Wednesday, March 27, 2013

ரங்கபஞ்சமி









வசந்த காலப் பண்டிகையான ரங்கபஞ்சமி..ஹோலிப் பண்டிகையாக குளிர் காலத்தின் இறுதியில் பங்குனி மாதத்தின் பெளர்ணமியான   முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது. 

அன்பைக் கொண்டாடும் காலமான வசந்த காலத்தில்  
ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

பிரபஞ்சத்தில்  தேஜோமயமான் ஒளியின்  திருவிழாவாக
ஹோலி திகழ்கிறது..


முழு நிலவிற்கு பிறகு ஐந்தாவது நாள் வருகின்ற 
ரங்கபஞ்சமி வண்ணங்களைக் கொண்டு பண்டிகை நிறைவடைகிறது ..

கண்ணபரமாத்மாவுடன்  தொடர்புடைய மதுரா, விருந்தாவன், நந்தகோன் மற்றும் பர்சனா நகரங்களில் ஹோலி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

ஹோலி நாளில் , வண்ணப் பொடிகளையும் , வண்ணம் கலந்த நீரையும் வீசி கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். 
பெரிய நெருப்புகளை மூட்டுவது  ஹோலிகா தகனம் - ஹோலிகாவை எரித்தல் - சோட்டி ஹோலி சிறிய ஹோலி -எனகிறார்கள்..

ஹிரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா பிரஹலாதனை நெருப்பில் போட முயன்ற போது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்ததன் நினைவாக நெருப்பு மூட்டப்படுகிறது..
ஹோலிகா எரிந்தாள், ஆனால் மஹா விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரஹலாதன், தனது அசைக்க முடியாத தெய்வபக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான். 

ஹோலிகா தகனம், ஆந்திர பிரதேசத்தில் 
காம தகனம் எனக் குறிப்பிடப்படுகின்றது
கண்ண்பரமாத்மா தனது தாயாரிடம் தான் கரிய நிறத்திலும் ராதா அழகான நிறத்துடனும் இருப்பதாக கூறியதால் கண்ணனின் அன்னை  ராதாவின் முகத்தில் நிறத்தைப் பூச முடிவு செய்தார். 


பார்வதிதேவி சிவ பெருமானை மணப்பதற்கு உதவும் பொருட்டு சிவபெருமானின் மீது காமன் தன் மலரம்புகளை எய்து தவத்தைக் கலைத்த போது  சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணைத் திறந்ததால் சக்தி வாய்ந்த அவரது பார்வையைத் தாங்க முடியாமல் காமனின் உடல் சாம்பலானது. 

காமனின் மனைவி ரதியின்  வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் அவரை உயிர்ப்பித்த நிகழ்வினை நினைவு கூறும் வகையிலேயே ஹோலி நெருப்பு  மூட்டி கொண்டாடப்படுகிறது.

ஹோலி பண்டிகையின் போது, வேறுபட்ட அலைகளைக் கொண்ட ஒளிக்கதிர்கள் பிரபஞ்சத்தில் பயணிப்பதனால் பல்வேறு வண்ணங்கள் தோன்றி சூழ்நிலையில் உள்ள மூலப் பொருட்களின் செயல்பாட்டிற்கு ஊட்டமும் முழுமையும் அளிக்கின்றன.

ஹோலி  நிறப்பொடிகளை ஒருவருக்கொருவர் தூவிக் கொள்ளுதல் பைக்காரிஸ்களில் நிறம் மற்றும் மணமுடைய நீரினை நிரப்பி பாய்ச்சுதல் போன்ற சடங்குகளால் கோலகலமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது ..

 உலகம் முழுதும் பல மதங்களிலும் தீய சக்திகளின் அழிவை 
ஹோலிகா தகனம் போன்று குறிப்பால் உணர்த்துகிறார்கள்.

ஹோலி தினம் நேபாளத்தில் தேசிய விடுமுறை தினங்களில் ஒன்றாகும்.

கண்ணபிரான்  மாடு மேய்க்கும் சிறுவர்களுடன் வெண்ணெய் திருடியதையும் மற்ற 'கோபியர்கள்' அதை தடுக்க முயன்றதையும் நினைவு கூறும் வகையில்  குஜராத்தில் உள்ள அஹமதாபாத்தில் தெருவில் உயரத்தில் கட்டி வைக்கப் பட்டிருக்கும் வெண்ணெய் நிரம்பிய பானையை ஆண்கள் மனித பிரமிடுகள் மூலமாக அடைந்து அதை உடைக்க முற்படும் நேரத்தில் பெண்கள் நிறம் கலந்த நீரை அவர்கள் மீது தெளித்து அதைத் தடுக்க முயற்சிப்பார்கள். 

 கண்ணபரமாத்மா  தங்கள் வீடுகளுக்கு வெண்ணெய் திருடுவதற்காக வரலாம் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நிறங்களால் நனைக்கப்பட்ட ஆண்கள் பெரிய ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கேலி செய்யப்படுவார்கள். 
இறுதியாக பனையை உடைப்பவரே அந்த சமூகத்தில் 
அந்த ஆண்டின் ஹோலி ராஜாவாக முடிசூட்டப்படுவார்.

தீமை அழிந்து நன்மை வெற்றியடைந்ததின் அறிகுறியான நெருப்பு மூட்டும் நிகழ்வை மக்கள் பாட்டுபாடி நடனமாடிக் கொண்டாடுகிறார்கள். 

குஜராத்தைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் ஹோலியை மிகுந்த உற்ச்சாகத்துடனும் நெருப்பைச் சுற்றி நடனமாடியும் கொண்டாடுகிறார்கள்.
 பூரன் போளி   அக்னிக் கடவுளுக்குப் படைக்கப்படுகிறது ... 

மருத்துவ குணங்களைக் கொண்டிரும். பலாஷ மலர்களைக் கொதிக்கவைத்து தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்டு வண்ண நீர் தயாரிக்கப்பட்டது  
மாறி காலத்தின் கோலத்தில் துரதிர்ஷ்டவசமாக  வியாபாரத்திற்காக செயற்கை வண்ணங்களை அதிகமாகப் பயன்படுத்தி விஷமாக்கிவிட்டது -எண்ணிலடங்கா தொல்லைகளை ஏற்படுத்துவது வருந்தத்தகது ...
ஹோலியைக் கொண்டாடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வண்ணங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த வசந்தம்-அரும்பும் மரங்கள் அழிந்துவிட்டதால், அதற்குப் பதிலாக ரசாயன ரீதியாக தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் சாயங்களே இந்தியாவின் பெரும்பாலான நகர்புறங்களிலும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

சிறுநீரக செயலிழப்பை உண்டாக்கக்கூடிய காரீய ஆக்சைடு தோலழற்சியைநிறங்கள் ஆஸ்துமா, தோல் நோய்கள் மற்றும் தற்காலிக குருட்டுத்தன்மையை விளைவிக்கும் நச்சு நிறைந்து  கொண்டாட்டங்கள் திண்டாட்டதை ஏற்படுத்திவருவது மாறவேண்டும் ....
பாரம்பரிய ஹோலிகா தகனம் கொண்டாட்டத்திற்காக உண்டாக்கும் நெருப்பே, ஹோலி கொண்டாட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடிய பிரச்சனையாகும் நிகழ்வு வன அழிப்புக்கு வழிவகுப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது.



12 comments:

  1. அறியாத பல தகவல்களுடன் படங்கள் அருமை...

    நச்சுக்களை தவிர்க்க வேண்டுவதும் முக்கியம்...

    ReplyDelete
  2. ’ரங்க பஞ்சமி’ என புதுத்தலைப்பாகக் கொடுத்து அசத்தியுள்ளது அழகு.

    கலர் கலரான வண்ணம் மிக்க வெகு அழகான பதிவாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  3. முதல் படம் A1 கொள்ளை அழகு.;)

    கடைசிக்கு முந்தியபடம் நல்ல கவரேஜ்

    >>>>>

    ReplyDelete
  4. பிரகலாதனின் அத்தை “ஹோலிகா” என்ற அரக்கி என்றும், அவள் செய்த கொடுமைகளும், அவளுக்குக் கடைசியில் நேர்ந்த கதியும் நான் இன்று தான் தங்கள் மூலம் முதன்முதலாக அறிகிறேன்.

    புராணத்தகவல்கள் அனைத்தும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். ஆந்திரா, குஜராத் போன்ற பகுதிகளில் இதை வித்யாசமாகக் கொண்டாடுவதை மிகச்சிறப்பாக உங்களுக்கே உரிய பாணியில் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  5. ஹோலித்திருநளில் ஏனோ ஜாலியான மன நிலையில் நான் இல்லை. ;(

    இயற்கையான அன்பு என்னும் தாவரக்கலர்களைச் சேர்க்காமல் செயற்கையான வண்ணப்பொடிகளை உபயோகித்து வருவதால் இருக்கக்கூடும். ;(

    கொண்டாட்டங்கள் திண்டாட்டங்களாக மாறிவருவதாக எழுதியுள்ளீர்கள். அது தான் உண்மையில் நடக்கிறது. மிகவும் வருந்தத்தக்க விஷயமே.

    உண்மையான உள்ளன்பும், வெளிப்படையான கருத்துப்பகிர்வுகளும் குறைந்து வருகிறது. காணாமலே போய் விட்டது என்று சொல்லலாம்.

    எல்லாமே கலர் கலரான போலிச் சாயங்கள். ;( தேவையில்லாத இவைகளைத் தகர்த்தெறிந்து தடை செய்துவிடலாம் என்பது என் கருத்து.

    >>>>>

    ReplyDelete
  6. சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் சொல்லி, இதனால் உடலுக்கு ஏற்படும் தீங்குகளையும் மருத்துவ ரீதியாகச் சொல்லியுள்ளது, நல்லதொரு விழிப்புணர்வு தரும் ஆக்கமாக அமைந்துள்ளது.

    சிறப்பான படைப்புக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ooooo

    ReplyDelete
  7. ஹோலிப் பண்ண்டிகையின் சிறப்பைக் கூறிய சமயம் விழிப்புணர்வுச் செய்தியையும் குற்ப்பிட்டுச் சொன்னது மிகவும் நல்லதே.

    நல்ல பதிவு. அழகிய வண்ணப்படங்கள்.
    வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  8. ஹோலி என்கிற வசந்த கால திருவிழாவான ரங்க பஞ்சமி பற்றிய விரிவான தகவல்களைத் தந்தமைக்கு நன்றி. ஒரு சிறு திருத்தம். கண்ண பரமாத்மா சிறிய வயதில் விளையாடிய ஊர் என்பதால் நந்தன் கிராமம் என்ற பொருளில் நந்த்காவ்ம் (Nandgaon) என் அழைக்கிறார்கள். அது நந்தகோன் அல்ல.
    அழகான புகைப்படங்களைத் தந்தமைக்கும் நன்றி.

    ReplyDelete
  9. வனத்தை அழிக்காமல் விழா கொண்டாட வேண்டும் அது தான் நல்லது.
    ஹோலிப்பண்டிகை சிறப்பு படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  10. ஹோலிப் பண்டிகைப் படங்களுடன் தெரியாத தகவல்கள் படித்தேன்.

    ReplyDelete
  11. படங்களுடன் ஹோலி பற்றிய தகவல் களும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி

    ReplyDelete
  12. வணக்கம்

    அருமையான விளக்கம் அறியாத பல கருத்துக்கள் பதிவுக்கு ஏற்றால் போல் படங்களும் அருமையான படைப்பு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete