த்தியும் அவருக்கு இரு பக்கங்களிலும் அனுமன் மற்றும் கருடனின் சுதை உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

கருவறைக்கு முன்னாலுள்ள அர்த்த மண்டபத்தில்  ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக உற்சவர் வெங்கடாசலபதி அருள்பாலிக்கிறார். மிக அழகான செப்புத் திருமேனிகளான இவை ஆபரணங்களால்  அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்த மண்டபத்தின் ஒரு புறத்தில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், நாகர் நடுவே நவநீத கிருஷ்ணன் சிலைகள் உள்ளன.கருவறையில் சுதர்சனர், வட்ட வடிவிலான திருவாசியினுள் 16 கரங்களோடு பல்வேறு திவ்ய ஆயுதங்களை ஏந்தி அருள்பாலிக்கின்றனர். 
சுதர்சனருக்கு பின்புறம் நான்கு கரங்களோடு யோக நரசிம்மர் காட்சியளிக்கிறார். நரசிம்மரின் நான்கு கரங்களில் சுதர்சன சக்கரங்கள் திகழ்கின்றன.

பிற  ஆலய சுதர்சனர் சந்நதிகள் போன்று இங்கு யோக நரசிம்மரைத் தரிசிக்க பின்புற பலகணி இல்லை. மாறாக அவரை தரிசிக்கும்படியாக  நிலைக்கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

நரசிம்மருக்கு ஆரத்தி காண்பிக்கும்போது மட்டுமே கண்ணாடியில் பிரதிபலிக்கும் நரசிம்மரைக் கண்டு  வணங்கலாம்.

சுதர்சனருக்கு எண்ணெய்க் காப்பு செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. தாராளமாக எண்ணெய் சாத்தினாலும், அந்த எண்ணெய்  முற்றிலும் உறிஞ்சப்படுகிறதோ என்று அதிசயிக்கத்தக்க வண்ணம், சிறிது நேரத்தில் திருமேனியில் எண்ணெய் பளபளப்பே இருப்பதில்லை.  உயிரோட்டமுள்ள விக்ரகங்களில்  மட்டுமே இவ்வாறு இருக்குமாம் ..
தொடர்ந்து 11 பிரதோஷ நாட்களில் நரசிம்மருக்கு பானக நைவேத்யம் செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். மகப்பேறு, மணப்பேறு வேண்டி  ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சக்கரத்தாழ்வாரையும் யோக நரசிம்மரையும் வழிபட்டு, பாயச நைவேத்தியம் செய்து, ஆலயத்தையொட்டியுள்ள  தாமிரபரணி நதிக்கரை படியில் குழந்தைகளுக்கு வழங்குகிறார்கள். இதை படிப்பாயசம் என்கின்றனர்.

சக்கரத்தாழ்வாராகிய சுதர்சன மூர்த்தி சுக்கிரனுக்கு அதிபதி. இக்கோயில் சுதர்சன பெருமாள் சுக்கிரன் பரிகார ஸ்தலமாக விளங்குகிறார். எனவே சுக்கிர தோஷ நிவர்த்திக்கு இங்கு பரிகார பூஜை செய்து பலனடையலாம்.

ஒரு காலத்தில் இப்பகுதி கேரள மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்ததால் ஆலயத்திலும் கேரள ஆலயங்களில் பின்பற்றப்படும் தாந்த்ரீக  முறை பூஜைகளே செய்யப்பட்டன. கேரள வழக்கப்படியே இப்போதும் அர்த்த மண்டபத்திற்கு மேல் ஆண்கள் சட்டையைக் கழற்றிவிட்டே செல்ல  வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. இப்போது வைகானஸ ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.

ஆலயத்திலுள்ள நுண்ணிய  வேலைப்பாடுகளுடன் கூடிய வெங்கலத்தினால் செய்யப்பட்ட கருட வாகனம் குறிப்பிடத்தக்கது. 

மிகக் கனமான இந்த கருட வாகனத்தை கருட சேவைக்குரிய சகடத்தில் பொருத்தி வைத்துள்ளனர்.

கருட சேவையின் போது உற்சவர் நேராக கருட  வாகனத்தின் மீது எழுந்தருள, அவருக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு, ஆலயத்தைச் சுற்றி மட்டும் ஊர்வலம் நடக்கிறது.

திருநெல்வேலியிலிருந்து 16 கி.மீ. தொலை வில் இத்தலம் அமைந்துள்ளது.  நெல்லை-பாபநாசம்-தென்காசி சாலையில் பத்தமடை வந்து அங்கிருந்து தனிச்சாலை வழியே 2 கி.மீ. பயணித்தால் இத்தலத்தை அடையலாம்.




15 comments:

  1. படங்களுடன் அருமையான விளக்கங்கள்... நன்றி....

    ReplyDelete
  2. ஒருமுறை சென்ற ஞாபகம்... படங்களும் தகவலும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. I am not able to move anywhere due to my knee pain. I cannot visit this place you mentioned. But you made me pray from home. The pictures are very great. I can pray by seeing it. Thanks dear for the post. Today is thursday and Swathi. Seeing these pictures can give me good result is my hope.
    Thanks Rajeswari for this post and pictures.
    viji

    ReplyDelete
  4. அழகிய படங்கள்! அருமையான விளக்கம்!
    பகிர்தலுக்கு மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  5. கருசூழ்ந்த மங்கலம் புதிய புதிய தகவல்கள். சிறப்புங்க.

    ReplyDelete
  6. ”சுதர்சன நரசிம்ஹ ஸ்வாமி” பற்றிய தங்களின் இன்றைய பதிவு மிக அருமையாக உள்ளது.

    //ஸுதர்ஸநாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி
    தன்னோ சக்ர: ப்ரசோதயாத்//

    நம்பிக்கையூட்டும் மிகவும் அழகான சுதர்சன காயத்ரி மந்திரம். ;)

    >>>>>

    ReplyDelete
  7. //ஐந்து ஆயுதங்களில் சுதர்சனத்தை சுதர்சன ஆழ்வார் என்றே போற்றி தனிச் சந்நதி உண்டு. //

    அருமையான தகவல்.

    //அறு கோண சக்கரத்திற்குள், ஜ்வாலா (தீச்சுவாலை) மகுடத்துடனும், திருக்கரங்களில் திவ்ய ஆயுதங்கள் ஏந்தியும் அச்சமூட்டும் விழிகளுடன் காட்சியளிக்கிறார் சுதர்சனர். இவரது பின்புறத்தில் நான்கு கரங்களிலும் சுதர்சனத்தை ஏந்தி, யோக பட்டத்துடன் யோக நிலையில் நரசிம்மர் காட்சி தருகிறார். //

    பெரும்பாலான கோயில்களில் இதுபோலத்தான் உள்ளன.

    //சுதர்சனரை முதலில் தரிசித்துவிட்டு, வலமாகச் சென்று பின்புறமுள்ள பலகணி வழியாகச் சென்று யோக நரசிம்மரை தரிசிப்பதுதான் வழக்கம். சுதர்சனரையும் யோக நரசிம்மரையும் வழிபட்டால் சகல விஷயங்களிலுமுள்ள அச்சங்கள் தீர்ந்து, மனோ தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். //

    சந்தோஷமான ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. மகிழ்ச்சி.

    //சிறப்பு வாய்ந்த சுதர்சனர் பரிவார தேவதையாக இல்லாமல் கருவறையிலேயே மூல மூர்த்தியாக எழுந்தருளியிருக்கின்ற தலம்தான் கரிசூழ்ந்த மங்கலம் ஆகும்.//

    மூல மூர்த்தியே இவர் தானா! அற்புதமான தகவலாக உள்ளது.

    >>>>>>

    ReplyDelete
  8. //பிற ஆலய சுதர்சனர் சந்நதிகள் போன்று இங்கு யோக நரசிம்மரைத் தரிசிக்க பின்புற பலகணி இல்லை. மாறாக அவரை தரிசிக்கும்படியாக நிலைக்கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நரசிம்மருக்கு ஆரத்தி காண்பிக்கும்போது மட்டுமே கண்ணாடியில் பிரதிபலிக்கும் நரசிம்மரைக் கண்டு வணங்கலாம்.//

    கண்ணாடி சேவை [அதுவும் பின்னாடி சேவை] சூப்பராகத்தான் இருக்கும். ;)))))

    >>>>>

    ReplyDelete

  9. //சுதர்சனருக்கு எண்ணெய்க் காப்பு செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. தாராளமாக எண்ணெய் சாத்தினாலும், அந்த எண்ணெய் முற்றிலும் உறிஞ்சப்படுகிறதோ என்று அதிசயிக்கத்தக்க வண்ணம், சிறிது நேரத்தில் திருமேனியில் எண்ணெய் பளபளப்பே இருப்பதில்லை. உயிரோட்டமுள்ள விக்ரகங்களில் மட்டுமே இவ்வாறு இருக்குமாம் ..//

    உயிரோட்டமுள்ள தகவலாக உள்ளது. மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  10. தாமிரபரணி நதிக்கரை படியில் குழந்தைகளுக்கு வழங்கிடும் படிப்பாயசத்தகவல் அருமையோ அருமையாக உள்ளது.

    இன்றைய பதிவும், படங்களும், விளக்கங்களும் அருமையாக உள்ளன.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ooooo 946 ooooo

    ReplyDelete
  11. nice pictures new information about sudharsana murthi

    ReplyDelete
  12. அரிய தகவல்களுடன் ஓர் அருமையான ஆலயத்தை தரிசிக்க வைத்த பதிவு! படங்கள் பிரமாதம்! நன்றி!

    ReplyDelete
  13. garuda sevitham suprasannam.

    subbu thatha.

    ReplyDelete
  14. கரிசூழ்ந்த மங்கலம் - புதிதாகக் கேள்விப் படுகிறேன். சுதர்சனர் மூல மூர்த்தி மிக அழகாக இருக்கிறார். படிப்பாயசம் தகவல் சிறப்பாக இருக்கிறது.

    அடுத்தமுறை திருநெல்வேலி போனால் மறக்காமல் சேவித்துவிட்டு வர வேண்டும்.

    ReplyDelete
  15. கரிசூழ்ந்த மங்கலம் - இதுவரை கேள்விப் படாத திருத்தலமாக இருக்கிறது. மூல மூர்த்தி சுதர்சனர் வெகு அழகு.
    படிப்பாயசம் தகவலும் புதிதாக உள்ளது.
    நல்ல ஒரு திருத்தலத்தை தரிசிக்க வைத்துள்ளீர்கள். நன்றி!

    ReplyDelete