Sunday, August 23, 2015

ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்


நாம் நமது இரு கண்களாலும் பிரத்தியட்சகமாகக் காண்பது சூரியனையேயாகும். சிவாலயங்களில் சூரிய பகவான் தனித்தும், நவக்கிரகங்களுக்கு நாயகனாகவும் வீற்றிருக்கின்றார். ஏனைய ஆலயங்களில் நவநாயகர்களுக்கு நடுநாயகனாக வீற்றிருப்பதை நாம் காண முடியும்.

.‘ஓம் ஆதித்யாய நம’
என்னும் மந்திரம், ஆதவனின் அருளைப் பெற உதவும்  மந்திரத்தை ஒரு வளர்பிறை ஞாயிறு தினத்தன்று காலையில், சூரிய ஹோரை நேரத்தில், கிழக்கு நோக்கி அமர்ந்து, 108 முறை சொல்லி சூரிய பகவானை வணங்க வேண்டும்

ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்
ஆவணி மாதத்தில் சூரியன் சிங்க ராசியில் பிரவேசிக்கின்றார். 
ஆவணி ஞாயிறு சூரியனுக்கான விரத நாளாகின்றது. 

ஆவணி என்றால் ‘மாதங்களுக்கு எல்லாம் அரசன்’என்று பொருள்.‘சிங்கத்திற்கு (ஆவணிக்கு) இணையான மாதமும் இல்லை; சிவபெருமானைவிட மேம்பட்ட இறைவனும் இல்லை’என்கிறார் 
அகத்திய மாமுனி.
ஆதவனை வணங்குபவர்களுக்கு சுடர் மிகும்
 அறிவுடன் சுட்டும் விழிச்சுடராய் கண்பார்வையும் கிட்டும். 

மாறுபட்ட குணாதிசயங்கள் உள்ள பலபேரை ஒரே திசையில் வழி நடத்தி செல்லக் கூடிய தலைமை குணம் கிடைக்கும், 

நேர்மையான வழியை மட்டுமே மனசு எப்போதும் சிந்திப்பதால் நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும்,புவியில் யாருக்கும் அஞ்சாத வைர நெஞ்சமும் கிட்டும், 
எடுத்த காரியத்திலிருந்து சற்றும் மாறாத மன உறுதி கிட்டும். 

சொல்வாரும் உண்டு. நாராயணனுக்கே உரிய சங்கும், சக்கரமும் சூரியனுக்கு உண்டு என்பதால் நாராயணனைச் சூரியநாராயணன் என்று வணங்குகிறோம்..

 வேத சொரூபமான சூரியன் காலையில் ரிக் வேதமாகவும், 
நன்பகலில் யஜுர் வேதமாகவும், 
மாலையில் சாம வேதமாகவும் ஒளிர்கின்றார் சூரிய நாராயணர்.

சூரியன்  வெளிச்சம், வெப்பம், சூடு, உஷ்ணம் ஆகியனவற்றைத் தருகின்றார்.  சூரிய வெப்பத்தால் கடல், ஆறு, குளம் முதலானவற்றின் நீர் ஆவியாக மேலெழுந்து பின்னர் மழையாகப் பொழிவதனால் விவசாயம் மேம்படுகின்றது. நீர் விசையால் மின்சாரம் கிடைக்கின்றது. எனவே வாழ்வுக்கு நன்மைகள் பல கிடைக்கின்றன.

நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சியைக் காண்கின்றது. எனவே தான்  நமது முன்னோர் சூரியனை வழிபட்டு வருகிறோம்..

.சிவசூரியன். சிவபெருமானின் அஷ்ட மூர்த்தங்களில் ஒருவர் சிவபெருமானின் முக்கண்களில் ஞானக் கண்ணாக உள்ளவர்.
இதனால் சூரியனைச் சிவரூபமாக கொண்டு வழிபட்டு வருகின்றோம். சிவாலயங்களில்  தனிச் சந்நிதி உள்ள சிவசூரியனுக்குப் பூஜைகள் செய்த பின்னரே ஏனைய பூஜைகள் செய்யப்படுகின்றன. 

 ஆலயங்களிலும் நவக்கிரக சந்நிதானத்தில் நடுநாயகனாக 
உள்ளவர் சூரியனே ஆவார்.
சிவசூரியனுக்கு ஒரு முகம். இரு கைகளில் வெண் தாமரையை வைத்திருக்கின்றார். ஏனைய இரு கரங்களும் அபய, வரத ஹஸ்தங்களாக உள்ளன. சூரியன் ஏழு குதிரைகளைப் பூட்டிய குதிரை வண்டியில் சஞ்சாரம்செய்வார் என்பது வேதவாக்கு. அவர் மாதுளம் பழ நிறத்தவர்.
 விக்கிரக வடிவில் சூரியனை வழிபடும் நாம் தினமும்  இரு கண்களாலும் பார்க்கும் சூரியனை விரதம அனுட்டானங்களுடன் வழிபடுவது வழக்கம்.
வேதியர்கள் காலை, மத்தியானம், மாலை வேளைகளில் சந்தியாகாலமான  காலங்களில் சந்தியா வந்தனம்  செய்வர். 

சூரிய தர்ப்பணம் சிறப்பம்சம் கொண்டது. 

பெண்கள் நல்ல மணமகன் வேண்டியும், திருமணமானவர்கள் சுமங்கலி பாக்கியும் வேண்டியும் நோற்பது ஆவணி ஞாயிறுவிரத  நாளில் நாகர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட வேண்டும். புற்றுக்கு பால் ஊற்றலாம். அனந்தன், வாசுகி,குஷகாயன், அப்ஜன், மகரி அப் ஜன், கங்குபாலன்,கார்கோடன், குளிஜன், பத்மன் என்னும் ஒன்பது நாகங்கள் தெய்வத்தன்மை மிகுந்தவை. இந்த நாகங்களின் பெயர்களைச் சொல்லி,   கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படிவேண்டிக்கொள்ளலாம். 

ஆண்கள்  வேலை கிடைப்பதில் தடை, எடுத்த  செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க, இந்நாளில்விரதம் மேற்கொள்வர். 

பாம்புக்கிரகங்களான கேது, ராகுவின் அதிபதிகளான விநாயகர்,  துர்க்கையை மனதில் நினைத்து,செயல்பாடுகளில் உள்ள தடையை நீக்க பிரார்த்திக்க வேண்டும். 

அன்று பகலில் பால், பழமும், இரவில் எளிய  உணவும் சாப்பிடலாம். நாகர்கோவில் நாகராஜா கோவில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகிலுள்ள நயினார்கோவில் மற்றும் கொழுவூர்,  நாகப்பட்டினம், கும்பகோணம், திருநாகேஸ்வரம் ஆகிய ஊர்களிலுள்ள நாகநாதர் கோயில்களுக்குச் சென்று சுவாமியை வணங்கி வரலாம்.  அரசமரத்தடியிலுள்ள நாகர் சிலைகளைத் தரிசிக்கலாம்.

 ஆவணி மாதத்தில்தான் இளையான்குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. 

 சாதுர்மாஸ்ய விரதம் - சன்யாசிகள் நான்கு மாதங்கள் தொடர்ந்து ஓரிடத்தில் .  நதிதீரமாகவோ, புண்ணியத் தலமாகவோ  முகாமிடுவார்கள். 
 கோகுலாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி  திருநாளில் அர்த்த ராத்திரியிலே பிறந்தாலும் அஞ்ஞான இருளை அகற்றும் கீதையை உலகுக்கு வழங்கிய கிருஷ்ணபரமாத்மா . ஒளிதரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் . 
கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும். முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம். 

, காலை எழுந்தவுடன் குளித்து கிழக்கு நோக்கி ‘ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று கூறி மூன்று முறை வணங்கினால் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித் தருவான்

7 comments:

 1. அழகிய படங்களுடன் பதிவு சுவாரஸ்யம்.

  ReplyDelete
 2. ஞாயிறு போற்றுவோம்
  ஞாயிறு போற்றுவோம்

  ReplyDelete
 3. சூரியனைப் பற்றி அரிய தகவல்கள். பிரமிப்பாக உள்ளது. நன்றி.

  ReplyDelete
 4. வணக்கம் சகோதரி!

  ஞாயிறைப் போற்றிய பதிவும் படங்களும் அருமை!

  நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. ஆயிரம் கரங்கள் நீட்டி
  அணைக்கின்ற தாயே போற்றி!
  அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
  இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
  தாயினும் பரிந்து சாலச்
  சகலரை அணைப்பாய் போற்றி!
  தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
  துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
  தூயவர் இதயம் போலத்
  துலங்கிடும் ஒளியே போற்றி!
  தூரத்தே நெருப்பை வைத்து
  சாரத்தைத் தருவாய் போற்றி!

  ReplyDelete
 6. காசினி யிருளை நீக்கும் கதிரொளி வீசி எங்கும்
  பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை நல்கும்
  வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
  தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி!

  ReplyDelete
 7. ஞாயிறு பற்றிய சிறப்பான தகவல்கள்! நன்றி!

  ReplyDelete