



டால்பின்கள் , திமிங்கலங்களை போல இல்லாமல் அரிய கடல்வாழ் பாலூட்டியான வேகமாக நீந்தத் தெரியாதவை..
கடல் பசுக்கள் மனிதர்களுக்கு அரிதாகத்தான் காணமுடிகின்றன..!

டால்பின்களுக்கு இருப்பதுபோல் கடல் பசுக்களுக்கு
முதுகு துடுப்புகள் இல்லை.
கடலின் மேற்பரப்பில் டால்பின்களை போல் டைவ் அடிப்பதில்லை.
மூக்கை மட்டும் வெளியே நீட்டி காற்றை சுவாசிக்கின்றன.
எனவே எளிதில் மீனவர்களின் கண்களுக்கு கூட கடல் பசுக்கள் தட்டுப்படுவதில்லை.

குணத்திலும் டால்பின்களை விட மிகவும் சாதுவான தன்மை கொண்டவை. இவற்றின் உடல் பழுப்பு வண்ணத்தில்,
சுமார் மூன்று மீட்டர் நீளம் வரை இருக்கும்.

உலகின் சுமார் 40-க்கும் மேற்பட்ட வெப்பமண்டல நாடுகளில் கடல் பசுக்கள் வாழ்வதாக ஆராய்ச்சி முலம் தெரியவந்துள்ளது.

கடலில் இருக்கும் பாலூட்டி வகைகளிலேயே தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய முழு வெஜிடேரியன் கடல் பசுக்கள் தான்.

நிலத்தில்வாழும் மாடுகள் மேய்வது போல், கடல் பசுக்கள்
கடல் அடியில் வளரும் புல்வகைகளை மேய்ந்து கொண்டிருக்கும்.

கடல் புற்களின் வேர்களில் அதிக அளவு ஊட்டச் சத்துக்கள் இருப்பதால், அவற்றை வேருடன் பிடுங்கி அப்படியே சாப்பிடுவதை கடல் பசுக்கள் விரும்புகின்றன,,!

தாய்லாந்தில் நகரின் முக்கியமான பகுதியில், அரசியல் தலைவர்களுக்கு சிலை வைப்பது போல கடல்பசுக்களுக்கு சிலை வைக்கபட்டுள்ளது.

தாய்லாந்தில் நகரின் நினைவாக கடல்பசுக்களின் சிறிய பொம்மைகளையே விதவிதமாகக்கிடைக்கின்றன..!.
தாய்லாந்து மக்களிடம் கடல் பசுக்களை பற்றிய விழிப்புணர்வும்,
அவற்றை பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைய இருக்கிறது.

மனிதர்களை போலவே நீண்ட ஆயுள் கொண்டவை..
கடல் பசுக்களின் பற்களில் உள்ள வளையங்களைக் கொண்டு அவற்றின் வயதைக் கணிக்க முடியும்.
சுற்றுசூழல் மாசுபாடு, வேட்டையாடுதல் போன்ற மனித நடவடிக்கைகளால் வேகமாக அழிந்து வரும் கடல் பசுக்கள், அதற்கு ஈடான வேகத்தில் இனபெருக்கம் செய்யாத இயல்பான குணமே இவற்றின் அழிவுக்கும் காரணமாக அமைந்து விட்டது.

அசைவ பிரியர்களுக்காக பல நாடுகளில் பல காலமாகவே வேட்டையாடபட்டு வருகின் றன.
நம் பகுதி மீனவர்கள் பொதுவாக கடல் பசுக்களை வேட்டையாடச் செல்வதில்லை.
ஆனால் மீன்களுக்காக கடலில் போடபடும் வலைகளில் சில சமயம் கடல் பசுக்கள் வந்து சிக்கி கொள்ளும்போது பிடிக்கப்படுகின்றன.






