Sunday, August 30, 2015

கோவை சந்தோஷ சாலை


images-6


 ...

தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் சந்தோஷ சாலை என்ற திட்டம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை ரத்தினசாமிபுரம் திவான் பகதூர் சாலையும், திரவேங்கடசாமி சாலையின் மேற்குப்ப குதியும் சந்திக்கும் இடம் சந்தோஷ சாலையாக தேர்ந்தெடுக்கப்பட்டு
ஆகஸ்டு 9ம் தேதி முதல் கோவையில்   "சந்தோஷ சாலை" ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 52 வாரங்கள் நடத்துவதாக உத்தேசிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
Displaying IMG_20150823_083427.jpgDisplaying IMG_20150823_083857.jpgDisplaying IMG_20150823_083429.jpg
காலை 3மணி நேரத்திற்கு இந்த சாலையில் காலை வாரா வாரம் ஒரு நாள், காலை 7 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து முற்றிலும் தடுக்கப்படும்
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை விளையாடலாம் ஜாலியாக சாலையில், சைக்கிள் ஓட்டுதல், யோகா நடனம் மற்றும் கால்பந்து, கிரிக்கெட், பூப்பந்து போன்ற விளையாட்டுக்கள் மிகுந்த உற்சாகத்துடன் சாலையில்
நிகழ்வுகள் நடக்கும்.

இந்த நேரத்தில் குறிப்பிட்ட இந்த சாலையை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் எல்லாம் தடை செய்யப்பட்டு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.

மாசில்லாத பகுதி போக்குவரத்து அறவே இல்லாத சாலையாக மாற்றப்பட்டு மாசு இல்லாத பகுதியாக மூன்று மணி நேரம் மட்டும் செயல்படும்.
 
 கோயம்புத்தூர் காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துணை ஆணையாளர்களால் இந்த முயற்சிக்கான முதல்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் ஆர்யா
கலந்து கொண்டார்.

ஞாயிறு தோறும் இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை  நிகழ்வுகள் நடக்கும்.

இந்த நேரத்தில் குறிப்பிட்ட இந்த சாலையை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் எல்லாம் தடை செய்யப்பட்டு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.


Saturday, August 29, 2015

திருவோணத் திருநாள்ஓம் நமோ நாராயணாய ஸ்ரீமந் நாராயண 
 சரணௌ சரணம் ப்ரபத்யே 
ஸ்ரீமதே நாராயணாய நம:  
சர்வதர்மாந் பரித்யஸ்ச்ச மாமேகம் சரணம் வ்ரஜா 
அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச


“சரணௌ’ என்றால், “இரண்டு திருவடிகள்’ – “பிரபத்யே’ என்றால், “சரணடைதல்’ – “நாராயணனின் திருவடிகளில் சரணடைகிறேன்…’
 என்பது மந்திரத்தின் பொருள்.

 ஆத்மார்த்தமாக பெருமாளிடம் சரணடைகிறவருக்கு எந்த துன்பமும் வாழ்க்கையில் இல்லை.

திருமால் மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அழித்திட வாமன அவதாரம் தரித்து

 தனக்கு மூன்று அடி மண் வேண்டும் என்று கேட்டு,

ஓர் அடியை வானத்திலும்; இரண்டாம் அடியை பூமியிலும்; மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையிலும் வைத்து அடக்கியதோடு, அந்த மன்னனின் வேண்டுதலின்படி, ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் அவர், தம் நாட்டு மக்களை வந்து காணும்படியாக அருள் புரிந்ததன்படி,
மக்களைக் காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக


மலையாள மொழி பேசும் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோணத்தன்று ஓணம் பண்டிகை 10 நாள் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் அத்தம் நட்சத்திர தினத்தில்துவங்கும் ஓணம் சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் என்று 10 வது நாள் திருவோணமாக கொண்டாடப்படுகிறது


ஓணப்பண்டிகையின் முக்கிய அம்சமே ஓண சத்ய என்று அழைக்கப்படும் தடபுடல் விருந்தாகும். 

உண்டறியணும் ஓணம் என்று கேரளாவில் கூறுவர். 

தலைவாழை இலைபோட்டு 15க்கும் மேற்பட்ட கூட்டுக்கறிகளுடன் விருந்து படைக்கப்படும். 

Thursday, August 27, 2015

ஸ்ரீ மகாலக்ஷ்மி விரதம்


நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சுர பூஜிதே
சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மகா மாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் வழிபட்டவளும், சங்கு, சக்கரம், கதை இவற்றைக் கையில் ஏந்தியிருப்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

நமஸ்தே கருடாரூடே கோலாசுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே

கருட வாகனத்தில் அமர்ந்தவளும் கோலாசுரன் என்னும் அசுரனுக்கு பயத்தைக் கொடுத்தவளும் சகல பாபங்களையும் போக்குபவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.


சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே

அனைத்தையும் அறிந்தவளும், எல்லோருக்கும் விரும்பிய வரங்களைத்தருபவளும், எல்லா துஷ்டர்களுக்கும் பயத்தைக்கொடுப்பவளும், அனைத்து துன்பத்தையும் போக்குகின்றவளுமான மாலக்ஷ்மி, உங்களுக்கு நமஸ்காரம்.

சித்தி புத்தி பிரதே தேவி புத்தி முக்தி பிரதாயினி
மந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே

சிந்தனை, புத்தி, அறிவு, போகம் இவற்றைத் தருபவளும், 
மந்திர வடிவானவளும், எப்போதும் ஒளிமயமாகத் திகழ்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதி சக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக சம்பூதே மஹாலஷ்மி நமோஸ்துதே

தொடக்கமும், முடிவும் அற்றவளும், முதல் சக்தியும், மஹேஸ்வரியும், யோகத்தினால் தோன்றியவளும், யோகத்தினால் அவதரித்தவளும், யோகத்துக்கும் பலமானவளான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்

ஸ்தூல சூக்ஷ்ம மகா ரௌத்ரே மகாசக்தி மகோதரே
மகாபாப ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே

கண்களுக்கு தெரிபவளும், புலப்படாதவளும், மிகுந்த ஆற்றல் உடையவளும், மகா பாவங்களைப் போக்குகிறவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

பத்மாஸன ஸ்திதே தேவி பரபிரம்ம ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா மஹாலஷ்மி நமோஸ்துதே
பத்மாசனத்தில் அமர்ந்தவளும் பரம் பொருள் ஆனவளும், பரமேஸ்வரியும், அகில உலகத்திற்கும் அன்னையுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா  மஹாலஷ்மி நமோஸ்துதே
வெண்ணிற ஆடை தரித்தவளும், பல வித அலங்கரங்களால் 
சிங்கரிக்கப் பட்டவளும்,  உலகம் முழுதும் பரவியிருப்பவளும் உலகங்களுக்கெல்லாம் தாயுமான மகாலக்ஷ்மி தேவியே 
உன்னை வணங்குகிறேன்.

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமந் நர:
ஸர்வஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா

மகாலக்ஷ்மி தேவியே உன்னைப் போற்றும் இந்த எட்டுத் துதிகளையும் மனப்பூர்வமாக தினமும் சொல்பவர் யாவும் வெல்பாராகவும்
 ராஜ்யங்களை அடைந்தாராகவும் இருப்பார்

ஏககாலே படேந் நித்யம் மஹாபாப விநாஸநம்
த்விகாலம் ய: படேந் நித்யம் தனதான்ய ஸமந்வித:
 ஒரு நாளில் ஒரு முறை இத்துதியைச் சொன்னால் சகல பாவங்களும் நீங்கும். இரு முறை சொல்வோர் இல்லத்தில் தன தான்யங்கள் சேரும். 

த்ரிகாலம் ய: படேந் நித்யம் மஹாஸத்ரு விநாஸநம்
மஹாலக்ஷ்மி பவேந் நித்யம் ப்ரஸந்ந வரதா ஸுபா

மூன்று முறை சொல்வோர் உன் அருளை முழுமையாகப் பெற்று  
தன் எதிரிகளை வெல்வார்.. அந்த இடத்தில் அன்னையே 
நிலைத்து நிற்பார்..
.