Thursday, March 31, 2011

சிட்னி படகுப் போட்டி





இயற்கை அழகை அற்புதமாக போற்றிப் பாதுகாப்பதில் சிறந்து விளங்கும் ஆஸ்திரேலிய தீவுக்கண்டத்தில் ஒலிம்பிக் படகுப் போட்டிகள்பெரிய அளவில் நடை பெற்று வருவது கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகிறது.
பல இனகலாச்சாரங்களின் அழகான தொகுப்பான ஆஸ்திரேலியநாட்டில் சீன்ர்கள் அதிகமாக காண்ப்படுகிறார்கள்
.
சிட்னியில் சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் வருடா வருடம் அமர்க்களமாக நடைபெறும்.  

சீனத் திரைப்பட விழாக்கள், விதவிதமான சீன உணவுக் கண்காட்சிகள், சீனப்பெருஞ்சுவர் கட்டட மாதிரிக் கண்காட்சி, சீனப்பூங்கா உலா, சிட்னியில் உள்ள சீன மூதாதையர் பற்றிய விளக்க விழா என்று விதவிதமான விழாக்கள் காணக்கிடைத்தன.
அவற்றுள் டிராகன் படகுப் போட்டியைக் காண சந்தர்ப்பம் அமைந்தது.

காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை நூற்றுக்கும் அதிகமான படகுகள் கலந்து கொள்ள, நிகழ்ந்த இந்த டிராகன் படகுப் போட்டி, கண்ணுக்கும்,கருத்துக்கும் விருந்தாக இனித்தது. 

சீன வருடங்கள் விலங்குகளின் பெயராலேயே அழைக்கப்படுவதால் அந்தந்த விலங்குகளின் உருவத்தை படகுகளில் அமைக்கும் காட்சி அந்த விலங்குகளே கடலில் சீறி வருவதைப் போல் தோற்றம் காட்டுகின்றன.
அதற்கேற்றாற்போல விஷேட ஜோடனைகளுடன் சிட்னி டார்லிங் ஹாபர் என்ற அழகுமிகு துறை அலங்கரிக்கப்பட்டுக் கவர்ச்சிகரமாக இருந்தது. இது சீனப்பண்டிகை குறித்த நிகழ்வு என்றாலும் வேடிக்கை பார்த்ததிலும் போட்டிகளில் பங்கெடுத்ததிலும் அதிகம் ஆக்கிரமித்தது வெள்ளையர்களே. 
முன்பதிவு செய்யாமல் எல்லாம் படகுப்பந்தயத்தில் கலந்து கொள்ள முடியாதாம். இதற்காக முறைப்படி படகுச் சங்கத்தில் முறையாகப் பதிவு செய்து ஓவ்வொரு வாரமும் இரு தினங்கள் பயிற்சியாக ஆண்டு முழுவதும் கற்றே களம் இறக்குவார்களாம். 
1946 ஆம் ஆண்டிலிருந்து பெண்களும் இந்த போட்டியில் பங்கேற்கிறார்களாம்.
Adrienne Cahalan, என்னும் வீராங்கனை 2005 ஆம் ஆண்டுWild Oats. என்னும் பெயர் கொண்ட படகில் வெற்றி பெற்றுப் பரிசு வென்றாராம்.

இதுவரை ஆயிரம் பெண்கள் இந்த கடினமான போட்டியில் பங்கேற்று இருக்கிறார்களாம்

22 comments:

  1. சீறிப்பாயும் படகுகள்,
    டிராகானின் கலர்புஃல்லான தோற்றம், கடலின் அழகு,
    படகுகளின் அணிவகுப்பு
    அனைத்துமே
    தங்களின் வழக்கமான பாணியில்
    அழகியபடங்கள் மற்றும் பட
    விளக்கங்களுடன் தந்துள்ள
    தங்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. படகுப் போட்டி... படங்களுடன்.. நன்றாக இருந்தது.. ஆயிரம் பெண்கள் பங்குபெற்றது குறித்து பெருமிதம் அடைகிறேன். ;-)

    ReplyDelete
  3. @வை.கோபாலகிருஷ்ணன் s//
    பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  4. @ RVS said...
    படகுப் போட்டி... படங்களுடன்.. நன்றாக இருந்தது.. ஆயிரம் பெண்கள் பங்குபெற்றது குறித்து பெருமிதம் அடைகிறேன். ;-)//
    பெருமிதத்திற்கு நன்றிங்க.

    ReplyDelete
  5. படங்கள் நன்றாக இருக்கின்றன.

    ReplyDelete
  6. @DrPKandaswamyPhD said...//
    நன்றி ஐயா.

    ReplyDelete
  7. படங்கள் அருமையாக இருக்கிறது.எல்லாம் உங்கள் கைவண்ணமா !

    ReplyDelete
  8. @ஹேமா said...//
    அருமையான ரசிப்புத்தன்மைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வித்தியாசமான பதிவும் புகைப்படங்களும்.. நன்றி!

    ReplyDelete
  10. கலர்புல் படங்கள்...அழகான வர்ணனை....நல்லா இருக்குங்க'ம்மா... ரசித்தேன்..:)

    ReplyDelete
  11. அட மிகவும் குளிர்மையான போட்டி ஒன்று போல பார்க்கவே அருமையாயிருக்கு...


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

    ReplyDelete
  12. Awesome photos!!!!!! I love these... :-)

    ReplyDelete
  13. பதிவும் புகைப்படங்களும்.. கடலின் அழகு,
    படகுகளின் அணிவகுப்பு
    அனைத்துமே
    தங்களின் வழக்கமான பாணியில்
    நன்றி!

    ReplyDelete
  14. @மூன்றாம் கோணம் said...
    வித்தியாசமான பதிவும் புகைப்படங்களும்.. நன்றி!//
    கருத்துக்கு நன்றிங்க.

    ReplyDelete
  15. @அப்பாவி தங்கமணி said...//
    ரசிப்புக்கு நன்றிங்க.

    ReplyDelete
  16. @ ♔ம.தி.சுதா♔ said...//
    குளுமையான பின்னூட்டத்திற்கு நன்றிங்க.

    ReplyDelete
  17. @Chitra said...
    Awesome photos!!!!!! I love these... :-)
    நீண்ட நாட்களுக்குப் பிறகான வ்ருகைக்கு நன்றிங்க சித்ரா.

    ReplyDelete
  18. @போளூர் தயாநிதி said...//
    கருத்துக்கு நன்றிங்க.

    ReplyDelete
  19. படங்கள் அருமையாக இருக்கிறது
    அன்பான பாராட்டுக்கள்.

    ReplyDelete
  20. கலர்புல் படங்கள்...அழகான வர்ணனை

    ReplyDelete