Wednesday, June 13, 2012

வளம் அருளும் வலம்புரி விநாயகர்





சந்தான செளபாக்யத்துடன் அனைத்துக் கலைஞானமும் பெற்று ஆரோக்யமாய் அரும்பெரும் வாழ்வு வாழ வெற்றிகளை அளிக்கும் வித்தகக் கடவுள் கணபதியின் திருவருள் துணை நிற்கும்.
ganesh ji
“பறவாத தம்பி கருகாத வெங்கரி பண் புரண்டே
இறுகாத தந்தி உருகாத மாதங்கம் இந்து நுதல்
நிறவாத சிந்துரம் பூசாக் களபம் நெடும் சுனையில்
பிறவாத ஆம்பல் வலஞ்சுழிக்கே வரப் பெற்றனனே”

தும்பி, வெங்கரி, தந்தி, மாதங்கம், சிந்துரம், களபம், ஆம்பல் என்னும் பெயர்கள் ஆனையைக் குறிக்கும் சொற்களாகவும் நற்றமிழில் விளங்குகின்றன.

அவற்றை விநாயகருடன் பொருந்தி, ‘பறக்காத தும்பி, கருகாத கரி, ஸ்வரம் எழுப்பாத வீணைத் தந்தி, உருகாத பொன், சிவப்பைக் காட்டாத சிந்துரம், பூச முடியாத சந்தனம்,  நீர் நிலையில் தோன்றாத ஆம்பல்’ என்று சிலேடையைக் கவி காளகமேகம் பாடுவது ஆழ்ந்து, ரசிக்கத்தக்க அற்புதமாய் விளங்குகிறது.

சங்குகளில் "வலம்புரி சங்குக்கு' அதிக விசேஷம் உண்டு.. , 
வலம்புரி விநாயகர் வடிவத்தில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. 
இந்த வளைவு "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை ஒத்துள்ளது. 


இடதுபக்கமாக தும்பிக்கை சுழிந்திருந்தால் "ஓம்' என்ற பிரணவ வடிவம் கிடைக்காது. வலம்புரிக்கு இத்தகைய சிறப்பு உண்டு. 

அவரது வாயின் வலதுஓரம் ஆரம்பித்து, கன்னம், மத்தகம் (சிரசு) ஆகியவற்றை சுற்றிக்கொண்டு, இடதுபக்கம் தும்பிக்கை வழியாக இறங்கி, அதன் சுழிந்த முடிவுக்கு வருவது "ஓம்' என்பதை ஒத்திருக்கும். 

இயற்கையாகவே வில்வமரம் தல விருட்சமாக அமைந்துள்ள வடதிருமுல்லைவாயிலில் நீங்காத செல்வம் அருளும் வலம்புரி விநாயகர் ஆலய மண்டபத்தின் விதானத்தில் 32 வகை கணேச வடிவங்களை தரிசிக்கலாம். 
image
சிருஷ்டி தத்துவம் 64 பிரிவுகளைக் கொண்டது. அவற்றிலிருந்து 32 தத்துவங்களின் மூலம் 32 கணேச வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


சிவன், லட்சுமி நாராயணர், பூர்ண - புஷ்கலை சமேத ஐயனார், வள்ளி தேவசேனாவுடன் ஆறுமுகன், லட்சுமி நரசிம்மர், சரபேஸ்வரர், நவகிரகங்கள் , காலபைரவர் சந்நிதிகளைத் தரிசித்து அருள் பெறலாம்..


சென்னை, வடதிருமுல்லைவாயிலில் செந்தில்நகர் பகுதியில் ஆலயம் அமைந்துள்ளது !


 ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று பெரிய அளவில் அன்னதானம் நடத்தப்படுகிறது.



வலம்புரி விநாயகர், வீமநகர், 

ஸ்ரீ வலம்புரி விநாயகர், முத்தங்கி அலங்காரம் 
ஞாபக வளர்ச்சிக்கு வலம்புரி விநாயகரை வணங்கலாம்....





Ganesh jiGanesh ji




தனுஷ்கோடி விநாயகர்.

18 comments:

  1. அன்புடன் வணக்கம்
    தாங்கள் தொகுத்திருக்கும் அளிதிருக்கும் வலம்புரி விநாயகர் மிக அருமையாக உள்ளது.
    ஆனால் சாஸ்திரங்களில் நெற்றியல் திரிசூலம், கோபி,நாமம் போன்ற எதுவும் இல்லை கவனிக்க !!வீபூதி தாரணம் மட்டுமே
    உள்ள விநாயகரை வழிபடுவதே மிக சிறந்தது . நன்றி..

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு மற்றும் படங்கள்.....

    ReplyDelete
  3. அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  4. வளம் அருளும் வலம்புரி விநாயகருக்கு நமஸ்காரங்கள்.

    முதலில் கண்ணடிக்கும் மூவர் அழகாக ஜொலிக்கின்றனர்

    தலைப்பை

    வளம்
    வழங்கும்
    வலம்புரி
    விநாயகர்

    என்று வைத்திருக்கலாமோ!

    ReplyDelete
  5. அடுத்ததில் குழந்தை ரூபத்தில் குண்டுப்பிள்ளையார்.

    ஸ்டைலாக செல்போனை காதருகே வைத்துப் பேசுவதுபோல உள்ளார்.

    குட்டியான அவரின் தொந்தி நல்லா ரவுண்டாக Ghaடம் போல உள்ளது.

    கைவிரல்களும், குஞ்சுக்கால் விரல்களும் நல்ல அழகு தான்..

    அதுவும் கை கால்களில் அந்த மேல் கொலுசுத்தண்டையும், பூணூலும், மார்பில் அணிந்து ஆபரணங்களும், பச்சைக்கரை அங்கவஸ்த்திரத்தின் ஜரிகை பார்டரும் அசைவது அழகோ அழகு.! ;)

    ReplyDelete
  6. அடுத்ததில் குழந்தை ரூபத்தில் குண்டுப்பிள்ளையார்.

    ஸ்டைலாக செல்போனை காதருகே வைத்துப் பேசுவதுபோல உள்ளார்.

    குட்டியான அவரின் தொந்தி நல்லா ரவுண்டாக Ghaடம் போல உள்ளது.

    கைவிரல்களும், குஞ்சுக்கால் விரல்களும் நல்ல அழகு தான்..

    அதுவும் கை கால்களில் அந்த மேல் கொலுசுத்தண்டையும், பூணூலும், மார்பில் அணிந்து ஆபரணங்களும், பச்சைக்கரை அங்கவஸ்த்திரத்தின் ஜரிகை பார்டரும் அசைவது அழகோ அழகு.! ;)

    ReplyDelete
  7. நற்றமிழில் உள்ள யானையைக்குறிக்கும் சொற்களை கவி காளமேகம் சிலேடையாகக் கூறியிருப்பதை தாங்கள் சுட்டிக்காட்டியிருப்பது சிறப்பு தான்.

    ReplyDelete
  8. வலம்புரி வடிவம் “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தை ஒத்துள்ளது என்பதே சூட்சுமம்.

    ஆஹா, அருமை தான்.

    ReplyDelete
  9. நீல வெல்வெட் பேக்க்ரெளண்டில் முத்தங்கி அலங்காரம் ரொம்ப ஜோராகக் காட்டப்பட்டுள்ளது.

    அதற்குக்கீழே இரண்டாவது படத்தில் உள்ள கோலம் பொன்ற டிசைன் ரொம்ப நல்லாயிருக்கு.

    கோயிலின் உட்புற மேல் தளத்தில் உள்ளதை புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதோ!

    ReplyDelete
  10. என்னை மிகவும் கவரும் இன்றைய படம், செம்பருத்தி, எருக்கு, ப்வழமல்லி, அருகம்புல் முதலியவற்றால் அழகாகக் காட்டப்பட்டுள்ள சிம்பிள் விநாயகர்.

    ஒரேயொரு செம்பருத்திப் பூவிலேயே தலை, நெற்றி, பொட்டுகள், கண், இமை, புருவம், தும்பிக்கை என அனைத்தையும் சூப்பராகக் காட்டி விட்டார்கள், பார்த்தீர்களா?


    அடுத்ததாக சிறிதும் பெரிதுமாக எட்டே எட்டு அரச இலைகளில் பிரசன்னமாகியுள்ள பிள்ளையார்.

    ReplyDelete
  11. வழக்கம்போல அனைத்துமே அருமை.
    A to Z என ஒரேயடியாக 26 பிள்ளையார்களை காட்டி அசத்தியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. வை.கோபாலகிருஷ்ணன் said...
    வலம்புரி வடிவம் “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தை ஒத்துள்ளது என்பதே சூட்சுமம்.

    சூட்சுமமான கருத்துரைகளால் பதிவை விளக்கியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  13. Aha.......
    The second picture....
    I just love to take HIM in my hand and wants to hug HIM.
    Chellapillai Ganapathy....
    Nice pictures.
    Nice post as usual.
    viji

    ReplyDelete
  14. அம்மா,
    வலம்புரி விநாயகர் படங்கள் அருமை.

    பச்சை நிறத்தில் ஆஞ்சநேயர் வடிவத்தில் இருப்பது தும்பிக்கையாழ்வாரோ ?

    நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    தமிழ் பிரியன்.

    ReplyDelete
  15. வலம்புரி வடிவம் “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தை ஒத்துள்ளது என்பதே சூட்சுமம்.//


    படங்களுடன் பதிவு அற்புதம்
    வல்ம்புரி வி நாயகருக்கான விளக்கம் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. எங்கள் காலனியில் அருள் பாலிக்கும் லக்ஷ்மி கணபதியும் வலம்புரிதான்!

    ReplyDelete
  17. எல்லோருக்கும் பிடித்த கடவுள். படங்கள் அருமை ! நன்றி சகோ !

    ReplyDelete
  18. 3395+8+1=3404 ;)

    சூட்சுமமானதோர் பதிலுக்கு நன்றிகள். ;)

    ReplyDelete