Sunday, March 31, 2013

வசந்தம் வீசும் ஈஸ்டர் திருநாள்


அன்பென்ற நதி மீது படகாகு அறியாத பேரின்ப கரை சேர்க்கும்
அன்பென்ற வில்லின் முன் இலக்காகுஅகம் எங்கும் படிந்துள்ள குறை நீக்கும்
அன்புக்கு ஈர்க்கின்ற பலம் உண்டு இழந்தாலும் மகிழ்கின்ற குணம் உண்டு
தன் துன்பம் பிறர் வாழும் உரமாகும் அன்புள்ளம் இறை தந்த வரமாகும்

அன்பையும், அருளையும் போதித்த இயேசு பெருமான் பகைவர் தமக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த இரக்கத்துடனும், கருணையுடனும் தொண்டுகள் புரிந்தார்.

இன்னல் நீங்கி இன்பம் கண்ட நன்னாளாகக் கிறிஸ்தவ  மக்கள் கொண்டாடும், ஈஸ்டர் திருநாள் ஞாயிற்றுக்கிழமை மிகுந்த
மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது.


நியாமும், சத்தியமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசு உயிர்தெழுதல் நிகழ்வு அமைந்துள்ளது.
Jesus Christ Resurrection clip art(clipart) gallery
உயிர்த்தெழுதல் என்பது மனித இனத்துக்குக் கிடைத்த கடவுளின் அன்பளிப்பு என்று கிறித்துவர்கள் நம்புகிறார்கள். 

ஈஸ்டர் கொண்டாட்டங்கள் . மனிதருள் உறைந்திருக்கும் மரணத்தை வெல்லும் சக்தியை நினைவுபடுத்தி வாழ்வைப் புதுப்பிக்கவும் ரணமாகிவரும் புவியின் புண்களை ஆற்றவும் அளிக்கப்படும் அறைகூவல்.

சிலுவையில் அறையப்பட்டு மரணித்த ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த வரவிற்காக நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள்.

அகத்தின் மரணத்தை வென்று நிஜ வாழ்வின் தாத்பர்யத்தை விளக்கும் உயிர்த்தெழுதல் அது.

அஞ்ஞானத்திலிருந்து விடுதலை பெற்று ஆன்மீக சுயத்தை உணர்த்திய சாகாவரம் அது.
ஈஸ்டர் மாதத்தில் விரதம் இருக்கும் கிருஸ்துவ மக்கள் தாங்கள் விரதகாலத்தில் செலவழிக்காமல் இருந்த பணத்தை ஏழைகளுக்கு அளிக்கின்றனர்.

இதனால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகை கொண்டாட முடிகிறது.
இந்த நன்னாளில் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இயேசு உயிர்தெழுத்தார் என்று மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கின்றனர்.
இயேசுபிரான் கடவுளைப் பற்றிய புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தினார். பாவங்களுக்குத் துணைபோகக் கூடாது என்பதைத் தனது வாழ்முறையால் உணர்த்தினார்.

தனது மக்களாலேயே மரண தண்டனை வழங்கப் பெற்று, வேதத்தின் கூற்றுப்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

இந்த நன்னாள் ஈஸ்டர் எனப் கொண்டாடப்படுகிறது.

இயோஸ்டன் என்ற வசந்த கால தேவதையின் விலங்கு முயல். வசந்த காலத்தில் மீண்டும் பிறப்பதை முட்டையால் அடையாளம் காட்டப்படுகிறது.  புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. வசந்த காலத்தில் தான்,  நிறைய பறவைகள் முட்டையிட்டு இன விருத்தியில் இருக்கும் ..


முட்டை அடைகாக்கப்பட்டு அதிலிருந்து புதிய உயிர் வெளிவருவது புதிய வாழ்வின் குறியீடாக கருதப்படுகிறது.

மிகவும் பாரம்பரியமான கிறிஸ்தவர்களால், ஈஸ்டர் முட்டை என்பது, விரதத்தை முடிப்பதன் கொண்டாட்டத்தில் மட்டுமன்றி, இயேசு மீண்டும் பிறந்ததற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது.

பாரம்பரியமாக, ஈஸ்டர் முட்டைகள் சிவப்பு நிறம் பூசப்பட்டு வருகிறது, அது இயேசு சிலுவையில் சிந்திய ரத்தத்தைக் குறிக்கிறது,

அதனுடைய கடின ஓடு கிறிஸ்துவின் மூடப்பட்ட கல்லறையையும், அதனை உடைப்பது, மரணத்திலிருந்து அவர் உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது.

முட்டை, கல்லறையின் குறியீடாகவும், அதனை உடைப்பதன் மூலம் வாழ்க்கை புதுப்பிக்கப்படுவது அல்லது மீட்டெடுக்கப்படுவது சுட்டிக்காட்டப்படுகிறது.

சிலுவையில் அறையப்பட்டு தியாகம் செய்ததன் மூலமாக உலகம் மற்றும் மனித இனத்தின் மீட்புக்காக இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தைச் சிவப்பு நிறம் குறிக்கிறது.

முட்டை மறுபிறப்பின் குறியீடாகும்
செயலற்று முடங்கியுள்ள அதில் புதிய வாழ்வு வைக்கப்பட்டிருக்கிறது.

 சாக்லேட் போன்ற உண்ணக்கூடிய பொருட்களால் ஈஸ்டர் முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த முட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு ஈஸ்டர் தினத்தன்று குழந்தைகள் கண்டறியுமாறு வைக்கப்படுகிறது.

அதிக முட்டைகளை கண்டறியும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

தொடர்புடைய இடுகை 
ஈஸ்டர் திருநாள் ..http://jaghamani.blogspot.com/2012/04/blog-post_07.html


Saturday, March 30, 2013

ஈஸ்டர் லில்லி
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஈஸ்டர் பண்டிகை நாட்களில் 
பூப்பதால்  ஈஸ்டர் லில்லி எனப் பெயர்பெயர்பெற்ற அழகு மலர் 

கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே 
பூக்கும் தன்மை உள்ளது. 

பூத்து 15 நாட்களுக்கு வாடாமல் அப்படியே இருக்கும். 
கிழங்கு வகையை சார்ந்தது.
ஈஸ்டர் முயலும், வண்ண முட்டைகளும், கோழிக்குஞ்சுகளும், 
லில்லி மலர்களும்  மறுபிறப்பின் சின்னங்கள்!

வெள்ளைப்பனி படர்ந்த பூமியாக, இலைகளையெல்லாம் பறிகொடுத்து விட்டு மொட்டை மரங்களாக, பச்சை என்பதே அடியோடு பறந்துவிட்ட நிலையில் , மெல்ல மெல்லத் துளிர்த்து, பச்சைகளை இழுத்து வருவதுதான் வசந்தம்.

ஈஸ்டர் பெருநாள் வருவதும்  பூமி தன்னைப் புதுப்பிக்க 
ஆரம்பிக்கும் வசந்த காலத்தில்தான்! 

 ஈஸ்டர் பெண் தெய்வத்தெய்வத்தைச் சுற்றித்தான் புதிய பிறப்பும், 
சூரிய வெப்பம் அதிகரிக்கும்  காலமும் சுழன்று வந்தது. 
எனவே  ஈஸ்டர் என்ற கொண்டாட்டம் தொடங்கியது ..
ஏராளமான குட்டிகளைப் போட்டு வேகமாகப் பல்கிப் பெருகுவது முயலின் சுபாவம். , பல்கிப் பெருகுதலையும்-அதாவது நிறைந்த வளச்சியைக் குறிப்பதுதான் முயல். ஆகவே முயல் ஈஸ்டரின் ஒரு சின்னமாக, விளங்குகிறது ..
ஈஸ்டர் பெருநாளுக்கு முன்பு வரும் தபசு காலத்தில் கிறீஸ்தவர்கள் மாமிசம் உண்ணுவதிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்கள். 

நீண்ட இடைவெளியின் பின்னர் முட்டையோ அல்லது மாமிசமோ உண்பதற்கு கிடைக்கும் முதல் வாய்ப்பு ஈஸ்டர் பெருநாள்தான்.
Friday, March 29, 2013

புனித வெள்ளி


தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது யூத நிலத்தினிலே!
சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே!

எத்தனை உண்மை வந்து பிறந்ததுஇயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வதுஇயேசுவின் வார்த்தையிலே!

வாழிய சூசை வாழிய மரியாள் வாழிய இயேசு பிரான்!
ஆழியும் வானும் உள்ள வரைக்கும் வாழிய தேவபிரான்!

ஏழைகள் பாவிகள் இரட்சக ராக எங்கும் நிறைந்தபிரான்!
ஆழ்தமிழாலே அவர்புகழ் சொன்னேன் துன்பங்கள் சேரவிடான்!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து தேவை நித்தியமே!

விண்ணர சமையும் உலகம் முழுவதும் இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவோமே!

(கவியரசு கண்ணதாசன் அவர்கள், எழுதிய 
"இயேசுகாவியம்"நூலின் எழுதியுள்ள பாக்கள்.)
இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற புனித வெள்ளி கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

வெறும் 30 வெள்ளிக் காசுகளுக்காக யூதாஸ் இயேசுநாதரை காட்டிக் கொடுத்த போதும், அதை புன்முறுவலுடன் பொறுத்துக் கொண்டார்
இயேசு நாதர்.

காட்டி கொடுத்தான் முப்பது வெள்ளி 
காசுக்காகவே கர்த்தர் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே 
இதை காணும் உள்ளம் தாங்குமோ
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே..!

கல்வாரி மலையில் உள்ள கொல்கொதா (கபாலஸ்தலம்) என்ற சிகரத்திற்குக் கொண்டு சென்று இயேசுவையும், கூடவே இரு குற்றவாளிகளையும் சேர்த்து சிலுவையில் அறைய உத்தரவிடப்பட்டது.

இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டது முதல் மூன்று மணி நேரத்திற்கு உலகை இருள் சூழ்ந்தது. இதை நினைவு கூறும் வகையில் இந்த மூன்று மணி நேரத்தை மையமாகக் கொண்டு மும்மணித் தியானம் என்ற பிரார்த்தனை, சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியும் தேவாலயங்களில் நடைபெறும்.

புனித வெள்ளி சிலவையில் அறையப்பட்ட இயேசு நாதர் 3 நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில், ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும்.

 உலகத்தை காக்க வந்த ரட்சகரான இயேசுநாதர், இந்த உலக மக்களுக்காக எத்தனையோ துயரங்களையும் தாங்கிக் கொண்டார்.

இயேசுநாதரை காவலர்கள் சிலுவையில் அறைந்தனர். சிலுவையில் அவர் அறையப்பட்ட போது உலகமே இருளில் சூழ்ந்ததாக பைபிள் கூறுகிறது. இந்த நாளைத்தான் புனித வெள்ளியாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் அனுசரிக்கின்றனர்
இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று  பகைவனுக்கும் கருணை காட்டினார் ...

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு