Thursday, June 7, 2012

கோலாஹல அன்னை கொல்லூர் மூகாம்பிகை.


ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜஹத் காரணி நீ பரிபூரணி நீ
ஒரு மான்மழுவும் சிறு கூன் பிறையும் 
சடை வார் குழலும் விடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே 

இட பாகத்திலே ஜகன் மோகினி நீ சிம்மவாகினி நீ


சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் 
ஷன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் 

பூங்கழலே மலை மாமகளே அலை மாமகள் நீ கலை மாமகள் நீ


ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த 
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள் 
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ

வேண்டியதை வேண்டியபடி அருளும் முத்தேவியரின் வடிவில் அம்பிகை பத்மாசனத்தில் அமர்ந்தபடி கைகளில் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கிறாள் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அம்மன் வடிவமான அன்னை கொல்லூர் மூகாம்பிகை.

தவம் பல புரிந்து சிவனிடம் வரங்கள் பெற்ற மூகாசுரன். வரங்களின் பயனாக வந்த செருக்கால் யாவரையும் துன்புறுத்த மூகாசுரனை அழிக்க விசேஷ சக்திகள் வேண்டும் என்று கோல மகரிஷி கூறிய ஆலோசனை யின்படி, முப்பெருந்தேவியரின் சக்திகளை ஒன்றிணைத்து  ஒரு  அம்பிகை உருவாக்கப்பட்டாள். 


அம்பிகையின் தீரம் அசுரனை அழித்தொழித்தது. தன் மரணத் தருணத்தில் மூகாசுரன் வேண்டிக்கொண்டபடி அம்பிகை, அசுரனின் பெயராலேயே- மூகாம்பிகை என்ற பெயரில் அழைக்கப்பட்டாள்.....

ஆதிசங்கரர் முதன்முதலில் இங்கு வந்தபோது கோல மகரிஷி வழிபட்ட சுயம்பு லிங்கம் மட்டுமே இத்தலத்தில் இருந்ததாம். 

அங்கிருந்த மேடையில் அமர்ந்து சங்கரர் தியானம் செய்தபோது, லிங்கத்தில் அம்பாள் அரூபமாக அருள்பாலிப் பதை உணர்ந்தார். 

தியானத் தின்போது  அம்பாள் மூகாம்பிகையாக அவருக்கு காட்சியளித்தாள். அந்த உருவத்திலேயே மூகாம் பிகை சிலை வடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட் டது.


ஸ்வரணரேகா லிங்கத்தின் பின்னால்,சற்று இடைவெளி விட்டு ஆதிசங்கரர் சக்தி மிகுந்த ஸ்ரீ சக்கரம் ஒன்றைப் பதித்தார்.

அந்தச் சக்கரத்தில் அறுபத்து நான்கு கோடி 
தேவதைகளை அவாஹனம் செய்தார்.

ஸ்ரீ சக்கரத்தின் மீது அன்னையின் ரூபத்தை நிறுவினார்.இங்கு ஆலய வழிபாட்டு முறைகளையும்  ஆதிசங்கரரே வகுத்து கொடுத்தார்

ஆதிசங்கரர் நாற்திசைகளிலும் அத்வைத மடங்களை நிறுவி தன் சீடர்களி டம் ஒப்படைத்து விட்டு இந்தியா எங்கும் பயணம் செய்து வந்தார். 

ஆதிசங்கரர் கர்நாடகாவில் பயணம் செய்தபோது தியானத்திலிருந்தார். 


அப்போது அம்பாள் அவர்முன் தோன்றி அருளாசி வழங்கினாள். 

அம்பாளின் எழிலில் அகமகிழ்ந்த சங்கரர், ""தங்களது உருவத்தை நான் நாள்தோறும் வணங்க விரும்புகிறேன். எனவே கேரளாவிலுள்ள காலடியில் உங்களது உருவத்தை பிரதிஷ்டை செய்ய அருளவேண்டும்'' எனக் கேட்டார்.

அம்பாளுக்கோ அந்த இடம்விட்டு நீங்க மனமில்லை. என்றாலும் பக்தனின் மனம் கோணக்கூடாதல்லவா! 

எனவே சங்கரரிடம் ஒரு நிபந்தனையை முன்வைத்தாள்.

 ""என்னுடைய உருவத்தை நீ காலடிக்குக் கொண்டு செல்லலாம். ஆனால் இடையில் எங்கும் திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படித் திரும்பிப் பார்க்க நேர்ந்தால் அந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்துவிட வேண்டும்.''
ஆதிசங்கரரும் அதை ஏற்றுக்கொண்டு  அந்த மலையிலிருந்து அம்பாளின் உருவத்துடன் கீழிறங்கினார். 

அவர் மலையடிவாரத்தை அடைந்ததும், அம்பாள் தனது கொலுசை அசைக்க, ஒரு மதுரமான ஒலி கேட்கிறது. 

இதில் தன்னை மறந்து திரும்பிப் பார்த்துவிட்டார் 

ஆதிசங்கரர். எனவே அம்பாளிடம் வாக்களித்தபடி அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்தார். அந்த இடமே கொல்லப்புரா என்ற கொல்லூராகும்.


அம்மன் மூன்று கண்களுடன் காணக் கிடைக்காத கோலத்தில் காட்சியளிக்கிறாள். 

மூகாம்பிகையின்  இருபுறத்திலும் ஐம்பொன்னாலான காளி, சரசுவதி சிலைகள் உள்ளன.

மூலஸ்தானத்தில உள்ஜோதிர் லிங்வடிவத்திலேயேதான் தாய் 
மூகாம்பிகையாக ..பிரம்மனும்விஷ்ணுவும்மகேஸ்வரனும் 
ஸ்ரீசக்கரத்தில் வழிபடப்படுவது போல ஜோதிர்லிங்கத்தில்  
ஆதி சக்தி அருட்காட்சி பொழிகிறது..


கோவிலுக்கு மேற்கே காலபைரவர், உமாமகேஸ்வரி சந்நிதிக்கு இடையே சௌபர்னிகா ஆறு ஓடுகிறது. . 

64 வகை மூலிகைத் தாவரங்களின் சக்தி  நீரில் காணப்படுவதால், அதிகாலை நேரத்தில் இதில் நீராடினால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.

souparnika


Kollur Mookambika
தினமும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 
அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. 

வெள்ளிக்கிழமைதோறும் கோவில் வளாகத்தில் ஆயிரத்தெட்டு விளக்குகள் கொண்ட தீப மரத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. 

 கருவறையைச் சுற்றியும் அகல் விளக்குகள் அமைக்கப்பட்டு, 
தீப ஒளியால் கருவறை பிரகாசிக்கிறது. 

அர்த்த ஜாம பூஜையின் போது அம்பாள் கோவிலினுள் தங்க ரதத்தில் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். 

அம்பாளின் பிராகார வலத்தை தேவர்களும் 
கண்டு வணங்குகிறார்கள் என்பது ஐதீகம். 


இரவு பூஜையில் சுக்குநீர் வழங்கப் படுகிறது. 
அதை அருந்துபவர்களை நோய் அண்டாது. 
அவர்கள் மனத்தெம்பும், புத்திர பாக்கியமும் பெறுவார்கள். 

ஆதிசங்கரருக்கு உடல்நலமின்றிப் போனபோது அம்பாளே சுக்குநீர் வைத்துத்  தந்ததாகவும், அந்த ஐதீகத்தின் தொடர்ச்சியாகவே இது வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

விஜயதசமி வித்யாதசமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. 

தங்களுடைய குழந்தையின் கல்வியை இத்திருத்தலத்திற்கு வந்து தாய் மூகாம்பிகையை வணங்கியே துவக்கி வைக்கின்றனர். 

அதனால்தான் விஜயதசமி, வித்யாதசமி என்றழைக்கப்படுகிறது.


நவராத்திரி, தீபாவளி, சரசுவதி பூஜையன்று மூகாம்பிகை சந்நிதியில் உள்ள சரஸ்வதிதேவி பக்தர்களின் தரிசனத்திற்காக வெளியே கோலாஹலமாய்  பவனி வருகிறாள்.

பொதுவாக கிரகண நேரத்தில் கோவில்கள் நடை திறப்ப தில்லை. 
ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் கோவில் திறந்திருப்பதோடு 
பூஜைகளும் நடைபெறும்.

 கோவை யிலிருந்து நேரடியாக கொல்லூருக்கு பேருந்துகள் உள்ளன..சென்னையிலிருந்து மங்களூருக்கு  ரயில் மூலம் சென்றால், அங்கிருந்து கொல்லூ ருக்கு பேருந்து வசதி இருக்கிறது.


temple pics

mookambika temple

kollur temple

 
   35 comments:

 1. அதி அற்புதத் திருத்தலம். அகிலத்திற்கு நன்மை செய்ய வேண்டி அவதரித்த , அதி அற்புத அம்சமான அன்னையின் திருத்தலம் பற்றிய பதிவு அருமை!

  சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. ”கோலாஹல அன்னை கொல்லூர் மூகாம்பிகை” பற்றிய பதிவு அருமையாக உள்ளது. நாளை வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற பதிவு. முழுவதுமாக நிறுத்து படித்துவிட்டு, மீண்டும் வருவேன்.

  ReplyDelete
 3. புகைப்படங்கள் அனைத்தும் ரம்யமாக கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வகையில் உள்ளது .. :)

  ReplyDelete
 4. என் பேரனுக்கு எழுத்றிவித்த நினைவுகள் அலை மோதுகின்றன. இயற்கை எழில் சூழ் இடம். AS USUAL YOUR POSTINGS ARE GOOD.வேறென்ன கருத்து சொல்ல முடியும்.

  ReplyDelete
 5. ஜனனி ஜனனி

  ஜகம் நீ அகம் நீ

  ஜஹத் காரணி நீ

  பரிபூரணி நீ

  என்ற அழகான பாடலுடன் ஆரம்பித்திருப்பது மிகவும்
  இனிமையாக உள்ளது.

  ReplyDelete
 6. SRI MOOKAMBIKA AMMANAVARU

  என்ற எழுத்துக்களின் மேல் உள்ள படம்

  நல்ல அழகாகவும் தெளிவாகவும்

  உள்ளது.

  ReplyDelete
 7. //வெள்ளிக்கிழமை தோறும் கோவில் வளாகத்தில்

  ஆயிரத்தெட்டு விளக்குகள் கொண்ட தீப மரத்தில்

  தீபம் ஏற்றப்படுகிறது. //

  இதை தாங்கள் காட்டியுள்ள படத்தில் பார்த்தாலே சூப்பராக உள்ளது.

  கண்ணைப்பறிப்பது போல ரொம்ப ஜோராக உள்ளது.


  கற்பனையில் படத்தை வைத்து காட்சி செய்து நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளதே ;)))))

  நேரில் பார்த்தால் இன்னும் எவ்வளவு ஜோராக இருக்கும்! ;))))

  ReplyDelete
 8. எவ்வளவோ விஷ்யங்களை இதுபோல படத்தில் பார்த்துத்தான்.....

  அந்த ஒரு க்ஷண நேர தரிஸன மகிழ்ச்சியில் தான் .....

  நம் மனதை திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதாக உள்ளது.


  ஆனாலும் படத்திலேயே கும்முனு ஜம்முனு தெரிகிறது.


  அந்தக்குறிப்பிட்ட படத்தில் தான் என்ன ஒரு தீர்க்கம்!


  நன்றாகவே மோத முழ்ங்க உள்ளது.


  பளிச்சென்று ஒளி [ஞானஒளி] வீசுகிறதே .......


  அந்தக் ஒரு குறிப்பிட்ட படம்

  ஜோர் ... ஜோர் ...

  பஹூத் படா ஜோர் தான் ;))))))


  மிகவும் ரஸிக்கிறேன்.


  பாதுகாத்து தினமும் ரஸிப்பேன்.

  ReplyDelete
 9. தங்கத்தேரும் அதன் இரண்டு பக்க மிகப்பெரிய உருளைகளும்
  [சக்கரங்களும் ]
  சும்மா என்னமா
  தங்கம் போலவே ஜொலிக்கிறது!!

  ReplyDelete
 10. வை.கோபாலகிருஷ்ணன் said...
  ஜனனி ஜனனி

  ஜகம் நீ அகம் நீ

  ஜஹத் காரணி நீ

  பரிபூரணி நீ

  என்ற அழகான பாடலுடன் ஆரம்பித்திருப்பது மிகவும்
  இனிமையாக உள்ளது.///

  இனிமையான கருத்துரைகள் வழங்கி பதிவை இனிமையாக்கியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா...

  ReplyDelete
 11. //இரவு பூஜையில் சுக்குநீர் வழங்கப் படுகிறது.

  அதை அருந்துபவர்களை நோய் அண்டாது.

  மேலும் அவர்கள் மனத்தெம்பும்,

  புத்திர பாக்கியமும் பெறுவார்கள்//  ஆஹா! இதைப்படித்ததுமே மனத்தெம்பும்


  பேரெழுச்சியும் ஏற்படுகிறதே! ;)))))

  நல்லதொரு எழுச்சிமிக்கத் தகவல்.

  ReplyDelete
 12. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //வெள்ளிக்கிழமை தோறும் கோவில் வளாகத்தில்

  ஆயிரத்தெட்டு விளக்குகள் கொண்ட தீப மரத்தில்

  தீபம் ஏற்றப்படுகிறது. //

  இதை தாங்கள் காட்டியுள்ள படத்தில் பார்த்தாலே சூப்பராக உள்ளது.

  கண்ணைப்பறிப்பது போல ரொம்ப ஜோராக உள்ளது.


  கற்பனையில் படத்தை வைத்து காட்சி செய்து நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளதே ;)))))

  நேரில் பார்த்தால் இன்னும் எவ்வளவு ஜோராக இருக்கும்! ;))))/

  ஜோரான கருத்துரைகளுக்கு நிறைவான நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 13. //கோவை யிலிருந்து நேரடியாக கொல்லூருக்கு பேருந்துகள் உள்ளன.//


  கோவைக்காரர்களுக்கு என்றும் எதற்கும் பிரச்சனையே இல்லை.

  இருப்பினும் அவர்கள் B M W காரில் தானே எங்கும் புறப்படுவார்கள்! ;)))))

  பேருந்தை எதிர்பார்த்தா காத்திருப்பார்கள்?

  ReplyDelete
 14. குட்டையான மஹாகுண்டான

  வெங்கல [க்கடையில் புகுந்த] யானையின்

  மேல் விநாயகர் உள்ள தூண் சூப்பர்.

  கொடி மரங்களும்,

  அதிலும் லக்ஷ்மி அம்மன் படம் போட்ட பித்தளைத் தூணும்

  யானையின் நெற்றியில் அலங்கரிக்கும் தனி அலங்காரப்பட்டையும்

  கடைசிபடத்தில் உள்ள தேரும்

  இன்னும் இன்றைய மற்றபடங்களும்

  வழக்கம் போல அருமை தான்.


  மிகச்சிறப்பான விளக்கங்களுடன் கூடிய அழகான பதிவு.

  தங்களின் கடும் உழைப்புக்கு

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  பிரியமுள்ள

  vgk

  ReplyDelete
 15. G.M Balasubramaniam said...
  என் பேரனுக்கு எழுத்றிவித்த நினைவுகள் அலை மோதுகின்றன. இயற்கை எழில் சூழ் இடம். AS USUAL YOUR POSTINGS ARE GOOD.வேறென்ன கருத்து சொல்ல முடியும்.

  நினைவுகள் அலை மோத அளித்த கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 16. வை.கோபாலகிருஷ்ணன் said...
  குட்டையான மஹாகுண்டான

  வெங்கல [க்கடையில் புகுந்த] யானையின்

  மேல் விநாயகர் உள்ள தூண் சூப்பர்.

  கொடி மரங்களும்,

  அதிலும் லக்ஷ்மி அம்மன் படம் போட்ட பித்தளைத் தூணும்

  யானையின் நெற்றியில் அலங்கரிக்கும் தனி அலங்காரப்பட்டையும்

  கடைசிபடத்தில் உள்ள தேரும்

  இன்னும் இன்றைய மற்றபடங்களும்

  வழக்கம் போல அருமை தான்.


  மிகச்சிறப்பான விளக்கங்களுடன் கூடிய அழகான பதிவு.

  தங்களின் கடும் உழைப்புக்கு

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  பிரியமுள்ள

  vgk

  ரச்னையுடன் அளித்த அத்தனை கருத்துரைகளுக்கும் , பாராட்டுக்களுக்கும் , வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 17. Atchaya said...
  அதி அற்புதத் திருத்தலம். அகிலத்திற்கு நன்மை செய்ய வேண்டி அவதரித்த , அதி அற்புத அம்சமான அன்னையின் திருத்தலம் பற்றிய பதிவு அருமை!

  சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

  அருமையான வாழ்த்துகளை அட்சயமாக அளித்த அற்புதமான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 18. வரலாற்று சுவடுகள் said...
  புகைப்படங்கள் அனைத்தும் ரம்யமாக கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வகையில் உள்ளது .. :)/

  ரம்யமான கருத்துரைக்கு இனிய நன்றிகள்...

  ReplyDelete
 19. I shared your blog with my face book friends........

  ReplyDelete
 20. அன்னையின் சந்நிதியில் என்னை மறந்து கண்ணீர் வழிய நான் நின்ற நாட்களை நினைவு படுத்தி விட்டீர்கள் !

  ReplyDelete
 21. வழமை போல..அருமையான படங்களுடன்...
  BTW,திருசெந்தூர் வைகாசி விசாக சுட்டி தந்ததற்கு நன்றி சகோதரி...

  ReplyDelete
 22. வெள்ளிக்கிழமை விஷேச தரிசனம். நன்றி.

  ReplyDelete
 23. எம்.ஜி.ஆர் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குப் போனார். அப்போதிருந்து இந்த கோயில் தமிழ் நாட்டில் பிரபலமானது. தங்கள் பதிவின் மூலம் கொல்லூர் மூகாம்பிகை கோயில் தல வரலாறு தெரிந்து கொண்டேன். நன்றி!

  ReplyDelete
 24. செல்ல நினைத்திருக்கும் ஸ்தலங்களில் ஒன்று. உங்கள் பகிர்வு மிக உபயோகமாயிருக்கும். நல்ல பதிவு.

  ReplyDelete
 25. I visited the place in day time. You made me visualise night light. Thanks for the post.
  I enjoyed the song Janani.....
  viji

  ReplyDelete
 26. Highly illustrative.
  visual delight as usual.
  enjoyed heartily.

  subbu rathinam

  ReplyDelete
 27. நல்ல பகிர்வு ! படங்கள் அருமை ! நன்றி !

  ReplyDelete
 28. sury said...
  Highly illustrative.
  visual delight as usual.
  enjoyed heartily.

  subbu rathinam

  அருமையான கருத்துரைக்கு
  இதயம் நிறைந்த
  இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 29. viji said...
  I visited the place in day time. You made me visualise night light. Thanks for the post.
  I enjoyed the song Janani.....
  viji

  இனிய கருத்துரைக்கு நிறைவான நன்றிகள் தோழி !

  ReplyDelete
 30. ராமலக்ஷ்மி said...
  செல்ல நினைத்திருக்கும் ஸ்தலங்களில் ஒன்று. உங்கள் பகிர்வு மிக உபயோகமாயிருக்கும். நல்ல பதிவு.


  பயனுள்ளதானால் மகிழ்ச்சி..
  கருத்துரைக்கு நிறைவான நன்றிகள் தோழி

  ReplyDelete
 31. தி.தமிழ் இளங்கோ said...
  எம்.ஜி.ஆர் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குப் போனார். அப்போதிருந்து இந்த கோயில் தமிழ் நாட்டில் பிரபலமானது. தங்கள் பதிவின் மூலம் கொல்லூர் மூகாம்பிகை கோயில் தல வரலாறு தெரிந்து கொண்டேன். நன்றி!

  பல அரசியல் தலைவர்கள் ,திரைப்படக் கலைஞர்கள் சென்றுவரும் சக்தி மிக்கதிருத்தலம்..
  கருத்துரைக்கு நிறைவான நன்றிகள்

  ReplyDelete
 32. ஒரு முறையாவது போய்ப் பார்க்கவேண்டும். படங்கள் பிரமாதம். ஆதி சங்கரர் கதையும் சுவாரசியம்.

  ReplyDelete
 33. 3338+9+1=3348 ;)))))

  முத்தான மூன்று பதில்களுக்கு நன்றி.

  ReplyDelete
 34. It sounds very interesting!
  i like the post very much keep it up
  Yah this blog is making a dfference. I love it.i like your post on
  Buy AC online
  Youtube without Proxy

  ReplyDelete