Saturday, September 15, 2012

கணபதி சரணம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdchbNclpkB_STxZN3Dg22TkcSzzzWlpcfGgbJ_CSmTRSopibJY3bF6_m6h5g7KWlyWj974uM_EnUOMqPoDVZ6L8eXsN0-s1MQrYAJuhqZLyDi6jqucAUviT1fAgPmiWoUwe__bCxKdY4/s1600/4225226175_2c5f127d4d_o.jpg

http://theva.files.wordpress.com/2007/08/2003-issue2-article4-1.jpg
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு நான்
 தருவேன் கோலம் செய் துங்க கரிமுகத்து
 தூமணியே நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா!

ஈசன் மகன் ,அறுமுகனுக்கு  மூத்தவன்  கணபதியைத் துதித்த பின்பே
 எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.

விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர்  பலவித அவதாரங்களை எடுத்தார். 

 சிவன் மகனாக அவர் தோன்றியது ஒரு அவதாரம்தான். அற்பத் தாவரமான அருகம்புல்லையும்  அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை. 

பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.

கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். 

உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும். 

விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி. 

அருகம்புல்லை மாலையாகக் கட்டி விநாயகருக்கு அணிவித்து, அவருக்கு விருப்பமான பண்டங்களை செய்து படைத்து,
"இன்று போய் நாளை வா என்று சனியை எழுத வைத்துத் தந்திரத்தை கையாண்ட தலைவனைப் போற்றுகிறேன். ஏழரைச் சனியோடு எச்சனியும் விலகி என்றன் வாழ்வில் நலம் காண வரம் தருவாய் கற்பகமே" 
என்று கூறி வழிபட்டால் சனியின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் சிக்கல்களில் இருந்து விடுபட்டு அமைதி அடையலாம்.

ஸ்ரீ நடராசப் பெருமானின் ஆறு அபிடேகங்களில், ஆவணி மாத  வளர்பிறைச் சதுர்த்தியில் அனுட்டிக்கப்படும்  சதுர்த்தி  தினத்தில் நடை பெறும் அபிடேகமும் ஒன்றாகையால், நடேசர் தரிசனத்திற்கும் சிறந்ததாகும்.


Posted by sury Siva to மணிராஜ் at September 15, 2012 3:21 PM
YouTube - Videos from this email








17 comments:

  1. வாழ்வின் அச்சாணியே அறிவு தான்! அறிவற்றவனின் செய்கை அச்சாணி முறிந்ததற்கு சமம்! எண்ணித் துணிக கருமம்! என்பதற்கேற்ப நமது தவறுகளை சுட்டிக்காட்டியும் (தோல்வி), திருத்திக்கொள்ளவும், திருந்தி வாழவும் உதவும் எளிய பரம்பொருளான கண நாதனைக் குறித்த அழகிய பதிவினைப் பகிர்ந்த தங்களுக்கு நன்றி! அருமையானதொரு பகிர்வு!

    ReplyDelete
  2. ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை இந்தின்
    இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன்தனை ஞான கொழுந்தினை புந்தியில்
    வைத்தடி போற்றுகின்றேனே..

    ReplyDelete
  3. "இன்று போய் நாளை வா என்று சனியை எழுத வைத்துத் தந்திரத்தை கையாண்ட தலைவனைப் போற்றுகிறேன். ஏழரைச் சனியோடு எச்சனியும் விலகி என்றன் வாழ்வில் நலம் காண வரம் தருவாய் கற்பகமே"

    உங்களிடம் ஒரு கேள்வி. உண்மையில் புராணங்களில் விநாயகரை மட்டும் ஏழரைச் சனி நெருங்கியதில்லை என்று சொல்கிறார்கள். பிறகு ஆஞ்சநேயரையும் அவருடன் சேர்த்துக் கொள்கிறார்கள்.
    இன்னொரு தகவல் கேளவிப்பட்டேன்.விநாயகர் வியாசரிடம் மகாபாரதம் எழுத தன் தந்தத்தில் ஒரு பகுதியை உடைத்துக் கொடுக்கும் பொழுது அவரை சனிப் பற்றிக் கொண்டது என்று....

    அனுமன் மட்டுமே சனிபகவானால் தீண்டாமல் விட்டவர் என்பதாக சிலர் சொல்கிறார்கள்

    ReplyDelete


  4. ரசித்தேன்.
    ருசித்தேன்.
    பரவசமானேன்.
    பாடி மகிழ்ந்தேன்.

    பாலும் தெளிதேனும்
    நானளிக்க அந்த
    ஐந்து கரத்தினன்
    அருள் பெறுகவே

    இரண்டு பாசுரங்களையுமே
    இந்தக்கோவிலின் வாசலிலே
    அர்ப்பணிக்கிறேன்.

    வினாயகா !! உன்னை
    வினயத்துடன் பணிவோர்
    விக்னங்க்களைக் களைந்திடுவாய்.

    சுப்பு தாத்தா.
    இன்னும் சற்று நேரத்தில்
    தர்பாரி கானடா ராகத்தில்


    ReplyDelete
  5. முழுமுதற் கடவுள் பற்றி இனிமையான பகிர்வும், படங்களும்.

    ReplyDelete
  6. பாலும் தெளி தேனும் பாடல், மற்றும் ஐந்து கரத்தினை பாடல்கள் இங்கே ஒலிக்கின்றன
    கேட்டு விநாயகனின் அருள் பெறுங்கள்.
    சுப்பு தாத்தா.
    also at
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  7. விநாயகர் தனது புத்திசாலித்தனத்தால்..சனி பகவானை தோற்கடித்த இடம் எனக்கு மிகவும் பிடிக்கும்!

    முதல் படமும்..நான்காவது படமும் மனதிர்க்கு நிறைவை தந்தன!

    ReplyDelete
  8. முதல் கணபதி படம் தெளிவான அழகுடன் தேவையான வண்ணக் கலவையுடன் உள்ளது

    ReplyDelete
  9. தங்களின் பக்திமணம் கவிழும் பதிவுக்கு "சூரிசிவா" அவர்களின் தாலாட்டும் இசைஅருமை.

    ReplyDelete
  10. உரிய நேரத்தில் முழு முதற் கடவுளான விநாயகனை.... அழகு கொஞ்சும் விநாயகனை பார்த்து மனம் நிறைய மகிழ்ந்து நிறைவான நன்றியை சொல்கிறேன் தோழி. காலையில் வந்தாலும் இரவின் இறுதியில் வந்தாலும் மனம் நிறையும் பதிவுகள் உங்கள் தளத்தில் எப்போதும். அழகு... அழகு... புள்ள(ங்க)யார்.

    ReplyDelete
  11. தனக்கு மேலே ஒரு தலைவர் இல்லாதவர் வி - நாயகர்

    அருமையான படங்கள்.

    ReplyDelete
  12. விநாயகர் சதுர்த்திக்கான கொண்டாட்டங்கள் இப்பவே ஆரம்பமாகிவிட்டது.. என்ன ஒரு அழகு பிள்ளையாரின் வரலாறு எல்லோரும் அறிந்த ஒன்று என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்கும்போது திகட்டவில்லை...

    களிமண்ணால் செய்த பிள்ளையார் இதற்கு காரணம் மிக அருமை உண்மை கூட....

    அது மட்டுமல்லாமல் எல்லாவற்றிலும் பிள்ளையார் செய்வதும் உண்டு...

    மிக அருமையான அழகான சிறப்பான ஸ்வீட்டான எங்க செல்லக்குட்டி வினாயகர் படங்களும் அவரைப்பற்றிய பகிர்வும் அருமைப்பா...

    அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரிம்மா பகிர்வுக்கு...

    ReplyDelete
  13. மிகவும் அருமை...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  14. கணபதி சரணம்.

    சரணம் கணபதிக்கு.

    நல்ல பதிவு. படங்கள் எல்லாம் அழகு. விளக்கங்களும் அருமை.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete