Sunday, October 27, 2013

ஒளி காட்டும் வழி



வண்ணங்கள் பல ஜாலம் காட்டினாலும் சூரிய ஒளி ஒரேநிறம்
நதிகள் பல பெயர்களில் பாய்ந்தாலும் சேரும் இடம் சமுத்திரம்

மதங்கள் பல ஆனாலும் நோக்குவது ஏக இறைவனையே
மனிதர்கள் தோல் வண்ணம் வேறுபட்டாலும்  ரத்தம் ஒரே நிறம்

விளக்குகள்  எதுவானாலும் நோக்கம் ஒளி பெறுவதே
விளக்கினை ஏற்றி இருளினை அகற்றி உற்றிடும் ஞானம்

அன்பு ஒளி காட்டும் வழி  ஆனந்தம்
அருள் ஒளி காட்டும்  வழி ஞானம்

ஆற்றல் ஒளி காட்டும் வழி வெற்றி
ஆத்தும ஒளி காட்டும் வழி இறைவன்

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
உள்ளக விளக்கது ஞானம் ஏற்றுவது

தீபத்தின்  ஒளியில்  திருக்குறளும் படிக்கலாம்.
தீங்கிழைக்க வேண்டி  பொய்ப்பத்திரமும் எழுதலாம்

நன்மை தீமைகளோடு பிம்பம் சம்பந்தப்படாதது போல
ஒளி காட்டும் வழி கைகாட்டி மரம்போல் பாதை காட்டும்

அருட்கிரணம் பட்டு உணர்வின் ஒளியைத் தூண்டுகிறது.
ஒளியின் காட்சி, ஒளிமயமான இறைவனின் மாட்சி

ஒளிக்கு அப்பால் தம்மையே காணமுடிகிறது
ஒளிவீச ஒளிபெற்று ஒளிரும் ஒளிவிளக்குகள்

நிலாத்தட்டில் நட்சத்திரச்சோறு பொங்கும் கடல்
நிலவிடும்  நிலவுலகில் நிலையான நலங்களே

தீபம் வெறும் விளக்கு அல்ல வாழ்வின் கலங்கரை விளக்கு
தீங்ககற்றி சுடரச்செய்யும் பேரொளியால் கலக்கம் அகற்றும்..!


( ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி
கவிதை எழுதுங்கள்



தித்திக்கும் தீபாவளி வாழ்த்துகள்..










\




25 comments:

  1. வெற்றிகரமான 1075வது பதிவுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  2. ஒளி காட்டும் வழி’ப்பதிவு நல்லாவே ஒளி காட்டுது.

    >>>>>

    ReplyDelete
  3. ஒளி காட்டுவதோடு மட்டுமல்லாமல் மொக்கைகளுக்கும் வழி காட்டுது.

    >>>>>

    ReplyDelete
  4. இரண்டாவது படம் புதுமையாக உள்ளது.

    கடைசிபடம் மிகவும் பிடித்துள்ளது.

    >>>>>

    ReplyDelete
  5. நல்ல படங்கள்.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. படங்கள் அசர வைக்கிறது...

    அருமையான கவிதை - இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன் அம்மா... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. இனிய வணக்கம் சகோதரி...
    அழகான ஆழமான பொருள்கொண்ட கவிதை..
    வாழ்வின் இருள்நீக்கி ஒளி காட்டும் வழி..
    முக்கோணப் பெட்டகத்தின் படங்கள் மிகவும் அருமை...

    ReplyDelete
  8. எழுதியுள்ள 24 வரிகளும் இனிமை. பாராட்டுக்கள்.

    //தீபத்தின் ஒளியில்
    திருக்குறளும் படிக்கலாம்,
    தீங்கிழைக்க வேண்டி
    பொய்ப்பத்திரமும் எழுதலாம்.//

    இதில் ஏதோ ஒன்றே நடந்துள்ளது.

    தீபாவளி நல்வாழ்த்துகள்.

    -oOo-

    ReplyDelete
  9. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  10. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  11. தீப ஒளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்!
    http://www.krishnaalaya.com
    http://www.krishnalaya.com

    ReplyDelete
  12. வணக்கம்
    அம்மா

    தங்களின் மின்அஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க சந்தோசம்.. தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்....
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    கவிதையின் ஒவ்வொரு வரிகளும் அருமை படங்களும் அருமை போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள் அம்மா...
    ------------------------------------------------------------------------------------------------------------------
    என்னுடைய வலைப்பக்கம் புதிய -கவிதையாக(தாயே நீ இருந்திருந்தால்)
    http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. வாழ்க்கைப் பாதைக்கு வெளிச்சம் போட்டுக்
    காட்டும் பதிவு. படங்கள் ஒளிர்கின்றன.
    இதயங்கள் பிரகாசமாகின்றன.
    தீபாவளி வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  14. இப்பவே தீபாவளி ஸ்டார்ட் ஆயிடுச்சா ?!

    ReplyDelete
  15. இன்று தான் தீபாவளியா என்று நினைக்க வைத்த பகிர்வு. படங்கள் வெகு சிறப்புங்க.

    ReplyDelete
  16. மிக அருமை!
    கவிதையும் காட்சிகளும் மனதை நிறைக்கின்றன.

    போட்டியில் வெற்றிபெற இனிய வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  17. ஒளி காட்டும் வழி! அருமையான எண்ணங்களை தந்த கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. போட்டிக்கான கவிதையா? எதையும் விடாமல் எல்லாவற்றிலும் பங்குபெறும் உங்கள் உற்சாகம் ஆச்சர்யப்பட வைக்கிறது. வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. ஒளி பற்றிய விளக்கங்கள் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. படிக்கும்போதே உள்ளம் ஒளியால் நிறைகிறது!
    வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  21. அருமையான கவிதை. பாராட்டுக்கள்.
    தீபாவளி வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  22. சகோதரிக்கு அன்பான வணக்கம்..
    கவிதை அருமை.
    உள்ளக விளக்கு ஏற்றி
    வீறுநடை போட்டிடுவோம்
    வாழ்க்கை பாதையில்
    வசந்தங்கள் வந்திடும்
    எனும் நம்பிக்கையில்..
    படத்தேர்வுகள் அனைத்தும் அழகு. ஜொலிக்கிறது. போட்டியில் வெற்றி பெற எனது அன்பான வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  23. மிகவும் அருமையான கவிதை. அதற்காக போட்டிருக்கும் படங்கள் மிக அழகாக கண்ணைக்கவர்கிறது.இப்போட்டியில் தாங்கள் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  24. அழகான, அர்த்தம் செறிந்த வார்த்தைகளால் கவிதை புனைந்துள்ளீர்கள்.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் தோழி சிறந்த கவிதை

    ReplyDelete