Thursday, August 29, 2013

உற்சாகம் உலவும் உறியடி உற்சவம்


[sathya6.jpg]


மாணிக்கங்கட்டிவயிரமிடைகட்டிஆணிப்பொன்னாற்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்பேணியுனக்கு பிரமன்விடுதந்தான் 
மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ
 
பெரியாழ்வாரின் தாலாட்டுப் பாடலில் அலங்கரிக்கப்பட்ட குழந்தை கண்ணன் அவதரித்த தினத்தில் நிகழ்த்தப்படும் உறியடி உற்சவம் ஊற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது .. 
உறியடி உற்சவத் திருவிழாவினால்னிச்சிறப்புப் பெற்ற வரகூரில் 
ஆண்டு தோறும் ஆவணியில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள், - காயத்ரி ஜபத்தன்று தொடங்கி, பத்து நாட்கள் விழா நடைபெறும். 
உறியடி நாளன்று காலையில் வெண்ணெய் நிரம்பிய தங்கக் குடத்தை அணைத்தபடியே வெள்ளிப் பல்லக்கில் நவநீத கிருஷ்ணனாக (நவநீதம் என்றால் வெண்ணெய் எனப்பொருள்)  உற்சவமூர்த்தி வீதி உலா வருவார். 
பின்னால் சதுர்வேத பாராயணமும் பாகவதர்களின் நாம சங்கீர்த்தனமும் தொடரும்.

அன்று இரவு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உறியடி கிருஷ்ணர் அலங்காரத்துடன் புறப்படுவார்.
தலையில் முண்டாசும், நெற்றியில் நாமமுமாக, உடம்பில் போர்வை போர்த்திக் கொண்டு, காலில் சலங்கை கட்டிக் கொண்டு ஒரு கூட்டம் இடையர்கள் போல வேடமணிந்து பின்தொடரும். 

அடுத்து, பாகவதர்கள், நாராயண தீர்த்தர் இயற்றிய கிருஷ்ண லீலா தரங்கிணி பாடல்களைப் பாடிக் கொண்டு வருவார்கள்.


இடையர் வேடம் அணிந்தவர்கள் உறியடி மரத்தை வந்தடைவார்கள். 

மிருதங்கம் போன்று அமைப்பில் உறி கட்டி, அதில் கண்ணனுக்கு விருப்பமான முறுக்கு, சீடை, தட்டை போன்ற தின்பண்டங்களை மண்பாண்டத்தில் வைத்துத் தொங்க விடுவார்கள்.

மற்றொரு நுனியில் நீண்ட கயிற்றைக் கட்டி வைத்திருப்பார்கள்.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் உறியை எட்டிப் பிடிக்க முயலுகையில் ஊர் மக்கள் இந்தக் கயிற்றை  ஏற்றி இறக்கி ஆட்டம் காட்டுவார்கள்..
 தடிகொண்டு அடிப்பதற்கு இடையூறு செய்வதுபோல் தண்ணீரைப் பீய்ச்சும் குழலால் முகத்தில் தண்ணீரை அடித்து, பார்வையை மறைப்பார்கள்.

முடிவில் யாராவது ஒருவர் இதில் வெற்றி பெற்று கைப்பற்றிய தின்பண்டங்களை அங்குள்ள பலரோடும் பங்கிட்டு உண்டு மகிழ்வர்.
உறியடியை அடுத்து, வழுக்குமரம் ஏறுதல். 

உறியடி முடிந்தவுடன் உயரமான வழுவழுவாக்கப்பட்ட தேக்குமரத்தில் ஒருவர் மீது ஒருவராகத் தோள் மீது ஏறி வழுக்குமர உச்சியை அடைய முயலுவார்கள்.

எண்ணெய் வழுக்குவது போதாதென்று சுற்றியிருப்பவர்களும்ஏறுபவ்ர் மீது  தண்ணீர் அடித்து ஆரவாரம் செய்வார்கள். 

ஒரு வழியாக யாராவது ஒருவர் உச்சியை அடைந்து  மேலே கட்டி வைத்துள்ள பண முடிப்பையும் தின்பண்டங்களையும் கைப்பற்றி வெற்றியுடன் இறங்குவார். 

தின்பண்டங்களை நாலாபுறமும் வீசி எல்லோரக்கும் கொடுப்பது வழக்கம். 

விடியலில் நித்திய வழிபாடுகள் முடிந்து அலங்காரம் ஆராதனை முடிந்து, உஞ்சவிருத்தி, அதன்பின் முத்துக் குத்தல், உலக்கை ஆடுதல் போன்ற சம்பிரதாயங்களுடன் ருக்மணி கல்யாணம் நடைபெறும்.
இடையர் வேடமணிவது, உறியடி அடிப்பது, வழுக்குமரம் சறுக்குவது போன்றவை எல்லாம் வெறும் கேளிக்கையல்ல. 
கிருஷ்ண அவதார லீலைகள். 
அமைந்துள்ள செய்திகள் தத்துவார்த்தமானவை. 
உறியடி நமது ஆசைகள்; 
வழுக்குமரச் சறுக்கல்கள் நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்கள்; 

தண்ணீர் அடித்து சறுக்க வைப்பது வாழ்க்கையில் 
நமக்கு ஏற்படும் சோதனைகள். 
 
உறியடி உற்சவம் நடக்கும்போது பலர் கம்பத்தில் ஏறுவார்கள். 
பலர் வழுக்கி விழ, யாராவது ஒருவர் மட்டுமே உச்சியைத் தொடுகிறார். 

உச்சியை அடைந்ததால் ஏற்படும் மகிழ்ச்சி அவருக்கு மட்டுமின்றி, 
அவரை சுற்றியிருந்தவர்களுக்கும் ஏற்பட்டு விடுகிறது. 
அந்த ஒருவர் பெறும் வெற்றியை அனைவரும் 
தமக்கானதாக கருதி மகிழ்கிறார்கள். 

இதைப்போலவே, நம்மில் பூரணத்துவம் பெற்று சிறக்கும் 
ஒருவர் அடையும் நன்மையும் அனைவருக்கும் கிடைத்ததாகிறது.
நம்முடைய அஞ்ஞானங்கள். வைராக்கியத்தோடு முடிவில் உச்சியை அடைவது என்பதுதான் நாம் பெறும் ஞானம் அல்லது இறையனுபவம்.

உறியடி, ருக்மணி கல்யாணம், அனுமத் ஜெயந்தி என்ற மூன்றுநாள் விழா அமைப்பு முறையை உருவாக்கியவர் வரகூரில் வாழ்ந்து அங்கேயே முக்தியடைந்த நாராயண தீர்த்தரையே சாரும். 

அவரது கிருஷ்ண லீலா தரங்கிணியில் இவ்விழா பத்ததி 
(கொண்டாடும் முறை) தெளிவாக சித்திரிக்கப்பட்டுள்ளது. 

தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள . வரகூர் மக்கள்,  
குலதெய்வமாக வெங்கடேசப் பெருமாள்   திகழ்கிறார் ..
வேலை கிடைத்து வெளியூர் , வெளிநாடு செல்லும் வரகூர் இளைஞர்கள், தங்கள் முதல் மாதச் சம்பளத்தை வரகூர் வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு அனுப்பி வைப்பதோடு முடி இறக்குதல், காது குத்துதல் வேண்டுதல்கள் எல்லாமே இந்தக் கோயில் தெய்வத்திற்குத்தான் என்று இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
Uriyadi Invitation 2009 - Page 2


[sathya6.jpg]

Uriyadi Invitation 2009 - Page 4
நிறைந்த நன்றிகள்  :  http://varagur.org/uriyadi/uriyadi-2013/

Uriyadi 2013 Invitation

Uriyadi 2013. invitation1.jpg16 comments:

 1. GOOD MORNING !

  சபாஷ் !

  உற்சாகம்
  உலவும்
  உறியடி
  உத்சவம்

  என்ற தலைப்பே ஜோர் ஜோர் !! ;)))))

  ReplyDelete
 2. உறியடி உற்சவ படங்கள் அருமை. அதுவும் கிருஷ்ணர் வேடமிட்ட அந்த குழந்தை கையில் தடியோடு பானையை அடிக்க முயற்சிக்கும் படம் கொள்ளை அழகு! பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. On seeing this post, i felt like joining and enjoying the uriyadi.....
  viji

  ReplyDelete
 4. உறியடி விழாவின் உள்ளர்த்தம் சிறப்பே !

  ReplyDelete
 5. உற்சாகம்
  உலவும்
  உறிய்டி
  உற்சவம்

  உங்கள்
  உள்ளத்தில் தோன்றி
  உள்ளன்போடும்
  உவகையுடனும் வைத்த தலைப்பு .... என்
  உள்ள்த்தைக் கொள்ளை கொள்ள வைத்து, படிக்கும்
  உந்துதலைத்தந்தாலும், மேலும் மேலும் க்ருத்தளிக்க
  உண்மையிலேயே நான்
  உறுதியுடன் விரும்பினாலும்
  உற்சாகம் இல்லாமல் போகிறதே, இங்குள்ள
  உண்மையான சூழ்நிலைகள்.

  ReplyDelete
 6. உறியடி உற்சவம் இடையர் வேடம் போட்டு பிள்ளைகள் திரிவது என்பது சாதாரண கேளிக்கை அல்ல..

  ஆஹா.. அற்புதம்...

  க்ருஷ்ண அவதார லீலைகள்...

  வாழ்க்கையில் நாம் பெறும் நல்லவைகள் சோதனைகள் அதில் இருந்து மீளும் வழி வகைகள் எல்லாமே இந்த உறியடி உற்சவத்தில் தத்துவார்த்தமாக விளக்கப்பட்டிருக்கிறது..

  உற்சவத்தில் அருகிருந்து பெருமானை தரிசித்தது போன்றதொரு உணர்வு..

  அழகிய கண்ணன் படங்கள்.... வாயில் இட்ட வெண்ணை உருகி ஒழுகும் உதட்டுடன் க்ருஷ்ணனை பார்க்க கொள்ளை அழகு..

  மனம் நிறைந்த அன்பு நன்றிகளுடன் ஸ்ரீ ஜெயந்தி வாழ்த்துகள் இராஜிம்மா...

  ReplyDelete
 7. உறியடி மற்றும் வழுக்கு மரம் பார்த்ததும் எங்க ஊர் நினைவு வந்து விட்டது. உண்மையில் அது விளையாட்டு என்று தான் நினைத்திருந்தேன். இப்போதே அதன் சரியான விளக்கம் தெரிந்தேன். படங்களும் விளக்கமும் வெகு சிறப்புங்க. மிக்க நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 8. கண்ணன் பிறப்பு 10 நாள் நடக்கும் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பஜனை மடத்தில். ராதாகல்யாணத்துடன் விழா நிறைவு பெறும். இப்போது இங்கு இருப்பதால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை ஆனால் தினம் உங்கள் பதிவின் மூலம்,விழாக்கள் காண்கிறேன்.
  வாழ்த்துக்கள்.
  நன்றி.

  ReplyDelete
 9. ஆனந்த மயமான உறியடி உற்சவத்தினைக் கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள்!...நன்றி!..

  ReplyDelete
 10. உறியடி உற்சவத்தின் அர்த்தம் தெரிந்துகொண்டோம். சிறப்பான விழா.

  ReplyDelete
 11. முத்துக் குத்தல், உலக்கை ஆடுதல் என்றால்?

  பாலபிஷேகம் கண்ணுக்கு நிறைவு.

  'பெரிதினும் பெரிது கேள்' என்பதாக உற்சவ இலக்கின் உயரம்!!

  ReplyDelete
 12. உறியடி உற்சவத்தின் தகவல்கள் அறிந்துகொண்டேன்.அழகான படங்கள்.நன்றி.

  ReplyDelete
 13. கண்ணன் படங்கள் அழகு.விளக்கமும் அருமை.

  ReplyDelete
 14. உறியடி உற்சாகம் – “அந்தநாள் இன்றுபோல் இல்லையே? அது ஏன்? நண்பனே .... நண்பனே...” என்று ஏங்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. "இந்தநாள் அன்றுபோல் இல்லையே” என்று வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தவற்றினுக்கு மன்னிக்கவும்.

   Delete