Monday, July 2, 2012

அபிஷேகப் பிரியரின் ஆனந்த கூத்து !




"ஆனந்தம் ஆடரங்கு, ஆனந்தம் அகில சராசரம், ஆனந்தம் ஆனந்த கூத்து'' என இறைவன் ஆடிய தாண்டவத்தை திருமூலர் போற்றுகின்றார்.

ஆடவல்லானின் திருத்தாண்டவத்தைக்காண கண் கோடி வேண்டும். பேரழகியாம் அன்னையும் பேரழகனாம் அப்பனும் குழைந்தெடுத்த திருவுருவாய்த் திகழும் நடராசர் உருவத்தை முழுமையாக அனுபவிக்க கண்கள் கோடி வேண்டுமே !!

தாண்டவத் திருவுருவத்துக்கு ஈடு எதனையும் ஒப்பிட்டு பேசமுடியாது என்பது உண்மை.

நமக்கு நல்வாழ்வு அளிக்கும் இறைவனை திருக்கோயில்களுக்கு சென்று . இளநீர், தேன், பால் போன்ற பொருட்களைக் கொண்டு உள்ளம் குளிர அபிஷேகம் செய்து மகிழ்ச்சி அடைகிறோம்.

 நதியோ, அருவியோ, ஓடையோ அனைத்தும் இறுதியாகக் கடலில் கலப்பது போன்று அனைத்து உயிர்களும் பரமனை அணுகுவதே அபிஷேக வழிபாட்டின் தத்துவம் ஆகும். 


திருமால் "அலங்காரப் பிரியர்' என்றால் சிவபெருமான் 
"அபிஷேகப் பிரியர்' எனச் சிறப்பித்துக் கூறுவர். 


சிவபெருமானுக்கு என்னென்ன பொருட்களால் "அபிஷேகம்' செய்ய வேண்டும் என்பதை "அண்ணாமலைச் சதகம்' என்ற நூலில் காணப்படும் பாடல் ஒன்று எடுத்துக் கூறுகிறது.

 ""ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்''
 ""நெய்யினோடு பால் இளநீர் ஆடினான் காண்''
 ""நெய்யும் பாலும் தயிருங் கொண்டு நித்தல் பூசனை''
 - என்றெல்லாம் சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகங்களை திருமுறைப் பாடல்கள் போற்றிக் கூறுகின்றன.



உலகில் காணப்படும் அனைத்தும் "கானல் நீர்' என்று தெளியும் தத்துவ ஞானமே திருமஞ்சனம் என்பதை காசி காண்டம் செய்யுள் கூறுகிறது. 

நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் "ஆனித் திருமஞ்சனம்' மிகவும் சிறப்பானது. 

இந்நாளில் சிவாலயங்களுக்கு சென்று "ஆனித் திருமஞ்சனம்' கண்டு வழிபட்டு வாழ்வில் அனைத்து நலன்களையும் அடைவோம்.




9 comments:

  1. எட்டாம் நாளும் நடராஜா!

    உன்னைக்காண

    ஏங்கித்தவித்தேன் நடராஜா!!



    சிறந்த பதிவே சிவராஜா!

    தினமும்

    சிறப்பாய் தருகிறார் மணிராஜா!!

    ReplyDelete
  2. ஆனித்திருமஞ்சனம் கண்டு களித்தோம் நன்றி

    ReplyDelete
  3. பக்திமணம் கமழும் புகைப்படங்கள்!

    ReplyDelete
  4. அபிஷேக பிரியனின் திருஉருவ படங்கள் அனைத்தும் மிக அருமை.

    ReplyDelete
  5. ஆனி திருமஞ்சனம் சிதம்பரத்தில் நிறைய தடவை கண்டு மகிழ்ந்து இருக்கிறேன்.

    படங்கள் அழகு.

    ReplyDelete
  6. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete