Thursday, August 1, 2013

ஆடிக் கிருத்திகைத்திருநாள்



தணிகை மலைப் படிகள் எல்லாம் திருப்புகழ் பாடும் - அங்கே 
தனை மறந்து மயில்கள் எல்லாம் நாட்டியம் ஆடும்!

கனிவுடனே முருகவேளும் சிரித்திடும் காட்சி - அதைக் 
காண்பவர்க்கு எந்தநாளும் இல்லையே வீழ்ச்சி! 

விளங்கிவரும் சேவற்கொடி விண்ணதில் ஆடும் - அது 
வேல்முருகன் அடியவர்தம் வினையினைச் சாடும்!

குலுங்கி வரும் தென்றல் அங்கே இசை முழக்கும் - திருக்
குமரன் பேரைச் சொல்லிச் சொல்லி நம்மை மயக்கும்!


ஆடி கிருத்திகை சிவ சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரம்

 ஆடிக்கிருத்திகை அன்று முருகன் கோயில்கள் அனைத்திலும்  பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமரிசையாக நடக்கிறது.
அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் .ஆடிக் கிருத்திகை திருநாளில்  10 லட்சம் காவடிகள் எடுத்து மிகப் பிரம்மாண்டமான திருவிழாவாகக்கொண்டாட்ப்படுகிறது ...
அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரத்தன்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாளை கொண்டாடுகிறார்கள்.
மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவின்போது சுவாமி, அடிவாரத்திலுள்ள சரவணப்பொய்கைக்கு எழுந்தருளுகிறார். 
வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்திருக்கிறது ...
ஒரு லட்சம் ருத்தராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம்  உற்சவர் சன்னதியாக உள்ளது

முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. 

ஆபத்சகாய விநாயகரை கடைசியாகத்தான் வணங்குதல் வேண்டுமாம். 

திருத்தணியில் முருகனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சாதாரண சந்தனம் சாத்துவதில்லை. முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. 

இந்த சந்தனத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். 
இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. விழாக்காலங்களில் மட்டுமே இந்த சந்தன பிரசாதம் கிடைக்கும்.

முருகப்பெருமானை இந்திரன், ஆடி கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, ஆடி கிருத்திகைமிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை முருகனுக்குச் சூட்டி வழிபட்ட தலமென்பதால், இங்கு அதிகளவில் மலர்க்காவடி செலுத்துகின்றனர். மலர்க்காவடி வாடகைக்கு கிடைக்கிறது.

 வள்ளியின் திருமணத்தலம் .. 

முருகப்பெருமான், திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, கோபம் தணிந்து தங்கியதால் "தணிகை மலை' என்று பெயர் பெற்று "திருத்தணி' என்று மாறியது.
அசுரனோடு மோதியதன் காரணமாக மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறது. 








17 comments:

  1. முருகனைப் பற்றிய அழகான கட்டுரை நன்று.

    ReplyDelete
  2. சிறப்பான படங்களுடன் தகவல்கள் அருமை... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. முக்கிய அறிவிப்பு : சென்னை பதிவர் சந்திப்பு 2013← இணைப்பை சொடுக்கி வாசிக்கவும்... அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...

    தொடர்புக்கு : dindiguldhanabalan@yahoo.com
    +91 9944345233

    ReplyDelete
  4. ஆடிக் கிருத்திகை . அறியாதன அறிந்தேன் நன்றி

    ReplyDelete
  5. நாளென் செய்யும் வினைதான் என்செய்யும்...!
    நாடிவந்த கோளென் செய்யும்...!
    கொடும் கூற்றென் செய்யும்...!
    குமரேசர் இருதாளும் சிலம்பும், சதங்கையும், தண்டமும்
    தோளும் கடம்பும் எமக்கு முன்னே வந்து தோன்றிடினே!!!

    ReplyDelete
  6. ஆடிக்கிருத்திகை,திருத்தணி முருகன் பற்றியதகவல்கள், அழகிய படங்கள்.அந்த முருகனருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.நன்றி

    ReplyDelete
  7. aadi krithigai pictures are so good

    ReplyDelete
  8. உள்ளம் உருகியே ஓதிடக் கந்தனைத்
    துள்ளியே ஓடும் வினை!

    அற்புதக் காட்சியும் பதிவும்!
    மிக அருமை!

    பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  9. ஆடிக்கிருத்திகைக்கு ஏற்ற பொருத்தமான பகிர்வு

    >>>>>

    ReplyDelete
  10. அனைத்துக்கும் பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    நன்றியோ நன்றிகள்.

    தொடரட்டும் “முருகா” !

    ooooo 988 ooooo

    ReplyDelete
  11. முதல் இரண்டு படங்களில் க[கா]ட்டியுள்ள, மிகவும் நெருக்கமாகத் தொடுத்துள்ள, அடுக்கு மல்லிகை மாலைகள், மிகவும் ஜோராக மணம் வீசுவதாக பார்க்கவே ரம்யமாக உள்ளன. ;)))))

    ReplyDelete
  12. ஆடிக்கிருத்திகை முருகன் தரிசனம் கிடைத்தது.
    படங்கள் எல்லாம் மிக அழகு.

    ReplyDelete
  13. கந்தனுக்கு அரோகரா!! படங்கள் வெகுசிறப்பு..

    ReplyDelete
  14. ஆடிக்கிருத்திகை பற்றி அறிந்துகொண்டேன்.முருகாவெனச் சொல்லிக்கொள்கிறேன் என் ஆன்மீகத்தோழி !

    ReplyDelete