Sunday, March 31, 2013

வசந்தம் வீசும் ஈஸ்டர் திருநாள்










அன்பென்ற நதி மீது படகாகு அறியாத பேரின்ப கரை சேர்க்கும்
அன்பென்ற வில்லின் முன் இலக்காகுஅகம் எங்கும் படிந்துள்ள குறை நீக்கும்
அன்புக்கு ஈர்க்கின்ற பலம் உண்டு இழந்தாலும் மகிழ்கின்ற குணம் உண்டு
தன் துன்பம் பிறர் வாழும் உரமாகும் அன்புள்ளம் இறை தந்த வரமாகும்





அன்பையும், அருளையும் போதித்த இயேசு பெருமான் பகைவர் தமக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த இரக்கத்துடனும், கருணையுடனும் தொண்டுகள் புரிந்தார்.

இன்னல் நீங்கி இன்பம் கண்ட நன்னாளாகக் கிறிஸ்தவ  மக்கள் கொண்டாடும், ஈஸ்டர் திருநாள் ஞாயிற்றுக்கிழமை மிகுந்த
மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது.


நியாமும், சத்தியமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசு உயிர்தெழுதல் நிகழ்வு அமைந்துள்ளது.
Jesus Christ Resurrection clip art(clipart) gallery
உயிர்த்தெழுதல் என்பது மனித இனத்துக்குக் கிடைத்த கடவுளின் அன்பளிப்பு என்று கிறித்துவர்கள் நம்புகிறார்கள். 

ஈஸ்டர் கொண்டாட்டங்கள் . மனிதருள் உறைந்திருக்கும் மரணத்தை வெல்லும் சக்தியை நினைவுபடுத்தி வாழ்வைப் புதுப்பிக்கவும் ரணமாகிவரும் புவியின் புண்களை ஆற்றவும் அளிக்கப்படும் அறைகூவல்.

சிலுவையில் அறையப்பட்டு மரணித்த ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த வரவிற்காக நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள்.

அகத்தின் மரணத்தை வென்று நிஜ வாழ்வின் தாத்பர்யத்தை விளக்கும் உயிர்த்தெழுதல் அது.

அஞ்ஞானத்திலிருந்து விடுதலை பெற்று ஆன்மீக சுயத்தை உணர்த்திய சாகாவரம் அது.
ஈஸ்டர் மாதத்தில் விரதம் இருக்கும் கிருஸ்துவ மக்கள் தாங்கள் விரதகாலத்தில் செலவழிக்காமல் இருந்த பணத்தை ஏழைகளுக்கு அளிக்கின்றனர்.

இதனால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகை கொண்டாட முடிகிறது.
இந்த நன்னாளில் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இயேசு உயிர்தெழுத்தார் என்று மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கின்றனர்.
இயேசுபிரான் கடவுளைப் பற்றிய புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தினார். பாவங்களுக்குத் துணைபோகக் கூடாது என்பதைத் தனது வாழ்முறையால் உணர்த்தினார்.

தனது மக்களாலேயே மரண தண்டனை வழங்கப் பெற்று, வேதத்தின் கூற்றுப்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

இந்த நன்னாள் ஈஸ்டர் எனப் கொண்டாடப்படுகிறது.

இயோஸ்டன் என்ற வசந்த கால தேவதையின் விலங்கு முயல். வசந்த காலத்தில் மீண்டும் பிறப்பதை முட்டையால் அடையாளம் காட்டப்படுகிறது.  புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. 



வசந்த காலத்தில் தான்,  நிறைய பறவைகள் முட்டையிட்டு இன விருத்தியில் இருக்கும் ..


முட்டை அடைகாக்கப்பட்டு அதிலிருந்து புதிய உயிர் வெளிவருவது புதிய வாழ்வின் குறியீடாக கருதப்படுகிறது.

மிகவும் பாரம்பரியமான கிறிஸ்தவர்களால், ஈஸ்டர் முட்டை என்பது, விரதத்தை முடிப்பதன் கொண்டாட்டத்தில் மட்டுமன்றி, இயேசு மீண்டும் பிறந்ததற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது.

பாரம்பரியமாக, ஈஸ்டர் முட்டைகள் சிவப்பு நிறம் பூசப்பட்டு வருகிறது, அது இயேசு சிலுவையில் சிந்திய ரத்தத்தைக் குறிக்கிறது,

அதனுடைய கடின ஓடு கிறிஸ்துவின் மூடப்பட்ட கல்லறையையும், அதனை உடைப்பது, மரணத்திலிருந்து அவர் உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது.

முட்டை, கல்லறையின் குறியீடாகவும், அதனை உடைப்பதன் மூலம் வாழ்க்கை புதுப்பிக்கப்படுவது அல்லது மீட்டெடுக்கப்படுவது சுட்டிக்காட்டப்படுகிறது.

சிலுவையில் அறையப்பட்டு தியாகம் செய்ததன் மூலமாக உலகம் மற்றும் மனித இனத்தின் மீட்புக்காக இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தைச் சிவப்பு நிறம் குறிக்கிறது.

முட்டை மறுபிறப்பின் குறியீடாகும்
செயலற்று முடங்கியுள்ள அதில் புதிய வாழ்வு வைக்கப்பட்டிருக்கிறது.

 சாக்லேட் போன்ற உண்ணக்கூடிய பொருட்களால் ஈஸ்டர் முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த முட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு ஈஸ்டர் தினத்தன்று குழந்தைகள் கண்டறியுமாறு வைக்கப்படுகிறது.

அதிக முட்டைகளை கண்டறியும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

தொடர்புடைய இடுகை 
ஈஸ்டர் திருநாள் ..http://jaghamani.blogspot.com/2012/04/blog-post_07.html






16 comments:

  1. படைப்பாளிக்கு மதமும் இனமும் ஒன்றுதான் என்பதை நிருபித்துவிடீர்கள்

    ReplyDelete


  2. உங்களது ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பதிவு படித்துக்கொண்டு இருக்கும்பொழுதே
    எனது எதிர் வீட்டு நண்பர் திரு ப்ரேம் குமார் அவர்கள் வீட்டிலிருந்து சுவையான‌
    கேக், எனக்கு பிடித்த வடை, எல்லாமே வந்திருந்தது.

    யேசு பிரான் கருணையே கருணை.

    தாங்க் யூ ஃபார் ஆல் யுவர் லவ் அன்ட் அஃபெக்ஷன் ப்ரேம் குமார் அன்ட் ஃபாமிலி.
    அஃப் கோர்ஸ் ஒன்டர்ஃபுல் அன்ட் வெல் இன்ஃபார்ம்ட் போஸ்டிங் பை ராஜேஸ்வரி.

    கவியாழி கண்ணதாசன் சொல்றாரு
    படைப்பாளிக்கு மதமும் இனமும் ஒன்றே அப்படின்னு.

    இந்த தாத்தா சொல்றாரு.

    மனித நேயம் உள்ளவன் எல்லாருக்குமே மதமும் இனமும் ஒன்றே தாங்க..

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in
    இங்கே வந்து ஒரு காமெடி கதை கேளுங்களேன்.

    ReplyDelete
  3. அழகான படைப்பு.

    தொடர்ந்து மூன்றாம் நாளாக ஒரே விழாவினைப்பற்றி அற்புதமான விளக்கங்கள்.

    >>>>>

    ReplyDelete
  4. படங்கள் எல்லாமே ரஸிக்கும் படியாக உள்ள்ன.

    கடைசிபடம் மிக நன்றாக இருப்பினும் ஏதோ ஓர் மனவேதனையை ஏற்படுத்துகிறது.

    பாவம் அந்தப்பூனையிடம் அடி வாங்கும் முயல் குட்டி. . ;(

    >>>>>>

    ReplyDelete
  5. இந்தக்கடைசி படம் போலவே ஏற்கனவே ஒரு படம் தங்களின் 28.12.2011 தேதியிட்ட பதிவில் பார்த்த ஞாபகம் இருக்கிறது. .

    மீண்டும் எனக்குப் பார்க்க சகிக்காத பதிவு அது.

    அதில் பாவம் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையிடம் அடிவாங்கும்.

    அதனால் அதை எனக்குப் பார்க்கப்பிடிப்பது இல்லை.

    இதில் ஒரு பூனையிடம் ஒரு முயல்குட்டி அடிவாங்குகிறது.

    ஒருசிலருக்கு எப்போதும் அடிப்பதே தொழிலாக உள்ளது.

    ஒருசிலருக்கும் எப்போதும் பணிந்துபோய் அடி வாங்குவதே தலைவிதியாக உள்ளது.

    எளியோரின் வலி வலியோருக்குத் தெரியாது தான்.

    >>>>>>

    ReplyDelete
  6. இன்றைய பதிவுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
  7. ஈஸ்டர் பகிர்வும் படங்களும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  8. ஈஸ்டரைப் பற்றி அறிந்துக்கொண்டேன். முட்டை ஏன் என்ற கேள்விக்கு இன்று தான் பதில் கிடைத்தது. வை. கோபாலகிருஷ்ணன் சொன்னது போல அடி வாங்கும் முயல்குட்டியின் படத்தைப் பார்த்து மனம் வருந்தினேன்.

    ReplyDelete
  9. அட்டகாசமான படங்கள்... வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  10. ஈஸ்ட்டர் திருநாளை பற்றி விவரங்கள் கொடுத்தமைக்கு நன்றி கண்கவரும் படங்கள்

    ReplyDelete
  11. அழகிய படைப்பிற்கும் பகிர்விற்கும் நன்றி! அன்னத்தின் மொழி கேட்க வாருங்கள் என் வலைப்பூ பக்கம்!நன்றி!

    ReplyDelete
  12. அருமையான பதிவு. கடைசி படம் ரசனையாய் இருந்தாலும் பாவமாகவும் இருக்கிறது!

    ReplyDelete
  13. என் பள்ளிப் பருவத்தில், ஈஸ்டர் திருநாள் மிக்க மகிழ்வான ஒன்று. பள்ளியில் நிறைய போட்டிகள் நடத்தி பரிசு கொடுப்பார்கள்.
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  14. அழகான படங்களுடன் கூடிய அருமையான பதிவு.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. Easter eggs பற்றி இன்றுதான் தெரிந்து கொண்டேன். அழகான பதிவிற்கும் படங்களுக்கும் மிக்க நன்றி அம்மா!

    ReplyDelete
  16. பகிர்வும் படங்களும் அருமை!!

    ReplyDelete