Saturday, December 15, 2012

மகிழ்ச்சி மலர்விக்கும் மாருதி
hanumanhanuman
""நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!

நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ய!!
http://www.punjabigraphics.com/images/7/hanuman-ji.jpg
 சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார்.சனியின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி அமர்ந்தார். 

இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனியின் தலைமீது வைத்தார். 

பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி, தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே, என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனிபகவான் .... 


 hanuman.gif

அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. 

காகத்திற்கு வாழை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.

நிஷ்காம்ய பக்தி யோகத்தின் மூர்த்தமாகத் திகழும் ஸ்ரீஆஞ்சநேயர்
வழிபாடு  ஏவல், பில்லி சூன்யங்கள் விலக்கும்


ஓம் பராபிசார சமனோ துக்கக்னோ பக்த மோக்ஷத
நவத்வார புராதாரோ நவத்வார நிகேதனம்

எல்லோரையும் நடுங்க வைக்கும் சனீஸ்வர பகவானையே, எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றவர் தசரத மகாராஜா.

தசரத மன்னன் சனி பகவானை துதித்துச் செய்த ஸ்தோத்திரம் மிக்க சக்தி வாய்ந்தது.


நம: கிருஷ்ணாய நீலாய ஸிதிகண்டநியாய ச
நமோ நீலமயூகாய நீலோத்பல நியாய ச
நமோ நிர்மாம்ஸ தேஹாயா தீர்கஸ்ருதி ஜடாய ச
நமோ விஸாலநேத்ராய சுஷ்கோதர பயானக

நம: பெளருஷகாத்ராய ஸ்தூலரோம்ணேச தே நம:
நமோ நித்யம் தார்தாய ஹ்யத்ருப்தாய சதே நம:
நமோ கோராய ரெளத்ராய பிஷணாய கரானிதே
நமோ திர்காய சுஷ்காய காலடம்ஷ்டர நமோஸ்துதே

Hanuman Jayanti Glitters- Click to get more

22 comments:

 1. இவ்வளவு அருமையான படங்கள் சேகரிக்க முடியுது அதுவும் தினமும் விதவிதமாக?அததனையும் அருமை

  ReplyDelete
 2. சனி அன்று அனுமனைத் துதிப்பதற்கு உண்டான பின்னணியை
  விளக்கியிருக்கிறீர்கள்.

  சனியின் தாக்கம் குறைய ஓர் உபாயத்தையும் கூறியதற்கும் நன்றி.

  நன்றி.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 3. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - வழக்கம் போல படங்கள் அத்தனியும் அருமை - தேர்ந்தெடுத்துப் போடப்பட்ட படங்கள் - சனியின் தாக்கம் நீன்ங்கவதற்கு - ஆஞ்சநேய வழிபாடு - தரிசனம், எள்ளும் வெல்லமும் வாழையிலையில் படைப்பது, ஆகியவை. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 4. படங்களும் பரிகாரங்களும் வழங்கிய விதம் சிறப்பு.

  ReplyDelete
 5. படங்கள் அனைத்தும் மிக மிக அருமை...பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  ReplyDelete
 6. ஆஞ்சநேயர் வழிபாடி பற்றி ஓரளவுக்குத்தான் நான் அறிந்திருந்தேன். இன்று உங்கள் பதிவின்மூலம் நிறைய அறிந்துகொண்டேன்.

  ஆஞ்சநேயர் படங்கள் அருமை அதிலும் அந்த பாலஆஞ்சநேயர் கொள்ளை அழகு...

  தினம் தினம் மலரும் நறுமணமும் அழகும் மிக்க அற்புத ஆன்மீகமலர் இது...

  பகிர்வுக்கு கோடானுகோடி நன்றிகள் சகோதரி....

  ReplyDelete
 7. சிறப்பான பகிர்வு !..மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 8. thanks for the slokas and picture of bala anjaneyar

  ReplyDelete
 9. உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது வரும் லேசான பொறாமையை எப்படி தவிர்ப்பது என்று தெரியவில்லையே?

  ReplyDelete
 10. அரிய விளக்கங்கள் உரிய படங்களுடன்...நன்றி! நன்றி!

  ReplyDelete
 11. சனி பற்றிய சிறப்பு பதிவில் தகவல்களும் படங்களும் அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. இராஜராஜேஸ்வரி,
  எப்படி உங்களால் மட்டும் தினம் தினம்
  அருமையான பதிவுகள், அதுவும் அழகழகான போட்டோக்களுடன் ,அமைக்க முடிகிறது.
  எங்கள் வீட்டில் உங்கள் வாசகர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.
  தசரதன் சனியுடன் போரிட்டது போன்ற விஷயங்கள் எனக்கு நியூஸ்.
  பகிர்விற்கு நன்றி
  ராஜி

  ReplyDelete
 13. அனுமானை வணங்குபவர்களுக்கு சனி பகவான் பீடிக்க மாட்டார் என்ற செய்தி நன்று.
  மாருதியின் விதவிதமான படங்கள் கண்ணுக்கு விருந்து.

  ReplyDelete
 14. ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் சனிபகவானின் தாக்கத்திலிருந்து விடுபட நல்லதொரு தகவல்களை தந்தமைக்கு.ரெம்ப நன்றிகள்.
  நீலக்கண்களைஉடைய ஆஞ்சநேயரில் ஆரம் முதல் கொண்டு எல்லாம் அசைவது பார்க்க நன்றாக உள்ளது.

  ReplyDelete
 15. சனி பகவானின் தாக்கம், தவிர்ப்பு - தந்த பதிவு நன்று மகிழ்ந்தேன்.
  நன்றி. இனிய நல்வாழ்த்து.
  வேதா.இலங்காதிலகம்.

  ReplyDelete
 16. அனுமனின் படங்களும், அவரைப்பற்றிய செய்திகளும் அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. viraivil kinnas sathanai padaikka valthugal....

  ReplyDelete
 18. நம்மைப் பற்றிக்கொண்டு பாடாய்ப்படுத்தி வந்த சனி முற்றிலும் ஒழிந்து விட்ட்தல்லவா?


  மாருதி மலர்ச்சி மலர்விக்கட்டும் ... இனிமேலாவது.

  நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 19. வை.கோபாலகிருஷ்ணன் said...
  நம்மைப் பற்றிக்கொண்டு பாடாய்ப்படுத்தி வந்த சனி முற்றிலும் ஒழிந்து விட்ட்தல்லவா?


  மாருதி மலர்ச்சி மலர்விக்கட்டும் ... இனிமேலாவது.

  நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.//

  வணக்கம் ஐயா..

  மகிழ்ச்சி மலர்விக்கும் இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete