Sunday, February 15, 2015

"மகாதேவ ஸ்ரீ சைலம்


மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே !

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
ஸ்ரீ சைலேஸ்வரா தவ சரணம்

நந்தி வாஹனா நாக பூஷனா
சந்திர சேகரா ஜடாதரா......

மதுரையம்பதியில்   வாழ்ந்து வந்த பெருஞ்செல்வந்தராகிய சிவனடியார் நாள்தோறும் அடியார்கட்கு அமுது செய்வித்து அரனாரின் திருவடிகட்கு அன்புடையவராக விளங்கினார்.

முதுமைப் பருவத்தில் , ஸ்ரீசைலம் சென்று மல்லிகார்ச்சுனேசுவரரை வணங்க விரும்பினார்.

அடியார்குழாம் சூழ காடு, தள்ளாத வயதில் மலையெல்லாம் கடந்து சென்றதால் தளர்வுற்றார்.

ஒரு மாலை வேளையில் மகாதேவமலை எனும் ஓர் உத்தம தலத்தினை அடைந்தபிறகு அதற்குமேல் அவரால் நடக்க இயலவில்லை.

உடன் வந்த அடியார்கள் அவரை விட்டுச் சென்றனர்.

மலையடிவாரத்தில் வருத்தத்துடன் அமர்ந்திருந்தவர் , "சிவராத்திரிக்குள் ஸ்ரீசைலத்தை எப்படி அடைவேன்! எம்பெருமானைக் காண்பதெங்ஙனமோ!' என்று கண்ணீர் மல்கினார்.

பக்தரை ஆட்கொள்ள விரும்பிய சிவனாகிய மகாதேவர், ஒரு முனிவர் வேடத்தில் அங்கு தோன்றினார்.

அம்முனிவரிடம் தம் குறைகளைச் சொன்னார் தரிசனன். இறைவனான சைலமலை நாதர் இங்கும் வருவார்; ஆதலால் இந்த மலையினை மூன்றுமுறை வலஞ்செய்து மகிழ்ச்சியுடன் இங்குள்ள பெருமானைப் பூசித்திருப்பாய் என்று கூறி, மலையினை வலஞ்செய்தற்குத் தானே வழிகாட்டிச் சென்றார்.

ஒரு சிவராத்திரி நாளில் மகாதேவ மலை ஸ்ரீ சைல பர்வதமாக காட்சியளித்ததால் இதற்கு, "மகாதேவ ஸ்ரீ சைலம்' என்றொரு திருப்பெயரும் உண்டு ...

மகாதேவ மலைமீது சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்புவரை தினமும் நண்பகலில் இரண்டு கழுகுகள் இங்கு வந்து உணவருந்தியுள்ளன. அவை தவறாது வந்து உணவருந்தியதற்கு இங்குள்ள பழைய நூலில் உள்ள புகைப்படம் சான்றாகும்.

அகிலத்துக்கு தாயாகிய உமையம்மையே மகாதேவ மலையாக இருந்து சிவபெருமானை மணம் செய்து கொண்டு அருளும் தலம் இது. தேவர்களும் பூதகணங்களும் வாழ்த்தொலி எழுப்பி, இந்தத் திருமலையினை காவல் செய்து வருகின்றனர் என்று கூறப்படுவதுண்டு.


மகாதேவ மலையில் புண்ணியத் தீர்த்தங்கள் பல உள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள ஒரு சுனையில் முழுகி மகாதேவமலையை வலம் வந்து சுவாமியை வணங்கினால் நல்ல சிந்தனைகளும் சிறந்த தமிழறிவும் வாய்க்கும் .

திங்கட்கிழமை சுனையில் புனித நீராடி வழிபாடு செய்தால் பெருஞ்செல்வம் உண்டாகும். செவ்வாய்க் கிழமை - பாவங்கள் தீரும்; சனிதோஷம் விலகும். புதன்கிழமையில் உலகம் புகழும் உயர்நிலை வாய்க்கும்.

வியாழக்கிழமையில் பகை நீங்கும்; நினைத்தவை கைகூடும்.

வெள்ளிக்கிழமையில் மலைவலம் வந்து வணங்க மக்கட்பேறு உண்டாகும். சனிக்கிழமைகளில் மலைவலம் வந்தால் செல்வமுண்டாகும்; நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

எண்ணற்ற மூலிகைகளும் நிறைந்துள்ள இம்மலைமீது கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத்திருமேனியாக மகாதேவ சுவாமி காட்சியருளுகின்றார்.

பிரகாரத்தில், காமாட்சி தேவி, விநாயகர், முருகன், சண்டேசர் சந்நிதிகள் உள்ளன. அஷ்ட லிங்கங்களும் உள்ளன. குகைகளும், அதற்கருகில் பதிணெண் சித்தர்களின் சிற்பத் திருமேனிகளும் உள்ளன.

மகாதேவ புராணம் எனும் நூல் மகாதேவ ஸ்ரீ சைல தலத்தின்
மகிமைகளைப் பற்றி எடுத்துரைக்கின்றது.

கார்த்திகை தீபத்தன்று மூலவருக்கும் பிற தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்படுகின்றது. மிகப்பெரிய அகண்ட கொப்பரையில் நெய்யும், எண்ணெய்யும் ஊற்றப்பட்டு மாலை 6 மணியளவில் மகாதீபம் ஏற்றப்படுகின்றது. அப்போது "அரோகரா' எனும் கோஷம் விண்ணை முட்ட எழும்.

மகாதீப தரிசனத்தைக் கண்டு களிக்க சுற்றிலும் உள்ள ஊர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மகாதேவ மலைக்கு வருகின்றனர். தீப தரிசனம் சுற்றிலும் 20 கி.மீ தூரத்திற்குத் தொடர்ந்து மூன்று நாட்கள் தெரிகின்றது.  மகாதேவமலைக்குச் சென்று மகாதீபத்தைக் கண்டு களித்து வாழ்வில் மாபெரும் பேறுகளைப் பெறலாம்.

அற்புதங்கள் பல நிறைந்த மகாதேவ மலை, வேலூரிலிருந்து காட்பாடி வழியாக குடியாத்தம் செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

26 comments:

 1. மகாதேவ ஸ்ரீ சைலம் பற்றிய பெயர்க்காரணம், சிறப்புகள் அனைத்தும் அறிந்தேன் அம்மா... நன்றி...

  ReplyDelete
 2. தங்களின் பதிவு கண்டு நீண்ட நாட்களாகி விட்டன சகோதரியாரே
  மீண்டும் பதிவின் வழி தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்

  ReplyDelete
 3. மகாதேவ ஸ்ரீசைலம் பற்றி தகவல்கள்,படங்கள் அனைத்தும் அருமை.
  நீண்ட நாட்களின் பின் காண்பது மிக்க சந்தோஷம். நன்றி.

  ReplyDelete
 4. மீண்டும் இனிய பதிவுகளைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி..
  வாழ்க நலம்!..

  ReplyDelete
 5. மீண்டும் பதிவுகளில் அருமைச் சகோதரியை சந்திக்கும் வாய்ப்பு நல்கியமைக்கு நன்றி! அருமையான பதிவு! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
 6. திரும்பவும் பதிவெழுத வந்ததற்கு வாழ்த்துக்கள்!
  வழக்கம்போல புகைப்படங்களும் தகவல்களும் அருமை!

  ReplyDelete
 7. அருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வு.

  ReplyDelete
 8. மீண்டு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. படங்களுடன் சிறப்பான தகவல்கள். நன்றி.

  ReplyDelete
 9. இப்பதிவு கண்டு தங்கள் உடல் நலம் பெற்றுவிட்டதாய் அறிகிறேன். வாழ்க வளமுடன்,

  ReplyDelete
 10. நேற்றுதான் நீங்கள் உடல்நலம் பெற்று மீன்றும் வலைப்பதிவு செய்ய வரவேண்டும் என்று வலைச்சரத்தில் பிரார்த்தனை செய்து கொண்டேன். இன்று நீங்கள் பதிவு எழுதி வெளியிட்டிருப்பது மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது.
  உடல்நலம் முதலில் என்று வைத்துக்கொண்டு எழுதுங்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. ரொம்ப நாளாச்சேம்மா...
  உடல் நலம் எப்படியிருக்கிறது?
  படங்களுடன் பகிர்வு அருமை.

  ReplyDelete
 12. வணக்கம் , வாழ்க வளமுடன். உடல் நலமா?
  நீங்கள் வெளிநாடு சென்று இருப்பீர்கள் போலும் அதுதான் உங்களிடமிருந்து பதிவு இல்லை என்று நினைத்தேன்.
  ரஞ்சனி அவர்கள் தொகுத்து வழங்கிய வலைச்சர மூலம் உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று அறிந்தேன். உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். விரைவில் நலம் அடைந்து ஆன்மீக பதிவுகள் தரவேண்டும். இறைவன் அருள்வார்.
  இன்றைய பதிவு வெகு அருமை.

  ReplyDelete
 13. தங்கள் தலம் முதல் முறை வருகிறேன். பதிவு அருமையாக உள்ளது.

  ReplyDelete
 14. பதிவு அருமை, பதிவை தொடர்வதற்க்கு வாழ்த்துகள்
  கில்லர்ஜி

  ReplyDelete
 15. சகோதரி அவர்களுக்கு! நலமாக இருக்கிறீர்களா?

  ReplyDelete
 16. Very Usefull informaction
  I found out a website for details on various festivals and pooja – its significance and performance
  Online Pooja Store Click Here: http://onlineyanthra.com

  ReplyDelete
 17. வணக்கம்!
  மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக!

  நித்திரையில் கண்ட கனவு
  சித்திரையில் பலிக்க வேண்டும்!
  முத்திரைபெறும் முழு ஆற்றல்
  முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


  மன்மத ஆண்டு மனதில்
  மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
  மங்கலத் திருநாள் வாழ்வில்!
  மாண்பினை சூட வேண்டும்!

  தொல்லை தரும் இன்னல்கள்
  தொலைதூரம் செல்ல வேண்டும்
  நிலையான செல்வம் யாவும்
  கலையாக செழித்தல் வேண்டும்!

  பொங்குக தமிழ் ஓசை
  தங்குக தரணி எங்கும்!
  சீர்மிகு சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக! வருகவே!

  புதுவை வேலு

  ReplyDelete
 18. அன்பு சகோதரி
  வணக்கம்!
  மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக!

  நித்திரையில் கண்ட கனவு
  சித்திரையில் பலிக்க வேண்டும்!
  முத்திரைபெறும் முழு ஆற்றல்
  முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


  மன்மத ஆண்டு மனதில்
  மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
  மங்கலத் திருநாள் வாழ்வில்!
  மாண்பினை சூட வேண்டும்!

  தொல்லை தரும் இன்னல்கள்
  தொலைதூரம் செல்ல வேண்டும்
  நிலையான செல்வம் யாவும்
  கலையாக செழித்தல் வேண்டும்!

  பொங்குக தமிழ் ஓசை
  தங்குக தரணி எங்கும்!
  சீர்மிகு சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக! வருகவே!

  புதுவை வேலு

  ReplyDelete
 19. வை.கோ.சார் பதிவு மூலம் தங்கள் உடல் நலமின்மை அறிந்தேன்.
  பரிபூரண நலமடைந்து முன்னிலும் அதிக உற்சாகம் பெற பிரார்த்திக்கிறேன் தோழி.

  ReplyDelete
 20. அன்புடையீர்,

  வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பாராட்டுகள். வாழ்த்துகள்.

  இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/2.html

  ReplyDelete
 21. அன்புள்ள சகோதரி அவர்களுக்கு வணக்கம்!

  இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால் தங்களின் வலைத்தளம் மீண்டும் மூன்றாம் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் தளத்தின் ஒரு சில பதிவுகள், வலைச்சரத்தில் இன்று (04.06.15) அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + இனிய நல் வாழ்த்துக்கள்.

  வலைச்சர இணைப்பு இதோ:

  http://blogintamil.blogspot.in/2015/06/4.html

  ReplyDelete
 22. அன்புள்ள சகோதரி அவர்களுக்கு வணக்கம்!

  இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால் தங்களின் வலைத்தளம் மீண்டும் மூன்றாம் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் தளத்தின் ஒரு சில பதிவுகள், வலைச்சரத்தில் இன்று (04.06.15) அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + இனிய நல் வாழ்த்துக்கள்.

  வலைச்சர இணைப்பு இதோ:

  http://blogintamil.blogspot.in/2015/06/4.html

  ReplyDelete
 23. அன்பின் இராஜேஸ்வரி இன்று தங்கள் வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது... மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...

  ஸ்ரீசைலம் செல்லவேண்டுமென்ற நீண்ட நாள் ஆசை.. இன்னும் நிறைவேறாமலேயே இருந்தது.

  இன்று கண்ட தெய்வ தரிசனம் மனதை நிறைத்தது.

  நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று இறைவன் அருளால் என்றென்றும் சௌக்கியமாக இருக்க மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா....

  ReplyDelete
 24. அன்புள்ள சகோதரி அவர்களுக்கு வணக்கம்!
  இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால் தங்களின் வலைத்தளம் மீண்டும் 5ஆம் நாள் (இன்று (05.06.15) திருநாளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  வலைச்சர இணைப்பு இதோ:
  வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/5.html

  ReplyDelete
 25. அன்புடையீர்! வணக்கம்!
  இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (09/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  வலைச்சர இணைப்பு:
  http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete
 26. சகோதரி தங்களை மறக்கவில்லை..
  நல்ல ஆரோக்கியமுடன் மகிழ்வாக இருக்க இறையருள் கிடைக்கட்டும்.

  ReplyDelete