Sunday, September 30, 2012

பிரம்மோற்சவ விழா


ஆண்டுதோறும் 9 நாட்கள் நடைபெறும்  சிறப்பு வாய்ந்த.பிரம்மோற்சவ விழா  நாளில் பிரம்மனே வந்து பெருமாளுக்கு விழா எடுக்கிறார் என்பது நம்பிக்கை. 
பிரம்மோற்சவ விழா நாளில் காலையும், மாலையும் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.
karuda vahanam
தினம் தினம் ஒரு அலங்காரம், புதுப் புது வாகனம் என ஊர்வலம் வரும் மலையப்பசுவாமியின் அழகைக் காண கண்கோடி வேண்டும். அத்தகைய சிறப்பு வாய்ந்த பிரம்மோற்சவம் கருடக் கொடியேற்றத்துடன் தொடங்குவது சிறப்பு....
 பிரம்மோற்சவ விழா எப்போதும் வருடத்திற்கு ஒரு முறைதான் வரும். இந்த வருடம், இரண்டு முறை வந்துள்ளது. 
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ நிறைவு விழா 9ம் நாளில்  கோயிலை ஒட்டியுள்ள "புஷ்கரணி' எனும் புனித நீர் குளத்தில் சக்ர ஸ்நானம் நடைபெறுவது கண்கொள்ளாக்காட்சி !!
 
சந்திரப் பிரபை வாகனம்.
முழுதும் நல்ல வெண் முத்துக்களால் அலங்காரம். 
தக தக என்று ஒளிர் விடும் வெள்ளிப் பிரபை. 
முத்துக் கொண்டை;
மல்லிகை மலர்களால் ஆன தண்டு மாலை;
எல்லாமே வெள்ளை, நம் வெள்ளை உள்ளத்தானுக்கு!! 
கையில் வெண்ணெய்க் குடம் கூட உண்டு.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்!"
"
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தில் 
 விஷ்ணு பிரம்மோற்சவ விழா 

Saturday, September 29, 2012

மாணிக்க விநாயகர்
மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே

மாணிக்க மணிக்குள்தானே மரகத ஒளி வீசி னாற்போலவும், 
மாணிக்க மாளிகைக்குள்ளே மரகதநிலை காணப் பட்டாற்போலவும், 
மாற்றுயர்ந்த பொன்னாலாகிய அம்பலத்துள் நின்று சிவன் ஆடுகின்ற திருக்கூத்தினை விரும்பி மனங்கனிந்து வணங்கினோர்களுக்கு விரும்பிய வரங்களைத்தரும்  முக்கண்ணனின் மூத்த புதல்வர் விநாயகர்... எல்லாவற்றிற்கும் மூலமாய் விளங்குவதால் விநாயகரே முழு முதற் கடவுள் 

எந்த கோயிலாக இருந்தாலும்  முகப்பில் பிள்ளையார் பெற்ற 
வரத்தின் படி பிள்ளையார் கோயில் இருக்கும்  முறை 
பிள்ளையார் கோவிலிலேயும் இருக்கிறது.

 மலையடிவாரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் மாணிக்க விநாயகரை தரிசித்து மலையேறலாம்...

 மலைக்கோயில் நுழைவாயிலில் சித்தி விநாயகர் எனும் பெயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர். மாணிக்கம் பிள்ளை எனும் பக்தர் நித்ய பூஜைகள் நடத்த தேவையான உதவிகளை செய்ததோடு வழிபாடு தொடர்ந்து நடக்கவும் ஆவன செய்த நினைவாக சித்தி விநாயகர் மாணிக்க விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்....

 ஒருநாளுக்கு இருமுறை அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

அனைத்து சதுர்த்தி தினங்களிலும் திருவீதியுலா நடைப்பெறுகிறது.

விபீஷணர் இராமரிடம் பெற்று வந்த அரங்கநாதர் விக்ரகத்தை விநாயகரிடம் அந்தண சிறுவன் வடிவிலிருந்த விநாயகரிடம் கொடுத்ததும் அதை அவர் பூமியில் வைத்து விட்டு மலை உச்சிக்கு ஓடி வந்து உட்கார்ந்து கொண்டாராம். காவிரியில் நீராடி முடித்த விபீஷ்ணன் விக்ரகத்தை எடுத்துப் பார்த்து முடியாமற் போகவே கோபம் கொண்டு சிறுவனை தேடிப் பார்த்தும் கிடைக்காமற்போகவே விநாயகர் தலையில் ஓங்கி குட்டியதாகவும், அரங்கநாதன் திருவரங்கத்திலேயே தங்கி விட்டதாகவும் ஒரு கதை உண்டு.உச்சி விநாயகரின் தலையில் குட்டு விழுந்ததற்கான பள்ளம் இன்றும் உள்ளது ஆச்சரியப்படுத்துகிறது.


  • விநாயகர் சதுர்த்தி அன்று மாணிக்க விநாயகர் மற்றும் உச்சி பிள்ளையாருக்கு 50 கிலோ பச்சரிசி, 50 கிலோ உருண்டை வெல்லம், 2 கிலோ எள், 1 கிலோ ஏலக்காய், சாதிக்காய், 6 கிலோ நெய், 100 தேங்காய் ஆகியவற்றை கொண்டு 150 கிலோ எடையில் ஒரே கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு நைவேத்தியமாக படைக்கப்படுகிறத
படிமம்:ROCK FORT.jpg

 

Friday, September 28, 2012

உயர்வற உயர்நலம் உடையவன்Srinivasa Perumal idols with flowers The Poolaip Poo (பூளைப் பூ) and Thorny Flowers
ஸ்வாமி தேசிகன் தம்முடைய ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்தில் பாதுகையின் பெருமையை மஹாலக்ஷ்மியுடன் ஒப்பிடும் போது -
“பத்மேவ மங்கள ஸரித்பாரம் ஸம்ஸார ஸந்ததே:|
துரித க்ஷேபிகா பூயாத் பாதுகா ரங்க பூபதே:||
பாதுகையானது பிராட்டியைப் போன்றது. எப்படியென்றால், ஆற்றுவெள்ளம் போன்று சுபங்களைப் பெருகச் செய்வதில், ஸம்சார சங்கிலியை அறுப்பதில், பாபங்களைப் போக்குவதில் இணையானது” என்கிறார். 

இத்தனை பெருமைகளையும் சக்திகளையும் தன்னகத்தே கொண்ட இந்த மஹாலக்ஷ்மியை, மக்கள் தங்கள், தங்கள் விருப்பம் பூர்த்தியடைய, எண் வகைச் செல்வங்களையும் பெற்று மகிழ உபாஸிக்கிறார்கள்.


பாதுகா ஸகஸ்ரம்  -புஷ்ப பத்ததி
இரத்தினக்கற்களால் பதிக்கப் பெற்ற பாதுகையே! உயர்ந்த ஐச்வர்யம் விரும்புவர்கள் இரண்டு அல்லது மூன்று துளசி இலைகளை உன்னிடம் சமர்ப்பித்து விட்டால் போதுமானது. 

அவர்கள் வரிசையாக நின்று அடைய வேண்டிய இந்திர பதவியை நேரடியாகவே அடைந்து விடுகின்றனர்.
Nagai Azhagiyaan 2 Paduka Sahasram Part 25
திருவரங்கன் ஸஞ்சாரம் செய்யும்போது அவன் மீது பூமாரி பொழிந்தபடி உள்ள மலர்கள் அவனது திருவடிகளில் உள்ள பாதுகையைச் சென்று அடைகின்றன. 


அத்தகைய பாதுகையை நான் சரணம் அடைகிறேன்.
perumal thiruvadi Paduka Sahasram Part 31

Thursday, September 27, 2012

ஸ்ரீ துக்காராம் சுவாமிகள்விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல .... புண்டலீக வரதே........ ஹரி விட்டலே...விட்டல விட்டல

பாற்கடல் நாயகனான ஸ்ரீவிஷ்ணு உத்தவரிடம்  பூமியில் அவதரிக்குமாறு நத்தைக் கூடு போல உள்ள சிறு வஸ்துவினுள்ளே  சிறு குழந்தையாக்கி அடைத்து மழை பெய்யும் காலத்தில் பூமியில் பீமாரதி நதியில் விழும்படி செய்தார்

பீமா நதியில் விழுந்த  சிப்பி விட்டல் விட்டல் என ஜபித்துக் கொண்டு நீரின் போக்கில் மிதந்து சென்றது. , பாண்டுரங்க நாமத்தை உச்சரித்தவர் உத்தவர் .

குழந்தை வரம் கேட்ட தாமாஜி என்ற விஷ்ணு பக்தர்கனவில் இறைவன் தோன்றி,மறுநாள் பீமா நதிக் கரையில் உனக்கு ஓர் ஆண் குழந்தை கிடைக்கும் என சொல்லி மறைதார்..

கடவுளின் பேரருளால் கிடைத்த அக்குழந்தைக்கு நாமா என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.அவரே நாமதேவர்...

ஸ்ரீ நாமதேவரின் மறுபிறப்பெனப் போற்றப்படும் ஸ்ரீ துக்காராம் சுவாமி அவர்கள். சைவ - வைணவ ஒற்றுமையையும் இறையில் வேற்றுமையில்லை என்பதையும் உணர்த்துகிறார்...

 ஸ்ரீ நாமதேவர் பாட விரும்பிய கோடிக்கணக்கான பாடல்களை 
ஸ்ரீ பாண்டுரங்கனே உவந்து எழுதியதாகவும், ஒரு குறிப்பிட்ட அளவே நாமதேவரால் தம் வாழ்நாளில் பாட முடிந்ததாகவும் மீதியைப் பாட இறைவனே அவரை ஸ்ரீ துக்காராம் சுவாமியாகத் தோன்றச் செய்தார் எனவும் நம்பிக்கை ....

தேவநகரத்தில் தானிய வியாபாரியாக வாழ்ந்து வந்த மிகச் சிறந்த தெய்வ பக்தரும், புண்யசீலருமான ஸ்ரீமாதவராவ் என்பவருக்கு மகவாகப் பிறந்தஸ்ரீ துக்காராம். 

பூர்வ ஜன்ம வாசைனையினால் இயல்பிலேயே பேரறிவு படைத்தவராகவும், சங்கீத ஞானம் கொண்டவராகவும், கவிதைகள் புனையும் ஆற்றலுடையவராகவும் விளங்கினார்

ஸ்ரீ துக்காராம் இறைபக்தியின் பொருட்டு குடும்பத்தை சரியாகக் கவினிக்காமல் தம் செல்வங்களனைத்தையும் தானம் செய்து வறுமையில் வீழ்ந்தார்..

 ஸ்ரீ மஹாலட்சுமியே ஒரு ஹரிஜனப் பெண்னாக வந்து கமலாபாய்க்கு
ஸ்ரீ துக்காராம் கொண்டிருந்த பக்தியின் அருமையையும் அதன் வலிமையையியும் உணரவைத்ததன் பின் கமலாபாயும் ஸ்ரீ துக்காராமுடன் சேர்ந்து பாண்டுரங்க சேவையில் தம் மனதைச் செலுத்தினார்.

 கமலாபாயும் பக்தியில் ஈடுபடவே இறைவனே பொறுப்புடன் அந்தக் குடும்பத்திற்கு வேண்டியதைக் கொடுத்து வந்ததுடன் தினமும் ஒரு அதிதி வேடத்தில் ஸ்ரீ துக்காராமுடன் வந்தமர்ந்தும் சில சமயங்களில் உருவமற்றவராகவும் வந்து உணவருந்தும் செய்தி ஊரெங்கும் பரவியது

கிஞ்சன்வாடி கிராமத்தில் வசித்து வந்த தீவிர கணேச பக்தரான வேதியர்
 " ஸ்ரீ துக்காராம் சுவாமியுடன் பாண்டுரங்கன் வந்து உணவருந்தவது போல் நம்முடன் கணேசர் ஏன் வந்து உணவருந்தவில்லை ? எனச் சந்தேகத்தில் ஆழ்ந்ததை ஞான திருஷ்டியால் அறிந்த ஸ்ரீ துக்காராம் சுவாமிகள் அவரைத் தேடி தாமே கிஞ்சன்வாடிக்குச் சென்று தங்களுடன் ஸ்ரீ பண்டரிநாதன் தினமும் வந்து உணவு உண்பது போல, என் உபாசனாமூர்த்தியான ஸ்ரீ கணேசரும் என்னுடன் உணவருந்தும்படி செய்யவேண்டும் "  என்ற விருப்பத்தை நிறைவேற்றினார்.....

 " பக்தவத்சலனான இறைவன் எப்போதும் தூய பக்திக்குச் செவிசாய்ப்பவன் . உள்ளன்புடன் அழைத்தால் அவரும் வந்து உம்மோடு உணவுண்பது உறுதி " என சுவாமிகள் கூறினார்.

ஸ்ரீ துக்காராம் அருகே ஸ்ரீ பாண்டுரங்கருக்கும் அந்த அந்தணர் அருகே 
ஸ்ரீ கணேசருக்கும் இலைகள் போடப்பட்டன.

வெகு நேரம் அந்தணர் அழைத்தும் ஸ்ரீ கணேசர் வராத நிலையில் 
ஸ்ரீ துக்காராம் சுவாமிகள், " கவலை வேண்டாம், கடலில் விழுந்த ஒரு பக்தரின் கப்பலை மூழ்காமல் காப்பாற்றவே கணேசர் சென்றிருந்தார்.
இப்போதுதான் திரும்புகிறார். அதுதான் தாமதத்திற்குக் காரணம் " என ஆறுதல் கூறினார்.

அவர்கள் உள்ளே சென்று பார்க்க கடலின் உப்பு நீர் சொட்டச் சொட்ட 
ஸ்ரீ கணேசர் உள்ளே இருந்தார்.

ஸ்ரீ துக்காராம் அவரை வேண்ட ஸ்ரீ பாண்டுரங்கருடன் தானும் வந்தமர்ந்து 
ஸ்ரீ கணேசர் உணவு உண்டார்.

 ஸ்ரீ துக்காராமை மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

இறைவனில் பேதமில்லை, இறைவனில் பெரிதில்லை சிறிதுமில்லை "

எம் இஷ்டதேய்வம் உம் இஷ்டதெய்வம் என நாம் பேசுவதேல்லாம் அன்பின் வெளிப்பாடே. இறை என்பது ஒன்றே ! அது தாய், நாமேல்லாம் அதன் சேய்.

ஸ்ரீ துக்காராம் இறைவனை பாண்டுரங்கனாக பாவித்து 
பக்தி செலுத்தினார் அவருக்கு இறைவன் பாண்டுரங்கனாகவே 
அருள் செய்தான்.

கிஞ்சன்வாடி அந்தணருக்கு அவர் விரும்பிய கணேச ரூபத்தில் 
அருள் புரிந்தார்.

 இவை அனைத்தும் பரம்பொருளின் அம்சங்களே அன்பதை உணர்வதே நன்மை தரும் - உணரவேண்டிய உண்மை "

இறைவன் உடலுக்கோ, மனதிற்கோ, புத்திக்கோ எட்டாதவனாயினும் தீவிர அன்பினாலும் பக்தியினாலும் அவனை அடைய முடியும்.

முதலில் மனிதன் தான் யார் என்பதை அறியவேண்டும். தமக்குள் பேதமில்லை என்பதை அறியவேண்டும். அதை அறிந்தவன் இறைவனுள் பேதமில்லை என்பதை மிகத்தெளிவாக உணர்வான்....

திருச்சூர் திருவிழா ...
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicU-fNjITibd6QbWU-9Ef5j3bLkakIySsAAIQ4qOC_1REOm3Rvk2h71eUA5vFejaEWMmi69QZuSh0it4e5JO-kkYjcYz6Q8dsT-0mKpWbGZrRr7wrJRW0g6mUcrmSSARvMnbCEUd-W0wTz/s400/dhyana_Siva.jpg

http://lh4.ggpht.com/_yq5PCW67MIQ/SEVKWm1gAeI/AAAAAAAAACM/q3z7QVl0K34/DSC_0223.JPG


  
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNBcNnEO-nlJgwTaiIUnuc4NWjhbhGnenZjhXlrAx6pT4wLpaREg0cxzWqyTWjCIqHv726pIZt81Y2_-LLbGucVVBNrY0B5fU-d8egruWhkBbgU0VooGMUHpnc7GE73PtQnu8aSfqHaow/s400/Vadakkumnathan-temple.jpg

 "திருச்சூருக்கு வந்தா திருச்சுப்போக (திரும்பிப் போக) மனசு வராது..." என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் !..
  
திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழா கேரளாவின் தனிச்சிறப்பு மிக்க கொண்டாட்டங்களில்  சிறப்பிடம் பெறுகிறது...

சிவ லிங்கத்தை மூடியுள்ளது நெய்யால் ஆன சில நூறு ஆண்டுகளாகச் சேர்ந்து பத்தடி உயரசிறு குன்று !!!
சந்திர கலைகளை வரிசையாக அடுக்கி, மின்னும் அழகு!
சந்ததம் மனத்திலிருந்து நீங்காது, மயக்கும்  அழகு!
http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T3_100.jpg

வடக்குநாதர் கோவிலின் முன்புறம் பூரம் திருவிழா நூற்றுக்கணக்கான செண்டை மேளங்கள் முழங்க, எண்ணிலடங்காத வாணவெடிகள் வர்ணஜாலம் காட்ட, அலங்காரம் செய்யப்பட்ட யானைகள் அணிவகுத்து வர...நடைபெறும்  மிகப்பெரிய திருவிழா...

'குடமாத்தம்' என்ற திருவிழா, குடைகள் வண்ண வண்ணமாக யானைகள் மீது பிடிக்க அடுக்கடுக்காக, மினுமினுப்பாக, குடைகள் விரித்துப் போட்டி நடக்க வேறுபாடு இன்றிக் கலந்து, எல்லோரும் சந்தோஷப் பரிமாற்றம் செய்து மகிழ்கின்றனர்!

எவ்வளவு மாற்றங்கள் கால ஓட்டத்தால் ஏற்பட்டாலும்,
அவ்வளவும் தாண்டி, மனதை நிறைக்கும் அருமையான திருவிழா !!

 http://img.dinamalar.com/data/images_news/tblgeneralnews_48553103209.jpg
உலகம் முழுவதிலும்  உள்ள பக்தர்களைப்  பரவசப்படுத்தும் குருவாயூரில் அமையப் பெற்றுள்ள பிரசித்தி பெற்ற  குருவாயூரப்பன் ஆலயம்  திருச்சூரில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் குருபகவானும், வாயு பகவானும் நிர்மாணித்ததாக ஐதீகம்...
 ஆலயத்தில் கோட்டையுடன் திகழும் மிகப் பெரிய மைதானம் உலகு புகழும் சிறந்த திருச்சூர் பூரம் விழாவில்,அழகு அலங்காரத்தில் யானைகள் வரிசை கூடும் இடம்!

திருச்சூர்:வடக்காஞ்சேரி உத்திராளிக்காவு அம்மன் கோவிலில் மாசி மாதம் பூரம் விழா http://img.dinamalar.com/data/images_news/tblgeneralnews_48553103209.jpg

 திருச்சூர் பூரம் விழா


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdNYqiLL7wBer99DGi8Ymkgss2KT4q3si4BVq1MfhfTG7gqEubQrMeD1u2aa8R5mxX3BY9YdZy5tHkG6ZiklIMyL5mG8PtUK8MNDUpAmyJ1SZkvSVw9hGxXwpwh2LS3KGcFp2G3iMONZWW/s1600/Thrissur+Pooram.jpghttp://bispage.net/trichurarchdioces.org/images/Trichur_top3.jpghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZqZ1Ut4KQcEJ36NujNaMzZ5-fsqeN9-wt_cwmdsGLwtGHyIrEuj6lMexHsQ4QixPpk00SvLcOxlOM-13yUlNELKAyKFXv_a9dahOhX3DuQYMajC_F09kPAUB0ZQ1VXIAFwmIF2XOakME/s1600/Trichur+paramekkave.jpghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGSaJ_CC7pPTDDCBEEoa3TGmAEoL846K916EcFLol-pETA2E9fRuZ7qoBcvMcfBZNRFwY9zTQgBj4sT0nyrrZTLxAXl14sPuiZGLsX4Y8MOlITDnMK_sl7gvxLECHT_juOz5WP6Fys-J8/s1600/kerala+kerala+thrissur+pooram+2011+exhibition+trichur+photos+pictures+india+trichur+pics+snaps+asia+live+thursday.JPG

Wednesday, September 26, 2012

ஸ்ரீ ஜெயின் ஸ்வேதம்பர் ஆலயம்..
Shri Nakoda Jain Temple

Jain temples,Palitana Gujarat
 Main Coridor Dilwara Jain Temples


கோவையில்  ரங்கே கௌண்டர் தெருவில் ஸ்ரீ ராஜஸ்தான் ஜைன ஸ்வேதம்பர் மூர்த்தி பூஜக்(உருவ வழிபாடு பூஜை) சங்கத்தினர் புனிதமான பரந்த பூமி வளாகத்தில் பிரமாண்டமான சித்திர வேலைபாடுகளுடன் குளிர்ந்த நிலவு போல் கண்ணை கவரும் மேற்கிந்திய அழகிய வெள்ளைநிற பிரகாசமான பளிங்கு கற்களினால் ஆகாயத்தை ஈர்க்கக்கூடிய வசீகரமான சிகரம் போல் ஜைன கோவில் நிறுவப்பட்டுள்ளது. 

நவீனமான ஆலயம ஜைனத்துவத்தின் கடவுள்களின் ஒருமித்த உருவங்களை பிரதிபலிக்கும் இந்து மதத்தின் மூர்த்திகளின் கண்காட்சி கருத்தை கொள்ளைகொள்கிறது... .ஜைன கோவிலின் சித்திர கலைகள் மனதை ஈர்க்கும்படியாகவும்,வாஸ்து கலைக்கு ஒரு இணையற்ற எடுத்துகாட்டாகவும் விளங்குகிறது. 


நவீன தேவாலயம் மூல நாயகன் பகவான் ஸ்ரீ சுபாஸ்ர்வநாத் சுவாமி  மக்களின் பிரகாசமான வாழ்வுக்கும் வளர்ச்சிகளும் அன்பை பொழிபவரக வீற்றிருக்கிறார்.பிரமாண்ட கோவில் 101 அடி நிளமும் 41 அடி அகலமும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.பஞ்ச உலோகத்தால் ஆன நவகிரஹ சிலைகளும் உள்ளது.கர்ப கிரஹதிற்கு வெளியே மூல நாயகன் ஸ்ரீ சுபர்ஸ்வநாத் பகவானின் அதிர்ஷ்ட தேவதை ஸ்ரீ மாதங்யக் மற்றும் அதிர்ஷ்ட தேவதை ஸ்ரீ சாந்தி தேவி ஆகிய இரண்டு அழகிய அமைதி அளிக்கும்  தெய்வங்கள் விற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்..

Jain Temple, CoimbatoreWorship in Jain Temple, CoimbatoreJain Temple, Coimbatore
DevoteDevotees at a Jain temple on the occasion of Mahavir Jayanti in Coimbatore 
Typical Incense Aisle in Grocery Store Delhi
Jain Parasnath Mandir - Belgachia in Kolkata, West Benga