Wednesday, October 9, 2013

திருமலை பிரம்மோற்சவ விழா



திருவருள்  தரும்  தெய்வம்  திருமலை தெய்வம் !
தீராத  வினை எல்லாம் தீர்த்திடும்  தெய்வம் !

வரும்துயர், பகையையும், போக்கிடும் தெய்வம்!
வாய்திறந்து, கேட்டாலே வழங்கிடும் தெய்வம் !

தாயாரை  தரிசித்து  வேங்கடவனை  தரிசிப்போம் !
தரணியில்  யாவரும் நலம்பெற  யாசிப்போம் !

திருமலைவாசா  என்று அழைத்தாலே  குறை தீர்க்கும் தெய்வம் !
தினமும்  நினைத்தாலே நல்வழி காட்டும்  தெய்வம் !

கோவிந்தா, கோவிந்தா, என்றாலே  பரவசம் !
கோவிந்தன்  அருளும் கிடைத்திடுமே  நம்வசம் !

என்றும், நினைப்போம், பணிவோம் அவன்தாள் !
எல்லார்க்கும், உகந்த தெய்வம்,  திருமலை தெய்வம் !

குறையொன்றுமில்லாத கோவிந்தன் கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக அலர்மேல் மங்கை தாயார் அகலகில்லேன் இறைவனை என்று இதயத்தில் இடம்பெற்று திகழும் ஏழுமலையான் குடிகொண்டு இருக்கும் திருப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்து கோவிலின் தங்க கொடி மரத்தில் கருடன் உருவப்படம் வரையப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை ஏற்றுகின்றனர்.

திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவின் போது கருடன் உருவம் தாங்கிய கொடி ஏற்றப்பட்டு  இனிதே தொடங்குகிறது.

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ விழாவிற்கான அழைப்பினை கொடியில் ஏற்றப்பட்ட கருடபகவான் தேவலோகத்திற்கு எடுத்துச்சென்று அங்கு உள்ளவர்களை விழாவுக்கு நேரில் அழைப்பதாக ஐதீகம்.

திருமலையில்  புரட்டாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா 
படைப்புக்கடவுளான பிரம்மன், தானே முன்னின்று நடத்திய விழா என்பதால் பிரம்மோற்சவம் எனப்பெயர் பெற்றது.

  பெரிய சேஷ வாகனம் ஊர்வலம்

ஏழுமலையான் கருட வாகனத்தில் பவனிவரும்
கருடசேவை நிகழ்ச்சி மிகவும் பெருமை உடையது....!

 மோகினி அவதாரத்தில் சுவாமி ஊர்வலம்


கருட வாகனத்தில் ஏழுமலையான் பவனிவரும் கருடசேவை நிகழ்ச்சி

ஊஞ்சல்சேவை.











தங்கத்தேர் பவனி

தேரோட்டம்,

பல்லக்கு உற்சவம்,

  கொடியிறக்கம்  நிகழ்ச்சிகளுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

பிரம்மோற்சவத்தின் தேரோட்டத்தை (ரதோற்சவம்) பார்க்கும் பக்தர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று நம்பப்படுகிறது.

திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின், ஐந்தாம் நாளன்று, காலையில் நடக்கும் கருட சேவையில், ஆண்டாள் சூடி களைந்த மாலை பெருமாளுக்கு சார்த்தப்படும். 
ஆண்டாள் சூடி களைந்த மாலையும் பாடிக்கொடுத்த கிளியும் ஸ்ரீவில்லித்தூரிலிருந்து ஊர்வலமாக திருப்பதி வருவது கண்கொள்ளாக்காட்சி..!
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை சாற்றிய பிறகுதான் பிரம்மோற்சவத்தில் பெருமாள் கரூட வாகனத்தில் வலம்வருவார் என்பதால்  அங்கு இருந்து புறப்பட்ட மாலை மற்றும் கிளிகள்,பட்டுவஸ்திரம் போன்றவை ஒரு கூடையில் வைத்து திருமலை மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று பெருமாள் சன்னதியில் சேர்க்கப்பட்டது.
தமிழக மக்கள் சார்பாக,  ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய திருக்குடைகளை திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு ஏழு மலையானுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக, சென்னையில் உள்ள செனன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலமாக எடுத்துச்சென்று சமர்ப்பணம் செய்கிறது. 

திருப்பதி திருக்குடை ஊர்வலம் செல்லுமிடமெல்லாம் மங்களம் பெருகும், வறுமை நீங்கும், நோய் நொடி விலகும் என்பது நம்பிக்கை.
விழாவின் முத்தாய்ப்பான  நிகழ்ச்சியாக சக்கரஸ்நானம் நடைபெறும்.
கோவில் அருகே உள்ள சுவாமி புஷ்கரணியில்(குளம்) 
சுவாமிக்கும், சுதர்சன சக்கரத்திற்கும் தீர்த்தவாரி நடைபெறும்.

 பிரம்மோற்சவ விழாவின் போது தினமும் கோவில் வெளிப்புறத்தில் உள்ள கொலு மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும்.

திருமலையில்  உள்ள தீர்த்தங்களில் சிறந்த சுவாமி புஷ்கரணி  குளத்து தண்ணீரில் சுவாமியின் திருமேனி படுவதால் அன்று தேவலோகத்தில் உள்ள நதிகள் எல்லாம் குளத்தில் ஐக்கியமாவதாக ஐதீகம்.



** தொடர்புடைய பதிவு
திருப்பதி அழகு குடை 
http://jaghamani.blogspot.com/2012/10/blog-post_13.html

26 comments:

  1. திருப்பதி பிரோம்மோற்சவம் பார்த்து விட்டேன் உங்கள் பதிவில்.
    அருமையான அழகான படங்கள்.
    பாடல் பகிர்வு மிக அருமை.
    நன்றி.

    ReplyDelete
  2. திருமலை வாசா கோவிந்தா...

    காலையில் இந்த நாமாக்களை சொன்னாலே பரவசம்.

    சுப்பு தாத்தா
    www.pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  3. ஆகா... தரிசனம் கிடைத்தது... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete
  4. பல்லக்கு ஊர்வலம் காண பல கண்கள் வேண்டும்.. அற்புதமான பகிர்வுங்க.

    ReplyDelete
  5. அசத்தலான படங்கள், அனைவருக்கும் பெருமாள் அருள் கிடைக்கட்டும்..

    ReplyDelete
  6. தினம் ஒரு திருத்தலம்..
    எல்லாருக்கும் மங்கலங்கள் உண்டாகும்படி அருமையான பதிவு!..
    பெருமான் திருவருளால் தொடரட்டும் திருப்பணி!..

    ReplyDelete
  7. தினம் ஒரு திருத்தலம்..
    எல்லாருக்கும் மங்கலங்கள் உண்டாகும்படி அருமையான பதிவு!..
    பெருமான் திருவருளால் தொடரட்டும் திருப்பணி!..

    ReplyDelete
  8. பிரம்மோற்சவ விழாவின் அற்புத தரிசனம் தரிசிக்கமுடிந்தது தங்களால். நன்றிகள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. ஆஹா .... ’திருமலை பிரும்மோற்சவ விழா’வினை நேரில் சென்றாலும் இதுபோல பொறுமையாக அருமையாக அழகாக ஸேவிக்க இயலுமா என்பது என்போன்ற சாமானியர்களுக்கு மிக மிக சந்தேகமே!

    >>>>>

    ReplyDelete
  10. அழகோ அழகான படங்களுடன் கூடவே தங்களின் தனித்தன்மை மிக்க விளக்கங்கள் .... சிறு குழந்தைக்கும் புரியும் வண்ணம் .... கொடுத்து வைத்திருக்கிறோம் ... இன்று தங்களின் இந்தப்பதிவினைக்காண ;)))))

    >>>>>

    ReplyDelete
  11. பிரும்மோற்சவத்திற்காக தேவலோகத்தில் உள்ளவர்களுக்காக அனுப்பப்படும் விசேஷ அழைப்பிதழ் தான், கொடியேற்றம் என்பது ..... ஆஹா, அற்புதமான கற்பனை விளக்கமாக உள்ளதே. அச்சா, பஹூத அச்சா ;)))))

    >>>>>

    ReplyDelete

  12. பிரும்மன் தானே முன்னின்று நடத்திய விழாவானதால் அது பிரும்மோற்சவம் என அழைக்கப்படுகிறது. அருமையான நல்லதொரு தகவல் அளித்துள்ளது சிறப்போ சிறப்பு.

    >>>>>

    ReplyDelete
  13. ஆண்டாள் சூடிக்களைந்த மாலையும், பாடிக் கொடுத்த கிளியுமாக இந்தப்பதிவும் கிளி கொஞ்சும் பதிவாக அமைந்துள்ளதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  14. திருப்பதிக்குச்செல்லும் குடை ஊர்வலங்கள் ...... ஆஹா காணக்கண்கோடி வேண்டும்.

    பதிவினிலேயே காட்டி நாங்களும் மங்களம் பெறவும், எங்களுக்கும் வறுமை நீங்கவும், எல்லோருக்கும் நோய்நொடி விலகச்செய்யவும் செய்துள்ளீர்கள்.

    ஸ்பெஷல் நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete

  15. ஸ்வாமிக்கும், சுதர்ஸனச் சக்கரத்திற்கு தீர்த்தவாரி நடந்த அதே புஷ்கரணியில் நாங்களும் ஸ்நானம் செய்தது போன்ற புல்லரிப்பு ஏற்பட்டது, அந்தப்படத்தினைப்பார்த்ததும். ஊஞ்சல் சேவையும் அழகோ அழகு .

    மொத்தத்தில் நீங்கள் எது காட்டினாலும் அது அழகோ அழகு மட்டுமே.

    அதுபோல நீங்கள் எதைச்சொன்னாலும் அதுவே எங்களுக்கு இன்று வேதவாக்காக உள்ளது.

    தொடரட்டும் தங்களின் சேவை [இனிப்பான சுவையான தேங்காய்ச்சேவை போல].

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    -oOo-

    ReplyDelete
  16. திருமலையான் திவ்ய தரிசனம் சிறப்பு!

    பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  17. அன்பு ராஜேஸ்வரி தாமதமாக வருவத்ற்கு மன்னிக்கவும். தினமும் திருமலையானை திருப்பதி தொலைக் காட்சியில் பார்த்தாலும்,
    நீங்கள் வர்ணித்திருக்கும் அழகும் அவனது போற்றிப் பாடல்களும் வெகு அருமை. திருமலை தரிசனத்திற்கு மிக நன்றி.

    ReplyDelete
  18. எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காத திருமலை தரிசனம் உங்கள் பதிவிலும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி!

    ReplyDelete
  19. திருப்பதி பிரம்மோற்சவ தரிசனம் திவ்ய தரிசனம். பிரமாதம். நன்றி அம்மா.

    ReplyDelete
  20. திருமலை பிரம்மோற்சவ படங்களும் தகவல்களும் அருமை! நன்றி!

    ReplyDelete
  21. பிரம்மோத்சவ காலத்தில் சென்னையில் இருந்து குடைகள் ஏந்தி திருமலைக்கு தரிசனம்பெறச் செல்வோரைக் கண்டதுண்டு. அது ஏதாவது குறிப்பிட்டவர்கள் செய்யும் சேவையா ?தெளிவிக்க முடியுமா.? பதிவும்படங்களும் அழகு அருமை.

    ReplyDelete
  22. பிரம்மன் தானே முன் நின்று நடத்தியதால் பிரம்மோற்சவம் எனப் பெயர் பெற்றது என்ற பெயர் காரணத்தையும் தெரிந்து கொண்டேன். நேரில் சென்று காண முடியாத குறையைப் போக்கிவிட்டது உங்கள் பதிவு நன்றி

    ReplyDelete
  23. ANDAL MAALAI S BEING USED DURING 5TH DAY MORNING NACCIYAR THIRUKKOLAM & NOT DURING GARUDA SEVAI

    ReplyDelete
  24. ANDAL MAALAI S BEING USED DURING 5TH DAY MORNING NACCIHARTHIRUKOLAM &NOT DURING GARUDA SEVAI

    ReplyDelete
  25. அருமைப் படங்கள்
    திருப்பதி பிரம்மோற்சவம்.
    மிக்க நன்றி.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete