Monday, September 2, 2013

தூண்டுகை விநாயகர்




ஸதா பால ரூபாபி விக்னாத்ரி ஹந்த்ரீ
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா! 
விதீந்த்ராதிகம் ருக்யா கணேஸாபிதானா
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாணமூர்த்தி!!

குழந்தை வடிவமானவரே! 
தடைகளாகிய மலையை பிளக்கும் வலிமை கொண்டவரே! 
பரமேஸ்வரன் என்னும் சிங்கத்தின் அபிமானத்திற்குரியவரே! 
பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்களால் போற்றப்படுபவரே! 
கணங்களின் அதிபதியான விநாயகரே! மங்களமூர்த்தியே! அருள் புரிவீராக.

ஆதி சங்கரர் அருளிய கணேச ஸ்தோத்திரம். புஜங்க' சந்தத்தில் உள்ளது. 
பாம்பு நெளிந்து செல்லும் நடை. 


திருச்செந்தூரில் கடற்கரைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது தூண்டுகை விநாயகர் கோயில். 

தனது தம்பியான முருகப் பெருமானின் இடத்தை பக்தர்களுக்குத் தூண்டிக் காண்பிப்பதால், விநாயகருக்கு தூண்டுகை விநாயகர் எனப்பெயர் ஏற்பட்டதாம். 

இவரை முதலில் வணங்கிவிட்டே இளையவரை வணங்குதல் வேண்டும்.

9 நிலைகளும், 137 அடி உயரமும் கொண்ட திருச்செந்தூர் ராஜகோபுரம் கட்டும் பணியை மேற்கொண்டவர் தேசிகமூர்த்தி சுவாமிகள். 

ஒருநாள், திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகள் என்னும் ஒடுக்கத்தம்பிரான் ஸ்வாமிகளின் கனவில் தோன்றி, திருப்பணி செய்ய  முருகக்கடவுள். அழைத்ததன்படி, தேசிகமூர்த்தி சுவாமிகளும் கோயிலின் திருப்பணி மண்டபத்தில் தங்கியிருந்து, ராஜகோபுரத்தைக் கட்டியதாகக் கூறுகிறது தல வரலாறு. 

இந்தக் கோபுரம் கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்குக் கூலியாக விபூதியைப் பொட்டலமாக மடித்துக் கொடுத்தார் சுவாமிகள். இங்குள்ள தூண்டுகை விநாயகர் கோயில் அருகே விபூதி பொட்டலத்தை அவர்கள் பிரித்துப் பார்த்தபோது, அது அவர்களுக்கு ஏற்ற கூலிப் பணமாக மாறியதாக வரலாறு. 

 ராஜகோபுரம் கட்டும் பணிக்கு வள்ளல் சீதக்காதி ஒரு மூட்டை உப்பு கொடுக்க, அது தங்கக்காசுகளாக மாறியதாகவும் கூறுவர். 

கிழக்கில் இருப்பதற்கு மாறாக மேற்கில் இருக்கும் காரணத்தால் எப்போதும் மூடியே கிடக்கும் இந்தக் கோபுரம், கந்தசஷ்டி விழாவில் இடம்பெறும் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் அன்று நள்ளிரவில் ஒருநாள் மட்டுமே திறக்கப்படும்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு வருவது வழக்கமாகும். 

அதன் பிறகு பக்தர்கள் அருகிலுள்ள நாழிக்கிணற்றுத் தண்ணீரிலும் நீராடுகிறார்கள். 

கடலோரத்தில் இருக்கும் நாழிக் கிணற்றுத் தண்ணீர் மட்டும் உப்பு சுவையில்லாமல் குடிப்பதற்கேற்ற சுவையான நீராக இருப்பது அதிசயமாகும். 

கடலில் குளித்து விட்டு இந்த நாழிக்கிணற்றில் குளித்தால் தீராத வியாதியும் குணமடையும் என்று  நம்புகிறார்கள். 

ஏழு அடி ஆழமுடைய  நாழிக் கிணற்றில் எப்போதும் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கிறது.

சூரபத்மனோடு போரிட சுப்ரமணியரோடு வந்த படைவீரர்கள் தாகம் தணிப்பதற்காக  கடலோரத்தில் முருகப்பெருமான் இந்த நாழிக் கிணற்றைத் தோற்றுவித்ததால்தான் இந்தத் தண்ணீர் சுவையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது என்று வரலாறு சொல்கிறது. 

 இந்தக் கிணற்றை " ஸ்கந்த புஷ்கரணி" என்று அழைக்கிறார்கள்.

திருச்செந்தூர் கோயிலுக்குள்ளே நுழைந்தவுடன் தூண்டுகை விநாயகர் சன்னதியைப் பார்க்கலாம். 

அடுத்து அழகிய கலைச்சிற்பங்களைக் கொண்ட ஷண்முக மண்டபம் கோயிலுக்கு தனிச்சிறப்பைக் கொடுக்கிறது.  120 அடி நீளத்தையும் 86அடி அகலத்தையும் கொண்டது. 

தொலைவிலிருந்து வரும் பக்தர்கள், 124 தூண்களைக் கொண்ட ஷண்முக மண்டபத்தில் தங்கி விட்டுச் செல்கிறார்கள். 

தீராத வியாதி குணமடைய  திருச்செந்தூரை நம்பி நாடி வருகிறார்கள். 









11 comments:

  1. விநாயக சதுர்த்தசி பதிவு போல் தெரிகிறது.
    திருச்செந்தூர் போயிருக்கிறேன். ஆனால் விநாயகர் கோவில் போனதில்லை.
    பதிவைப் அப்டித்த பிறகு போக வேண்டும் என்ற வா எழுகிறது.
    நன்றி

    ReplyDelete
  2. அனைத்தும் சிறப்பு... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete
  3. 'இவரை முதலில் வணங்கிவிட்டே இளையவரை வணங்குதல் வேண்டும் ' அப்ப இந்தப் பதிவை முதலில் போட்டிருக்கணுமேங்க. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன.

    ReplyDelete
  4. நாழிக்கிணறு புதிய தகவல்.. யானைப்படம் மிகவும் அழகு...

    ReplyDelete
  5. சமீபத்தில்தான் திருச்செந்தூர் முருகனை தரிசித்து வந்தோம், தங்கள் பதிவுகள் அந்த இனிய நினிவுகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது.மிக்க நன்றி

    ReplyDelete
  6. அறியாத பல தகவல்கள்! அருமையான படங்கள்!

    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  7. மகிழ்வான பல தகவல்களும் சுமந்து வந்த சிறப்பான படைப்பு .
    வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  8. நம்முள் நல்ல எண்ணங்களை - உற்சாகத்தை, ஊக்கத்தைத் தூண்டும் கணபதி!.. காணக் காணத் திகட்டாதது இவருடைய திருக்கோலம்.. நல்ல அருமையான பதிவு!.. கணேச சரணம் !..

    ReplyDelete
  9. படங்கள் மிக அழகு அம்மா...எங்கள் ஊரின் மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி!!

    ReplyDelete
  10. யானை காலில் கொலுசு!!!!! கடைசி படத்தில் எவ்வளவு ஆபரணங்கள்!!!!!!! கொள்ளை அழகு!!!!!!! நன்றி அம்மா

    ReplyDelete
  11. தூண்டுகை விநாயகருக்கு என் வந்தனங்கள்.

    செழிப்பான படங்களுடன் மிகச்சிறப்பான பதிவு.

    சந்தோஷம். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete