Tuesday, October 22, 2013

குதூகலம் தரும் ஸ்ரீ கேதார கௌரி பூஜை



ஓம் ஸ்ரீம் க்லீம் ஐம்ஹ்ரீம் நமோ பகவதி
ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோக வசங்கரி,
தேவி ஸௌபாக்ய ஜனனி, ஸ்ரீம் ஹ்ரீம்
ஸம்பத் கௌரி தேவி, மம ஸர்வ ஸம்பத்ப்ரதம்
தேஹி குருகுரு ஸ்வாஹா

 -- ஸ்ரீ ஸ்வர்ண கௌரி மூலமந்திரம்

தீபாவளி அன்று விரதம் முடித்து நோன்பு எடுப்பது   முக்கிய வழிபாடாகும். 

சிவனுக்குரிய அஷ்ட மகா விரதங்களில் கேதார கௌரி விரதம் மிகவும் முக்கியமானதாகும். 
சக்தி ரூபமான பார்வதி தேவி சிவனை நினைத்து கடும் தவம் புரிந்து
சிவனில் ஐக்கியமாகி அர்த்தநாரியாக பாதி உடலை பெற்ற விரதம்.
கேதார கௌரி விரதத்தை புரட்டாசி மாதம் வளர்பிறை  அஷ்டமி
தினத்தன்று ஆரம்பிக்க வேண்டும்.

முதலில் பூரண பொற் கும்ப கலசம் வைத்து சிவபெருமானை
ஆவாஹனம் செய்ய வேண்டும்.

சரியாக ஐப்பசி மாத அமாவாசையில்  21 நாட்கள் விரதம் இருந்து
தீபாவளி அமாவாசையன்று விரதத்தை பூர்த்தி செய்வார்கள். - 

நோன்பு நிறைவேறும் தீபாவளி நாளில் கும்பம் வைத்து காமாட்சி அம்மன் விளக்கேற்றி பழவகைகள், பூக்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு இனிப்பு வகைகள் வைத்து படைப்பார்கள். 
அப்பமும், அதிரசமும்தான் இதில் முக்கிய இனிப்பு வகைகள் ஆகும்.

21 அப்பம், 21 அதிரசம் வைத்து அதனுடன் நோன்பு கயிற்றையும் வைப்பார்கள். பூஜை முடிந்த பிறகு, வந்திருப்பவர்களுக்கு பிரசாதமும், நோன்புக் கயிறும் கொடுத்து உபசரிப்பார்கள்.
[nagalingapoo.jpg]
சிவபெருமானுக்கு கேதாரேசுவரர் என்று திருநாமம் உண்டு. 
கேதாரம் என்றால் வயல். இமயமலை என்னும் வயலில் சுயம்புலிங்கமாகத் தோன்றினார் ஈஸ்வரன். 

கேதாரேசுவரரான சிவபெருமானைக் குறித்து, பிராட்டியார் விரதம் அனுஷ்டித்ததால் கேதாத கவுரி விரதம் என்று பெயர் ஏற்பட்டது.
சிவனும் சக்தியும் ஒன்றென்ற தத்துவத்தை உலகிற்கு 
உணர்த்தும் ஒப்பற்ற விரதம்  கேதார கௌரி விரதம். 
இருபத்தோரு இழையையுடைய நூலை ஒன்றாக
முறுக்கிக் கொள்ள வேண்டும்.

தினமும் பூரண கும்ப பூஜையின் போது நூலில்
முடிச்சு ஒன்று போட வேண்டும்.

இவ்வாறு இருபத்தோரு நாள் பூஜை புரிந்து
இருபத்தோரு முடிச்சுகளைப் போட வேண்டும்.

இருபத்தோராவது நாள் தீபாவளி வரும். அன்றைய தினம் இருபத்தோராவது முடி போட்டு, நூலை காப்பாகக் கட்டி, விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
கலசத்தைப் பூஜிப்பது போல அம்மியையும், குழவியையும் அலங்கரித்து, அம்மி மீது குழவியை நிற்கும்படி செய்து ஆவுடை மீது லிங்கம் இருப்பது போல காட்சி தரும் சிவலிங்க மூர்த்தியை நிறுவ வேண்டும்.



அதன் மீது கேதாரீஸ்வரரை ஆவாஹனம் செய்து பூஜையை
பூர்த்தி செய்ய வேண்டும்.

இருபத்தோரு நாட்கள் விரதத்தை அனுஷ்டிக்க இயலாதவர்கள்
இறுதி நாளன்று மட்டும் விரதத்தை மேற்கொள்ளலாம் ..!
இருபத்தோரு பழங்கள் - பட்சணங்கள் செய்து  நிவேதித்து, வில்வத்தால் அர்ச்சித்து, தூப தீபங்களால் ஆராதித்து இருபத்தோரு பேருக்கு அமுதமளித்து இந்த விரதத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். 

ஸ்ரீ கேதார கௌரி பூஜையின் பலனாக  தம்பதியர் ஒற்றுமை, குடும்பத்தில் குதூகலம், தீர்க்க சுமங்கலி பாக்யம், சற்புத்திர யோகம் உண்டு என்பது ஐதீகம். 
ஸ்ரீ கைலாயத்தில்  சிவ பெருமானும், கற்பகக் கொடியாய் பார்வதி தேவியும் வீற்றிருந்தபோது பிருங்கி முனிவர் ஈஸ்வரரை மட்டும் பிரதக்ஷிணம் செய்து வணங்கி விட்டு ஆனந்தக் கூத்தாடினார். 

உமை சிவனுடன் இடைவெளி இல்லாமல் அமர்ந்த போதும் பிருங்கி முனிவர் வண்டு ரூபம் எடுத்து பரமசிவனை மட்டும் வலம் வந்து வணங்கினார். 

 பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்கள், கின்னரர், கிம்புருடர், கருடகாந்தர்வர், சித்த வித்யாதரர், ஜனகஜனனாதரி, ஸனத்குமாரர், தும்புரு நாரதர் கௌதமர் அகஸ்தியர் என சகலரும் இருவரையும் வலம் வந்து வணங்கிக் கொண்டு செல்ல, பிருங்கி முனிவர் மட்டும் சிவனை நமஸ்கரித்து நிற்க காரணம் கேட்டாள் அன்னை உமையவள்..

பிருங்கிரிஷி பாக்கியத்தை கோரியல்ல மோக்ஷத்தைக் கோரியதால்
சிவத்தை மட்டும் பிரதக்ஷிண நமஸ்காரம் செய்தார் 

அம்பிகை முனிவரின் சக்தியை நீக்கிவிட்டதால் பரமேஸ்வரர் மனம்
இரங்கி பிருங்கிக்கு மூன்றாவது ஒரு காலை கொடுத்தார். 
பல் வேறு திருக்கோவில்களில் எலும்பும் தோலுமாய்
மூன்று கால்களுடன் பார்க்கும் சிற்பம்  பிருங்கி முனிவர்தான். 

சென்னை காளிகாம்பாள் திருக்கோவிலில் நடராஜப்பெருமான் சன்னதியில் பிருங்கி முனிவர் சிலை உள்ளது. ஆருத்ரா தரிசனத்தின் போது பிருங்கியைக் கொண்டு ஊடல் உற்சவமும் நடைபெறுகின்றது. 

ஐயன் அர்த்தநாரீஸ்வரராக சேவை சாதிக்கும் திருச்செங்கோட்டுத்தலத்திலும் பிருங்கி முனிவரைக் காணலாம். 
சிவசக்தி என்பது ஒன்றே என்பதை வேதம் உணர்ந்த பிருங்கி மஹரிஷி
உணர மறந்து அன்னையால் தண்டிக்கப்பட்டார்.

கைலாயத்தை விடுத்து பூலோகம் வந்த பார்வதி தேவி கௌதம மஹரிஷி சஞ்சரிக்கும் பூங்காவனத்தில் ஒரு விருக்ஷத்தின் அடியில் எழுந்தருளினாள் 

பன்னிரண்டு ஆண்டு மழையின்றி விருக்ஷங்கள், செடிகள் உலர்ந்து வாடியிருக்க அம்பிகை  வந்தவுடன்  துளிர்த்துத் தழைத்து புஷ்பித்து காய்த்து பழுத்து  பூச்செடிகளெல்லாம்  சகல புஷ்பங்களும்  மலர்ந்து நறுமணம் பரவிற்று. 

கோடி சூரிய பிரகாசத்துடன் அம்பிகை விருக்ஷத்தனடியில் எழுந்தருளியிருப்பதைக் கண்ணுற்று , வணங்கி,புரட்டாசி மாதம் சுக்கில பக்ஷ அஷ்டமி தொடங்கி ஐப்பசி மாதம் கிருஷ்ணபக்ஷம் தீபாவளி அமாவாசை வரை இருபத்து ஒரு நாள் ஆல மரத்தினடியில் கேதாரீஸ்வரரை (சிவலிங்க ரூபத்தில்) பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்து, விபூதி, சந்தனம் சார்த்தி, மலர் கொண்டு அலங்கரித்து, வெல்ல உருண்டை, சந்தன உருண்டை, மஞ்சள் உருண்டை, அதிரசம், வாழைப்பழம், தேங்காய் , தாம்பூலம், இவைகளை வகைக்கு ஒன்றாக வைத்து வில்வார்ச்சனை செய்து தூப தீபம் காட்டி நமஸ்கரித்து இருபத்தோரிழையில் கயிறு முறுக்கி அதைத் தினம் ஒரு முடியாக முடிந்து தினமும் உபவாசமிருந்து நைவேத்தியம் செய்த அதிரசத்தை மட்டும் உண்டு இருபத்தொரு நாளும் விரதத்தை கடைப்பிடித்ததால் இருபத்தோராம் நாள் தீபாவளி அமாவாசையன்று பரமன் ரிஷப வாகனராய் எழுந்தருளி கேட்ட வரம் கொடுப்பார் என்று கௌதமர் எடுத்துரைத்தார்..!
அம்பிகை மகிழ்ந்து புரட்டாசி மாதம் அஷ்டமி முதல் ஐப்பசி மாதம் அமாவாசை வரை இருபத்தொரு நாளும் கௌதமர் தெரிவித்த படி நியம உபவாசமிருந்து விரதம் இருக்க - பரமேஸ்வரியின் விரதத்திற்க்கு மகிழந்து பரமேஸ்வரன் தேவ கணங்கள் புடை சூழ காட்சியளித்து இடப்பாகத்தை அன்னைக்கு அருளி அர்த்தனாரீஸ்வரராய் திருக்கையிலாயத்திற்கு எழுந்தருளி வீற்றிருந்து அருளினார்..

அம்பிகையான கௌரி அன்னை அனுஷ்டித்ததால் 
கேதார கௌரி விரதம் என்று வழங்கப்படுகின்றது.

24 comments:

  1. கேதார கௌரி பூஜையும் பலன்களும் அறிந்தேன். நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. அறியாத செய்திகள்
    அழகான படங்கள்...
    நெஞ்சுக்கு இனிமையாக...

    ReplyDelete
  3. அதிரசம் மிகவும் பிடித்த ஒன்று..... :) அட எப்பப் பார்த்தாலும் உணவின் மேல் தான் மனது போகிறது......

    கேதார கௌரி விரதம் பற்றிய தகவல்களும் படங்களும் மிக நன்றி.

    ReplyDelete
  4. Aha arputham.
    Nice post and best pictures.
    I like the last picture. Lingam made out of kamakshi villakku........Wow!!!!!!!!!!!
    Thanks dear. You made my day happy.
    viji

    ReplyDelete
  5. this is an inportant post for todays generation thanks for sharing madam

    ReplyDelete
  6. படங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம்... அவ்வளவு அழகு... அருமை... தகவல்களும் சிறப்பு... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. கேதார கௌரி பூஜையின் தகவல்கள் அருமை.
    மங்களகரமான படங்கள். குதூகலமான பதிவு. நன்றி அம்மா.

    ReplyDelete
  8. கேதாரகெளரி விரதத்தின் மகிமையையும்,விரதம் எப்படி அநுட்டிப்பது பற்றியும் அழகான படங்களுடன் பகிர்வு அருமை.நன்றி.

    ReplyDelete
  9. மிக மிக அருமையாக விளக்கமாக கேதாரகௌரி விரதம் பற்றி அறியத்தந்தீர்கள்!..
    படங்களும் மிகச் சிறப்பு!..

    தீபங்களால் வடிவமத்த தீபம் மனதை ஈர்த்தது...

    பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  10. கேதார கௌரி விரதம் பற்றி விரிவான தகவல்களும் ,
    விளக்குகளால் ஆன சிவலிங்கமும் ஜொலிக்கின்றன.பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  11. அருமையான பகிர்வு. படங்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  12. அழகிய பதிவு, சிிறப்பான பூஜை.. மீயும் விரதமிருக்கிறனான்ன்ன்... இருக்கிறேன்ன்ன்...

    ReplyDelete
  13. அரிய தகவல்கள், அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. ’ஸ்ரீ கேதார கெளரி பூஜை’ பற்றிய படங்களும் விளக்கங்களும் பார்க்கவும் படிக்கவும் தங்களின் தலைப்பினைப்போலவே குதூகலம் தந்தது.

    >>>>>

    ReplyDelete
  15. சக்தியாகிய பார்வதி தேவி விரதமிருந்து சிவனுடன் சேர்ந்து ஐக்கியமாகி அர்தநாரீஸ்வரர் ஆகிய தினமா?

    சந்தோஷம், சந்தோஷம். ;)))))

    >>>>>

    ReplyDelete
  16. சக்தியில்லையேல் சிவம் இல்லை. சிவம் இல்லையேல் சக்தியில்லை.

    ’சிவசக்தி டவர்ஸ்’ ஸிலிருந்து இதை நான் இப்போது எழுதுகிறேனாக்கும்.

    நாம் முதன்முதலில் என் நகைச்சுவைத் தொடரான ’எலி’ஸபத் டவர்ஸ்ஸில் ஐக்கியமானது நினைவுக்கு வந்தது.

    http://gopu1949.blogspot.in/2011/02/1-8.html
    http://gopu1949.blogspot.in/2011/02/5-8_28.html
    http://gopu1949.blogspot.in/2011/03/8-8.html

    சிரிப்பும் வந்தது. ;)))))

    வியப்பும் தந்தது ;)))))

    >>>>>

    ReplyDelete
  17. தாங்கள் காட்டியுள்ள வடைகள், அப்பங்கள், அதிரஸங்கள் சூப்பரோ சூப்பராக அ தி ர ஸ மா க பூப்போல, மிருதுவாக, ருசியாக உள்ளன.

    கண்டேன் [ஸீதையை] அதிரஸத்தை! ;)))))

    ருசித்தேன் அதில் உள்ள அதிக ரஸத்தை ! ;)))))

    ஜோர் ஜோர் !!

    >>>>>

    ReplyDelete
  18. அம்மிக்குழவியே ஆவுடையார் லிங்கம்!!!!!

    அச்சா, பஹூத் அச்சா !

    அந்த அம்மிக்கும் குழவிக்கும் மேலே காட்டியுள்ள இரண்டு அம்பாள் படங்களும் அழகோ அழகாக உள்ளன. அவை தான் என்னை இன்று மிகவும் கவந்த படங்கள்.

    >>>>>

    ReplyDelete
  19. அருமையான இனிமையான அழகான பதிவாக கேதார கெளரி விரதம் பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் எடுத்துச்சொல்லி அசத்தியுள்ளீர்கள்.

    கடைசி படமாக காட்டியுள்ள எரியும் விளக்குகளின் அணிவரிசை அற்புதம்.

    அனைத்துக்கும் என் அன்பான பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    -oOo-

    ReplyDelete
  20. மாதொருபாகன் எல்லாருக்கும் சர்வ மங்கலங்களையும் தந்தருள வேண்டுவோம்!..

    ReplyDelete
  21. கேதார கெளரி விரத விபரங்கள் , படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  22. Very beautiful Mrs.Rajarajeshwari, I am so happy I read your post, learnt a lot about this viradham thank you so much, very beautiful photos of amman.... could not take eyes out of the pics...

    ReplyDelete
  23. விரத விவரங்கள் நன்றாகப் புரிந்தது. நெய்யில் தான் அதிரஸம் செய்வோம் என்று எனக்குத் தெரிந்தவர்கள் சொல்வார்கள். படங்கள் ஆஹா அருமை. அப்பா எவ்வளவு விவரங்கள். அன்புடன்

    ReplyDelete