Saturday, March 5, 2016

அம்மா துணை !!

பேரன்புடையீர் நல்வணக்கங்கள் !!

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்                 - திருக்குறள்

இத்துனை காலமாய் எங்கள் தாயார் திருமதி. இராஜ ராஜேஸ்வரி அவர்களின் வளைப்பதிவிற்கு துனைநின்ற நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றியுங்கள்!!

ஒவ்வொரு பதிவிலும் உன்னதமான செய்திகளை தன் வளைப்பதிவு நள்ளுநர்களுடன் பகிர்ந்துகொண்ட எங்கள் தாயார், மிகவும் மகிமை பொருந்திய இறைவன் திருவடிதன்னில் கலந்திட 9-2-2016 அன்று வைகுண்ட பிராப்தி அடைந்தார்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது                             - திருக்குறள்

தன் பதிவுகளின் மூலம் அனைவரின் நினைவுகளில் நிறைந்திருந்த எங்கள் தாயார், இந்த இறுதி பதிவின் மூலம், உணர்வுகளில் கலந்து அனைவருக்கும் நல்லாசிகள் வழங்கிடுவார். 

எல்லாம்வல்ல இறைவன் துணையுடன்
நன்றி கலந்த வணக்கங்கள்.

மகள் மற்றும் மகன்கள்

40 comments:

 1. நெஞ்சம் கனக்கிறது
  ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.

  அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 2. செய்தி அறிந்து மனம் பதைக்கிறது என் பதிவுகளில் சில நாட்களாக அவர் வருகை இல்லாதிருந்தது கண்டு , ஒரு வேளை உடல் நலம் மீண்டும் படுத்துகிறதோ என்று எண்ணினேன் புதுக் கோட்டைக்கு
  அவர் வருவார் சந்திக்கலாம் என்றிருந்தேன் வராதது ஏமாற்றமளித்தது அவர் சிறந்த ஆன்மீக வாதி அவர் ஆத்மா சாந்தி
  அடைய வேண்டுகிறேன்

  ReplyDelete
 3. ஒரு முறை மிகக் கடினமான சுடோகு புதிருக்கு விடை அளித்த அவரை ஜீனியஸ் என்றே கூப்பிட்டேன் சில நினைவுகள் மறக்க முடியாதது

  ReplyDelete
 4. இது என்ன.
  ஜீரணிக்க முடியவில்லையே.

  அம்மாவானாலும் பெரிய பெருந்தகை ஆயிற்றே.
  உங்களுக்கு எல்லாம் என்ன சொல்லித் தேற்றுவது.
  நனமை பெறுங்கள் மக்களே.

  ReplyDelete
 5. மிகவும் வேதனை. மனம் கலங்கிவிட்டது. அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்தார் என்பது அறிந்திருந்தோம். ஆம் அவரது பதிவுகளின் மூலம் எங்கள் எல்லோரது உள்ளங்களிலும் நிறைந்திருப்பவர். எங்கள் உணர்வுகளில் கலந்திருப்பவர். அவரது ஆன்மா இறைவனடியில் சாந்தியடைய எங்கள் எல்லோரது பிரார்த்தனைகளும். தங்கள் எல்லோருக்கும் அவரது பிரிவைத் தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் அளிக்க வேண்டுகின்றோம்.

  ReplyDelete
 6. அதிர்ச்சியான செய்தி. சகோதரி அவர்களின் ஆன்மா அமைதி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும். அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 7. நம்ப முடியவில்லை..இப்பொழுதுதானே மகனின் திருமணப்பதிவை வெளியிட்டிருந்தார்?! அடுத்த பதிவு இப்படி இருக்கும் என எதிர்பார்க்கக் கூட முடியவில்லை!! அன்னாரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனைகள்!
  :( :(

  ReplyDelete
 8. வணக்கம் இராஜேஸ்வரி அம்மாவின் ஆத்மா என்றும் இறையடியைச் சேர்ந்திருக்க வேண்டி வணங்குகிறோம்
  ஓம் சாந்தி சாந்தி !

  ReplyDelete
 9. மிகவும் அதிர்ச்சியாகவும் மிகவும் வருத்தமாகவும் இருக்கிறது.

  அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

  ReplyDelete
 10. அதிர்ச்சி தந்த செய்தி.

  அவர்களின் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.

  ReplyDelete
 11. மனம் கலங்குகின்றது..
  அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்..

  ReplyDelete
 12. மறைந்த தங்களின் தாயாருக்கு மனமார்ந்த அஞ்சலிகள்.
  அவரது வலைப்பக்கத்தில் உபயோகமாக பலவிஷயங்கள் அடங்கியுள்ளன. பகவத் கிருபையால் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

  ReplyDelete
 13. ஈடு இணையற்ற கடும் உழைப்புடன் அவர் எழுதிய பதிவுகளை வாசிப்பு உலகுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். ஆன்மீக எண்ணங்களைப் பரப்பியதில் அவருக்கு தனித்த இடம் உண்டு. அவர் பதிவுகள் அவருக்காக இப்பூவுலகில் வாழும்.

  மனம் நெகிழ்ந்த அஞ்சலிகள்.

  ReplyDelete


 14. தங்களின் தாயார் திருமதி இராஜ ராஜேஸ்வரி அம்மையார் அவர்கள் இயற்கை எய்தியது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலி. வலைப்பதிவில் அவர் படைத்த படைப்புக்கள் என்றும் நிலைத்திருக்கும். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கின்றேன். அவரை இழந்து வாடும் உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை.

  ReplyDelete
 15. தங்களது தாயாரின் ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள் தங்களது குடும்பத்தினருக்கு எமது இரங்களும்...
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

  ReplyDelete
 16. தங்கள் தாயார் இராஜ இராஜேஸ்வர் அம்மா அவர்கள் சிவயோக பதவி அடைந்தது கண்டு ஆழ்ந்த அனுதபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா அமைதியடைய ஆண்டவன் அனுக்கிரகம் கிடைக்கட்டும்

  ReplyDelete
 17. பேரன்புடைய ராஜேசுவரி உன் முகத்தைக்கூடப் பார்த்ததில்லை. உன்கட்டுரைகள் அத்தனையும் தெய்வீகம் பொருந்தியவை. மணிராஜ் தலத்தைவிட்டு எப்படியம்மா போகமுடிந்தது. இறைவன்திருவடி இவ்வளவு சீக்கிரமா உனக்கு. நினைவில் நிற்பாய்.யாவருக்கும் ஒளியும் கூட்டுவாய்.
  உன் ஆத்மா சாந்தி அடையட்டும். மனக் கஷ்டத்துடன் ஒரு முதியவள்

  ReplyDelete
 18. சகோதரியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

  ReplyDelete
 19. வணக்கம்
  அம்மாவின் ஆன்மா சாத்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 20. அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறேன்...

  அவர்களின் ஆன்மீக சேவை பதிவுகளின் இறைசெய்திகளும் கண்கவர் படங்களும் என்றென்றும் நம் நெஞ்சை விட்டு நீங்காதவை.

  அவரது ஆன்மா சாந்தியடைய எம் பிரார்த்தனைகள்!

  ReplyDelete
 21. கண்ணீர் அஞ்சலி. So sad

  ReplyDelete
 22. மிகவும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் உள்ளது! வலைப்பதிவர்கள் உள்ளத்தில் நீங்கா இடத்தை தம் ஆன்மிகப் பதிவுகளின் மூலம் பெற்றவர். அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்! எங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்!

  ReplyDelete
 23. வருத்தமான செய்தி.
  ஆனாலும், உங்கள் தாயார் எங்களிடம் நல்ல நினைவுகளை விட்டுச் சென்றுள்ளார் என்றுணர்க. அவர் என்றும் உங்களுடன் இருப்பார்.

  பாண்டியன், புதுக்கோட்டை

  ReplyDelete
 24. பல விடயங்களை இவரிடம் இருந்து அறிந்துகொண்டேன். மிகவும் கவலை தரும் செய்தி இது. ;-(

  அவரது குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராஜேஸ்வரி அக்காவின் ஆன்ம இளைப்பாற்றிக்காக வேண்டிக் கொள்கிறேன்.

  ReplyDelete
 25. ஐயோ........ கடவுளே......
  நம்ப முடியவில்லை. சேதி உண்மையாக இருக்கக்கூடாது என்று மனம் தவிக்கிறது.

  எங்கள் கண்ணீர் அஞ்சலிகள் :-(

  ReplyDelete
 26. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் இயற்கையெய்தியதை அறிந்து அதிர்ச்சியுற்றோம். பல நல்ல பதிவுகளைத் தந்து குடும்பத்தவரில் ஒருவரைப் போல பழகும் குணமுடைய அவருடய மரணம் ஒரு பேரிழப்பே. உங்களுடன் நாங்களும் அவர்களின் பிரிவின் சோகத்தைப் பகிர்ந்துகொள்கிறோம்.

  ReplyDelete
 27. அம்மாவின் ஆன்மா சாந்தியடையட்டும்...

  ReplyDelete
 28. அதிர்ச்சி அடைந்தேன்;ஆழ்ந்த இரங்கல்கள்

  ReplyDelete
 29. திருமதி.ராஜராஜேஸ்வரி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
  அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!

  ReplyDelete
 30. அம்மாவின் பிரிவுத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்களைத்தெரிவித்துக்கொள்கிறேன். இனி தெய்வமாக இருந்து அனைவருக்கும் ஆசி வழங்குவார்கள் என்று நம்பி நம்மை ஆறுதல் படுத்திக்கொள்ள வேண்டும். அம்மாவின் புகைப்படம் பதிவில் போட்டால் நல்லா இருக்கும். ப்ளீஸ்.....

  ReplyDelete
 31. அம்மாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத்தெரிவித்துக்கொள்கிறேன்...

  ReplyDelete
 32. மிகவும் வருத்தமான செய்தி! உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
 33. தங்கள் தயார் அவர்கள் எழுதிய ஆன்மீக பதிவுகள் மூலம் வாழ்வார் என்றும்.
  அவர்களுக்கு எங்கள் அஞ்சலிகள். அவர்கள் நல்லாசி என்றும் இருக்கும் அனைவருக்கும்.

  ReplyDelete
 34. நான் வலைப்பதிவு தொடங்கி முதல் பதிவு இட்டவுடன் அழையாமலே வந்து கருத்திட்டவர் தங்கள் தாயார் இராஜராஜேஸ்வரி அவர்கள். அவர் இயற்கை எய்தி விட்டார் என்பது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. கலங்குகிறேன்!

  ReplyDelete
 35. தங்கள் அன்னையார் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் எழுத்துக்களைப் பல மாதங்களாகப் படித்துவந்த வாசகர்களில் நானும் ஒருவன். அன்னாரின் மறைவு, ஒரு நல்ல எழுத்தாளரை எம்மிடையிருந்து அகற்றிவிட்டது என்பதே சோகமான உண்மை. அன்னையை இழந்து வாடும் தங்களுக்கு அன்னாரின் நினைவே வலிமையையும் ஆறுதலும் தருவதாக. -இராய செல்லப்பா சென்னை.

  ReplyDelete
 36. ஆழ்ந்த அஞ்சலிகள் .

  ReplyDelete
 37. சில நாட்களாக வலைப்பக்கங்களுக்கு வராமலிருந்ததால் ,
  இன்றுதான் செய்தி அறிந்தேன். அவரின் ஆன்மீகப் பகுதிகளால்
  ஈர்க்கப்பட்டு, சிறு சிறு பின்னுட்டங்கள் எழுதி அறிமுகமாகியவன்
  நான். அவரின் பிரிவால் வாடும் உங்களின் மனம் அமைதி அடையவும் ,
  அவரின் ஆன்மா சாந்தி அடையவும் ,
  நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை,
  தில்லையுட் கூத்தனை ,
  தென் பாண்டி நாட்டானை,
  அல்லல் பிறவி அறுப்பானை ,
  மனதார இறைஞ்சுகிறேன் .

  ReplyDelete
 38. எல்லாம் வல்ல இறைவன் அவர்களை தன்னுடன் இனைத்து முக்தியளிக்கட்டும்.

  ReplyDelete