Monday, June 18, 2012

மகிழ்ச்சி தரும் ஸ்ரீமல்லிகார்ஜுனசுவாமி


ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. 
  • அம்மனின் 51 சக்தி பீடங்களில் மூன்றாவதாகத் திகழ்கிறது..
  • நந்திதேவர் அவதரித்த தலம். 
  •  குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இயற்றிய சிலாதர் என்ற மகரிஷிக்கு மகனாக அவதரித்தவர் நந்தி தேவர்..
  • சனகாதி முனிவர்கள் நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர்.  தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,"சிவனைக்குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்,''என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார்.
  • நந்தி தவம் செய்த "நந்தியால்' என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றான்.
  • மல்லிகார்ஜுனருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம். சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. 
  • தட்சிண கைலாசம் என்று போற்றப்படும் ஸ்ரீசைலம் - பக்தி ஞானம் உலகப்பற்றின்மை ஆகியவற்றிற்கு புகழ் பெற்றது. ஸ்ரீசைலம் வேதாந்திகள், பரமயோகிகள், சித்தி பெற்ற புருஷர்கள், மகாதவசிகள், இருக்கும் தவஸ்தலமே இப்புண்ணிய ஷேத்திரம் .
  • மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனை பூஜித்து வந்ததால் இறைவன் "மல்லிகார்ஜுனர்' எனப் பெயர் பெற்றார்..
மஹா விஷ்ணு விநாயகரின் உருவத்தில் ஸ்ரீசைல சிகரத்திற்கு 2. கி.மீ. தூரத்தில் சாட்சி கணபதி திருக்கோயிலில் அருள்புரிகிறார்.

சாட்சி கணபதி தன்னை காணவரும் பக்தர்களில் யார் மோட்சத்திற்கு செல்லும் அருகதை உள்ளவர்கள், யார் இல்லாதவர்கள் என கைலாசத்தில் 
(ஸ்ரீ சைலத்தில்) உள்ள சிவபெருமானிடம் ஒரு பட்டியல் போட்டு கொடுப்பதால்  சாட்சி கணபதி எனப்படுகிறார்...

எனவே பக்தர்கள் தமக்கு மோட்சம் கிட்ட வேண்டும் என்று கருதி தத்தம் கோத்திரங்களை கூறி சாட்சி கணபதியை வணங்கிய பின் பக்தியுடன் 
ஸ்ரீ சைலம் வாயில் நுழைகின்றனர்.

குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், 
கங்கையில் 2000 முறை குளிப்பதாலும், 
நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், 
காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை 
ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது.
நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவன் ஆட்சிபுரிகிறார்.

நந்தியை தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான்.
மிகப்பிரமாண்டமான நந்தி மிகவும் அழகு வாய்ந்தது.
இங்கு சிவன் சன்னதி கீழே இருக்க, பிரமராம்பாள் சன்னதி 
30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது விசேஷமாகும்.

ஸ்ரீபிரம்மராம்பா தேவி பதினெட்டு மஹாசக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறாள்.

சித்தி பெறுபவருக்கும், சாமான்ய பக்தருக்கும் அபூர்வமான 
அனுபவத்தை இந்த ஷேத்திரம் கொடுக்கின்றது.
Sri Bhramarambika Devi
ஸ்ரீ பிரம்மராம்பாதேவி பவானி வடிவத்தில் சிவாஜிக்கு காட்சி தந்தருளி திவ்யகட்கத்தை (பெரிய வாள்) அளித்து கடமை உணர்வை போதித்து, பகைவரை அழித்து வெற்றி யாத்திரையை நடத்திட வாழ்த்தினாள். 

தனது பக்தியின் நினைவாக இத்தலத்தில் வடக்கு கோபுரத்தையும், தியான மந்திரையும் உருவாக்கி அன்று முதல் பல வெற்றிகள் பெற்று சத்ரபதி சிவாஜி என்ற பெயருடனும் பெருமையுடனும் திகழ்ந்தார்...
Sri Malligajuna Swamy
சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால், மூலவர் 
விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது.
Sri Sailam Koburam
தூய்மையான மனதோடு, சாதி, மத பேதமின்றி மூலவரான 
ஜோதிர் லிங்கத்தின் தலையை தொட்டு வணங்கலாம்.

எல்லா கோயில்களிலும் குளித்து கைகால்கள் கழுவி ஒன்றும் சாப்பிடாமல் கடவுளை தரிசனம் செய்வது வழக்கம். !

ஆனால் இங்கு எந்த வித நித்திய கர்மங்களையும் செய்யாமல் மல்லிகார்ஜுனரை தரிசனம் செய்வதற்கு தூளி தரிசனம் என்று பெயராம்..
வெறும் தரிசனத்தினாலேயே எல்லாவிதமான சுகங்களையும் பக்தர்கள் அனுபவிப்பார்கள் என்ற பெயரும் புகழினை பெற்றிருக்கும் இறைவன் ஸ்ரீமல்லிகார்ஜுனசுவாமி..!
ஆலய முகப்பில் சித்தி விநாயகர் தரிசனம்.
மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாக
சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன.
பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில், நம் கண்களுக்கு விருந்தாகின்றது.

ராஜராஜேஸ்வரி கோயில், அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், பஞ்ச நதீஸ்வரம் ஆலயம் முதலியன தரிசிக்கத் தக்கன.

தெற்கு வாயில் கோபுரம் "ரங்க மண்டபம்' எனப்படும்....

கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபம் உண்டு...

கோயிலிலிருந்து அருகிலுள்ள நாகார்ஜுனர் அணைக்கு 
செல்ல விசைப்படகு வசதி உள்ளது.
Srisailam Dam
கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்குமிடங்கள் உள்ளன.

மலையின் கீழேயிருந்து 3 மணி நேரம் பிரயாணம் செய்தால் ஸ்ரீசைலத்தை அடைய முடியும். 

அடர்ந்த காட்டுப்பகுதியாக இருப்பதால், தனியார் வாகனங்கள் 
இரவு 8 மணியிலிருந்து காலை 6 மணிவரை செல்ல அனுமதி கிடையாது.
அரசு பஸ்கள் மட்டுமே செல்லும். 
திங்கள், வெள்ளியில் கூட்டம் அலைமோதுகிறது.

Stone carving showing serpent form of Shiva and goddess Shakti at Srisailam temple,
Srisailam Dam during night time lit with lights

19 comments:

  1. இந்திராJune 18, 2012 at 7:00 PM

    சோமவாரம் ஸ்ரிசைலம் மல்லிகார்ஜூன ஸ்வாமி தரிசனம் தங்களால் கிடைக்கபெற்றோம் நன்றி அம்மா.

    ReplyDelete
  2. படங்களும் பகிர்வும் அருமை. விரிவான தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. அழகு மாளிகையுடன் சேர்ந்து வந்துள்ள
    மகிழ்ச்சி தரும் ஸ்ரீமல்லிகார்ஜுனஸ்வாமி உண்மையிலேயே இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறார்.

    பொறுமையாகப் படித்து விட்டு, பார்த்து விட்டு மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  4. மூன்றாவது படத்தில் ....

    ஆஹா! 12 சிவனார்கள் தலைகளும் ரெளண்டாக சந்திப்பது ரவுண்டானா போல நல்ல அழகாக .....

    சந்திக்கும் வேளை .....
    சிந்திக்கவே இல்லை ... .
    தந்துவிட்டேன் என்னை .....

    என்ற பாடல் போல நடுவில்
    ஒரு முக்கோணத்தின் மீது மற்றொரு முக்கோணம் கோலமாக அமைந்து கோலாகலமாகப் பாட்டுப்பாடுகிறதே!

    சபாஷ்!

    ReplyDelete
  5. Sri Bhramarambika Devi

    ஸ்ரீ ப்ரமராம்பிகா தேவி. எனக்கு மிகவும் பரிச்சயமானதோர் பெயர்.

    கோவையில் தங்களைப்போலவே, பெங்களூரில் ஒரு ப்ரமராம்பிகா என்பவர் எனக்கு பல வருஷங்களாக மெயில் மூலம் மிகவும் நட்பு.

    தங்களைப்போலவே அவர்களையும் நான் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை.

    ”உடம்பெல்லாம் உப்புச்சீடை” உள்பட என்னுடைய பலகதைகளை என் அனுமதியுடன், கன்னடத்தில் மொழிபெயர்த்து, அங்குள்ள மாத/வார இதழ்களில் வெளியிட்டுள்ளார்கள்.

    கர்னாடக இசை [வாய்ப்பாட்டு] வல்லுனரும் ஆவார்.

    முன்பெல்லாம் மாதம் ஒருமுறையாவது தொலைபேசியில் பேசுவார்கள்.

    தங்களின் Sri Bhramarambika Devi படத்தைப்பார்த்ததும் அவர்கள் ஞாபகமே வந்தது.

    ReplyDelete
  6. Stone carving showing serpent form of Shiva and goddess Shakti at Srisailam temple,

    அருமையோ அருமை

    கற்சிலைகள் ...
    பொற்சிலைகள் போலவே!

    முன்பும் கல் ...

    இப்போதும் கல்

    ஆனால் இப்போது அந்தக்கல்லில் தெய்வ உருவம் உள்ளதால், அது நம்மை வணங்கச்சொல்கிறது.

    கல்லின் தேவையில்லாத பகுதிகள் செதுக்கி எறியப்பட்டுவிட்டதால் தெய்வாம்சம் ஏற்பட்டுவிட்டது!

    நம்மிடமிருந்து தேவையில்லாதவற்றை
    நாம் நீக்கிக் கொண்டுவிட்டால்!

    நாமும் தெய்வமாகலாம்.

    சரி தானே!

    ReplyDelete
  7. Srisailam Dam during night time lit with lights

    ஆஹா! இது அருமை!

    என் கற்பனையில்:

    பளபளப்பான மொட்டைத்தலையர்கள் ஒரு டஜன் பேர்கள் பல்லக்கு தூக்குகிறார்கள்.

    பெரும்பாலானோர் மஞ்சள் வஸ்த்ரமும், ஒருசிலர் நீல வஸ்த்ரமும், புடவை போலக் கட்டியுள்ளனர்.

    அவர்கள் தலையினில் அவர்களின் தலையெழுத்து அப்படியே பிரதிபலிக்கின்றது, நல்ல விளக்கு வெளிச்சத்தில்.

    இது எப்படியிருக்கு? சரியா?

    ReplyDelete
  8. கடைசியில் காட்டியிருக்கும் சிவக்கொழுந்து [பொடியன்] நல்ல அழகு.

    சிவனேன்னு சிவனே தூங்குவது அருமை.

    எவ்வளோ முறைகள் நீங்கள் காட்டியிருப்பினும், அலுப்புத்தட்டாத
    ஓர் அழகிய படம்.

    ReplyDelete
  9. //ராஜராஜேஸ்வரி கோயில்,
    அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில்,
    பஞ்ச நதீஸ்வரம் ஆலயம்
    முதலியன தரிசிக்கத் தக்கன.//

    ராஜராஜேஸ்வரி கோயிலில் இல்லை.

    இந்தப்பதிவினில் உள்ளார்கள்.

    யாரும் எங்கும் போய் அனாவஸ்யமாக அலைந்து கஷ்டப்படவே வேண்டாம்.

    தினமும் இவர்களின் அழகான பதிவுகளை தரிஸித்தாலே போதும்.

    கோடி புண்ணியம் - அதுவும் வீட்டை விட்டு எங்கும் நகராமல் - வெகு சுலபமாக. ;)))))

    ReplyDelete
  10. வை.கோபாலகிருஷ்ணன் said...
    Stone carving showing serpent form of Shiva and goddess Shakti at Srisailam temple,

    அருமையோ அருமை

    கற்சிலைகள் ...
    பொற்சிலைகள் போலவே!

    முன்பும் கல் ...

    இப்போதும் கல்

    ஆனால் இப்போது அந்தக்கல்லில் தெய்வ உருவம் உள்ளதால், அது நம்மை வணங்கச்சொல்கிறது.

    கல்லின் தேவையில்லாத பகுதிகள் செதுக்கி எறியப்பட்டுவிட்டதால் தெய்வாம்சம் ஏற்பட்டுவிட்டது!

    நம்மிடமிருந்து தேவையில்லாதவற்றை
    நாம் நீக்கிக் கொண்டுவிட்டால்!

    நாமும் தெய்வமாகலாம்.

    சரி தானே!/

    கல்லிலே கலைவண்ணம் கண்டு கடவுளாக்குவது போல

    நம்மிடமிருந்து தேவையில்லாதவற்றை
    நாம் நீக்கிக் கொண்டு மனிதனும் தெய்வமாகலாம் என கருத்துரை மூலம் புதிய அர்த்தம் கொடுத்தமைக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  11. வை.கோபாலகிருஷ்ணன் said...
    Stone carving showing serpent form of Shiva and goddess Shakti at Srisailam temple,

    அருமையோ அருமை

    கற்சிலைகள் ...
    பொற்சிலைகள் போலவே!

    முன்பும் கல் ...

    இப்போதும் கல்

    ஆனால் இப்போது அந்தக்கல்லில் தெய்வ உருவம் உள்ளதால், அது நம்மை வணங்கச்சொல்கிறது.

    கல்லின் தேவையில்லாத பகுதிகள் செதுக்கி எறியப்பட்டுவிட்டதால் தெய்வாம்சம் ஏற்பட்டுவிட்டது!

    நம்மிடமிருந்து தேவையில்லாதவற்றை
    நாம் நீக்கிக் கொண்டுவிட்டால்!

    நாமும் தெய்வமாகலாம்.

    சரி தானே!/

    கல்லிலே கலைவண்ணம் கண்டு கடவுளாக்குவது போல

    நம்மிடமிருந்து தேவையில்லாதவற்றை
    நாம் நீக்கிக் கொண்டு மனிதனும் தெய்வமாகலாம் என கருத்துரை மூலம் புதிய அர்த்தம் கொடுத்தமைக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  12. Sri Malligajuna Swamy
    நாகலிங்கப்புஷ்பங்களுடனா?

    Sri Sailam Koburam
    பளபளப்பான திரிசூலத்துடன்

    என எல்லாமே வழக்கம்போல் வெகு அழகாகக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.

    பா ரா ட் டு க் க ள்

    வா ழ் த் து க ள்

    ந ன் றி யோ ந ன் றி க ள்

    பிரியமுள்ள
    vgk

    ReplyDelete
  13. சிவன் சந்நதிக்கு மேல் 30 படிகள் உயரத்தில் அம்பாள் சந்நதியா?

    விசேஷம் தான். அம்பாள் எப்போதுமே ஒஸத்தி தான்.

    அம்பாளுக்குத்தான் எங்குமே பவர் அதிகம் என்பது தெரிந்த விஷயமே.

    சத்ரபதி சிவாஜிக்கு வாள் கொடுத்த பவானியும் இந்த அம்பாளே தானா?
    அருமையான புதிய் தகவல் [புதையல்].

    பக்த துக்காராம், சமர்த்த ராமதாஸர் கதைகளை ஹரிஜி அவர்கள் சொல்ல மெய்மறந்து நிறைய முறை கேட்டுள்ளேன். இராஜா சிவாஜிக்கு இந்த இரண்டு மஹான்கள் மீதும் அளவற்ற பக்தியுண்டு.


    தூளி தரிஸனம் .....

    தூளியில் தூங்கும் குழந்தையை அப்படியே எழுப்பி, குளிப்பாட்டாமலேயே கோயிலுக்குக் கூட்டிப்போவது போல ......

    நாமும் எந்தவித நியமும் இல்லாமல் அப்படியே தரிஸிக்கலாமோ .....

    அதனால் இந்தப்பெயர் ”தூளி தரிஸனம்” என்று ஏற்பட்டிருக்குமோ?

    படிக்கப்படிக்க பலவித புதுப்புதுச் செய்திகள் ... புதுப்புதுக்கருத்துக்கள் ... மனதில் தோன்றுகிறதே!

    தங்கள் பதிவுகள் எப்போதுமே பல தகவல்களை அக்ஷயமாக அள்ளி அள்ளித்தரும் அக்ஷய பாத்திரமே.

    தொடந்து தந்து கொண்டே இருங்கள், பதிவுகள் மட்டுமல்ல அதுபற்றிய தகவல்களும் தான்.

    vgk

    ReplyDelete
  14. கீழிருந்து 10 அவது படமாக ஸ்ரீசைலம் டாம் இப்போது தான் திறக்கப்பட்டது.
    அணையிலிருந்து நீர் கொட்டோ கொட்டெனக் கொட்டுகிறது.

    அணையாக இருப்பதால் இதுவரை அந்தப்படம் திறக்காமலேயே இருந்திருக்கும் போல உள்ளது.

    அணையையும், பாய்ந்து வரும் நீரையும் பார்த்ததும் மனதில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    ReplyDelete
  15. சிவன் இப்படி குழந்தையாகப் படுத்திருப்பதை இன்று தான் காண்கிறேன். இந்த அருள் தான் தங்கள் வலையைப் புரட்டவும் அருள் தந்ததோ!. எந்த விக்கினமும் இன்றி வலையுள் புகுந்தேன். உருட்டினேன். அருமைப் பதிவும், படங்களும். நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. Aha Arpudam Rajeswari.
    I enjoy everybit of your writings and pictures much.
    Thanks for sharing.
    viji

    ReplyDelete
  17. உங்களால் மாட்டும் இத்தனை தகவல்களையும் அழகிய படங்கலையும் தர முடிகிறது. உண்மையில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியான விஷயம் அம்மா

    ReplyDelete
  18. அருமையான பதிவு ! அழகான படங்கள் ! நன்றி சகோதரி !

    ReplyDelete
  19. 3435+10+1=3446 ;)))))

    ஒரே பதில் [ இருமுறை ] புதிய அர்த்தம் + புதுப்புது அர்த்தங்கள்.

    மிக்க நன்றி, நன்றி.

    ReplyDelete