Monday, December 31, 2012

புது வாழ்வு வரும் புத்தாண்டு -2013


வெற்றி நம்மை தேடி வரும் நன்னாள் இது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாள் இது
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

புத்தாண்டே வருக புது வாழ்வை தருக ..!


ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா 
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா 

ஏறு போல் நடையினாய் வா வா வா 
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா 

என ஒளி பொருந்திய புத்தாண்டினை பாட்டுக்கொரு 
புலவர் பாரதியின் பாட்டினால் வரவேற்கிறோம் .. 

ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் உவகை உணர்த்திட  
பூக்கும் புத்தாண்டை உவகையுடன் வரவேற்போம் 

பொன் எழில் பூத்தது  புது வானில் 
வெண் பனி தூவும் நிலவே நில் 
பொன்னாய் புத்தாண்டு பிறந்ததும்
புன்னகை பூத்தது புது வாழ்வில் ..

இடைவிடாமல் கற்றுகொள்பவருக்கு வாழ்க்கை வியப்பாக இருக்கும்.

வியப்பாக வாழ்கையைப் பார்ப்பவருக்குத்தான் அது உற்சாகமாக இருக்கும்
பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால், 
புன்மை யிருட்கணம் போயின யாவும், 

எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி 
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி, 

புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம், 
பொங்கியது எங்கும் புத்தாண்டின் 
மகிழ்ச்சி ஆர்ப்பரிக்கும் புது வெள்ளம் ..

Sunday, December 30, 2012

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட்ம்..
Merry Christmas animated with many colors

 ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்

 செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்லக் குருடனின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்xmas glitter graphics, christmas comments, graphics, images for Orkut, Myspace, Facebook, friendster

  மக்களுக்கு நல்வழி காட்ட வந்த மகான் இயேசு கிறிஸ்துவின் தியாக குணமும் மன்னிக்கும் மாண்பும் பாரதியைக் கவர்ந்தன. நல்லவை எங்கு இருந்தாலும் யாரிடம் இருந்தாலும் அதைப் பாராட்டத் தயங்காத பாரதி இயேசுவை வணங்குகிறார். ஒரு கிறித்தவர் எப்படி உருகிப் பாடுவது போல் பாரதியின்  விளங்கும் பாடல்....


ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் 
எழுந்து உயிர்த்தனன் நாள்ஒரு மூன்றில் நாசம் இன்றி நமைநித்தம் காப்பார் 

     நம்அகந் தையை நாம்கொன்று விட்டால்!


வானம் வால் நட்சத்திரம் இட்டு மகிழ்ச்சி காட்ட, ஏஞ்சல் பண் இசைத்து வாழ்த்த, நடுங்கும் குளிர் இன்பம் பொழிய என காட்சிப் பிம்பம் செதுக்கிய அற்புத திருவிழா கிறிஸ்துமஸ். உலகின் மிகப் பரவலான கொண்டாட்டம்


கிறிஸ்து பிறப்புவிழா கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். 

பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது .

மாட்டுக் குடிலில் வைக்கோல் படுக்கையில் அன்பான மரியன்னைக்கு கிடைத்த பரிசுதான் யேசு எனும் இறைமகன்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை வண்ணமயமாக, கேளிக்கைகள், உறவினர், நண்பர்களுடனும் விருந்துகளுடனும் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்..
Santa playing with an elf. animated
ஒளிரும் நட்சத்திரங்களை வீட்டின் முன்பு தொங்கவிட்டும், பல வகை வண்ண விளக்குகளால் வீடுகள், கடைகள், அலுவலகங்களை அலங்கரித்தும் பிரியமானவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பியும், பரிசு வழங்கியும் சுவை மிகுந்த கேக்குகள், பலகாரங்கள் வழங்கியும் அறுசுவை உணவுகளை உண்டும் ஆனந்தமாகக் கொண்டாடுவார்கள்.
Christmas comments, orkut scraps, glitter graphics, images for Orkut, Myspace, Facebook, friendster, tagged
இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டு


ஓ, எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்…கிறிஸ்துவும் பிறந்தது”என்பார்கள்..


டிசம்பர் 25 குளிர்கால சம இரவு பகல் நாள்..


அன்பின் திருவுருவம், கருணையின் வடிவம், தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாள் ஆகும். 

இயேசுபிரான் “அன்பே வாழ்வின் நெறி” என்று வாழ்ந்து காட்டிய திருமகன், இன்னா செய்தவர்கள் நாணும்படி அவர்களுக்கு நன்னயம் செய்த பெருமகன். 

அவர் அன்பை போதித்தார். 
அந்த போதனைகளுக்கு தனது வாழ்க்கையையே முன்னுதாரணமாக ஆக்கினார். 

அன்பு வார்த்தையாலும், அன்பு வாழ்க்கையாலும் உலகை ஆட்கொண்ட இரக்கத்தின் வடிவமாம் இயேசுபிரான் பிறந்த நன்னாளாம்  இனிய திருநாளில் உலகமெங்கும் அன்பு தவழவும், அமைதி நிலவவும்,சத்தியம் நிலைக்கவும், சகோதரத்துவம் தழைக்கவும் பிரார்த்திப்போம்..


அன்பின் ஒளியாய் கருணையின் வடிவாய் அவதரித்த இயேசுபிரான் பிறரின் பாவங்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர். 

தன்னை சிலுவையில் அறைந்தவர்களைக் கூட மன்னிக்கும்படி பரமபிதாவிடம் மன்றாடியவர். 

மன்னிப்பதன் மூலம் மன்னிக்கிறவர் மட்டுமல்லாமல், மன்னிக்கப்படுகிறவரும் உயருகிறார் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் இயேசுபிரான் அவர்கள் அவதரித்த  கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

ஒவ்வொரு குடும்பமும் தன் உறவுகளோடும் நட்புகளோடும், நேசங்களோடும் பகிர்ந்து கொள்கிற இதுபோன்ற விழாக்கள் ஒருநாட்டின் பண்பாட்டையும் கலாச்சார உறவுகளையும் வெற்றிடமின்றி நிரப்பிட உதவுகிறது ..

இயேசு கிறிஸ்து ஏழைகளிடம் இயலாதவர்களிடம் கருணை கொண்டவர். 

அன்பு, மனிதநேயத்தை உலகுக்குஉணர்த்தி தானும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர். 

அன்பும் விட்டுக் கொடுக்கும் தன்மையும் பெருமைக்குரியது. 
அது நன்மை மட்டுமே செய்யும், பொறாமைப்படாது, தற்புகழ்ச்சி கொள்ளாது. ஏசுகிறிஸ்து அன்பே உருவானவர், நிபந்தனை இல்லாத அன்பு தான் அவருக்கு ஆயுதமாய், கேடயமாய், அனைத்துமாய் இருந்தது. 

அப்படி, அன்பால் மக்களின் வாழ்வை நெறியாக்க இறைவனின் மகனாய் இயேசு கிறிஸ்து மண்ணில் உதித்த இந்த புனித நாளே கிறிஸ்துமஸ் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 


மக்களின் வாழ்க்கையின் பின்னிப் பிணைந்த ஒரு அம்சமாக   கிறிஸ்துமஸ் பண்டிகையில் கிறிஸ்துமஸ் மரம் மணிகள், எடை குறைந்த வர்ண உருண்டைகள், நகைகள், இனிப்புகள், மலர்கள், வண்ண அலங்காரங்கள், சிறிய தேவதைகளின் திரு உருவங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப் படுகின்றது. 
கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியில் ஒரு உலோகத்தால்/ரப்பரால் ஆன ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு தேவதையின் உருவம் வைக்கப்படும். இது தேவ குமாரனாம் இயேசு பெத்லகேமில் பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தை - தேவதைகளை 'சம்மனசுகள்'- நினைவூட்டுவதற்கான சின்னமாகும்.
உலகம் முழுவதும் குளிர்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் போது ஆஸ்திரேலியாவில் மட்டும் உச்ச வெப்பகாலமாக இருக்கிறது ...

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிறிஸ்மஸ் தாத்தா போன்று வேடம் அணிந்து கலந்துகொண்டனர்.

தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் ஓட்டபந்தயத்தில் பங்கேற்றனர்.

கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்த பலர் நீரில் சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினர்.


 இந்த ஆக்கத்தை வெளியிட்ட வல்லமை மின் இதழுக்கு நன்றி ..
http://www.vallamai.com/literature/articles/30004/
வணக்கம். தங்களுடைய சிறிஸ்மஸ் தின சிறப்பு படைப்பை நம் வல்லமையில் பிரசுரித்திருக்கிறோம். நன்றியும்,  வாழ்த்துக்களும்.

Saturday, December 29, 2012

ஓம் நமசிவாய'

கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா!
நின் தாள் துணை நீ தா!
தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வா 
எல்லையை மிதித்தாலே தொல்லை வினைகள் இனி இல்லை என்றாக்கும் அருட்தலம் தில்லை சிதம்பரம் .. 
பஞ்ச பூதங்களில் ஈசன் ஆகாயமாகி நின்றதனால் தரிசிக்க முக்தி தரும் தலம்.

ஆகயத்தலமாகச் சிறப்பித்துப் போற்றப்படும் சிதம்பரத்தில்  மூலவரும், உற்சவரும் என சிவபெருமான், ஆடல்வல்லான் ஆகி ஸ்ரீநடராஜர் மூர்த்தியாய் அருள்பாலிக்கின்றார்.
நடனத்தின் நாயகன் வித்தியாசமாகவும், அதிசயமாகவும் சுவாமியின் திருமேனி ஸ்ரீசக்கரத்தில் அடங்கிஅருட்காட்சி அருள்கிறார்..
தொங்கு சடையாக சுவாமியின் மேனியில் பரவித் திகழும் காட்சி காணக்காண திகட்டாதது ..  . 

ஆடவல்லானின் கலைகள் ஒவ்வொன்றும் எல்லா தெய்வங்களின் உருவில் மிளிர்கின்றது.
ஒவ்வொரு நாள் இரவும் அர்த்த ஜாம பூஜை நடைபெறும் சமயம் 64 கலைகளும் சுவாமியின் திருப்பாத கமலத்தில் ஐக்கியமாகி பின்பே அந்தந்த தலங்கட்கு திரும்புகின்றன என்பது ஐதீகம். 

சிதம்பரத்தில் உள்ள பெருமான் தானே வந்து சிலையாக அமர்ந்ததால் பெரும் சிறப்பைப் பெறுகின்றது. 

நடராஜர் சிலை வடிக்க மன்னன் ஆணையிட, சிற்பிகள் சிலை வடிக்க முற்பட்ட சிலை உருவாகும் நேரத்தில் ஒவ்வொரு முறையும் எப்படியோ தவறு நடந்துசிலை முழுமையடையவில்லை. 

மிகவும் கவலையுற்று நம்பியவர்களைக் காக்கும் நடராஜர் பாதத்தில் சரணடைந்து மனம் உருகி வேண்டியபடி சிலையமைக்கும் இடம் சென்ற. போது ஒரு வயோதிகர்  நின்று உணவு  யாசிக்க
உலோகக் கூழ்தான் உள்ளது.  என்றனர் சிற்பியர் 
உலோகக் கூழையே  அன்புடன் சுவைத்த வயோதிகர்  புன்னகையுடன் 
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயும், குமிழ் சிரிப்பும், பனித்த சடையும், பவளம்போல் மேனியும், பால் வெண்ணீறும், இனித்தமுடைய எடுத்த பொற்பாதத்துடன் 
ஆடல்பிரானாக  சிரித்துக்கொண்டே அருட்காட்சி தந்து நின்றார். 

சிதம்பர நடராஜன் தானே உகந்து வந்து  உய்யும் பொருட்டு  அருளாசி தருகின்றார். 
நட்சத்திரங்கள் மொத்தம் 27ல் "திரு' என்ற அடைமொழியைக் கொண்டது திருவாதிரை, திருவோணம் என்ற இரண்டுமாகும். 

திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உகந்தது.
ஒருமுறை சுவாமி, அம்பாள் இருவருக்கும் நடனத்தில் சிறந்தவர் யார் என்ற போட்டி வந்தது. முடிவில் சுவாமி வெற்றி பெற்றதை பிரம்மா, விஷ்ணு, இந்திரன் கூறத் தயங்கியவர்களாய் நின்றனர். அப்போது சுவாமி, மயிலாப்பூரில் நெசவு செய்யும் திருவள்ளுவர் மூலம் கூறப் பணித்தார். திருவள்ளுவருக்கு சுவாமி தறிமேடையில் நடனக் காட்சியைத் தந்தருளின நாள் திருவாதிரை நாளாகும்.
 மார்கழி மாதம், திருவாதிரை அன்று முன் நாளிரவு முதல் ஜாமபூஜை. சுவாமிக்கு மிகவும் அழகான முறையில் பெரிய அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் விடிய விடிய அதிகாலை 3 மணிக்கு   மூலாதார பூஜை  என சிறப்புடன் நடைபெறும்.
 சிவன் ஐந்தொழில்களை உலகிற்கு உணர்த்தும் தாண்டவ தரிசனம் தரும் நாளாகும். 
அம்பலவாணரின் நான்கு சபைகளில் பொற்சபை எனப் போற்றப்படும் சிதம்பரத்தில்தான் நந்தனார் எனும் அடியவர்க்கு தரிசனம் அளித்து வியந்து போற்றச் செய்தார்.....

 பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் மருதவாணரை, சிதம்பரத்தில் ஆடல்பிரான், நடராஜர், நடேசன், இரத்தின சபாபதி, அம்பலவாணன் எனப் பல திருநாமங்களில் போற்றப்படும் பிரபுவை "நமசிவாய' எனும் மந்திரத்தை ஓதி வளம் பல பெற வழிபடுகிறோம்...

ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
தங்க நிலாவினை அணிந்தவா
ஆடுகிறேன் பூலோகையா அருளில்லையா (ஓம்)
பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்
ஆறு காலங்களும் ஆடைகளாகும்

மலைமகள் பார்வதி உன்னுடன் நடக்க
ஏழு அடிகளும் சலங்கை படிக்க 

ராகம் பார்வையே எட்டுதிசைகளே
உன் சொற்களே நவரசங்களே

கயிலாச மலைவாசா கலையாவும் நீ
புது வாழ்வு பெறவே அருள்புரி நீ

மூன்று காலங்களும் உந்தன் விழிகள்
சதுர் வேதங்களும் உந்தன் மொழிகள்

கணபதி முருகனும் பிரபஞ்சம் முழுதும்
இறைவா உன்னடி பெறவே துடிக்கும்

அத்வைதமும் நீ ஆதியந்தம் நீ
நீ எங்கு இல்லை புவனம் முழுதும் நீ 


 //sury Siva said...
All May listen to this Divine Song of Ms.Rajeswari
by pasting this URL below:
http://www.youtube.com/watch?v=Vu05FRDWgXo

Thank U Ms.Rajeswari
subbu thatha//
 காணொளிப் பகிர்வுக்கு நன்றி ஐயா...

Friday, December 28, 2012

மார்கழியில் மஹா உற்சவம்ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன் 
ஆதிரை தானதில் அபயமென்றருளுவன் 
ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில் ஆதிரு 
ஆதிரை ஆலமர் ஆரணா! 

 மதிநிறைந்த நன்னாளாம மார்கழித்திங்கள் முழு நிலவு நன்னாளில் உற்சவமாகக் கொண்டாடப்படும்  திரு நாளாகத்  திருவாதிரை திகழ்கிறது.....

சிவனது முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியான  ரைவதம் என்னும் சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார். 
பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர்  அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாக நம்பிக்கை ....

ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் சித்தர்கள்  அரூப வடிவில் வழிபாடு செய்வதாக ஐதீகம் 


திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் அபயவரதீஸ்வரர்   வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும். 

அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். 
பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும், சிவபெருமான் உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. அங்கு சென்று சரணடைந்தவர்களை சிவபெருமான்  அபயம் தந்து காப்பாற்றுவார்.

திருவாதிரை நட்சத்திர  மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர்.  

இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர் 


ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்தபடியாக அபயவரதீஸ்வரர் ஆலயத்தில் அதிக அளவில் செய்யப்படுகிறது. 

திருவாதிரை நட்சத்திர பெண்களுக்கு எந்த தோஷத்தினால் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.

திரிநேத்ர சக்தி கொண்ட தலம் தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபயவரதீஸ்வரராக  இறைவன் விளங்குகிறார். 
அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. 

அருள்மிகு அபயவரதீஸ்வரர் திருக்கோயில் 
அதிராம்பட்டினம்-614 701 
பட்டுக்கோட்டை தாலுக்கா, 


போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ 
போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ 
கங்காதர ஷங்கர கருணாகரா மாமவ பவசாகரா தாரகா 
நிர்குண பரப்ரம்மா ஸ்வரூபா கமகம பூதா பிரபஞ்ச ரஹிதா
நிஜ குஹநிஹித நிதாந்தகனந்த ஆனந்த அதிசய அக்ஷய லிங்க 
திமித திமித திமி திமிகிட கிடதோம் 
தோம் தோம் கிடதக தரிகிட கிடதோம் 
மதங்க முனிவர வந்தித ஈசா 
சர்வ திகம்பர மேச்டிதவேசா 
நித்ய நிரஞ்சன நித்ய நடேஷா 
ஈசா சபேஷா சர்வேஷா 
போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ 
போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ 
-- தயானந்த சரஸ்வதி சுவாமிகள் இயற்றிய பாடல் கேட்கத் திகட்டாத்து ..

Lord Shiva Sleeping20Shiva.gif

Thursday, December 27, 2012

திருவாதிரைத் திருநாள்

Click image for larger version. 

Name: Shiva_dances.gif 
Views: 4 
Size: 3.9 KB 
ID: 81131


ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்"

திருமயிலையில் சாம்பலாகிய பெண்ணை உயிர்ப்பிக்க திருஞான சம்பந்தர் பாடிய மயிலையில் கொண்டாடப்படும் பல்வேறு சிறப்பு மிக்க திருவிழாக்களுள் திருவாதிரையும் ஒன்று.
ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் ஒன்று 

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளோடு இணைந்து திருவாதிரை வருவதால் விண்ணிலிருந்து சந்திரன் தன்னை தலையில் அணிந்து சாப விமோசனம் அளித்த சிவபெருமானின் அன்பர்களை தன் பதினாறு அமுத கலைகளால் தழுவுகின்றான். 
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாக
ஓருருவம் ஓர் நாமம் இல்லாத சிவ பெருமான்  செம்பவள மேனி வண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரைக்கு உரியவனாக்கி அவரை திருவாதிரையான் என்றும் அழைத்தும் அந்த திருவாதிரையன்று, ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடுகின்றோம்..

ஆருத்ரா என்பது ஆதிரையை குறிக்கும் சொல். சிவனுக்கு உரிய ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை. எனவேதான் இந்த திருவாதிரை நாளில் ஆடல் அரசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது

ஆருத்ரா தரிசன விழா ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் 
அருள்பாலிப்பார். 
ஆண்டுக்கு ஒரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சிலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும்..

கும்பகோணத்தில், மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெறும். 

அன்று 16 கோயில்களிலிருந்து சிவகாமியுடன் நடராஜர் தனித்தனியே புறப்பட்டு, திருக்குடந்தைக்கு ராஜாவாகிய அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலைப் பிரதட்சணம் செய்கின்றனர்.  

தொடர்ந்து கிழக்கு வீதியில் ஒவ்வொரு கோயிலிலிருந்தும் வந்த நடராஜரும், ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வரர் சுவாமிக்கு தங்களுடைய மரியாதையைச் செலுத்தும் வகையில் அர்ச்சனைகள் நடைபெறும். 

பதிலுக்கு,ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வர ஸ்வாமியும் அந்தந்த கோயிலுக்கு உண்டான ஸ்வாமிக்கு பதில் மரியாதை செய்வார்.

திருமணமான பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கக் காண வேண்டிய விழா ஆருத்ரா தரிசனம்.   

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புண்ணிய ஸ்தலமான சுசீந்திரம்  அறம் வளர்த்த நாச்சியார் கோவில் பிரசித்தமானது. 

"ஆடல்வல்லான்' என்று போற்றப்படும் ஆனந்த தாண்டவமாடும் நடராஜரை வழிபட்டால், மகிழ்ச்சி என்றென்றும் நிலைக்கும்.

சிவபெருமானுக்குரிய வடிவங்களில் முதன்மையானது நடராஜர் வடிவமே. இவர் ஆடுவது ஆனந்த தாண்டவம். அம்பலவாணர், சபாபதி, கூத்தப்பெருமான், நடேசன், சித்சபேசன், நடராஜன், கனகசபாபதி, பொன்னம்பலம் என்ற பெயர்கள் உண்டு.

திருவாதிரை நட்சத்திரம் நாள் தில்லை அம்பலத்தரசனுக்கு சிறப்பான விரத நாளாகும்.
திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் செய்து சகல பாவங்கள், தோஷங்கள், தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறலாம் ..

ஆருத்ரா தரிசனத்தன்று ஆதிரைக் களி படைக்கும் வழக்கம் உண்மையான பக்தியுடன் எளிமையான உணவு படைத்தாலும் ஆண்டவன் ஏற்றுக்கொள்வான் என்பதே  தாத்பர்யம்

திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி. 

எனவே மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது. 

திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி தின்னாதவர் நரகக்குழி என்பது பழமொழி  மூலம்  பிரசாதத்தின் மகிமை விளங்கும். 
களி என்றால் ஆனந்தம் என்று ஒரு அர்த்தம் ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜரை நாம் உண்மையான உள்ளன்புடன் வழி பட்டால் அவர் நமக்கு உண்மையான ஆனந்தமான மோக்ஷத்தை வழங்குவார் என்பதை உணர்த்துவதே களி படைப்பதன் உள்ளார்த்தம்.

கோவை பேருரில்  எம்பெருமானின் பின்னே பின்னி தொங்கவிடப்பட்டிருக்கும் ஜடா முடியையும் நாம் கண்டு ஆனந்தம் பெறலாம். 

சப்த விடங்க ஸ்தலமான திருநள்ளாற்றிலும் அருணோதய காலத்தில் ஒரே சமயம் நடராஜப் பெருமானுக்கும், தியாகராஜப் பெருமானுக்கும் அபிஷேகம் நடப்பதை நாம் கண்டு ஆனந்தம் அடையலாம்.

சுயம்புவாக தோன்றி மிகப்பெரிய திருவுருவமாக விளங்கும் திருநல்லம் என்னும் கோனேரி ராஜபுரத்திலும் திருவாதிரைத்திருவிழா பத்து நாள் மாணிக்கவாசகர் விழாவாக கொண்டாடப்படுகின்றது.

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையணைத் தும்நிறைந்து
பாரார் தொல் புகல் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 

என்று ஆனந்த சேந்தன் பாடிப் பரவியபடி, திருமால், பிரம்மன், இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்து எம்பெருமான் ஆதிரைத் தேரோட்டத்தை காணும் அழகை தரிசிக்கும் திருநாளே திருவாதிரைத்திருநாள் ..
கோயிலின் உள்ளே சென்று வழிபட முடியாதவர்களுக்காக தானே வெளியே வந்து தேரார் வீதியில் திருத்தேரில் வந்து  நடராஜப் பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் அருட்காட்சி அளித்து ஆனந்தம் பொழியும் அற்புதத்திருநாள் ..!