Saturday, June 16, 2012

தந்தையர் தின வாழ்த்துக்கள்தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது இனிய முதுமொழி..தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே 
என்றார் பாரதி..
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே என கம்பீரமாக குடும்ப பாரத்தைத்தாங்கும் ஆக்கபூர்வமான சக்திமிக்க தலைமை தந்தை..

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து 
முந்தி யிருப்பச் செயல் என்னும் உலகப்பொதுமறையாம் திருக்குறள் தந்த குரலுக்கு ஏற்பதந்தையரை பெருமைப்படுத்தும் விதமாகவும் நன்றி கூறும் விதமாகவும் 1910ம் ஆண்டு முதல் தந்தையர் தினம் கொண்டாடப்படுகின்றது. ஜீன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை 52 நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகின்றது. 


வேறு நாடுகளில் வேறு தினங்களில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகின்றது.


பாசத்துக்கு எப்போதும் தாய் தான் உதாரணமாக்குகிறோம்..
ஆயிரம்தான் இருக்கட்டுமேஅம்மா போதுமா 
அங்கே இங்கே கூட்டிச்செல்லும் அப்பா ஆகுமா???
குழந்தைகளின் முன்னேற்றத்தில் தந்தையின் பங்கு மகத்துவம் மிக்கது...
Fathers Day

தந்தைதான் ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கின்றார்.
அனைத்தையும் சேர்த்து வைத்து இயலும் வரை தோளிலும் முதுகிலும் சுமப்பவர்கள் தந்தையர்கள்.
அனைத்து தந்தையர்களுக்கும் தந்தையர் தின விசேஷ வாழ்த்துக்கள்

அன்னையர் தினத்திற்குப்பிறகு கொண்டாட்ப்படுகிறது தந்தையர் தினம்..


தந்தையர் தினத்தில் மேலை நாடுகளில் அப்பாவுக்கு ஒரு சிவப்பு ரோஜாவைக் கொடுத்து வாழ்த்துவதும், பிள்ளைகள் சிவப்புரோஜாவை தங்கள்சட்டையில் வைத்துக் கொள்வதும் வழக்கம் ! 
தந்தை ஒரு குடும்பத்தின் தியாகச் சுடர்.
தந்தை தான் ஒரு குடும்பத்தைக் கட்டி எழுப்புகிறார். 
பொருளாதாரம், கல்வி, கெளரவம், சுற்றம், வாழ்க்கைத்தரம் என்பனவற்றை பெற்றுத் தந்து பாதுகாப்பது தந்தையே. 
தனது தியாகத்தின் மூலம் குடும்பத்துக்கு வெகுமதியைத் தருகிறார். 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். " என்னும் செய் நன்றி மறவாத தினமாகக் கொண்டாடி பெருமை சேர்ப்போம் !


happy fathers day bear hugs

30 comments:

 1. அருமையான பதிவு.
  அழகான படங்கள்.
  HAPPY FATHER'S DAY!

  ReplyDelete
 2. அப்பாவை வணங்குவோம். அப்பப்பா.... எவ்வளவு அருமையான படங்கள்.

  ReplyDelete
 3. அருமையான படங்கள்
  அழகான விளக்கங்கள்
  தந்தையர் தின சிறப்புப்பதிவு
  அருமையிலும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அருமையான படங்கள்
  அழகான விளக்கங்கள்
  தந்தையர் தின சிறப்புப்பதிவு
  அருமையிலும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அப்பா!!!!

  எல்லா தந்தையையும் வாழ்த்துகிறேன்....
  என் தந்தையை வணங்குகிறேன்....

  அருமையான மேற்கோள்களுடன் நல்ல செய்தி... நிறைவான படங்கள்....

  ReplyDelete
 6. அருமையான படங்கள் அழகான பாராட்டுகள். Happy Father's Day.

  ReplyDelete
 7. படங்களும் தகவல்களும் அருமை.!

  ReplyDelete
 8. அழகான படங்கள்....

  நல்ல பகிர்வு....

  ReplyDelete
 9. கண் கவரும் படைப்பு

  ReplyDelete
 10. மாற்றுச் சிந்தனை அது என்ன தந்தையர் தினம் சிந்திக்க வைத்தது.

  அன்புடன்
  முனைவர் துரை.மணிகண்டன்
  919486265886

  ReplyDelete
 11. அக்கா .அருமையான படங்களும் பதிவும் .
  இன்னமும் உங்க ப்ளாக் FLASH அடித்துக்கொண்டே இருக்கு .
  நீங்க கொடுத்த லிங்க் வழியே தான் இங்கே வைத்தேன் அப்ப ஒன்றும் பிரச்சினை இல்லை .

  ReplyDelete
 12. ஆகா தந்தையர் தினம் பெருமை பேசும் அற்புதமாய் ஒரு பதிவு அம்மா. தந்தையர் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. பித்ரு தேவோ ப‌வ‌! நெகிழ்த்தும் ப‌திவு!

  ReplyDelete
 14. அருமை ! தந்தையர் தின வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 15. வை.கோபாலகிருஷ்ணன் said...
  அருமையான பதிவு.
  அழகான படங்கள்.
  HAPPY FATHER'S DAY!

  சிறப்பாக படங்களை ரசித்து பதிவுகளை சுவாசித்து அளித்த கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

  படங்களை அவரர் ரசனை , அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பொருள் கொள்ளும் சுதந்திரம் உண்டே.

  கற்பனைக்கு அணை போட முடியுமா !

  எனக்கு என்னவோ சந்தோஷமாக பெருமையாக தந்தை என்கிற பெருமிதத்தைக் காட்டுவதாகத்தான் நினைக்கமுடிகிறது..

  ReplyDelete
 16. வை.கோபாலகிருஷ்ணன் said...

  //சிறப்பாக படங்களை ரசித்து பதிவுகளை சுவாசித்து அளித்த கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

  படங்களை அவரர் ரசனை , அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பொருள் கொள்ளும் சுதந்திரம் உண்டே.

  கற்பனைக்கு அணை போட
  முடியுமா !//

  என் தனிப்பட்ட படவிளக்கக் கேள்வி ஒன்றுக்கு, அழகாக அருமையாக மிகவும் புத்திசாலித்தனமாக,பதில் அளித்துள்ளது, என்னை வியக்க வைக்கிறது.

  கழுவும் மீனில் நழுவும் மீன் என்று ஏதோ சொல்லுவார்கள்.

  அது இது தானோ!

  //கற்பனைக்கு அணை போட முடியுமா !//

  இந்தத் தங்களின் எதிர்க்கேள்வியும் அழகோ அழகு தான்.

  மிகவும் ரஸித்தேன்.

  நல்லவேளையாக, என் கேள்வியை வழக்கம்போல் சாய்ஸில் விட்டு விடாமல், ஏதோ ஒரு பதில் அளித்தவரை சந்தோஷமே.

  //எனக்கு என்னவோ சந்தோஷமாக பெருமையாக தந்தை என்கிற பெருமிதத்தைக் காட்டுவதாகத்தான் நினைக்கமுடிகிறது.. //

  உங்களுக்கு சுத்தத் தங்கமான மனது. சமத்தோ சமத்து, கட்டிச்சமத்து. அதுவும் அழுந்தச் சமத்து. நன்றி.

  பிரியமுள்ள
  vgk

  ReplyDelete
 17. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //உண்மையில் அந்தப்படம் எதற்காகக் கொடுத்துள்ளீர்கள்? அது ஆக்சுவலாக என்ன சொல்லுகிறது //

  டை கட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றவர்

  கைகட்டி அவர் பின் செல்வாரே என்ற புது மொழிக்கேற்ப --

  குடும்பத்தாரால் ஹீரோ ஆக பிரமித்துப் பார்க்கப்படும் குடும்பத்தலைவரான தந்தையை முன்னிலைப்படுத்த அந்த படம் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது...

  தினமும் டை கட்டி பவ்யமாக வருபர்களை தேர்வு செய்வதால் படமும் தேர்வு செய்யப்பட்டது ஐயா..

  ReplyDelete
 18. வை.கோபாலகிருஷ்ணன் said...
  ***உண்மையில் அந்தப்படம் எதற்காகக் கொடுத்துள்ளீர்கள்? அது ஆக்சுவலாக என்ன சொல்லுகிறது***

  //டை கட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றவர்

  கைகட்டி அவர் பின் செல்வாரே என்ற புது மொழிக்கேற்ப --

  குடும்பத்தாரால் ஹீரோ ஆக பிரமித்துப் பார்க்கப்படும் குடும்பத்தலைவரான தந்தையை முன்னிலைப்படுத்த அந்த படம் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது...

  தினமும் டை கட்டி பவ்யமாக வருபர்களை தேர்வு செய்வதால் படமும் தேர்வு செய்யப்பட்டது ஐயா.. //

  வெகு அழகான உண்மையான விளக்கம். திருப்தியாக உள்ளது.

  இதை தங்கள் வாயிலிருந்து வரவழைக்கவே [”டை” எனப்து எனக்குப் புரிந்தும் புரியாதது போல] வேறு ஏதாவதாக இருக்குமோ என ஒரு சந்தேகத்தை நான் எழுப்பும்படி ஆகி விட்டது.

  புதுமொழி ஒன்றினையும் இப்போது உங்களால் அறிந்து மகிழ முடிந்தது.

  எனக்கு வேகு நாட்களாகவே ஒரு சந்தேகம் மேடம்.

  “டை” நாட் போட்டு கஷ்டப்பட்டு கட்டிக்கொள்கிறார்களே!

  அதன் முக்கியப்பயன்பாடு என்று ஏதும் உண்டா?

  அல்லது அழகுக்காக [ஆட்டுக்கு வால் போல] கட்டிக் கொள்ளப்படுகிறதா?

  இதற்கான விளக்கமும் தங்கள் வாயால் அறிய ஆசைப்படுகிறேன்.


  [ நானே என் இளமை நாட்களில் பிறரின் தூண்டுதலாலும், பிறரின் விருப்பத்திற்காகவும், இதே “டை” என்பதை கட்டிக்கொண்டு கஷ்டப்பட்டவன் தான் {எனக்கு அதில் சற்றும் விருப்பம் இல்லாமல் இருந்தும்} ]

  ReplyDelete
 19. Respected Madam,

  என்னுடைய Latest பின்னூட்டம் ஒன்றில் ’ஆட்டுக்கு வால் போல’ என்று தவறுதலாக எழுதி அனுப்பி விட்டேன்.

  அது “ஆட்டுக்கு அனாவஸ்யமாகத் தொங்கும் தாடி போல” என்று இருக்க வேண்டும். திருத்திக்கொண்டு பதில் அளிக்கவும்.

  தவறுக்கு வருந்தும் vgk

  ReplyDelete
 20. வை.கோபாலகிருஷ்ணன் said.../

  எனக்கு வேகு நாட்களாகவே ஒரு சந்தேகம் மேடம்.

  “டை” நாட் போட்டு கஷ்டப்பட்டு கட்டிக்கொள்கிறார்களே!

  அதன் முக்கியப்பயன்பாடு என்று ஏதும் உண்டா?

  அல்லது அழகுக்காக “ஆட்டுக்கு அனாவஸ்யமாகத் தொங்கும் தாடி போல[ஆட்டுக்கு வால் போல] கட்டிக் கொள்ளப்படுகிறதா?

  இதற்கான விளக்கமும் தங்கள் வாயால் அறிய ஆசைப்படுகிறேன்.

  குளிர் தேசத்தில் கழுத்தில்
  குளிர் தாக்காமல் இருக்க கண்டுபிடித்திருப்பர்களோ என்னவோ !

  ஏசி காரிலும் ,அலுவலகத்திலும் வேண்டுமானால் தேவையாயிருக்கும்..

  மகன்களெல்லாம் பிரியமாகத்தான் அணிந்து அலுவலகம் செல்கிறார்கள்..

  நம் வெப்ப தேசத்தில் அணிந்து அல்லல் படுபவர்கள் தான் பாவம் !

  மணமகன் கைநாட்டாக இருந்தாலும் திருமண வரவேற்பின் போதும் ,புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போதும் கட்டத்தெரியாமல் திணற வைக்காமல் எலாஸ்ட்டிக் வைத்துக்கொள்கிறார்கள்..

  டை கட்டும் வழக்கமில்லாத சீருடை உள்ள பள்ளிகளை பெற்றோர் நாடுவதில்லையே !

  பள்ளிக் குழந்தைகளை டை அணிவித்து பள்ளிக்கு கிளப்புவது ரொம்ப சிரமம் !

  ReplyDelete
 21. ****எனக்கு வேகு நாட்களாகவே ஒரு சந்தேகம் மேடம்.

  “டை” நாட் போட்டு கஷ்டப்பட்டு கட்டிக்கொள்கிறார்களே!

  அதன் முக்கியப்பயன்பாடு என்று ஏதும் உண்டா?

  அல்லது அழகுக்காக “ஆட்டுக்கு அனாவஸ்யமாகத் தொங்கும் தாடி போல[ஆட்டுக்கு வால் போல] கட்டிக் கொள்ளப்படுகிறதா?


  இதற்கான விளக்கமும் தங்கள் வாயால் அறிய ஆசைப்படுகிறேன்.****

  //குளிர் தேசத்தில் கழுத்தில்
  குளிர் தாக்காமல் இருக்க கண்டுபிடித்திருப்பர்களோ என்னவோ !

  ஏசி காரிலும் ,அலுவலகத்திலும் வேண்டுமானால் தேவையாயிருக்கும்.. //

  மிகவும் நியாயமான திருப்தியளிக்கும் விளக்கம். நன்றி.


  தொடரும்....

  ReplyDelete
 22. //மகன்களெல்லாம் பிரியமாகத்தான் அணிந்து அலுவலகம் செல்கிறார்கள்.//

  என் மூத்த மகனும் அப்படியே தான்.

  வாராவாரம் ஒரு நாடு என உலகம் சுற்றும் வாலிபன்.

  மிகச்சிறந்த கம்பெனி.
  மிக முக்கியமான பெரிய பொறுப்பில் உள்ளவன்.

  தலையோடு கால் டிப் டாப்பாக அழகான மடிப்புக்கலையாத புத்தம் புதிய டிரஸ்ஸும், கழுத்தில் டையும், சமயத்தில் கோட் சூட்டும் இல்லாமல் அவனைப் பார்க்கவே முடியாது தான். .

  ஒரு நாளைக்கு 24 மணி நேரங்களும், ஒரு ஆண்டுக்கு 365 நாட்களும் அவனுக்குப் போதாமல் உள்ளன.

  அவ்வளவு பிஸியெஸ்டு மேன்.

  வாழ்க்கையில் பணம் பதவி அந்தஸ்து முதலியவற்றிற்காக, கொஞ்சமும் நிம்மதியில்லாமல் அவன் படும் பாடு, எனக்கு நினைத்துப் பார்க்கவே மிகவும் கஷ்டமாகத் தான் இருக்கும்.

  ஒருசில ஓய்வு நாட்களில் அவன் செல்போன், கார் எல்லாவற்றையும் துறந்துவிட்டு ART OF LIVING என்ற அமைப்புக்கு நிறைய பணம் கட்டி, வாய் திறந்து பேசாமலேயே, அன்றாட உலக வாழ்க்கையைப்பற்றி சற்றும் சிந்திக்காமலேயே மெளனமாக இருந்து MEDITATION செய்து விட்டு வருவதும் உண்டு.

  அவன் போய்த் தங்காத ஸ்டார் ஹோட்டல்களே உலகில் கிடையாது தான்.

  இருப்பினும் இங்கு நம் வீட்டுக்கு வருடம் ஒரு முறை வந்து 15-30 நாட்கள் தங்கிச் செல்லும் போது, ஒரு சாதாரண முக்கால் கால் பேண்ட் உடன் மட்டும், வேறு சட்டை பனியன் முதலியன இன்றி, என் மடியிலோ அல்லது என் மனைவி மடியிலோ தலை வைத்து வெறும் தரையில் படுத்துக்கொள்ளவே மிகவும் விரும்புவான்.

  ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி போல அவன் எங்களுக்கு; மிகவும் தங்கமான தாராளமான நல்ல குணங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்தவன். .

  தொடரும்.....

  ReplyDelete
 23. //நம் வெப்ப தேசத்தில் அணிந்து அல்லல் படுபவர்கள் தான் பாவம் !//

  மிகச்சரியாகச் சொல்லி விட்டீர்கள்.

  //மணமகன் கைநாட்டாக இருந்தாலும் திருமண வரவேற்பின் போதும் ,புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போதும் கட்டத்தெரியாமல் திணற வைக்காமல் எலாஸ்ட்டிக் வைத்துக்கொள்கிறார்கள்..//

  ஆமாம். இதைக்கேட்க ஒரே சிரிப்பு தான் வருகிறது.


  தொடரும்....

  ReplyDelete
 24. //டை கட்டும் வழக்கமில்லாத சீருடை உள்ள பள்ளிகளை பெற்றோர் நாடுவதில்லையே !//

  ஆமாம். இது தவிர்க்க முடியாததாகவே ஆகிவிட்டது இன்று என்பதே உண்மை.
  என் மூன்றாவது பையனை மட்டும் இத்தகைய பள்ளியில் சேர்த்தோம்.

  இதில் நிறைய புதிய அனுபவங்களைக் கற்க முடிந்தது எங்களால்.


  தொடரும்....

  ReplyDelete
 25. //பள்ளிக் குழந்தைகளை டை அணிவித்து பள்ளிக்கு கிளப்புவது ரொம்ப சிரமம் ! //

  LKG இல் அவனைச் சேர்த்ததும் [1985-86] காலையில் அவனை எழுப்பி, டிப்டாப்பாக டிரஸ் செய்து, நாட் போட்டு டை கட்டிவிட்டு, சாக்ஸ் ஷூ முதலியன அணிவித்து, அவனையும், என் மனைவியையும் [கிரைண்டர் + மிக்ஸி போல], டூ வீலரில் உட்கார வைத்துக்கொண்டு பள்ளி வாசலில் இறக்கிவிட்டுவிட்டு, நான் என் அலுவலகம் செல்வேன்.

  அவனை அந்தப்பள்ளியில் சேர்த்த எங்கள் இருவருக்கும், தினமும் அவனால் சரியான சுளுக்கு தான்.

  அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

  இப்போது என் பேத்தியும் பேரனும் அதுபோலவே டிப்டாப் உடையுடன், டை அணிந்துகொண்டு, உலகப்பிரசித்தி பெற்ற பள்ளியொன்றில் படித்து வருவதும், சின்ன வயதிலேயே மிகச்சரளமாக நுனி நாக்கினால் ஆங்கில்ம் பேசுவதும் கேட்க மிகவும் சந்தோஷமாகத்தான் உள்ளது.

  அந்த இரு குழந்தைகளும் அனைத்திலும் ஆர்வமுடன் உள்ளனர்.

  இசை, வாய்ப் பாட்டு, கர்னாடக சங்கீதம், புராணக்கதைகள் அத்தனையும் படிப்பது, படம் வரைவது, டான்ஸ், டிராமா, விளையாட்டுகள், கணினி இயக்கங்கள் போன்ற எல்லாவற்றிலும் ஈடுபாடு.

  ஸ்டேஜ் ஃபியர் கொஞ்சமும் இல்லாமல் இருப்பதும் ஆச்சர்யமாகவே உள்ளது.

  ஸ்லோக வகுப்புகள் போன்ற எல்லாவற்றிலும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

  காலம் தான் என்னமாய் மாறியுள்ளது! ;)

  தங்களின் அழகான விளக்கங்களுக்கும், யதார்த்த எண்ணப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  பிரியமுள்ள
  vgk

  ReplyDelete
 26. 3418+9+1=3428 ;)))))

  முகமூடியணிந்த முத்தான மூன்று பதில்களுக்கும் நன்றிகள். ;)

  ReplyDelete
 27. தந்தை தினம் வாழ்த்துக்கள் நண்பர்களே

  ReplyDelete
 28. தந்தை தினம் வாழ்த்துக்கள் நண்பர்களே

  ReplyDelete
 29. தந்தை தினம் வாழ்த்துக்கள்

  ReplyDelete