Wednesday, August 21, 2013

சுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..!நிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம்.

உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்களில் சிறந்த காயத்ரி மந்திரம் ஓதுவதால் ஆத்ம சுத்தி கிடைக்கும்.

 கீதையில், "மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்' என கிருஷ்ண பகவான் கூறியுள்ளார்.

தன்னை ஜெபிக்கின்றவர் களுக்குப் பாதுகாப்பளித்து ஓர் அரணாகத் திகழ்வதால் காயத்ரி மந்திரம் எனப்  பெயர் ஏற்பட்டது.

விஷ்ணு பகவான் உலகை சிருஷ்டிக்க திருவுளம் கொண்டபோது அவரது முகத்திலிருந்து காயத்ரி மந்திரம் தோன்றியதாம்...!

ஞானம் பெற விரும்பிய முனிவர்கள் வேதக் கடலைக் கடைந்த போது
"த்ரயி' என்ற வேதசாரம் கிடைத்தது.
அதனை காணமதி என்ற மத்தினால் கடைந்த போது காயத்ரி தேவியின் வடிவம் தோன்றியது ..!
வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் திகழ்கிறது.


விஸ்வாமித்திரரின் தவத்தால் மகிழ்ந்த காயத்ரிதேவி  காயத்ரி மந்திரத்தை அவருக்கு உபதேசித்தாள்.

உலக நன்மையைக் கருத்தில்கொண்டு அவர் அதை நமக்கு வழங்கினார். விஸ்வாமித்திரரிடம் காயத்ரி மந்திர உபதேசம் பெற்றதாலேயே ஸ்ரீராமபிரான் இராவணனை வென்றதாகவும் சொல்லப்படுகிறது.

காயத்ரி மந்திரத்தை தாளம் தப்பாமல் கூறி தியானித்தால் 
பெரும் பலன் உண்டு.


காப்பாற்றும்' எனப் பொருள்படும் அன்னை காயத்ரி தனது அபய கரங்களால் நமது பயத்தைப் போக்கியருள்வாள்.

நாடு சுபிட்சமடையவும்  கொடிய நோய்கள் அகலவும் காயத்ரிமந்திரம் உதவும்.

சிறப்புமிக்க காயத்ரிதேவிக்கு சரஸ்வதி, பார்வதி, மகேஸ்வரி, லட்சுமி, மனோன்மணி எனும் ஐந்து முகங்கள் உண்டு...

ஒருமுகம் பவளம்போல் செந்நிறமாகவும்,
ஒரு முகம் பொன்னிறமாகவும்,
ஒருமுகம் ஆகாய நீல நிறத்திலும்,
நான்காம் முகம் தூய வெண்ணிறமாகவும்,
ஐந்தாம் முகம் முத்துப்போல் ஒளி வீசுவதாகவும் அமைந்துள்ளன.

இந்த ஐந்து முகங்களும் சிவனைப்போல் ஐந்தொழிலையும் செய்கின்றன.

காயத்ரிதேவி காலையில் குழந்தையாகவும்,
நண்பகலில் நடுத்தர வயதினளாகவும்,
மாலையில் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தவளாகவும்
மூவகைத் தோற்றம் தருகிறாள் என்பர்.

 காலையில் சரஸ்வதியான பிரம்ம சொரூபிணியாய்,
நண்பகலில் சாம்பவியான ருத்ர சொரூபிணியாய்,
மாலையில் வைஷ்ணவியான விஷ்ணு சொரூபிணியாக
அருளாட்சி புரிகிறாள்..!

காயத்ரீ தேவி விஷ்ணுலோகத்தில் ஸ்ரீமஹாலட்சுமியாகவும், 
பிரம்ம லோகத்தில் காயத்ரியாகவும், 
ருத்ர லோகத்தில் கௌரி என்ற பார்வதியாகவும் விளங்குவதாக 
காயத்ரி  ஸ்தோத்திரம் குறிப்பிடுகிறது.

காயத்ரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது.
"ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.'

  "எவர் நமது அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதிமயமான இறைவனை தியானிப்போமாக' என்பதே காயத்ரி மந்திரத்தின் பொருளாகும். 

காயத்ரி வேதங்களின் தாய். பாவங்களைப் போக்குபவள்.

பூமியிலும் சொர்க்கத்திலும் காயத்ரி மந்திரத்தைவிடவும்
பரிசுத்தம் செய்யும் பொருள் வேறில்லை.

காயத்ரி மந்திரத்தை நாள்தோறும் மூன்று முறை
ஜபித்தால் மங்களம் உண்டாகும்.

நான்கு வேதங்களை ஓதியதன் பலன் கிடைக்கும்.

ஆரோக்கியம், பலம், அழகு, அறிவு, பிரம்மதேஜஸ் போன்றவை உண்டாகும். காடத்ரி ஜெபிப்பவர்க்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அஷ்டமாசித்திகளையும் தரும் என்பர் பெரியோர்.

காயத்ரி மந்திரம் சூரியனை பிரதான தெய்வமாகக் கொண்டது.

ஒவ்வொரு தெய்வத்தையும் முழுமுதலாகக் கொண்ட
காயத்ரி மந்திரங்களும் உண்டு.

விநாயகர் காயத்ரி, சண்முக காயத்ரி, அனுமன் காயத்ரி 
என எல்லா தெய்வங்களின் பேரிலும் காயத்ரி மந்திரம் உண்டு.
நவகிரகங்களுக்கும் உண்டு.

சிதம்பரம் அருகேயுள்ள கஞ்சித்தொட்டி பஸ் நிறுத்தத்துக்கு அருகிலுள்ள காயத்ரி தேவி ஆலயம் இரு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறுடைய மிகவும் அபூர்வமானதாகும்.

ஐந்து முகங்கள், பத்துக் கரங்களுடன் வெண்தாமரையில் வீற்றிருப்பது போன்ற எழிலான தோற்றத்தில் காயத்ரிதேவி காட்சி தருகிறாள்.

 பௌர்ணமிதோறும் கோவிலில் ஹோமம், அபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம் நடக்கும்.  பிரார்த்தனை பலித்தவர்கள் அம்மனுக்கு ஆறு கஜம் புடவை சாற்றி அபிஷேகம் செய்கின்றனர்.

சேலம் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தி லுள்ள காயத்ரி தேவியும் புதுமையான தோற்றம் உடையவள்தான். பஞ்சலோக மூர்த்தியான தேவி ஐந்து முகங்கள், மூன்று கண்கள், பத்துக் கரங்கள், மூன்று தனங்கள், மூன்று கால்களுடன் காட்சி தருகிறாள்.

திருப்பட்டூர் பிரம்மன் ஆலயத்திலும், சென்னையில் அரும்பாக்கம் 
ஜெய் நகரிலும், இன்னும் தமிழ்நாட்டில் வேறு சில இடங் களிலும் காயத்ரிதேவி சந்நிதி அமைந்துள்ளது

அறிவுக்கூர்மை பெறவும், ஞாபக சக்தி வளரவும், அச்ச உணர்வு அகலவும், எதிலும் வெற்றி பெறவும், விவேகம் ஏற்படவும் கைகண்ட மருந்தாக காயத்ரி மந்திரம் பயன்படுகிறது.

"காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திர மில்லை; தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை; காசியைவிட புண்ணிய தீர்த்தமில்லை; ஏகாதசியை விஞ்சிய வேறு விரதமில்லை' என்கிறது ஒரு சுலோகம்.

ஒவ்வோர் ஆண்டும் ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் காயத்ரி ஜெபம் வரும். அன்றைய தினம் 1,008 முறை காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டுமென்பது மரபு.

29 comments:

 1. அகத்தினைத் தூய்மைசெய்யும் காயத்ரி மந்திரம் அறிந்தேன் நன்றி

  ReplyDelete
 2. ரசித்தேன்.

  காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பு மாறாமல் சொல்லவேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்ல ஒரு நல்ல குருவிடம்தான் உபதேசம் பெற்றுக் கற்க வேண்டும்.

  ReplyDelete
 3. அழகிய படங்களுடன் சிறப்பான பகிர்வு... நன்றி அம்மா.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. அருமையான படங்கள் அம்மா.. தொடருங்கள்..

  ReplyDelete
 5. காயத்ரி மந்திரத்தின் மகிமையை எடுத்து சொன்ன விதம் அழகு.

  இந்த வலைப்பதிவுக்கு ஒரு தொடர்பினை எனது ஆன்மீக வலையில் ஏற்படுத்தி இருக்கிறேன்.

  நன்றி .

  சுப்பு தாத்தா.
  www.pureaanmeekam.blogspot.com

  ReplyDelete
 6. காயத்ரி தேவியின் பல முகங்கள் தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.
  நன்றி.

  ReplyDelete
 7. அழகிய படங்களின் சுரங்கம் ...!!! வாழ்த்துக்கள் தோழி .

  ReplyDelete
 8. அழகிய படங்களும் அற்புதமான பதிவும் சகோதரி!
  மனம் நிறைகிறது. அருமை!

  பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 9. மந்திர மகிமை அறிந்து மகிழ்ந்தோம்
  திரு உருவப்படங்கள் அற்புதம்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 10. இனிய காலை வணக்கம்.
  நன் நாளாய் இன் நாள் அமையட்டும்.
  பக்தி மயமான படங்களுடன் காலை மலருகிறது.
  பதிவிற்கு இனிய நன்றி.

  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 11. 1]

  சுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம் .. !

  காயத்திரி ஜபம் பற்றிய இன்றைய பதிவு மிக அருமை.

  அதுவும் காயத்ரிஜப தினமாகிய இன்று வெளியிட்டுள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ;))))

  >>>>>

  ReplyDelete
 12. 2]

  இன்று சிரத்தையாக 1008 முறைகள் காயத்ரி ஜபத்தை, ஜபித்து முடித்துள்ள என்னைப் போன்றவர்களுக்கு, இது தங்களின் 1008வது வெற்றிப்பதிவாக அமைந்திருப்பதில் மேலும் மகிழ்ச்சி தான்.

  >>>>>

  ReplyDelete
 13. 3]

  இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நீங்கள் பதிவிட்ட முதல் பதிவு காயத்ரி ஜபம் பற்றியது.

  அது வெளியிடப்பட்ட ஆங்கிலத்தேதியும்: 21

  அதுபோல காயத்ரி மஹா மந்திரத்தை 1008 தடவை இன்று உச்சரிக்கும் எங்களுக்கெல்லாம் சந்தோஷம் அளிக்கும் விதமாக தாங்கள் கொடுத்துள்ள இன்றைய 1008 ஆவது பதிவும் காயத்ரி பற்றியது.

  இன்றைய ஆங்கிலத்தேதியும்: 21 ஆக அமைந்துள்ளது.

  21 தலைமுறைகளுக்கு புண்ணியம் சேரட்டும்.

  மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

  >>>>>

  ReplyDelete
 14. 4]

  மேலும் தினமும் காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் எண்ணிக்கைகளில் 12, 32, 64, 108, 1008 என்பதெல்லாம் மிகவும் விசேஷமானவைகளாகச் சொல்லப்பட்டுள்ளது.

  தாங்கள் வெளியீடுகள் ஜனவரி 2011 ஆரம்பித்து, தற்போது நடக்கும் ஆகஸ்டு 2013 என்பது 32வது மாதமாகவும் அமைந்துள்ளது மேலும் ஓர் தனிச்சிறப்புத்தான். ;)

  >>>>>

  ReplyDelete
 15. 5]

  காயத்ரி மஹா மந்திரம் பற்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகள் சொல்லியுள்ளது நேற்று நிறைய படித்தேன்.

  அதில் கொஞ்சூண்டு இதோ:

  ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த ESSENCE (ஸாரம்) காயத்ரீ மஹாமந்திரம்.

  காயத்ரீ என்றால், "எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது" என்பது அர்த்தம்.

  காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே !

  கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை;

  பிரேமையுடனும் பக்தியுடனும் உச்சரிப்பது என்று அர்த்தம்.

  யார் தன்னை பயபக்தியுடனும், பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ. அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது.

  வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது,

  ”காயத்ரீம் சந்தஸாம் மாதா” என்று இருக்கிறது.

  சந்தஸ் என்பது வேதம்.

  வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. !!!!!

  24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன.

  அதனால் அதற்கு 'த்ரிபதா' காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது.

  காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது.

  மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான்.

  அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை.

  காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும்.

  -=-=-=-=-

  ReplyDelete
 16. 6]

  ”தாயாருக்கு மேல் தெய்வம் இல்லை. காயத்ரிக்கு மேல் மந்திரம் இல்லை” என்றும் சொல்லுவார்கள்.

  -=-=-=-=-

  ReplyDelete
 17. 7]

  ஒருமிகப்பெரிய மெகா தொடர் முடிந்தது போல நினைக்கத்தோன்றுகிறது, எனகு, இந்த தங்களின் 1008வது வெற்றிப் பதிவினைப்படித்து முடித்ததும்.

  >>>>>

  ReplyDelete
 18. 8]

  அருமையான படங்களுடன் அழகான விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த பதிவு.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  எங்கிருந்தாலும் வாழ்க !

  ooooo 1008 ooooo

  ;))))) சுபம் ;)))))

  ReplyDelete
 19. ஆவணிஅவிட்டத்திற்கு மறுநாள் வரும் என சரியான நாளில் இப்பதிவை இடம் பெறச் செய்திருப்பது பாராட்டுக்குரியது. இவ்வளவு படங்கள் எப்படி சேகரிக்கிறீர்கள் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.

  ReplyDelete
 20. அம்மன் படங்கள் அனைத்தும் அருமை...

  ReplyDelete
 21. மகிழ்ச்சியை தரும் பதிவும் கூட,
  நன்றி.

  ReplyDelete
 22. அழகான படங்கள், அருமையான காயத்திரீ மந்திர விளக்கம்.
  நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. அருமை. படங்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. காயத்ரீ ஜபத்தன்று நீங்கள் கொடுத்திருக்கும் பதிவு அருமை.
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 25. படங்களும் விளக்கமும் அருமை! நல்ல பதிவினைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 26. Excellent picture with comprehensive details about Gayatri Mantram.
  Thank you Madam! Thanks also to Sri.Vai.Gopalakrishnan for highlighting its importance in the words of HH mahaperiava which will enlighten many readers and encourage them to chant the Mantram regularly.

  ReplyDelete
 27. S Nagarajan has left a new comment on the post "சுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..!":

  Excellent picture with comprehensive details about Gayatri Mantram.

  Thank you Madam!

  Thanks also to Sri.Vai.Gopalakrishnan for highlighting its importance in the words of HH mahaperiava which will enlighten many readers and encourage them to chant the Mantram regularly. //

  Thank you very much, Sir.

  You may like to visit my blog in which I am writing about His Holiness Sri Sri Sri Maha Swamigal's Advises continuously from May 2013 with some miracle incidents too. Part No. 49 out of 108 is released today. This is just for your information, please.

  My Blog: gopu1949.blogspot.in

  e-mail: valambal@gmail.com

  Link for Part-49
  http://gopu1949.blogspot.in/2013/09/49.html

  Link for Part-1
  http://gopu1949.blogspot.in/2013/05/1.html

  You are requested to go through the following 2 special issues also:

  http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html

  http://gopu1949.blogspot.in/2013/05/blog-post_19.html

  அன்புடன் VGK

  ReplyDelete
 28. காயத்திரி தேவியின் வடிவங்களுடன் காயத்திரி மந்திரத்தின் தன்ைமகளும் விளக்கங்களும்மிக நன்று
  வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

  ReplyDelete
 29. படங்களும் விளக்கமும் பயனுள்ளதாக இருந்தது
  ஒரு இந்துவாக இருப்பவனுக்கு காயத்ரி மந்த்ரம் தெரிந்து
  இருக்கனூன்னு தெரியும் ஆனா இங்கவந்து பார்த்தா
  வை. கோபாலகிருஷ்ணன் ஐயா தனது பின்னூட்டத்தையே
  ஒரு பதிவா போடலாம் அவ்வளவு சங்கதிகள் சொல்லப்பட்டுள்ளது.
  நன்றி ஐயா.

  ReplyDelete