Tuesday, November 12, 2013

அருகு சூடும் ஆனைமுகன்



வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது … பூக்கொண்டு
துப்பார்த் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
அனலாசுரன் என்ற அரக்கன் அனைவரையும் கொடுமைப் படுத்தி வந்தான். அவனது  கொட்டத்தை யாராலும் அடக்க முடியாத நிலையில் தேவர்கள் விநாயகரின் உதவியை நாடினார்கள்.

அனலாசுரனுடன் மோதினார் விநாயகர். ஆனால், அவனை ஒடுக்க முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே தூக்கி விழுங்கினார் விநாயகர்.  வயிற்றினுள் சென்ற அனலாசுரன் வெப்பத்தை அதிகப்படுத்த சூடு தாங்கமுடியாமல் தவித்தார் 

விநாயகர். குடம் குடமாக தண்ணீர் அருந்தியும் சூடு குறைந்த  பாடில்லை. ஒரு முனிவர் அறுகம்புல்லை விநாயகர் தலைமீது வைக்க, உடனே சூடு தணிந்தது. 

அனலாசுரன் விநாயகரின் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான்.  
அன்று முதல் விநாயகருக்கு அறுகம்புல் பிடித்த விஷயமாகி இன்றும் நாம் அதை அவருக்கு சமர்ப்பிக்கிறோம்.
இதில் மறைவாய் சொல்லப்பட்ட விஷயம் உடல் சூட்டை அறுகம்புல் தணிக்கும், ஜீரண சக்தியை உண்டாக்கும் என்பதே! 
அறுகம்புல் சிறு செடி. புல் வகையைச்  சேர்ந்தது. பசுமையான அகலத்தில் குறைந்த, நீண்ட கூர்மையான இலைகளை கொண்ட தாவரம். 

தண்டு குட்டையாக இருக்கும். ஈரமான இடங்களில் வளரும்.  . 
தாவரவியல் பெயர் cynodon dactylon . சமஸ்கிருதத்தில் துர்வா என்றும்  ஆந்திராவில் ஜெரிக்கி என்றும் கேரளத்தில் கருக்கா என்றும் கர்நாடகத்தில் காரிக ஹால்லு என்றும் அழைக்கிறார்கள். 

தமிழில் அறுகு, பதம், தூர்வை, மேகாரி  என பல பெயர்கள் உண்டு..

சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற சரும நோய்கள் குணமாக அறுகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துக் குளித்தால் குணமாகும்.  மூலநோய்க்கு காய்ச்சாத ஆட்டுப்பாலில், அரைத்த அறுகம்புல்லைக் கலந்து குடிக்க நிவாரணம் கிடைக்கும்.

நரம்புத் தளர்ச்சிக்கும், அல்சருக்கும்,  அருமருந்து. தினமும் அறுகம்புல் சாறு குடிக்க ரத்தம் சுத்தமாகும். ஆனால், மருத்துவத்திற்கு இதை பயன்  படுத்தும்போது சுத்தமான இடத்தில் வளர்ந்த அறுகம்புல்லை பயன்படுத்துவது நல்லது என்கிறார்கள், மருத்துவர்கள். 

 ஆன்மிக அன்பர்களுக்கு  விநாயகரின் ஸ்பரிசம் பட்டு அது பிரசாதமாக கிடைக்கும் போது மகத்துவமும் பல மடங்கு கூடிப் போகிறது. இந்து மதத்தில் ஆன்மிகத்தோடு அறிவியல்  இழையோடி கிடப்பதற்கு மஞ்சள் பிள்ளையாரை அலங்கரிக்கும் அறுகம்புல்லே சாட்சி!

ஒருவகை வடிவினில் இருவகைத்து ஆகிய 
மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி 
நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள் 
அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை 

ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்தும் 
முக்கட் சுடரினை இருவினை மருந்துக்கு 
ஒரு குரு ஆயினை  -முருகா ஒரு குரு ஆயினை..

முருகா.. முருகா... முருகா..முருகா.. முருகா... முருகா..

 --திருவெழுகூற்றிருக்கை-

ஓருருவாயினும் இருவகைக் களிறாய்மிளிரும் 
முத்தமிழ் முதல்வோன் முருகனுக்கிளையன் 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலும் கலந்துண்ணும் ஐங்கரன் கணபதி 
அறுமுகன் தனக்கு மூத்தவன் இவனே!
நமசிவயவெனும் ஐந்தெழுத்ததிபன் 
நான்மறை வேதியன் முக்கண் முதல்வோன் 
இருவினை அறுத்திடும் சிவனுக்கருளிய 
ஒருகுருநாதன்  முருகன்!




அருகம்புல் சாறெடுத்து அங்கமெல்லாம் சுத்தி செய்து 
பெருகும் பக்தியுடன் நான் பாட வேண்டும் துங்கக்
கரிமுகத்து நாயகனே ..விநாயகனே...தூயவனே ..அருள்வாய் நீயே..!!


16 comments:

  1. வணக்கம்
    அம்மா
    அறுகம் புல்லின் மகின்மை பற்றிய விளக்கம் மிக அருமை எப்படி விநாயகரை வணங்கவேண்டும் என்ற என்ற கருத்தும் மிக அருமை படங்களும் நன்று வாழ்த்துக்கள்


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அழகான படஙகள்.. அருகம் புல்லின் அருமையையும், ஆனைமுகனின் பெருமையையும் விளக்கியது - இன்றைய பதிவு.

    ReplyDelete
  3. எப்படி வணங்கினாலும் இன்னருள் தருவான் விநாயகன். பொழுது விடிந்தவுடன் விநாயகரைப் பற்றிய அருட்படங்கள் நிறைந்த உங்கள் எழுத்து கண்ணில் படுவதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும் நாங்கள். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்)

    ReplyDelete
  4. antha pallakku pillayar super.


    durva yugmam pillayar ennikkum nammai kaappaar.
    jaghathukku mani antha pillyar.
    subbu thatha.

    ReplyDelete
  5. அருகம்புல்லிற்கு இவ்வளவு மருத்துவ குணங்கள் உண்டு என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். விநாயகரை வணங்கும் முறையையும் வண்ணப்படங்களுடன் தந்திருக்கிறீர்கள். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  6. அருகம்புல் விநாகருக்கு ஏன் வைக்கிறோம் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன். பல்லக்கு படம் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  7. அறுகம்புல்லின் மகத்துவத்தினை அறிந்துகொண்டேன்.கார்விங் செய்த விநாயகர் மிக அழகாக இருக்கிறார்.மற்றைய விநாயகர் படங்களும் அழகு
    நன்றிகள்.

    ReplyDelete
  8. ’அருகு சூடும் ஆனை முகன்’ மிகச்சிறப்பான பகிர்வு.

    >>>>>

    ReplyDelete
  9. அரிய பெரிய விளக்கங்கள்.

    >>>>>

    ReplyDelete
  10. அறுகம்புல் பற்றிய அனைத்து செய்திகளும் அருமையாக அறிந்து கொள்ள முடிந்தது.

    >>>>>

    ReplyDelete
  11. மருத்துவக்குறிப்புகளும், விநாயகரை வழிபட வேண்டிய முறை பற்றிய விளக்கங்களும் மிகவும் பயனுள்ளவை.

    -oOo-

    ReplyDelete
  12. பானை வயிற்றுப் பரம்பொருள் பேரருள்
    தேனை நிகர்த்த சிறப்பு!

    அழகிய அற்புத விநாயகர் திருவுருவக் காட்சிகளும்
    மனதுக்கினிய சிறப்பான விடயங்களும் தாங்கிய பதிவு மிக அருமை!

    பகிர்வுக்கு நன்றியும் இனிய வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  13. அருகம்புல் மகிமை அறிந்து கொண்டேன். பல வித விநாயகர்கள். பலவித போஸ்கள் , எல்லாமே அருமையாக இருக்கின்றன.

    ReplyDelete
  14. அருகம்புல்லின் மகிமையும் அனலாசுரன் கதையும் அழகான படங்களும் கலந்து அருமையாய் இனித்தது பதிவு! நன்றி!

    ReplyDelete
  15. அருகம் புல்லின் மருத்துவ குணங்கள் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

    குடங்களில் செய்யப்பட்ட விநாயகர். - என்ன ஒரு கைவண்ணம்!

    ReplyDelete