Wednesday, February 27, 2013

அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆயுர் தேவி
 ஸ்ரீ ஆயுர் தேவி காயத்ரி : 

ஒம் மஹாதேவ்யை ச வித்மஹே 
பராசக்த்யை ச தீமஹி 
தந்நோ ஆயுர் தேவ்யை ப்ரசோதயாத் !! 


ஆயுர்தேவி தனம்தேஹி வித்யாம்தேஹி மஹேஸ்வரி 
சீமஸ்தம் அகிலான் தேஹி தேவிமே பரமேஸ்வரி 

தேவி எனக்கு நீண்ட ஆயுளை கொடு, 

ஆயுள் மட்டும் போதுமா அதனால் சுகமாக வாழத்தேவையான் செல்வத்தையும் கொடு 
Sri Laxmi By Vishnu108 On Deviantart
வெறும் செல்வத்தை கொடுத்தால் அதை தப்பான வழியில் செலவழித்து வீணாகி போகாமல் இருக்க நல்ல வழிகளை அறிந்துக்கொள்ளும் அறிவைக் கொடு. 

அதன் மூலமாக இந்த உலக வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடு.
 ஒன்பது கரங்களைத் தாங்கிய பராசக்தியானவள் சித்தர்களையும், மஹரிஷிகளையும் தம் எண் கரங்களிலேந்தி, ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாகக் கொண்டு அருள் பாலிக்கின்றாள். இந்த தேவி வழிபாடு மனித குலத்தின் அனைத்துத் துன்பங் களுக்கும் நிவாரணமளிக்கும் ஒரு முழுமையான வழிபாடாகும்.
Vishnu Laxmi By Vishnu108 On Deviantart


ஸ்ரீஆயுர்தேவியின் ஒன்பது கரங்களும் நவகிரக தத்துவங்களை விளக்குகின்றன. அன்னவாகனத்தைக் கொண்டவள் ஆயுர்தேவி. 

அவள் திருவடியில் இரண்டு சிம்மங்கள் பீடங்களாக அமரும் பேறு பெற்றுள்ளன.

மனிதனுடைய தேகத்திலும் நவகிரகங்கள் ஆட்சி கொண்டுள்ளன. 

ஆத்மா இதயக்கமலத்தில் சர்வேஸ்வரனாக வீற்றிருக்கிறது. 

இதனால் உடலைக் கோவில் என்கிறோம். சித்திர குப்தர் இந்த தேவியின் ஆக்ஞைப்படி, கர்மவினைகளையும், ஆயுளையும் நிர்ணயிப்பவர். 

இவர் இறைவனின் அற்புதப் படைப்பு. 

ஒவ்வொரு மனிதனும் தினமும் இரவில் உறங்கும்முன் அன்றைய செயல்களை சித்திரகுப்தரிடம் சமர்ப்பித்து தவறுகளுக்கு வருந்தி, நற்செயலுக்கு நன்றி கூறி, பிறகே உறங்கவேண்டும்.

ஸ்ரீசித்திரகுப்தர் வெறும் கர்மக் கணக்கு எழுதுபவர் என நினைப்பது கூடாது. மனிதனின் ஆத்மவிசாரத்திற்கு வித்திடுபவர் இவரே. 

தலைப்பாகையுடன் கையில் ஏடு, எழுத்தாணியோடு. ஸ்ரீஆயுர்தேவியின் திருவடிக்கருகே சித்திர குப்தர் அமர்ந்திருக்கிறார்- மூல மந்திரம் 

ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சுபாயை தேவ சோனாயை 
ஆயுர் தேவ்யை ஸ்வாஹா !!

 2) ஜயாம்ப ஜய ஸர்வாணி ஜய கெளரி ஆயுர்தேவி நமோ நமஸ்தே 
சிவகாம ஸுந்தரி நமோ நமஸ்தே 
அருணாசலேச்வரி நமோ மஹா கெளரீ நமோ நமஸ்தே !!

இமயமலைப் பகுதியிலும், ஸ்ரீமஹா அவதூத பாபா த்ரைலிங்க சுவாமி போன்ற அற்புத மகான்கள் தினமும் வழிபடுகின்ற பனிமலைக் குகையிலுள்ள ஸ்ரீதாராதேவி ஆலயத்திலும் ஸ்ரீஆயுர்தேவிக்கு சந்நிதி அமைந்துள்ளது என்றும்; குரு அருள் பெற்றவர்களால் மட்டுமே காண இயலும் என்றும் உபதேசித்திருக்கிறார் அகத்திய மகரிஷி.

Lakshmi Blue By Vishnu108 On Deviantart Images

13 comments:

 1. அருள் பாலிக்கும் ஸ்ரீ ஆயுர் தேவிக்கு அடியேனின் அன்பான வந்தனங்கள்.

  >>>>>

  ReplyDelete
 2. முதல் மூன்று படங்களும் லக்ஷ்மிகரமாக உள்ளன.

  அதுவும் இரண்டாவது ஜொலிக்கும் படம் வித்யாசமாக அசத்தலாக உள்ளது!

  >>>>>

  ReplyDelete
 3. ஸ்ரீ ஆயுர் தேவி காயத்ரி :

  ஒம் மஹாதேவ்யை ச வித்மஹே
  பராசக்த்யை ச தீமஹி
  தந்நோ ஆயுர் தேவ்யை ப்ரசோதயாத் !!

  ஸ்ரீ ஆயிர் தேவி பற்றிய காயத்ரி மஹா மந்திரம் தந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

  >>>>>>

  ReplyDelete
  Replies
  1. Can anyone guide me how to print this mantra?tq

   Delete
 4. நான்காவது படமும் கீழே கொடுத்துள்ள விளக்கமும் சிந்திக்க வைக்கிறது.

  //ஆயுர்தேவி தனம்தேஹி வித்யாம்தேஹி மஹேஸ்வரி
  சீமஸ்தம் அகிலான் தேஹி தேவிமே பரமேஸ்வரி !//

  தேவி எனக்கு நீண்ட ஆயுளை கொடு,

  ஆயுள் மட்டும் போதுமா?

  அதனால் சுகமாக வாழத்தேவையான் செல்வத்தையும் கொடு

  வெறும் செல்வத்தை கொடுத்தால் அதை தப்பான வழியில் செலவழித்து வீணாகி போகாமல் இருக்க நல்ல வழிகளை அறிந்துக்கொள்ளும்

  அ றி வை யு ம் கொடு.

  அதன் மூலமாக இந்த உலக வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடு!!

  ஆம் ஆயுள், செல்வம், அவற்றை பாதுகாக்கும் அறிவு எல்லாமே மிக முக்கியம் தான்.

  அவற்றை மறக்காமல் கிரமப்படி இங்கு தாங்கள் சொல்லியுள்ளது

  அழகோ அழகு!

  அறிவோ அறிவு!!

  மொத்தத்தில் சமத்தோ சமத்து!!!

  >>>>>>

  ReplyDelete
 5. //வழிபடுகின்ற பனிமலைக் குகையிலுள்ள ஸ்ரீ தாராதேவி ஆலயத்திலும் ஸ்ரீஆயுர்தேவிக்கு சந்நிதி அமைந்துள்ளது என்றும்;

  குரு அருள் பெற்றவர்களால் மட்டுமே காண இயலும் என்றும் உபதேசித்திருக்கிறார் அகத்திய மகரிஷி.//

  குரு அருள் கொஞ்சமாவது பெற்றுள்ளதால் மட்டுமே எங்களில் சிலருக்கு, இந்த இரகசியம் தங்கள் மூலம் அறியச்செய்யப்பட்டுள்ளது, இந்தப்பதிவின் மூலமாக.

  மிகவும் சந்தோஷம்.

  >>>>>>

  ReplyDelete
 6. வழக்கம் போல மிகச்சிறப்பான வித்யாசமான பதிவு.

  படங்களும் விளக்கங்களும் அருமை.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  ooooo

  ReplyDelete
 7. ஆயுர்தேவியைப்பற்றியும் சித்திரகுப்தனாரைப்பற்றியும் அழகாக எடுத்துக்கூறினீர்கள்.

  தெரிந்திருக்கவில்லை இவ்வரிய விடயங்களை இதுவரையில் நான்.

  அருமையான அழகான படங்கள். நல்ல பதிவு + பகிர்வு.
  மிக்க நன்றி சோதரி!

  ReplyDelete
 8. படங்களுடனான தமிழ் விளக்கம் சிறப்பு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. அறியாத அரிய விஷயங்கள் ஆயுர் தேவியை பற்றிய தகவல்களும் புகைப்படங்களும்!

  ReplyDelete
 10. வணக்கம்
  அம்மா
  அறியாத பல விடயங்களை உங்கள் படைப்பின் மூலம் அறிந்தேன் 9,3,2013 இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete