Thursday, October 31, 2013

"அன்ன சிவன்' வழிபாடு வைபவம்






அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே|
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹீ ச பார்வதீ||

 அன்னம் நிறைந்தவளே! என்றும் பூரணமாக இருப்பவளே! 
சங்கரனின் பிராண நாயகியே!

மாதா பார்வதியே! எமக்கு ஞான வைராக்கியம் 
ஏற்பட பிட்சை இட்டு அருள்வாய்!

 மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர:|
பாந்தவா: சிவபக்தாச் ச ஸ்வ தேசோ புவன த்ரயம்||

 எனக்குத் தாய் - பார்வதீ தேவீ! தந்தை - மகேஸ்வரன்!
சொந்தங்கள் - சிவபக்தர்கள்! என் தேசம் - மூவுலகமுமே!
"அன்னம் பிரஜாபிஸ் சாக்ஷாத்
அன்னம் விஷ்ணு சிவ' 

-  நம்மை போஷிக்கும்  அன்னமே மும்மூர்த்திகளின் வடிவமாகும் ..!
"அன்னமானது பிரத்யட்சமான பிரம்ம சொரூபம், விஷ்ணு சொரூபம், 
சிவ சொரூபம் என்று வேதம் சொல்வதால், அது மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

அன்னம் ஸ்வயம் பிராணா'- அன்னமே ஜீவன் என்கிறார்கள் 
வேதம் அறிந்தவர்கள்.
"அன்னம் அளி. ஓயாமல் அன்னம் அளி' என்கிறது  பவிஷ்ய புராணம்.

""அன்னத்தை இகழாதே. அன்னத்தை அலட்சியம் செய்யாதே. 
அன்னத்தைப் பெருக்க முயற்சி செய்' என்கிறது தர்மசாஸ்திரம்.
"பசி என்று வந்தவர்களுக்குத் திருப்தியாக அன்னமிடு. அது, உனக்கும் உன் வாரிசுகளுக்கும் புண்ணியத்தைச் சேர்க்கும்; போதும் போதும் என்று சொல்லும்வரை அன்னமிடுவதால் உன் வாழ்வு என்றும் பிரகாசமாக இருக்கும்' என்கின்றன ஞான நூல்கள்.
அதனால்தான் பல ஆலயங்களில் அன்னக்கூடம் அமைத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னத்தினை பிரசாதமாக வழங்கி, பசிப்பிணியைப் போக்குகிறார்கள்.

 கங்கை நதி ஓடும் காசியில் பல அன்னச் சத்திரங்களும், மடங்களும் உள்ளன.

தமிழகத்தில் ஐப்பசி பௌர்ணமியில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது போல , காசியில் கங்கைக் கரையிலுள்ள  மீராகாட் என்னும் படித்துறையில் தீபாவளி (அமாவாசை) அன்று காலையில் "அன்ன சிவன்' வழிபாடு நடைபெற்று வருகிறது. 
அகன்ற நடைபாதையில் தரையைத் தூய்மை செய்து கங்கை நீரால் நன்கு கழுவி, மிகப்பெரிய  மாக்கோலமிட்டு, பெரிய வாழை இலைகளை தரையில் விரித்து, சுமார் நான்கு சதுர அடி பரப்பளவிலும் இரண்டடி உயரத்திலும் அன்னத் தினாலேயே லிங்கம் ஸ்தாபித்து. அதில் காசி விஸ்வநாதரை எழுந்தருளச் செய்து, அந்த அன்னலிங்கத்திற்கு விபூதி, சந்தனம், குங்குமமிட்டு, மலர் மாலை, ருத்ராட்ச மாலை சாற்றி, அன்னலிங்கத்தைச் சுற்றி லட்டு, வடைகளை சமர்ப்பித்து, பெரிய தட்டுகளில் இனிப்பு களையும் பழங்களையும் படைப்பார்கள்.
ஒரு சிறு நந்தியின் உருவத்தை அன்னத் தினால் உருவாக்கி, பச்சை மிளகாயினால் காது, வால் வைத்து, புளியங்கொட்டையினால் கண்கள் வைத்து அலங்கரித்து அன்னலிங்கத்தின்முன் வைப்பார்கள்.

காலை சுமார் பத்து மணியளவில், அங்கு கூடியுள்ள பக்தர்கள் மற்றும் காசிக்கு வந்திருக்கும் யாத்திரிகர்கள் முன்னிலையில், வேதம் அறிந்த அந்தணர்கள் கணபதி பூஜையில் ஆரம்பித்து அன்ன சிவனுக்குப் பூஜை செய்வார்கள். 

பிறகு, அங்கு வந்திருக்கும் பக்தர்கள் அனைவரும் பூஜை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

பக்தர்கள் பூஜை செய்தபின் தேங்காய் உடைத்து, அன்னதானத்திற்காக தயார் செய்திருக்கும் சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், வடை, பாயசம், இனிப்பு வகைகள் முதலியவற்றை நைவேத்தியமாக சமர்ப்பிப்பார்கள். 
மீண்டும் அனைவரும் பூஜை செய்தபின்,  அந்த அன்னலிங்கத் திலிருந்து சிறிதளவு அன்னத்தையும் இனிப்பு மற்றும் காய்கறிப் பதார்த்தங்களையும் இலையில் வைத்து, எதிரில் ஓடிக்கொண்டிருக்கும் கங்கை நதிக்கு சமர்ப்பித்து வழிபடுவார்கள். 

அதற்குப்பின் பூஜை செய்த இடத்திற்கு அருகிலேயே பக்தர்கள் வரிசையாக அமர்ந்த தும், இலை போடப் பட்டு அன்ன சிவலிங்கத்திலிருந்து அன்னத்தை எடுத்து அவர்களுக்கு வழங்கி, மற்ற பொருட்களையும் பரிமாறுவார்கள்.

கங்கை நதியில் நீராடிவிட்டு அந்தப் பாதை வழியாக மகான்கள், புனிதர்கள், பக்தர்கள் நடந்து சென்றிருப்பதால், அவர்கள் பாதங்கள் பட்ட புண்ணிய இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதை உயர்வாகவே நினைக்கிறார்கள். 

இதுபோல் அன்னம் உண்பது வருடத்திற்கு ஒருநாள் மட்டும் என்பதால் அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். 

அனைவருக்கும் அன்னசிவன் பிரசாதம் கிடைக்கும் என்பது சிறப்பாகும்.

ஒவ்வொரு அன்னத்திலும் சிவலிங்கம் காட்சி தருவதாக ஐதீகம் என்பதால் அன்னத்தை சிறிதளவுகூட வீணாக்காமல் உண்பார்கள். 

இந்த நிகழ்ச்சி மாலை வரை நடைபெறும். அதற்குப்பின் அந்த இடத்தை சுத்தம் செய்துவிடுவது வழக்கம். 
இந்த வைபவத்தை காசியிலுள்ள மகாலட்சுமி யாத்ரா சர்வீஸ் என்ற அமைப்பு நடத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், காசி விஸ்வநாதரையும் அன்னை விசாலாட்சி யையும் தரிசித்தபின் அன்னபூரணி ஆலயத்திற்குச்  சென்று, தங்கத்தாலான அன்னபூரணியை தரிசிப்பார்கள்.
 பிறகு லட்டு தேரில் அன்னபூரணி பவனி வருவதைக் கண்டுகளித்து, அந்த லட்டுகளையே பிரசாதமாகவும் பெற்று மகிழ்வர். 

  

விக்கிரகத்தை தரிசித்து, தீபாவளி தினத்தை புனிதம் மிக்க வகையில் கழிக்கிறார்கள்.
மாலை ஆறு மணிக்குமேல் கங்கை நதிக்கு நடைபெறும் ஆரத்தி மிகவும் ஜெகஜோதியாய்த் திகழும். 
அங்கு கங்காதேவியின் தங்க விக்கிரகத்தை பஞ்ச கங்கா படித்துறையில் எழுந்தருளச் செய்து, சப்தரிஷிகள் பூஜையாக ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாகும

21 comments:

  1. அஹஹா அற்புதம் அம்மா எத்தனையோ முறை காசி சென்று இருக்கிறேன் ஆனால் தீபாவளி சரிசனம் செய்தது இல்லை
    ஒருமுறையாவது சரிசனம் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது
    உங்கள் விளக்கமான பதிவு என் மனக்குறையை தீர்பதுபோல் உள்ளது
    நன்றி நண்பியே
    இனிய ஒளிமிகுந்த சந்தோசம் நிறைந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. படங்களும் விளக்கமும் மிகவும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. காசிக்கு சென்று கங்கையில் ஸ்நானம் செய்து விஸ்வநாதர் தரிசனம் செய்து அன்னபூரணி அருள் பெற்ற உணர்வு ஏற்பட்டது.

    நன்றி.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  4. படங்களும் விளக்கமும் மிகவும் அருமை சகோதரி

    பகிர்வினுக்கு மிக்கநன்றி!

    உங்களுக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. தீபாவளிக்குக் காசி தரிசனம் இப்படியுமா கிடைக்கும்! என்னே நமது புண்ணியம்! மிக்க நன்றி, ராஜேஸ்வரி அவர்களே!

    ReplyDelete
  6. காசிக்குச் செல்லாமலேயே தரிசனம். அருமை.

    ReplyDelete
  7. காணக்கிடைக்காத காட்சிகள்,அறியாத தகவல்கள் உங்களால் இவை
    சாத்தியமாகின்றது. காசிதரிசனம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.நன்றிகள்.
    உங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாரணாசியில் நடைபெறும் அன்ன சிவன் வழிபாடு, அன்னதானம் என்று அநேக செய்திகள். பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றி!
    எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. படியளக்கும் பரமசிவனுக்கே படியளக்கும் அன்னை அன்னபூரணி தாயாரின் படத்துடன் ஆரம்பித்துள்ள இந்த இன்றைய தங்களின் பதிவு ‘அன்ன சிவன் வழிபாடு வைபவம்’ அருமையோ அருமை.

    திருச்சியின் பிரபல மும்மூர்த்தி ஸ்தலமான உத்தமர் கோயிலுக்கு மிக அருகே, நடந்தே செல்லும் தூரத்தில் உள்ள கிராமம் பிக்ஷாண்டார் கோயில்.

    அங்குள்ள சிவன் கோயிலில் உள்ள ஸ்வாமியும் இதே போல பிக்ஷை வாங்கக்கூடிய பிக்ஷாடனேஸ்வரர் தான்.

    மும்மூர்த்தி ஸ்தலமான உத்தமர்கோயிலில் உள்ள சிவனுக்கும் அதுவே தான் பெயர்.

    >>>>>

    ReplyDelete
  10. வாரணாசியில் நடைபெறும் அன்ன சிவன் வழிபாடு, அன்னதானம் என்று அநேக செய்திகள். பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றி!
    எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. ஒருமுறை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா தரிஸனத்திற்கு நாங்கள் ஆந்திர மாநிலம் சென்றபோது, என் மனைவி தன் சஹோதருருக்கு உடல்நிலை சரியில்லை - ஸ்ரீ பெரியவா அனுக்ரஹம் செய்யணும் என்று வேண்டி பிரார்த்தித்தாள்.

    ”எந்த ஊரில் இருக்கிறான்?” என அவர்கள் விசாரிக்க, இவள் பிக்ஷாண்டர் கோயில் கிராமம் என்று மிக பெளவ்யமாகச் சொன்னதுமே, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா தன் இரு கைகளையும் குவித்து பிக்ஷை கேட்பதுபோலவே வைத்துக்காண்பித்து, ஏதேதோ எங்களுக்கு உணர்த்தியதும், ஆசீர்வதித்ததும் இன்றும் என் நினைவுகளில் வியாபித்து மகிழ்ச்சியளிக்கிறது.

    >>>>>

    ReplyDelete
  12. கங்கைக்கரை மீராகாட் அன்னாபிஷேகப்படங்களும், அதைவிட தங்களின் வர்ணனைகளும் அழகோ அழகாக உள்ளன.

    அன்னத்தினால் ஆன நந்திக்கு பச்சைமிளகாயினால் காதுகள் + வால், புளியங்கொட்டையினால் கண்கள்.

    ஆஹாஹ்ஹாஹ்ஹாஹாஹ்ஹா ! ஜோர் ஜோர் !!

    >>>>>

    ReplyDelete
  13. தங்கத்தினால் ஆன அன்னபூர்ணியாக, தங்களின் தங்கமான பதிவுகள், மனதில் தங்கத் தங்க தங்களுக்கு என் தங்கமான பாராட்டுக்கள்.

    அனைத்துமே ’லட்டு’வாக இருக்குது + இனிக்குது.

    ”தங்கத்திலே ..... ஒரு குறையிருந்தாலும் ...... தரத்தினில் குறைவதுண்டோ !” என்ற பாடலும் ஞாபகம் வருகிறது.

    >>>>>

    ReplyDelete
  14. கங்கா தேவியின் தங்க விக்ரஹத்துக்கு அங்கே ஹாரத்தி சுற்றி மகிழ்கிறார்கள்.

    இங்கு எங்கள் தங்கப்பதிவராம் திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு நான் தினமும் மானஸீகமாக ஹாரத்தி சுற்றி மகிழ்கிறேன்.

    தீபாவளிக்காக மட்டுமே எத்தனை எத்தனைப் பதிவுகளை மிகுந்த சிரத்தையுடன் கொடுத்து மகிழ்விக்கிறீர்கள் !!!!!!

    தங்களின் இத்தகைய கடும் உழைப்பு என்னை மேலும் மேலும் வியப்பில் ஆழ்த்துகிறது.

    >>>>>

    ReplyDelete
  15. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    செளக்யமா, சந்தோஷமா, செளபாக்யங்களோடு நீடூழி வாழ்க!

    பதிவுக்கும் பகிர்வுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். நன்றிகள்.

    -oOo-

    ReplyDelete
  16. அன்ன சிவன் வழிபாடு குறித்து அறிந்து கொண்டேன்! அழகிய படங்கள்! தெளிவான விளக்கங்கள்! அருமை! நன்றி!

    ReplyDelete
  17. அன்னசிவன் விழா பற்றி அறிந்தது இல்லை. அறிய வைத்தமைக்கு நன்றி.
    லட்டு தேரையும் கண்டு மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  18. + google la share panna mudiyalli plz konjam parunga sir

    ReplyDelete
  19. காசிபடித்துறையில் அன்னசிவலிங்கம் அமைத்து வழி பாடு செய்வது புது செய்தி எனக்கு.லட்டு தேர், தங்க அன்னபூரணி மற்றும் படங்கள் எல்லாம மிக அருமை.
    தீபாவளி அன்று இந்த பதிவை மறுபடியும் பார்த்து விடுகிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  20. புதிய செய்திகள்,அழகான படங்கள்.என்றோ காசி செல்லும் எண்ணம் வலுக்கிறது.

    நன்றி.

    ReplyDelete
  21. படங்கள் ஒவ்வொன்றும் மனதோடு ஒட்டிக் கொண்டது தோழி .
    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் என் இனிய தீபாவளி
    வாழ்த்துக்களும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    உரித்தாகட்டும் .

    ReplyDelete