அண்ட ப்ரஹ்மாண்ட கோடி அகில பரிபாலனா
பூரணா ஜகத் காரணா சத்ய தேவ தேவ ப்ரியா
ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம்
வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரகா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கரா
சம்போ சம்போ சங்கரா
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5S673wliMgWROXpYUs9FL61qMeseYlgfVSKzZnHzR5WIqe4trI5tS9LYT4w4K3Uf6QSzEBuNqKo8mLrcG1U2b2GUJ6nVjYE3OQgie8TsAXubF0_2sZu3BBQx_m956FclbOQQhV0tNw6c/s400/Nataraja1.jpg)
- கோனேரி ராஜபுர நடராஜர் சிலையில் மனிதர்களுக்கு ஏற்படும் மருவும், விரல் நகங்களும் தத்ரூபமாக காணப்படுகிறது. இந்த நடராஜர் சிலைக்கருகில் உள்ள மண்ணை சிறிது எடுத்து வந்து சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று எண்ணியபடி ஒரு துணியில் சிறிது முடிந்து விட்டு வாசலில் தொங்க விட்டால் எந்த தடையுமின்றி வீட்டை மளமளவென்று கட்டி விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. ---கோளறு திருப்பதிகம்
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. ---கோளறு திருப்பதிகம்
கடலூர்மாவட்டம் அருகே அமைந்துள்ள நெய்வேலி நடராஜரின்
உயரம் 10 அடி 1 அங்குலம். அகலம் 8 அடி 4 அங்குலம்.
எடை 2 ஆயிரத்து 420 கிலோ. இதுவே உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை. இதை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற வைக்க முயற்சி நடக்கிறது. ஐம்பொன்னால் ஆன நடராஜரின் அருகிலுள்ள சிவகாமி அம்பிகையின் சிலை 7 அடி உயரமும், 750 கிலோ எடையும் கொண்டது.உயரம் 10 அடி 1 அங்குலம். அகலம் 8 அடி 4 அங்குலம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAWhyphenhyphen8JtStzXZFy7l0lMbkThS7GJtrdKdyHBGCEPucoHAXO6sZskr2eNnfGmIkxHdKK4B1sdOgAnzcOqfLpFnXf2qw3RvOO88NDpggpmoi9_xfcQUJnuk8E5gWelEL6KIoxl39ZuRUMoE/s400/21052011%2528018%2529.jpg)
போகர் நான்காயிரத்தில் கூறப்பட்ட விதிகளின்படி பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தி, ஐம்பொன்னால் இந்த நடராஜர் சிலையை வடித்ததாகச் சொல்கின்றனர். |
நடராஜர் கோயில் அமைக்கப்பட்ட பின் இப்பகுதி
"சிவபுரம்' என அழைக்கப்படுகிறது.
மற்ற தலங்களில் நடராஜரது பாதத்தின் கீழ் மாணிக்கவாசகர் இருப்பார்.
இங்கு திருமூலர் உள்ளார். வியாக்ரபாதரும், பதஞ்சலியும் நடராஜரின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர்.
சிவாலயங்களில் சிவனின் எதிர்ப்புறம் சூரியனும், சந்திரனும் அருள்பாலிப்பார்கள். இங்கு சூரியனும் பைரவரும் உள்ளனர்.
பத்து கரங்களுடன் அருளும் "தசபுஜ பைரவர்' இத்தலத்தின் சிறப்பம்சம்.
தசபுஜ பைரவர்
சனிபகவான் தனி சன்னதியில் அருளுகிறார்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு சொந்தமான கோயிலை பன்னிரு திருமுறை வளர்ச்சிக்கழகம் நிர்வகித்து வருகிறது.
நால்வர் நற்பணி மன்றம் என்ற அமைப்பு பக்தர்களுக்கு சேவை செய்கிறது.
திங்கள்கிழமைகளில், மாலை 5.30 மணிக்கு நடராஜர் முன்பு கூட்டு பிரார்த்தனை செய்து, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரசாதம் தரப்படுகிறது.
நாயன்மார்களின் குருபூஜை தினத்தன்று அபிஷேகமும், அன்றிரவு நாயன்மார் புறப்பாடும், அவர்களது வாழ்க்கை வரலாறு குறித்த சொற்பொழிவும் நடக்கிறது.
சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் இங்கு வந்து சிறப்பு அர்ச்சனை செய்கிறார்கள்.
மன அமைதி வேண்டுபவர்கள் இங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து நிம்மதி பெறுகிறார்கள்.
"தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என அவ்வைப்பாட்டி கூறியது போல, சிவபெருமான் தன்னை வணங்குவதை விட, தன் அடியார்களை வழிபடுவதையே பெரிதும் விரும்புவார்.
அதன் அடிப்படையில் 63 நாயன் மார்களுக்கான தனிக் கோயில் அமைந்துள்ள தலம்.
நாயன்மார்களுக்கு தனிக்கோயில்
சிவாலயங்களில் பிரகாரத்தில் வீற்றிருக்கும் நாயன்மார்கள் இங்கு 9 கலசங்களுடன் "திருத் தொண்டர் திருக்கோயில்' என்ற பெயரில் உள்ள தனிக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.
பக்தர்கள் தாங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய நாயன்மார்களை பூஜை செய்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இங்கு விநாயகர், சந்திரசேகரர், பார்வதி, மாணிக்கவாசகர், சேக்கிழார் மற்றும் தொகை யடியார்களுக்கும் சிலைகள் உள்ளன.
பளிங்கு சபை :நடராஜருக்கு சிதம்பரத்தில் பொற்சபை, மதுரையில் வெள்ளிசபை, திருவாலங்காட்டில்ரத்தினசபை, குற்றாலத்தில் சித்திரசபை, திருநெல்வேலியில் தாமிரசபை என பஞ்சசபைகள் உண்டு. இங்குள்ள நடராஜர் ஆடும் சபை பளிங்கு கற்களால் ஆனது.
எனவே, இத்தலம், "பளிங்கு சபை' என அழைக்கப்படுகிறது.
சிவலிங்கத்தில் விபூதிப்பட்டை: நடராஜர் சன்னதியின் மேற்கே செம்பொற்சோதி நாதர் சன்னதி உள்ளது. இதன் நெற்றியில் மூன்று கோடுகள் விபூதிப் பட்டை போல் அமைந் திருப்பதை, அபிஷேகத்தின் போது காணலாம்.
சுற்றுப்பகுதியில் விநாயகர், அறம்வளர்த்த நாயகி, அஷ்டபுஜ துர்க்கை, தென்முகக்கடவுள், அண்ணாமலையார், துர்க்கை, வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர்.
அண்ணாமலையார்,
துர்க்கை
தவம் செய்யும் நவக்கிரகம்: இங்குள்ள நவக்கிரக மண்டபம் வித்தியாசமா அமைந்துள்ளது.
ஒரே கல்லால் ஆன வட்டவடிவ தேரில் சூரியன் நடுவில் தாமரை வடிவிலும், மற்ற கிரகங்கள் எட்டுத்திசையை பார்த்தபடி, அமர்ந்த தவக்கோலத்திலும் உள்ள தேரை தேர்ப்பாகன் ஓட்ட, ஏழு குதிரைகள் இழுத்த நிலையில் உள்ளது. தேரைச்சுற்றி அஷ்டதிக் பாலகர்கள் உள்ளனர்.
ஒரே கல்லில் நவக்கிரகம்சூரியன்
ஆராய்ச்சி மணி:கோயில் நுழைவு வாயிலின் கிழக்கே ஆராய்ச்சி மணியும், மனுநீதி முறைப்பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கள் தேவைகளை, எழுதி, பூஜை நேரத்தின் போது பெட்டியில் போட்டு பின் மூன்று முறை மணியை ஒலிக்கச்செய்கிறார்கள்.
இந்த மனுக்கள், தினமும் காலை பூஜையின் போது, தீட்சிதரால் நடராஜர் முன் ரகசியமாக படிக்கப்பட்டு பின் எரிக்கப்படுகிறது.
கோரிக்கை நிறைவேறியதும், மீண்டும் நன்றிக்கடிதம் எழுதி பெட்டியில் போட்டு செல்கின்றனர்.
ஆராய்ச்சிமணிபக்தர்கள் தங்கள் தேவைகளை, எழுதி, பூஜை நேரத்தின் போது பெட்டியில் போட்டு பின் மூன்று முறை மணியை ஒலிக்கச்செய்கிறார்கள்.
இந்த மனுக்கள், தினமும் காலை பூஜையின் போது, தீட்சிதரால் நடராஜர் முன் ரகசியமாக படிக்கப்பட்டு பின் எரிக்கப்படுகிறது.
கோரிக்கை நிறைவேறியதும், மீண்டும் நன்றிக்கடிதம் எழுதி பெட்டியில் போட்டு செல்கின்றனர்.
விதியை வெல்வது எப்படி? :மனிதர்களுக்கு பணக்கஷ்டம், மனக்கஷ்டம், நோய், வறுமை என பலவகையான கஷ்டங்கள் ஏற்படும்.
எல்லாம் விதிப்படி நடக்கிறது என நொந்து கொள்வார்கள்.
ஒவ்வொரு வரும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபட, அவற்றிற்குரிய பதிகங்களை பாடினால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதற்கு வசதியாக சம்பந்தப்பட்ட பதிகங்கள், அவரவர் ராசிக்கேற்ப கோயில் பிரகார சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன.
கோயிலுக்கு கிழக்கே அமைந்துள்ள திருமுறை அரங்கத்தில், மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமைகளில் திருவாவடுதுறை ஆதினத்தின் சார்பில் சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி நடத்தப் படுகிறது.
இலவச தேவார வகுப்புகள், திருமுறை விளக்க வகுப்புகள், மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி ஆகியவை இந்த அரங்கத்தில் நடத்தப் படுகின்றன. திருமுறைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெல்லும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
தமிழை ஆராய்ச்சி செய்பவர்களும் இங்கு வருகின்றனர்.
மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தை சிதம்பரம் கோயிலில் சிவபெருமான் எழுதி,""மாணிக்கவாசகன் சொல்லச்சொல்ல திருவாசகம் எழுதியது திருச்சிற்றம்பலமுடையான்' எனக் கையெழுத்திட்டு நடராஜர் சன்னதியில் வைத்தார்.
இதன் அடிப்படையில் இத்தலத்து நடராஜருக்கு,
"அழகிய திருச்சிற்றம்பலமுடையான்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நடராஜர் இடதுகாலை தூக்கி ஆட, அருகே அவரது நடனத்திற்கேற்ப கையில் தாளத்துடன் அன்னை சிவகாமி "ஓசை கொடுத்த நாயகி' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
thermal station
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDHtBJx0awZsV-8U-0IbByYKo9mc__9K-tzHwvNqdxc8OVX96j4Tns6f3RUgo8ls1xm1k8pZ1c4G_jwLEfVP8XijJcbATwRDKJuHdLz6XzM9Tp5bsWuKrOz68qzPrniYq_0g-esIh44sg/s400/nlc.jpg)
Chidambaram Nataraja
நவரத்தினத்தாலான கவசத்தை, குஞ்சிதபாதத்துக்குச் திருவாதிரை நாளன்று காஞ்சிப் பெரியவர் அளித்துள்ளார்...
ஸ்ரீ நடராஜப் பெருமான் பூஜையில் அணிவிக்கப்படும் ஸ்ரீ குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு, நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படுவது.. குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன், மோட்சம் கிடைக்கும்.
ஸ்ரீ நடராஜப் பெருமான் பூஜையில் அணிவிக்கப்படும் ஸ்ரீ குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு, நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படுவது.. குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன், மோட்சம் கிடைக்கும்.
குஞ்சிதபாதத்தை தரிசிக்க ஆவல்கொண்ட மஹா பெரியவாளுக்கு சிதம்பரம் நடராஜருக்கு பூஜை செய்யும் தீட்சிதர்கள் பெரியவரை தரிசித்து பிரசாதமாக அளித்த குஞ்சிதபாதத்தை எடுத்து, தலையில் வைத்துக்கொண்டார்.
குஞ்சிதபாதத்துடன் காட்சியளிக்கும் மஹா பெரியவாளின் படம் நோய் நீக்கும் அற்புத தரிசனம் ஆகும்..
"தேடி வந்த சிதம்பரம்'ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNoC1UozhGov2jxZPjvhrqRtCOTxt7iRhus1pq_yOGIvKrYVH-cBmpZ-pqvlaF5EMyMW8h7vd9roF-R2VvKdzMlwTBQxtQbgW3MzfjRd0rdOZCtDaA5AdQ74WgEpwSSp4gPEM91_e4i5k/s640/nataraja2.jpg)
அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட ...... அவளோடு அன்று
அதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாளம் .....அவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட ...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி ...... வரவேணும் -முருகா ....