Wednesday, December 31, 2014

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2015

Happy new year gif 2015 Happy new year gif 2015

அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

துள்ளும் அலையென வானம் எல்லை என புத்தாண்டு என 
உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும்
happy-new-year-cat-pictures-2
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை என
இன்று புதிதாய் பிறந்தோம் என புத்துணர்வுடன்
இனிதாய் வரவேற்போம் புத்தம் புது பூக்களாய் மலரும் புத்தாண்டினை..!

   

மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும்-தெய்வ
வலியுண்டு தீமையைப் போக்கும்;
விதியுண்டு,தொழிலுக்கு விளைவுண்டு,குறைவில்லை

Tuesday, December 30, 2014

வைகுண்ட ஏகாதசி திருவிழா

ஸ்ரீ ரங்கநாதர் ஸ்தோத்திரம் :

 காவிரி நதியின் நடுவில் ஏழுமதில்களால் சூழப்பட்டு, நடுவில் தாமரை மொட்டுப் போன்று விளங்கும் விமானத்தின் கீழ், மிகவும் மென்மையான ஆதிசேஷனின் உடலாகிய கட்டிலில் யோகநித்திரையில் துயில்பவரும், இடது கையை இடுப்பில் வைத்திருப்பவரும், ஸ்ரீதேவியும், பூதேவியும் தாங்கிநிற்கும் திருப்பாதங்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை வணங்குகிறேன்.

கஸ்தூரி திலகம் இட்டவரும், காது வரை நீண்டிருக்கும் திருக்கண்களைக் கொண்டவரும், முத்துக்களால் இழைக்கப் பட்ட கிரீடத்தைச் சூடியவரும், தன்னைத் தரிசிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்பவரும், தாமரை மலர் போன்ற திருமுகத்தைக் கொண்டவருமான ரங்கநாதரே! உம்மை மறுபடியும் எப்போது பார்ப்பேன்?

 காவிரிக்கரையின் அருகில் வீற்றிருப்பவரும், இந்திர நீலமணியை போன்ற பிரகாசமுடையவரும், மது என்னும் அரக்கனைக் கொன்றவருமான ரங்கநாத மூர்த்தியே! உம்மை ஹே நாராயணா! ஹே முராரே! ஹே கோவிந்தா! என்று திருநாமங்களை சொல்லி மகிழும் பாக்கியம் என் வாழ்நாளில் எப்போது கிடைக்கும்?
எப்போது காவிரியில் ஸ்நானம் செய்து என் பாவங்களைப் போக்குவேன்? அடர்ந்த மரங்களைக் கொண்டதும், ரம்மியமானதும், பசுமையானதுமான காவிரிக்கரையில் எப்போது நான் வாசம் செய்வேன்? ஆதிசேஷன் மீது துயில்பவரும், செந்தாமரைப்பூ போன்ற கண்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை எப்போது சேவிப்பேன்?

ஸ்ரீரங்கத்தையும், காஞ்சிபுரத்தையும், திருப்பதியையும், அஹோபிலத்தையும், சிம்மாசலத்தையும்(சோளிங்கர்), கூர்மத்தையும் (ஆந்திரா), புரு‌ஷோத்தமத்தையும், பத்ரிகாசிரமத்தையும், நைமிசாரண்யத்தையும், அழகு பொருந்திய துவாரகா பட்டினத்தையும், பிரயாகையையும், மதுராபுரியையும், அயோத்தியையும், கயாக்ஷத்திரத்தையும், புஷ்கரத்தையும், சாளக்கிராமத்தையும் நேரில் கண்டு உம் திருப்பாதங்களை சேவிக்கும் பாக்கியத்தை அருள் செய்வீராக.

“பசியாக இருக்கிறது. அதனால் உடம்பு நடுங்குகிறது’ என்று கூறினால் கருணை கொண்ட தாய், எப்படி குழந்தையை நோக்கி ஓடிவருவாளோ, அதுபோல பக்தர்களின் துன்பத்தைப் போக்க ஓடிவந்து அருள்செய்யும் ரங்கநாதரே! உம்மைப் பணிந்து வணங்குகிறேன்.
 - ஏகாதசியன்று இரவில் விழித்திருக்கும் போது, 
 ஸ்ரீ ரங்கநாதர் ஸ்தோத்திரத்தை 1008 முறை சொல்பவர்களுக்கு,  செல்வவளம் அமையும்.

.
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனாகிய திருமாலே, ஏகாதசி விரதத்தினை மேற்கொள்கிறார் என்பார்கள்.

எனவே, இதன் மகிமையை அளவிட கருவியே இல்லை.

அனைத்தையும் கடந்தவர் கடவுள். நமக்குத் தான் விரதம், ஆச்சார அனுஷ்டானங்கள் எல்லாம். கடவுளுக்கு ஏது என நமக்குத் தோன்றலாம். சத்தியத்தைக் காக்க மகாவிஷ்ணுவே திரேதாயுகத்தில் ராமனாகப் பிறந்தார். சாதாரண மனிதனைப் போல பலவிதமான துன்பங்களை அனுபவித்து, தர்மத்தை மீறாமல் வாழ்ந்து காட்டினார்.

அப்பரம்பொருளே துவாபரயுகத்தில் கிருஷ்ணராக அவதரித்து தர்மத்தை நிலைநிறுத்தி உதாரண புருஷராகத் திகழ்ந்தார்.

அதேபோல, பரம்பொருளான விஷ்ணுவே, ஏகாதசியின் சிறப்பினை உணர்த்தும் வகையில், அவரே விரதம் இருந்து அருள் செய்கிறார்.


.வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருகிறது.

 ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க "பரம்பத வாசல்", சொர்க்க வாசல்"  வழியே உலா வருவதைக் காண கண் கோடி வேண்டும்

திருப்பதி மலைமீதுள்ள திருமலையிலும் கொண்டாடப்படும் சிறப்பு வாயில் "வைகுண்ட துவாரம்" என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும்
 ..

Monday, December 29, 2014

மெல்பர்ன்நகரும் ,மேப்பிள் மரங்களும்மெல்பர்ன் நகரில் சாலையின் இருபக்கங்களிலும் இலைகளே மலர்களாக ஜாலம் காட்டும் மேப்பிள்மரங்கள் கவனத்தைக்கவர்ந்தன.

.ஒவ்வொரு பருவத்திலும் நிறம் மாறி விந்தைகள் புரிகின்றன..இளஞ்சிவப்புவண்ணத்தில் மாறி அந்த இடத்தையே ஒளிரவைக்கின்றன..

கனடா நாட்டின் தேசீயக்கொடியில் மேபிள் மர இலை இடம்பிடித்திருக்கிறது..


ரப்பர் மரத்திலிருந்து பால் எடுப்பதுபோல மேப்பிள் மரத்திலிருந்து சாறு எடுத்து மேபிள் சிரப் ஆக பயன்படுத்துகின்றனர்..

மரப்பொருட்கள் தயாரிக்க மரம்  பலவகைகளில் பயன்படுகிறது..