Thursday, February 28, 2013

செல்வ வளம் அருளும் சொர்ண நரசிம்மர்










‘‘ஓம் வஜ்ர நாகாய வித்மஹே 
தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி; 
தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்’’ 

என்ற சொர்ண லட்சுமி நரசிம்மரின் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 12 முறை சொல்லி வந்தால் பதவி உயர்வும் சகல நலன்களும் உண்டாகும்.

ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில், குருவரெட்டியூர் அருகே அமைந்திருக்கும் கோனார் பாளையத்தில் மேற்கு முகமாக வீற்றிருக்கும் சொர்ண நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திரத்தன்று பானகம் கரைத்து நிவேதித்து, இங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் எண்ணிய காரியங்கள் உடனே கைகூடும் என்பது நம்பிக்கை ...
கோனார்பாளையம் சொர்ண நரசிம்மர் ஆலயத்தில் அனுமனுக்கும் தனி சந்நதி அமைந்துள்ளது. 
ஐந்து முகங்களை கொண்ட ருத்ரனுடைய அவதாரமாக தோன்றிய அனுமனை ஐந்து முகங்களுடன் வழிபடுகிறோம். 

கிழக்கு பக்கம் அனுமன் முகம், 
மேற்கில் கருடன், 
வடக்கில் வராகம், 
தெற்கில் நரசிம்மம், 
மேல்நோக்கி குதிரை முகம் 
என்று ஐந்து முகங்களுடன் கோயிலின் கோபுரத்தில்  தரிசிக்கலாம் 

 வேண்டுதல்கள் நிறைவேற வெள்ளை காகிதத்தில் ‘ஸ்ரீ ராமஜெயம்’ என்ற ராம மந்திரத்தை எழுதி, அதனுடன்  தேங்காய் ஒன்றையும் சேர்த்து கோயில் அர்ச்சகரிடம் கொடுக்கின்றனர். அவற்றை ஆஞ்சநேயரின் பாதங்களில் வைத்துப் பூஜை செய்வதன் மூலம்  பக்தர்களின் வேண்டுகோள் நிறைவேறுகிறது 

மிக நீண்ட பிராகாரம் பலவிதமான தெய்வ சந்நதிகளோடு திகழ்கிறது ... 
 சொர்ண நரசிம்மரின் ஆலயத்தில் அனைத்து தெய்வங்களையும்  ஒருசேர வழிபட்டு மனநிம்மதி பெறலாம். 

கிருஷ்ணருக்கு கருவறைக் கோபுரத்தோடு கூடிய தனி  சந்நதி விசாலமாக அமைந்துள்ளது. 

கோயிலின் இடதுபுறத்தில் நந்தவனத்தில் கோபியர் புடை சூழ கோபால கிருஷ்ணனின் அற்புதமான வண்ணச் சிலை கருத்தைக்கவருகிறது. 

வெளிப் பிராகாரத்தைச்  சுற்றி வந்தால் ராகு-கேது, சப்த மாதாக்கள், விநாயகர், முருகர் மற்றும் நவகிரகங்கள் ஆங்காங்கே அருள்பாலித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். 

 மதுரை கள்ளழகர் கோயில் 18ம் படி காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி, இங்கு திருமாலின் அம்சமாகவும் கொண்டாடப்படுபவர்.


கருப்பண்ண சுவாமி மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வமாக இங்கே கருதப்படுகிறார். 

இவர் முன்னிலையில் பக்தர்கள் தங்களுக்குள்  ஏற்படும் வம்பு, வழக்குகளைச் சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்வதைக் காணலாம். 

கருப்பண்ண சுவாமிக்கு உகந்த நைவேத்தியம், சர்க்கரைப்  பொங்கல். 
உகந்த காணிக்கை குதிரைச் சிலையும் அரிவாள், ஈட்டி, மணி போன்றவையும் ஆகும். 

இவருக்குப் பொங்கல் படைக்கும்போது, இங்குள்ள  ஏழு கன்னிமார்களுக்கும் சேர்த்துப் படைக்க வேண்டும். 

ஆடி அமாவாசை, ஆடிப்பதினெட்டு ஆகிய தினங்கள் கருப்பண்ண சுவாமிக்கு மிகவும் உகந்த  நாட்கள். 

இந்த தினங்களில் பக்தர்கள் வேண்டிக்கொண்டு நேர்ச்சை வைத்தால், அடுத்த ஆண்டில் அதே நாளுக்குள் வேண்டுதல் நிறைவேறி விடும் என்று சொல்கிறார்கள். 

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், யதகிரிகுட்டா.




Wednesday, February 27, 2013

அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆயுர் தேவி








 ஸ்ரீ ஆயுர் தேவி காயத்ரி : 

ஒம் மஹாதேவ்யை ச வித்மஹே 
பராசக்த்யை ச தீமஹி 
தந்நோ ஆயுர் தேவ்யை ப்ரசோதயாத் !! 


ஆயுர்தேவி தனம்தேஹி வித்யாம்தேஹி மஹேஸ்வரி 
சீமஸ்தம் அகிலான் தேஹி தேவிமே பரமேஸ்வரி 

தேவி எனக்கு நீண்ட ஆயுளை கொடு, 

ஆயுள் மட்டும் போதுமா அதனால் சுகமாக வாழத்தேவையான் செல்வத்தையும் கொடு 
Sri Laxmi By Vishnu108 On Deviantart
வெறும் செல்வத்தை கொடுத்தால் அதை தப்பான வழியில் செலவழித்து வீணாகி போகாமல் இருக்க நல்ல வழிகளை அறிந்துக்கொள்ளும் அறிவைக் கொடு. 

அதன் மூலமாக இந்த உலக வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடு.
 ஒன்பது கரங்களைத் தாங்கிய பராசக்தியானவள் சித்தர்களையும், மஹரிஷிகளையும் தம் எண் கரங்களிலேந்தி, ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாகக் கொண்டு அருள் பாலிக்கின்றாள். இந்த தேவி வழிபாடு மனித குலத்தின் அனைத்துத் துன்பங் களுக்கும் நிவாரணமளிக்கும் ஒரு முழுமையான வழிபாடாகும்.
Vishnu Laxmi By Vishnu108 On Deviantart


ஸ்ரீஆயுர்தேவியின் ஒன்பது கரங்களும் நவகிரக தத்துவங்களை விளக்குகின்றன. அன்னவாகனத்தைக் கொண்டவள் ஆயுர்தேவி. 

அவள் திருவடியில் இரண்டு சிம்மங்கள் பீடங்களாக அமரும் பேறு பெற்றுள்ளன.

மனிதனுடைய தேகத்திலும் நவகிரகங்கள் ஆட்சி கொண்டுள்ளன. 

ஆத்மா இதயக்கமலத்தில் சர்வேஸ்வரனாக வீற்றிருக்கிறது. 

இதனால் உடலைக் கோவில் என்கிறோம். சித்திர குப்தர் இந்த தேவியின் ஆக்ஞைப்படி, கர்மவினைகளையும், ஆயுளையும் நிர்ணயிப்பவர். 

இவர் இறைவனின் அற்புதப் படைப்பு. 

ஒவ்வொரு மனிதனும் தினமும் இரவில் உறங்கும்முன் அன்றைய செயல்களை சித்திரகுப்தரிடம் சமர்ப்பித்து தவறுகளுக்கு வருந்தி, நற்செயலுக்கு நன்றி கூறி, பிறகே உறங்கவேண்டும்.

ஸ்ரீசித்திரகுப்தர் வெறும் கர்மக் கணக்கு எழுதுபவர் என நினைப்பது கூடாது. மனிதனின் ஆத்மவிசாரத்திற்கு வித்திடுபவர் இவரே. 

தலைப்பாகையுடன் கையில் ஏடு, எழுத்தாணியோடு. ஸ்ரீஆயுர்தேவியின் திருவடிக்கருகே சித்திர குப்தர் அமர்ந்திருக்கிறார்- 



மூல மந்திரம் 

ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சுபாயை தேவ சோனாயை 
ஆயுர் தேவ்யை ஸ்வாஹா !!

 2) ஜயாம்ப ஜய ஸர்வாணி ஜய கெளரி ஆயுர்தேவி நமோ நமஸ்தே 
சிவகாம ஸுந்தரி நமோ நமஸ்தே 
அருணாசலேச்வரி நமோ மஹா கெளரீ நமோ நமஸ்தே !!

இமயமலைப் பகுதியிலும், ஸ்ரீமஹா அவதூத பாபா த்ரைலிங்க சுவாமி போன்ற அற்புத மகான்கள் தினமும் வழிபடுகின்ற பனிமலைக் குகையிலுள்ள ஸ்ரீதாராதேவி ஆலயத்திலும் ஸ்ரீஆயுர்தேவிக்கு சந்நிதி அமைந்துள்ளது என்றும்; குரு அருள் பெற்றவர்களால் மட்டுமே காண இயலும் என்றும் உபதேசித்திருக்கிறார் அகத்திய மகரிஷி.

Lakshmi Blue By Vishnu108 On Deviantart Images

Tuesday, February 26, 2013

ஆரோக்கியம் அருளும் அன்னை இந்த்ராக்ஷி




யா தேவீ ஸர்வபூதேஷு மாத்ருரூபேண ஸம்ஸ்திதா!
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

இந்த்ராக்ஷி காயத்ரி:  

பஸ்மயுத்தாய வித்மஹே, ரக்த நேத்ராய 

தீமஹி, தன்னோ ஜ்வரஹர ப்ரசோதயாத்.


ஆயுள்-ஆரோக்கியம் தரும் அன்னை இந்த்ராக்ஷி ஸ்தோத்திரம்
(தமிழ் வடிவில் )

இந்திரன் வடிவாய் வந்தவள் எவளோ இந்திராக்ஷி என்போம் அவளை
அனலாய் வந்தவள் அபயம் தந்தவள் புனலாய் வருவாள் காலாய் ஆனவள்

விண்ணாய் நிற்பாள் மண்ணாய் இருப்பாள் மனோரிதமே செய்பவள் அவளே
பகைவர் தன்னைப் பாரில் விரட்டிப் பண்பைப் புகுத்திட வந்தவள் அவளே





ஆயிரம் கண்கள் பாங்குறக் கொண்டவள் 
பாயும் புலியின் தோலைத் தரித்தவள்

கொஞ்சும் சதங்கை குலுங்கக் குலுங்கத்
தத்தோம் தக்தோம் வந்தோம் வந்தோம்

தந்தோம் வரமே தளரா உள்ளோடு உந்தன் செயலைச் செய்திடு நன்றே
என்றே சொல்லி வந்தாள் இன்றே ஸித்தியைத் தந்திடும் தெய்வத் திருமகள்

துர்கை அவளே! சங்கரி அவளே! சாகம் பரியாய்ச் சார்ந்திடும் பவானி
சோகம் துடைக்கும் இந்திரை அவளே இந்திராக்ஷி அன்னை அவளே
ஸுந்தரி அவளே! சுருதியும் அவளே!தண்டினி அவளே!கட்கினி அவளே

அவள் தாள் பணிவோம் அருளைப் பெறுவோம்
அவளைத் துதித்தால் இடரும் விலகும்

பகைமை தொலையும் சுகமும் பெருகும் பற்பல க்ரகங்கள் 
படுத்தும் பாடும் பட்டென ஒழியப் பாடுவோம் வாரீர்

ரோகாந்-அசேஷாந்-அபஹம்ஹி துஷ்டா
ருஷ்டா து காமாந் ஸகலாந்- அபீஷ்டாந்
த்வாம்-ஆஸ்ரிதாநாம் ந விபந்-நராணாம்
த்வாம்-ஆஸ்ரிதா ஹ்யாஸ்ரயதாம் ப்ரயாந்தி 

உனது பிரீதி பிரவாகத்தினால் சமஸ்த ரோகங்களையும் 
அழித்து விடுகின்றாய்! 

கோபமுண்டானாலோ அவரவர்களுக்கு பிரியமான 
எல்லாப் பொருள்களையும் அழித்து விடுகின்றாய்! 

உன்னை அண்டிய மனிதர்களுக்கு ஆபத்து என்பதே உண்டாவதில்லை. 

 அன்னையே ! உன்னை அண்டியவர்கள் மற்றவர்களால் 
விரும்பதக்கவர்களாகவும் ஆகிவிடுகின்றனர்.

இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா வித்யாப்ராப்திகளும் 
ஆரோக்கியமும் உண்டாகும்.
நீலாயதாக்ஷி, காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி, ஜலஜாக்ஷி இந்திராக்ஷி, பத்மாக்ஷி, வனஜாக்ஷி, பங்கஜாக்ஷி என்னும் பெயர்களால்  அன்னையைத் தியானிக்க வேண்டும்
எல்லா தேவதைகளும் பராசக்தியிடம் அடங்குவதால் பராசக்தியைப் பூஜித்தால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் ..

சரணாகத தீநார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோஸ்துதே!


தன்னை சரணமடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களை 

காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாக கொண்டவளும், 
அனைவருடைய துன்பங்களை அபஹரிப்பவளுமான ஏ தேவி! 
நாராயணி! உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

பொருளோடு புகழோடு நோய் நொடி
இல்லாமல் எல்லோரையும் வைப்பாய் அம்மா அம்மா

Monday, February 25, 2013

மனம் மகிழும் மாசி மகம்




மாசி மகத்தன்று கடலோர சிவாலயங்களில் உள்ள சுவாமியையும் அம்பாளையும் நன்கு அலங்கரித்து, சிவசக்தி மூர்த்தங்களுடன் பல்லக்கில் இருத்தி கடற்கரையோரம் எழுந்தருளச் செய்வார்கள். 

பெருமாள் கோவிலில் உள்ள பெருமாளையும் தாயாரையும் அலங்கரித்து, அவர்களுடன் சக்கரத்தாழ்வாரையும் கடற்கரைக்கு எழுந்தருளச் செய்வார்கள். 
 சிவனுக்காக அஸ்திர மூர்த்தியையும், 
பெருமாளுக்காக சக்கரத்தாழ்வாரையும் கடல் நீராடச் செய்வதற்கு தீர்த்தவாரி என்று பெயர். 
 தூப, தீப, ஆராதனை செய்து குளிர்ச்சியான பண்டங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு தந்தபின் ஆலயம் திரும்புவார்கள்.
தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது வெளித் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்துகொண்டதன் மூலம் சமுத்திரராஜன் விஷ்ணுவின் மாமனார் ஆனார். 


தன் மகளை மணந்து கொண்டு மகாவிஷ்ணு வைகுந்தம் சென்றுவிட்டால் இனி நாம் அவரை எப்படி தரிசிப்பது என வருந்தினார் சமுத்திரராஜன். 
தந்தையின் மனக்குறையை லட்சுமி விஷ்ணுவிடம் கூறினாள். 

 திருமால் ஆண்டிற்கு ஒரு முறை தாம் கடற்கரைக்கு வந்து தரிசனம் தருவதாக வரம் தந்தார். அந்த புண்ணிய தினமே மாசிமகம்.
 கருணாசாகரியான அம்பிகை மீனவ குலத்தில் அவதரித்த போது. ஈசன் அம்பிகையை மணக்க காலம் கனிந்தபோது, அவர் மீனவர்போல் வேடமிட்டு அம்பிகையின் இருப்பிடம் சென்றார். 

அங்கு அவரால் உருவாக்கப்பட்ட ராட்சத திமிங்கலத்தை தானே அடக்கி மீனவர் தலைவனுக்குக் காட்சி கொடுத்தார். 

மீனவர் தலைவன், "தங்கள் தரிசனம் அடிக்கடி கிடைக்க அருள் புரிய வேண்டும்' என வேண்டினார்.
அதன்படி ஈசன், "மாசி மகத்தன்று கடல் நீராட வருவேன்' என்றநிகழ்ச்சி நடைபெற்ற தலம் திருவேட்டக்குடி.

மாசி மகத்தன்று ஈசன் வேடமூர்த்தியாகவும் அன்னை மீனவப் பெண்ணாகவும் கடற்கரைக்குச் செல்வர். 
அங்கு தீர்த்தவாரி நடைபெறும். கடலோர ஊர்களான மண்டபத்தூர், காளிகுப்பம், அக்கம்பேட்டை மீனவர்கள் தங்கள் இன மாப்பிள்ளையாக வரும் ஈசனுக்குச் சிறப்பு விழா நடத்தி மகிழ்வார்கள்.