Monday, March 4, 2013

சந்தோஷம் வர்ஷிக்கும் சொர்ணாகர்ஷணபைரவர்
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரம்:

ஓம்,ஏம்,ஐம்,க்லாம்,க்லீம்,க்லூம்,ஹ்ராம் ஹ்ரீம்,ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத் தோரணாய,அஜாமிள பந்தநாய,லோகேஸ்வராய,
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மமதாரித்ரிய வித்வேஷணாய,
ஓம்,ஸ்ரீம்,மஹா பைரவாய நமஹ


சிவபெருமானின் மறுவுருவமாகத் திகழும் பைரவர்  எல்லா துன்பங்களிலிருந்தும்  உடனே காத்தருளி வேண்டும் 
வரங்களை வாரி வழங்குவதில் கருணைக் கடல்!


பைரவர் வழிபாட்டில் சிறந்ததாக கருதப்படுவது 
சொர்ண ஆகர்ஷண பைரவர்‘ வழிபாடு. 

பைரவர் ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், பிரத்யங்கிராதேவி ஹோமம் ஆகியவை நடத்தப்படும் தினம் சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், அஷ்ட லட்சுமிகளின் அருளும் கிடைக்கும் ... 

கடன் தொல்லைகள் நீங்குதல், வியாபார அபிவிருத்தி, வீடு&மனை வாங்கும் யோகம் போன்றவை ஏற்படும் என்றும் நம்பிக்கை...
புதுக்கோட்டையிலிருந்து விராச்சிலை என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் (லெம்பலக்குடி வழி), ‘தபசு மலை’ என்ற சிறு  மலையில் முருகப் பெருமான் தண்டபாணியாகக் காட்சி அளிக்கின்றார்.

இந்த முருகன் முனிவர்களாலும், சித்தர்களாலும் போற்றி வணங்கப்பட்டவர். சப்த ரிஷிகள் தவம் செய்ததால் இந்த மலைக்குத் ‘தபசு மலை’ என்ற பெயர் வந்துள்ளதாம்.. 

மலை அடிவாரத்தில் சப்தரிஷிகளின் சிலையும், பீடமும் மிகவும் சக்தி வாய்ந்ததாகக்  கருதப்படுகின்றன.
 தபசு மலையில் தனிச் சன்னதியில், ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர்  உடன் தேவியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.  . 
நான்கு திருக்கரங்கள். ஒரு கையில், பொன் குடமாகிய பூரண கும்பத்தை ஏந்தியுள்ளார். மறு கையால் சக்தியைத் தழுவிய நிலையில் உள்ளார். ஒரு கையில் உடுக்கை, நாகபாசம், சூலம். மறு கை அபய ஹஸ்தம். தேவியானவர் ஒரு கையில் தாமரைப் பூவை வைத்துள்ளார். மறு கையால் இறைவனைத் தழுவிய வண்ணம் திகழ்கிறார் ...

நரசிம்மரின் சினம் குறைய, திருமகள் அவர்முன் தோன்றி, மடியில் அமர்ந்தது போல, அவதார நோக்கம் நிறைவேறியும், சினம் குறையாத ஸ்ரீபைரவரை சாந்தப்படுத்த, அன்னை அவர் தம் மடியில் அமர்ந்ததாகக் கூறப்படுகிறது....இது போன்ற மூர்த்தம் அதிகம் காணப்படுவதில்லை. 

வேண்டுபவர்களுக்கு வேண்டியவாறு பொன்னையும் பொருளையும் வாரித் தருவார் என்பது ஐதீகம். அதானால் தான் சொர்ணாகர்ஷண பைரவர் என இவர் அழைக்கப்படுகின்றார். 

சிதம்பரத்தில் உள்ள பைரவர் சொர்ண கால பைரவர் என்றும், சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார். ஆனால் அது பெரும்பாலும் கால பைரவரின் தோற்றத்தை ஒத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அவரை வழிபட்டு வந்த தீஷிதர்கள் இரவில் வைக்கும் செப்புத்தகடானது, தினம் தோறும் காலையில் தங்கமாகக் காட்சி அளித்தது என்பது வரலாறு.

பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. 

சென்னையை அடுத்துள்ள அம்பத்தூரில் உள்ள மேனாம்பேடு என்கின்ற இடத்தில் ஓர் விநாயகர் ஆலயத்தில் சொர்ணாகர்ஷண பைரவர் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றார்.  

தமிழ்நாட்டில் உள்ள தாடிக்கொம்பு சௌந்திரராஜ பெருமாள் கோவிலிலும் சொர்ணாகர்ஷண பைரவருக்கு எனத் தனிச் சன்னதி பிரசித்தி பெற்றது ..

 செவ்வரளிப் பூக்களைக் கொண்டு பூஜை நடத்தப்படும் போதும்,பைரவர் திருமந்திரத்தை மனதில் பிரார்த்தித்து, கோரிக்கைகளை சொர்ண  ஆகர்ஷன பைரவரிடம் சமர்ப்பித்தால் பிராத்தனைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்கிறார்கள்.

சகல தோஷ நிவர்த்திக்கு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு வடை மாலை சாத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன், இவருக்கு நைவேத்தியமாக தயிர்சாதம் படைத்து வழிபடுவதும் சிறப்பு.


நியாயமான வழியில், நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருட்கள், நம்மிடமே தங்க அருள்புரியும் காலபைரவரது வாகனம் நாய்.

வாயில்லா ஜீவனான நாய் நன்றியுணர்வோடு சுற்றி வந்து வீட்டைப் பாதுகாப்பது போல, இவரும் நம் இல்லத்துக்கு பாதுகாப்பாக இருப்பார். தன்னை முழுநம்பிக்கையுடன் அண்டி வந்தவர்களைக் காவல் காப்பதில் காலபைரவர் ஈடுஇணை இல்லாதவர். 

தேய்பிறை அஷ்டமியன்று இவரை வழிபடுவது சிறந்தது. வழிபாட்டின்போது, எலுமிச்சம்பழத்தைப் பைரவரின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுவது விஷேசம் ...


நம் வாழ்வை துன்பம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்கும் ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. 

திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.

தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களை கொண்டு அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். 

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 தெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும்.

இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.

நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களை கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும். 
வியாபாரிகள் கல்லா பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.

தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு ஏற்ற நைவேத்தியம்: வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும். ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தன செழிப்பை தரும்.

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள். பௌர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும்.
 
இவ்விதம் ஒன்பது பௌர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும்.

இந்த தினத்தில் அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது. 

பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும். 


ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு விரதம் இருப்பது எப்படி?தேய்பிறை அஷ்டமி விரத வழிபாடு பலன்கள்

23 comments:

 1. இதுவரையில் கேள்விப்பட்டதில்லை. நல்ல தகவல்கள்.

  எனக்கு இப்போது ஸவர்ணம் அவசியமில்லை.

  ReplyDelete
 2. Very great post Rajeswari. Pictures are great too as usual. Thanks for the post.
  viji

  ReplyDelete
 3. திண்டுக்கல் தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது...

  படங்கள், விளக்கங்கள் அருமை அம்மா...

  ReplyDelete
 4. nice post i have given this link in my post about ashta bairavar

  ReplyDelete
 5. ”தபசு மலை’ பார்த்தது இல்லை. உங்கள் பதிவை படித்தவுடன் பார்க்க ஆவல். நாளை தேய்பிறை அஷ்டமி. இன்று மாலையிலிருந்து வந்து விடுகிறது அஷ்டமி. உங்கள் பதிவால் வெகு நாட்காளாய் போகாமல் இருந்த அஷ்டமி வழி பாட்டுக்கு போக ஆசை வந்து உள்ளது.
  அது தான் உங்கள் பதிவின் வெற்றி.

  படங்கள் எல்லாம் அழகு.
  நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. தபசுமலை ஆன்மிகவாதிகள் அவசியம் பார்க்கவேண்டியது . அந்த மலையை சுற்றிவரும்போது சித்தர்கள் இருப்பதை உணராலாம்

  ReplyDelete
 7. ஸ்வர்ணம் போலவே ஜொலிக்கும் பதிவு.

  மீண்டும் தாமதமாக வருகை தருவேன். மேலும் சில கருத்துக்கள் கூறுவேன்.

  >>> இப்போது நீண்ட இடைவேளை >>>

  ReplyDelete
 8. அறியாத அற்புதமான விஷயம். அழகிய படங்கள்...

  பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!

  ReplyDelete
 9. வீட்டிலேயே சொர்ண ஆகர்ஷன பைரவர் படத்தை வடக்கு முகமாக வைத்து வழிபடுகிறேன். தேய்பிறை அஷ்டமி பற்றிய தகவல்கள், சொர்ண ஆகர்ஷன பைரவரின் படங்கள் அனைத்தும் அருமை. தேய்பிறை அஷ்டமியில் ராகு காலம் வராதது விந்தையாக உள்ளது.

  ReplyDelete
 10. //சிவபெருமானின் மறுவுருவமாகத் திகழும் பைரவர் எல்லா துன்பங்களிலிருந்தும் உடனே காத்தருளி வேண்டும். வரங்களை வாரி வழங்குவதில் கருணைக் கடல்!


  பைரவர் வழிபாட்டில் சிறந்ததாக கருதப்படுவது

  ‘சொர்ண ஆகர்ஷண பைரவர்‘

  வழிபாடு.

  பைரவர் ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், பிரத்யங்கிராதேவி ஹோமம் ஆகியவை நடத்தப்படும் தினம் சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், அஷ்ட லட்சுமிகளின் அருளும் கிடைக்கும் ...

  கடன் தொல்லைகள் நீங்குதல், வியாபார அபிவிருத்தி, வீடு + மனை வாங்கும் யோகம் போன்றவை ஏற்படும் என்றும் நம்பிக்கை...//

  மிகவும் அழகான அருமையான தகவல்கள், இன்று, நம் தகவல் களஞ்சியத்திடமிருந்து. ;)))))

  >>>>>

  ReplyDelete
 11. //நான்கு திருக்கரங்கள். ஒரு கையில், பொன் குடமாகிய பூரண கும்பத்தை ஏந்தியுள்ளார். மறு கையால் சக்தியைத் தழுவிய நிலையில் உள்ளார். ஒரு கையில் உடுக்கை, நாகபாசம், சூலம். மறு கை அபய ஹஸ்தம். தேவியானவர் ஒரு கையில் தாமரைப் பூவை வைத்துள்ளார். மறு கையால் இறைவனைத் தழுவிய வண்ணம் திகழ்கிறார் ....... //

  பார்க்கவே மிகவும் அழகாக பரவஸம் தருவதாக உள்ளது, ஈசன் மடியில் தேவியுடன் ... அந்தப்படம்.

  ஸ்பெஷல் நன்றிகள்.

  >>>>>>

  ReplyDelete
 12. //நரசிம்மரின் சினம் குறைய, திருமகள் அவர்முன் தோன்றி, மடியில் அமர்ந்தது போல, அவதார நோக்கம் நிறைவேறியும், சினம் குறையாத ஸ்ரீபைரவரை சாந்தப்படுத்த, அன்னை அவர் தம் மடியில் அமர்ந்ததாகக் கூறப்படுகிறது.... இது போன்ற மூர்த்தம் அதிகம் காணப்படுவதில்லை. //

  இதுபோன்ற அரிய படங்களையும் தகவல்களையும் தேடித்தேடி, ஓடிஓடி சேகரித்து அளிக்க தாங்கள் இருப்பது எங்கள் பாக்யம் தான். ;)))))

  >>>>>>

  ReplyDelete
 13. //சிதம்பரத்தில் உள்ள பைரவர் சொர்ண கால பைரவர் என்றும், சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார்.

  ஆனால் அது பெரும்பாலும் கால பைரவரின் தோற்றத்தை ஒத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

  அவரை வழிபட்டு வந்த தீஷிதர்கள் இரவில் வைக்கும் செப்புத்தகடானது, தினம் தோறும் காலையில் தங்கமாகக் காட்சி அளித்தது என்பது வரலாறு.//

  மிகவும் தங்கமான தகவலாகத்தான் உள்ளது. ;)))))

  >>>>>>

  ReplyDelete
 14. //வாயில்லா ஜீவனான நாய் நன்றியுணர்வோடு சுற்றி வந்து வீட்டைப் பாதுகாப்பது போல, இவரும் நம் இல்லத்துக்கு பாதுகாப்பாக இருப்பார்.

  தன்னை முழுநம்பிக்கையுடன் அண்டி வந்தவர்களைக் காவல் காப்பதில் காலபைரவர் ஈடுஇணை இல்லாதவர்.

  தேய்பிறை அஷ்டமியன்று இவரை வழிபடுவது சிறந்தது.

  வழிபாட்டின்போது, எலுமிச்சம்பழத்தைப் பைரவரின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுவது விஷேசம் ...//

  மிகவும் ஏராளமான தகவல்களை தாராளமாக வாரி வாரி வழங்கியுள்ளீர்கள்.

  அத்தனைப் படங்களும் தகவல்களும் பார்க்கவும், படிக்கவும் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.

  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

  ooooo

  ReplyDelete
 15. கடைசி மூன்று படங்களும் அழகு.

  அதுவும் அந்தக்கடைசி படம் தூள்ள்ள்!

  படா ஜோராக இருக்குதூஊஊஊ.

  பளீச்சோ பளீச்சென்று கண்ணைப்பறிக்குதூஊஊஊஊஊ.

  ReplyDelete
 16. புதிய தகவல்கள் படங்களுடன் விரிவாக விளக்கிய விதம் சிறப்புங்க.

  ReplyDelete
 17. சொர்ண பைரவர் பற்றிய அபூர்வமான தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது.படங்களும் பதிவும் அருமை.

  ReplyDelete
 18. முற்றும் புதிய தகவல்கள்.
  மிக்க நன்றி. பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 19. வணக்கம்
  அம்மா

  நல்ல தகவல் அறியமுடியாத சில விடயங்கள் அறிய கிடைத்தது

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete
 20. அரிய தகவல்களுக்கு நன்றி தோழி.

  ReplyDelete
 21. மேற்கண்ட ப்ளாக்கில் உள்ள தங்கக் கவசத்துடன் அமைந்துள்ள ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரும் மற்றும் மூலவர் சொர்ண பைரவரும் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் உள்ள கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமைத்திருக்கும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தைச் சார்ந்தது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். விவரங்களுக்கு www.dhanvantripeedam.com
  www.danvantripeedam.blogspot.in

  ReplyDelete
 22. மேலே ப்ளாக்கில் வெளிவந்துள்ள தங்கக் கவசம் அணிந்த ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவரும், மூலவர் சொர்ண பைரவரும் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமைத்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தைச் சார்ந்ததாகும். மேலும் விவரங்களுக்கு
  www.dhanvantripeedam.com
  www.danvantripeedam.blogspot.in

  ReplyDelete
 23. enakku migavum pidithathu

  ReplyDelete